தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

அதிகாலையில் துயில் எழு!

லௌகீக காரியங்களுக்காக நாம் காலையில் எழுகிறோம். இறைவன் அதைவிட மேலானவர். அவர் செய்த நன்மைகளுக்காக, இலவசமாக கொடுத்த எல்லாவற்றிற்காகவும் நாம் அதிகாலையில் துயில் எழுகிறோமா? இல்லை.உதாரணத்திற்கு நாம் காலை ஒன்பது மணிக்கு ரயிலை பிடிக்க வேண்டுமென்றால், சீக்கிரமாக எழும்பி விடுகின்றோம். ஒருவேளை நமக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்திருக்குமென்றால், அங்கே நாம் சீக்கிரமாக ஆஜராக வேண்டுமென்றால், காலை ஐந்து மணிக்குகூட எழுந்து சென்றுவிடுவோம். யாராவது சீனி இலவசமாக நியாய விலைக் கடையில் கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாமெல்லோரும் காலை ஐந்து மணிக்கே வரிசையில் நின்றுகொண்டிருப்போம்.பறவைகளிடமிருந்து நீங்கள் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும். நான் விடியற்காலை மூன்று மணிக்கு எழும்பினேன். அவைகள் எல்லாம் சேர்ந்து சத்தமிட்டன. சரியாக மூன்று மணிக்கு அவைகள் சத்தமிடுகின்றன. மறுபடியும் நாலரை மணிக்கு அவைகள் சத்தமிடுகின்றன. ஆனால் இறைவனுடைய பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அக்கறையோடு இறைவனை துதிப்பதில்லை. ஆனால் பறவைகள் சேர்ந்து சத்தமிடும்போது அவை இறைவனைத்தான் துதிக்கின்றன. – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

பொய், கபடு, திருட்டு போன்றவை உங்கள் வாழ்க்கையில் இருக்கும்வரை உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படாது. சகோதரர்களை நேசித்து, அன்பு நிறைந்த வாழ்க்கையை வாழும்போது உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. – ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இரண்டு படகுகள் இருக்கின்றன. ஒன்று இயந்திர மோட்டார் பொருத்தியது. இன்னொன்று தண்டு வலிக்கும் படகு. சம்சார கடலை தாண்ட நாம் படகை உபயோகிக்க வேண்டும். மோட்டார் பொருத்திய படகு என்பதின் அர்த்தம் இறைவன் நம் வாழ்க்கையை திட்டமிடுவதாகும். தண்டு வலிக்கும் படகு என்பது நம் வாழ்க்கையை நாமே திட்டமிடுவதாகும். நாம் ஒரு சிறு பிள்ளையைக் கேட்டால்கூட இயந்திர மோட்டார் பொருத்திய படகில் செல்வது மேலானது, எளிதானது என்று கூறும். உங்கள் சொந்த முயற்சியை கை விட்டுவிட்டு இறைவனின் இஷ்டத்திற்கு சரணடையுங்கள். – ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

சிந்தை மாற்றம்

நம்முடைய சிந்தைதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது! நம்முடைய சிந்தைதான் நமக்கு பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. இறைவனின் மக்கள் இதிலிருந்து எவ்வாறு விடுதலை பெற வேண்டும் என்பதை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கிக் கூறுகிறார்: “ஒரு பெண் திடீரென்று ஒரு பல்லியை விழுங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டாள். ஆகவே அவள் தனது வயிற்றின் வெவ்வேறு பாகங்களைக் காட்டி “பல்லி இங்கு வந்துவிட்டது, இங்கு வந்துவிட்டது” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். “இல்லை சகோதரனே, நான் ஒரு பல்லியை விழுங்கிவிட்டேன். அது அங்குதான் இருக்கிறது” என்று மறுபடியும் மறுபடியுமாக கூறிக்கொண்டே இருந்தாள். இதை நினைத்தே அவள் மிகவும் சுகவீனமாகி விட்டாள். டாக்டர் அந்த பெண்ணை பரிசோதித்து விட்டு, “நான் ஒரு ஊசி போடுவேன், பல்லி வெளியே வந்துவிடும்” என அவர் கூறினார். அவளும் ‘சரி ஐயா’ என்றாள். அவர் அவளுக்கு ஒரு தூக்க மாத்திரையைக் கொடுத்தார். “நீ தூங்கி எழுந்த பிறகு, அந்த பல்லியானது வெளியே வந்து விடும்” என்று அவர் கூறினார். அவள் தூங்கிய பிறகு அவர் ஒரு பல்லியை அடித்து, தலையணைக்கு அருகே வைத்தார். அவள் தூங்கி எழுந்தபோது, “பல்லி நிச்சயமாக வெளியே வந்திருக்க வேண்டும், நான் போட்டுக்கொண்ட ஊசியினிமித்தம், உண்மையாகவே பல்லி வெளியே வந்திருக்க வேண்டும்” என்று தனக்குத்தானே சொல்லிக் … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவு

