தமிழ் | తెలుగు

» Archive

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம்

தேவனுடைய நியாயத்தீர்ப்பு! தேசமெல்லாம் புலம்பும் தீர்ப்பு! கடவுள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆசீர்வாதம்! கடந்துபோனதென்ன மாயம்! இறைவனின் அழைப்பை ஏற்கவில்லை எவரும்! கடவுள் இவரா? என அசட்டை செய்தனர் பலரும்! காலங்களாய் வந்த தேவன்! காலனை வீழ்த்திய தேவன்! கலியுக முடிவிலும், கல்கி மகா அவதாரமாக வந்த தேவன்! கொள்ளை நோயும் வந்ததே! கொத்தாக மானிடம் மரிக்கிறதே! வியாதிகள் பல வந்ததே! வியந்துபோக வைத்ததே! இன்பப்பொழுதும் நீ! இன்னல் போக்குவதும் நீ! இனிய நாமம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம் தந்து இமைப்பொழுதும் காப்பவர் நீ! – பா. வித்யாலட்சுமி, விழுப்புரம் … Read entire article »

Filed under: கவிதைகள்

ஆசிரியர் உரை – ஜனவரி 2021

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி நீதியுக ஸ்தாபக விழாவானது மனுஜோதி ஆசிரமத்தில் எளிய முறையில் கொண்டாடப்பட்டது. உலகெங்கிலுமுள்ள பக்தர்கள் தங்கள் இல்லங்களில் ஆதிபலி அன்புக் கொடியை ஏற்றினர். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் அந்த நாள் முழுவதும் இருந்ததை அனைவராலும் உணர முடிந்தது. வரவிருக்கும் ராம ராஜ்ஜியத்தை பறைசாற்றி பிரகடனம் செய்யும் விதமாகவும், வைகுண்ட லோகத்தில் நிலவும் தெய்வீக அன்பிற்கு சாட்சியாகவும் நாம் கொடியேற்றுகிறோம். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்தேன். அதேவிதமாக என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பாலுடன், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலுள்ள பல இடங்களுக்கு சென்று பக்தர்களை சந்தித்தார்கள். பருத்தியின் பூவாகிய பஞ்சிலிருந்து திரிக்கப்படும் ‘நூல்’ ஆடை நெய்வதற்கு உரியதாகும். இறைவனின் வாயினால் உரைத்த அறிவுரைகள் அடங்கிய வேதங்கள் எனும் ‘நூல்’ மனிதர்களின் வாழ்க்கை நலத்திற்கு உரியதாகும். “வனையப்பட்ட நூல் ஒருவரின் வடிவ வனப்புக்கு வகையாகிறது. வரையப்பட்ட வேத நூல் ஒருவரின் வாழ்வு வளத்திற்கு வழியாகிறது”. இருவகை நூலுமே இன்றியமையாததாகும். என்றாலும் வேத நூல்கள் வரையறைக்கு … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

இப்லீஸ் ஜனங்களை தவறான பாதையில் வழிநடத்துகிறான்

ஸூரா-20 வச.120: ஆனால் ஷைத்தான் அவருக்கு அவர் மனதில் ஊசாட்டத்தை உண்டாக்கி விட்டான்; நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், முடிவில்லா அரசாங்கத்தையும், உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்டான். வச.121: முடிவாக அவ்விருவரும் அம்மரத்திலிருந்து புசித்துவிட்டார்கள்; உடனே அவ்விருவரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருந்த அவ்விருவரின் மர்மஸ்தானங்களும் அவ்விருவருக்கும் வெளியாயின் அச்சுவனத்தின் இலைகளைக்கொண்டு, தங்களை மறைத்துக்கொள்ள அவ்விருவரும் முற்பட்டனர்; ஆகவே, ஆதம் தன் இரட்சகனுக்கு மாறு செய்துவிட்டார்; எனவே, அவர் வழி தவறிவிட்டார். ஸூரா-22 வச.52: நபியே! உமக்கு முன் எந்தத் தூதரையும், எந்த நபியையும் அவர் ஓதினால், அவருடைய ஓதுதலில் ஷைத்தான் நோயிருப்பவர்களின் நெஞ்சங்களில் குழப்பத்தைப் போட்டே அல்லாமல் நாம் அவர்களை அனுப்பவில்லை. அவர்களுடைய மனதில் ஷைத்தான் போட்டதை அல்லாஹ் நீக்கிவிட்டு அதன்பின்னர், தன்னுடைய வசனங்களை அறிவுடையோர்களுடைய இதயங்களில் உறுதிப்படுத்திவிடுகிறான். இன்னும் அல்லாஹ் யாவையும் நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன். வச.53: இவ்வாறு ஷைத்தான் போட்ட குழப்பத்தை எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் கல்லைப்போல் கடினமாயிருக்கின்றனவோ அவர்களுக்கும் சோதனையாக ஆக்குவதற்காகவே அல்லாஹ் அவ்வாறு செய்தான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெகுதூரமான பிளவில்தான் இருக்கின்றனர். ஸூரா-26 வச.221: விசுவாசிகளே! ஷைத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? வச.222: செயலால் பாவியான, சொல்லால் அதிகமாகப் பொய்கூறும் ஒவ்வொருவரின் மீதும் அவர்கள் இறங்குகின்றனர். வச.223: தாங்கள் கேள்விப்பட்டதை, அப்பொய்யர்களின் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

