தமிழ் | తెలుగు

» ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

அதிகாலையில் துயில் எழு!

லௌகீக காரியங்களுக்காக நாம் காலையில் எழுகிறோம். இறைவன் அதைவிட மேலானவர். அவர் செய்த நன்மைகளுக்காக, இலவசமாக கொடுத்த எல்லாவற்றிற்காகவும் நாம் அதிகாலையில் துயில் எழுகிறோமா? இல்லை.உதாரணத்திற்கு நாம் காலை ஒன்பது மணிக்கு ரயிலை பிடிக்க வேண்டுமென்றால், சீக்கிரமாக எழும்பி விடுகின்றோம். ஒருவேளை நமக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்திருக்குமென்றால், அங்கே நாம் சீக்கிரமாக ஆஜராக வேண்டுமென்றால், காலை ஐந்து மணிக்குகூட எழுந்து சென்றுவிடுவோம். யாராவது சீனி இலவசமாக நியாய விலைக் கடையில் கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாமெல்லோரும் காலை ஐந்து மணிக்கே வரிசையில் நின்றுகொண்டிருப்போம்.பறவைகளிடமிருந்து நீங்கள் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும். நான் விடியற்காலை மூன்று மணிக்கு எழும்பினேன். அவைகள் எல்லாம் சேர்ந்து சத்தமிட்டன. சரியாக மூன்று மணிக்கு அவைகள் சத்தமிடுகின்றன. மறுபடியும் நாலரை மணிக்கு அவைகள் சத்தமிடுகின்றன. ஆனால் இறைவனுடைய பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அக்கறையோடு இறைவனை துதிப்பதில்லை. ஆனால் பறவைகள் சேர்ந்து சத்தமிடும்போது அவை இறைவனைத்தான் துதிக்கின்றன. – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா … Read entire article »

Filed under: ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்