1974-ம் வருடம் செப்டம்பர் 22 அன்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளியது  ஒவ்வொரு நகரமும் விழும். அது கடைசி காலத்தில் விழவில்லையென்றால், இப்பொழுதுகூட அது விழலாம். இந்த நாட்களில் ஒன்றில் சென்னையில் பயங்கரமான கடும் புயலினால் பேரழிவு ஏற்படும். அந்த நகரம் விழுந்து விடும். இது ஒரு வேடிக்கைக்குரிய காரியமல்ல, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழியத்தை அவர்கள் கண்டார்கள். இன்றைக்கு அந்த இடத்தில் மிகப்பெரிய பிசாசுகள் இருக்கின்றன. வெகுவிரைவில் அது காணப்படாமற்போகும். பூகோள வரைபட அமைப்பில் முற்றிலுமாக ஒரு மாறுதல் இருக்கும். இறைவன்மேல் கொண்ட அன்பினால் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் மனுஜோதி ஆசிரமத்தைவிட்டு வெளியே எங்கேயாவது செல்லும்போது உண்மையான அன்பை மறந்துவிடாமல் தியானம் செய்யுங்கள். இல்லாவிடில் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். இந்த மனுஜோதி ஆசிரமம் இறைவனுடைய ஆட்சியின்கீழ் இருக்கிறது. ஆனால் வெளியே நீங்கள் செல்லும்பொழுது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நியாயத்தீர்ப்பானது பூமியின்மேல் விழுகிறதை நீங்கள் பார்க்கும்பொழுது, இரண்டு காரியங்களை அறிந்துகொள்ளலாம். நம்முடைய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உண்மையானது என்றும், காலம் முடிவடைந்தது, இந்துக்கள் மத்தியில் நாம் செல்வது சரி என்றும் தெரிந்துகொள்ளலாம். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

முட்களும் ரோஜாவும்

இராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது சீதை ஒரு மாயமானைக் கண்டு, அதின்மேல் ஆசைப்படுகிறாள். தனக்கு அந்த மான் வேண்டும் என கேட்டதினால் ஸ்ரீ ராமர் அதைப் பின்தொடருகிறார். அவரைப் பின்தொடர்ந்து இலட்சுமணனும் சென்றான். ஸ்ரீ ராமரும், இலட்சுமணனும் இல்லாத சமயத்தில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றான். சீதை எங்கே இருந்தாள்? சீதை ராட்சத ஸ்திரிகளின் மத்தியில் ‘அசோக வனம்’ என்ற இடத்திலிருந்தாள். அங்கே அந்த அசுரப் பிறவிகள் அவளை ஓயாமல் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். இராவணனின் மகிமைகளை அவளுக்கு கூறி, ‘ராமனை மறந்து விடு, உன் மனதை மாற்றிக் கொள்’ என்றனர். மனதளவில் அவளை துன்புறுத்தினர். ஸ்ரீ ராமர் இறைவனின் அவதாரமாவார். அவருடைய மனைவிக்கு இப்படியொரு அவல நிலை ஏற்பட்டது. ஆனால் சீதை எப்படியிருந்தாள்? முட்களுக்கு மத்தியிலிருந்த ரோஜாப்பூவைப் போல் இருந்தாள். அவள் எதற்கும் கலங்காமல், அமைதியாக இருந்தாள். இறைவனின் பாகமாக இருப்பவர்களும்கூட முட்களின் மத்தியிலிருக்கும் ரோஜாப் பூவைப் போலத்தான் இருக்கிறார்கள். ‘மக்கள் என்னை முட்களைப் போல குத்துகிறார்கள். என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை’ என்று நீங்கள் கூறினால் நீங்கள் ரோஜா மலரல்ல. ‘நான் ரோஜாவாகவும் இருக்க வேண்டும். அதேசமயத்தில் முட்களும் என்னை குத்தக்கூடாது’ என்று நீங்கள் கூறமுடியாது. அத்துடன் ரோஜாப் பூவில் நல்ல வாசனை வருகிறது. எல்லோரும் அந்த … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

மனிதன் மனிதனாக!!

ஓரறிவு படைத்த பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சிருஷ்டி நாயகர் யாரென்று தெரியும். ஆனால் ஐம்புலன்கள் மற்றும் ஆறாம் அறிவாகிய சிந்திக்கும் ஆற்றல் படைத்த மனிதனுக்கு சுயாதீனம் அதாவது தெரிந்துகொள்ளும் சக்தி அவனுக்கு கொடுக்கப்பட்டதால் சிருஷ்டி நாயகரை அவனால் அறிய முடியவில்லை. இந்த உலகில் மனிதனுக்கு ஏற்படும் போராட்டம் என்ன? அரசாங்கம், குடும்பம், மனைவி, பிள்ளைகள், சமுதாயம், தொழில் என்பவைகளுக்கு அடிமையாய் இருப்பதா? அல்லது தன்னுடைய சிருஷ்டி நாயகருக்கு அடிபணிவதா? என்பதுதான் இக்கலியுகத்தில் வாழும் மனிதனுக்கு ஏற்படும் போராட்டமாகும். இந்திய இஸ்லாமியர்களாக இருக்கலாம்; இந்திய கிறிஸ்தவர்களாக இருக்கலாம்; இந்திய இந்துக்களாக இருக்கலாம்; ஆனால் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற தேசீய ஒருமைப்பாடு நமக்குள் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். உங்களுடைய கெட்ட குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள்தான் உங்களை தாழ்ந்த ஜாதியாக்குகிறது. உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் உங்களை ராஜரீக வம்சமாக்குகிறது. … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

லஹரிகிருஷ்ணாவின் முத்துக்கள்

முத்துக்கிருஷ்ணா உங்களுக்கு முத்துக்களை தருவார். முத்துக்குளிக்க நீங்கள் கடலுக்குள் செல்ல வேண்டும். எந்த கடலுக்குள் செல்ல வேண்டும்? லஹரி என்றால் தெய்வீக அன்பின் கடலாகும். அந்த கடலுக்குள் நீங்கள் மூழ்கினால்தான் முத்துக்களை எடுக்க முடியும். – ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

எவரிடம் ஆலோசனை பெற கூடாது?

இறைவனை அறியாத எவரிடமும் ஆலோசனை பெறாதீர்கள். அவர்கள் வழிகளிலும் செல்லாதீர்கள். – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்