பத்தாம் உபதேசம் இறைவனின் தெய்வீக மகிமைகளைப் பற்றிய இரகசியம்

சர்வ சிருஷ்டிக்கும் பிறப்பிடம் நானே. இந்த உலகத்திலுள்ள அனைத்தும் என்னாலே இயங்குகின்றன. இந்த இரகசியத்தை அறிந்துகொண்ட ஞானிகளும், தங்களை உணர்ந்துகொண்டவர்களும் முழுமையான பக்தியுடன் என்னையே சதா வணங்குகிறார்கள். தங்களுடைய மனதை என்மேல் நிலைநிறுத்தி, தங்கள் ஜீவியங்களை முழுவதுமாக என்னிடம் ஒப்புவித்து, என்னுடைய மகத்துவத்தைக் குறித்தும், என்னைக் குறித்தும் ஒருவருக்கொருவர் எடுத்துரைத்துக்கொண்டிருக்கும் அத்தகைய பக்தர்கள் எப்பொழுதும் திருப்தியடைந்தவர்களாய் இருந்து என்னிலே ஆனந்தம் அடைகிறார்கள். என்னுடன் ஐக்கியப்பட்டவர்களும், தெய்வீக அன்புடன் என்னை வணங்குகிறவர்களுமாகிய அவர்களுக்கு, என்னை வந்து அடையக்கூடிய அந்த ஞானத்தை அல்லது அழிவற்ற யோகத்தின் வெளிப்படுத்தலை நான் கொடுக்கிறேன். என்னுடைய கிருபையை அவர்கள்மீது அருளுவதற்காக, நான் அவர்கள் உள்ளத்தில் வாசமாயிருந்து, பரிசுத்த ஆவியின் பிரகாசிக்கும் ஒளியினால் ஐம்புலன்களினால் உண்டான இருளை அல்லது அறியாமையை நாசம் செய்கிறேன். அர்ச்சுனன் கூறினான்: நீர் நித்தியமானவர் (பரபிரம்மம்) உயர்ந்த உறைவிடம் (பரம் தர்மம்) மகத்தான தூய்மை அளிப்பவர். நீரே நித்தியமான தெய்வீக பரமபுருஷர், கடவுளுடைய முதற்பேறானவர். பிறப்பற்றவனும் அண்டசராசரத்தை வியாபித்திருப்பவனும் நீயே. அவ்வாறே எல்லா ரிஷிகளும், முனிவர்களும், தேவரிஷியான நாரதரும், அஸிதரும், தேவலரும், மகத்தான தீர்க்கதரிசியாகிய வியாசரும் உம்மைக் குறித்துப் பேசுகிறார்கள். நீரும் எனக்கு அவ்வாறே கூறுகிறீர். கடவுளே! நீர் எனக்கு கற்பிக்கின்ற அனைத்தையும் உண்மை என்று முழு மனதுடன் விசுவாசிக்கிறேன். எனினும் உம்முடைய … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

சித்தர்கள் எதிர்பார்ப்பு

மனிதன் வளமாகவும், நலமாகவும், சந்தோஷமாக வாழவும் அத்துடன் இம்மானிட தேகத்திலிருந்து விடுபட்டு இறைவனுடன் ஒன்றர கலந்து நித்திய நித்தியமாக வாழ வேண்டும் என்று சித்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அதை தங்கள் பாடல்களின் வாயிலாக எழுதியும் நமக்கு கொடுத்துள்ளனர். அதையே நாம் “சித்தர்களின் எதிர்பார்ப்பு” என்ற தலையங்கத்தில் கூறி வருகிறோம். இது குறித்த கருத்துக்களை அநேகர் கடிதங்கள் மூலம் தெரிவித்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். சித்தர்களின் எதிர்பார்ப்பு என்ற இந்த மனுஜோதி இதழில் நாம் பார்க்க இருப்பது 131-ம் பாடலாகும். “சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள் தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்” இன்றைய உலகில் மனிதன் தன்னைப் பாதுகாத்து கொள்ள அநேக வழிகளை கையாள்வதை காணலாம். இள வயதில் தன் உடல் வலிமையை நம்பி, சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, ஜூடோ போன்ற கலைகளை கற்று அதுதான் தன்னை பாதுகாக்க முடியும் என்று நினைக்கிறான். தன் இளமை நாட்கள் போன பின் வேறு வழிகளை தேடுகிறான். அப்போது மத சடங்காச்சாரங்களில் ஈடுபட்டு, அதிலும் திருப்தி இல்லாமலேயே மடிகிறான். இதனைக்கண்ட சிவவாக்கியர் “சாவதான … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

ஆன்மீக வாழ்க்கை

சென்ற இதழில் ஆன்மீகம் என்ற தலைப்பில் மெய்ஞானமாகிய இறைவனை அடைவது பற்றியும், இறையருளைப் பெருவதைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் ஆன்மீக வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். உலகில் மனித இனம் உருவான நாளிலிருந்து ஆன்மீகம் என்ற அம்சம் இருந்து வருகிறது. அந்தந்த நாட்டு மக்களின் அறிவு, வாழ்வியல் முறைகள், நாகரீகத்தை பொறுத்து ஆன்மீக நெறிகள் வேறுபடுகின்றன. ஐம்பூதங்களால் உயிருக்கு அச்சம் ஏற்படும் நிலையில், பாதுகாப்பு வேண்டி இறைவனை தேடுவது ஒருவகை ஆன்மீகமாகும். ஒவ்வொரு இன்பத்தையும் அனுபவிக்கும்போது, ஏற்படும் மகிழ்ச்சியினால் நன்றி உணர்வுடன் பகவானை ஆராதிப்பது ஒரு வகை ஆன்மீகம். பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுவதுபோல ஆன்மீகம் என்பது இறைவனுடன் கூடிய சொந்த அனுபவமே. நாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என முப்பரிமாணங்களானவர்கள். இதை உணராமல் பிறப்பது, பின்பு இறப்பது இதுதான் வாழ்க்கை என பலர் நினைப்பதுண்டு. ஆவி, ஆன்மாவினை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. மண்ணான சரீரம் மண்ணுக்குள் செல்வதுடன் முடிவடைகிறதா வாழ்க்கை? “தேடிச் சோறு நிதம் தின்று – தினம் சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம் வாட துன்ப மிகவுழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் புரிந்து – நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கு இரையென மாயும் பல வேடிக்கை மனிதரைபோல நானும் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கண்ணன் – என் தாய்

எட்டையாபுரத்து சிங்கம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பலவிதமான பாடல்களை எழுதினார். தெய்வப் பாடல்களில் ‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் 23 விதமாக கண்ணனை பாடியுள்ளார். ‘கண்ணன் – என் தாய்’ என்ற பாடல் 1913-ம் ஆண்டு அக்டோபர் மாத்தில் ஞானபாநு இதழில் வெளிவந்தது. இறைவன் மேலுள்ள அன்பை பக்தியை அவர் பல கோணங்களில் அனுபவித்து எழுதியுள்ளார். ஸ்ரீமத் பகவத்கீதையில் அர்ச்சுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மகனுக்குத் தந்தையாகவும், தோழனுக்குத் தோழனாகவும் காதலிக்கு காதலனாகவும் அருள் செய் என்று வேண்டுகிறார். ஆழ்வார்கள், நாயன்மார்கள், இன்னும் பலர் இறைவனை பல்வேறு விதமாக போற்றி, பக்தி செய்து புகழ்ந்து பாடல்களை எழுதினர். பாரதியாரின் நோக்கு மிகவும் வேறுபட்டதாக உள்ளது. அவருடைய பாடல்கள் அன்பின் வெவ்வேறு பரிமாணங்களை கூறுகின்றது. இந்தப்பாடலில் இறைவனை தாயாக வர்ணிக்கிறார். தாயன்பிற்கு நிகரான அன்பு இல்லை என்பது உலகளாவிய கருத்து. தாய்-மகன் இது ஒரு உறவு. இந்த உறவு போதுமானதா? இல்லை, தந்தை அன்பும் வேண்டும். அதன்பின்னர் இளமைப் பருவத்தில் தோழர்களின் அன்பு – அவர்களோடு உறவாடுகின்றோம். அத்தோடு உறவு நின்று விட்டதா? இல்லை, காதலன் அல்லது காதலியின் அன்பு தேவைப்படுகிறது. அதன்பின் குழந்தையின் அன்பிற்காக ஏங்குகிறோம். மனிதனின் உறவு என்பது இவ்வாறு நீண்டுகொண்டே சென்று இறுதியில் மானிட அன்பெல்லாவற்றையும் வென்ற … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

நினைந்திரு

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா!” பெருமை மிகுந்த யானை முகத்தைக்கொண்ட விநாயக கடவுளே, நான் உனக்கு இனிய பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப்பாகினையும், பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் தருவாயாக என்று ஒளவையார் வேண்டுகிறார். முத்தமிழ் போல நினைந்திரு, மகிழ்ந்திரு, போற்றியிரு என்பவை மூன்று சிறப்பு அம்சங்கள் கொண்டவை. ‘நினைந்திரு’ என்பதின் இரண்டாம் கட்டம். இறைவன் நம் வாழ்க்கையில் செய்தவற்றை நினைவு கூறுவதாகும். இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாக இருக்கும். பிறப்பதே ஒரு ஆச்சரியம்! பிரசவத்தில் சிலர் சிக்கல்களை தாண்டி பிறந்திருப்பார்கள். சிலர் மயிரிழையில் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். சிலருக்கு தக்க நேரத்தில் முகம் தெரியாதவர்கள் உதவி செய்திருப்பார்கள். சிலர் நல்ல ஆலோசனைகளை கூறி உதவி செய்திருப்பார்கள். பொருளுதவி, பண உதவி, சிபாரிசு செய்ததில் உதவி, தக்க … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்