தமிழ் | తెలుగు

» மற்றவர் கருத்து

முற்றும் கனிந்த நிலை

சிறுவயதில் கல்வி வேண்டுபவர்கள் எல்லாரும் பள்ளிக்கூடத்திற்குப் போக கடமைப்பட்டிருக்கின்றனர். ஆனால் பள்ளிக்கூடத்திலேயே எக்காலமும் இருப்பது மக்களின் லட்சியமன்று, கற்க வேண்டியவைகளை கற்றான பிறகு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற வேண்டும். கல்வி பூர்த்தியாகும் முன்பு வெளியேறுதல் பொருந்தாது. உலக வாழ்க்கை என்ற பள்ளிக்கூடமும் அத்தகையதே. நைஷ்கர்மம் என்பதற்கும், சித்தி என்பதற்கும் பொருள் ஒன்று. பழம் முற்றும் பழுக்குமிடத்து அது சித்தியாகிவிட்டது எனலாம். அதற்கு முன்பு காய்ந்து முதிர்ந்த கனிகிற செயல்களெல்லாம் அதனுடைய கர்மம் ஆகிறது. பக்குவப்பட்ட ஒவ்வொருவருடைய ஆழ்மனதிலும் இறைவன் குடிகொண்டு செயலாற்றிக்கொண்டிருக்கிறார். அதுதான் முற்றும் கனிந்த நிலை! அதுதான் நைஷ்கர்மியம். ஆக நைஷ்கர்மியமும், சித்தியும் ஒன்றே! பழுத்த பழம் மரத்தை விட்டு பிரிவது அதன் சந்நியாசம். பிஞ்சு அல்லது காயாக இருக்கும்பொழுது அதை மரத்தை விட்டுப் பறித்து எடுப்பதால், அது சித்தியடைந்ததாகாது. இக்கருத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா மிகவும் அழகாக கூறுகிறார். பக்குவ நிலைக்கு உதாரணமாக புளியம்பழத்தை கூறுகிறார். அது காயாக இருக்கும்போது அதன் ஓடு அதனுடன் ஒட்டி இருக்கிறது. கனிந்த பின்னர் ஓடு தனியாகவும், புளியம்பழம் தனியாகவும் இருப்பதால் அந்த புளியம்பழத்தில் ‘குடுகுடு’ என்ற சப்தம் ஏற்படும். இதுதான் நைஷ்கர்மியம் அல்லது சித்தி பெற்ற நிலை. உடல் வேறு, ஆன்மா வேறு என்று … Read entire article »

Filed under: மற்றவர் கருத்து

இறைவனின் கணக்கு

கூட்டல்: + ஆன்மீக இன்பங்களை கூட்டித் தருகிறார். … Read entire article »

Filed under: மற்றவர் கருத்து

ஆசையை அறுக்கும் ஆயுதம்

வாழ்வில் நடைபெறும் சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட முதல் காரணமாய் அமைவது அவரவர் மனம் எழுப்பிய ஆசை. மெல்ல மனதோரம் எட்டிப்பார்க்கும் ஆசை மூளையை தூண்டிவிடுவதால், பிறிதொரு நாளில் மனமே ஒழிக்கக் கருதினும் அதை முறியடித்து ஆசை களியாட்டம் போடுகிறது. பின் மெல்ல மெல்ல மனதையும் தன் வசப்படுத்தி மனதிற்குரியோரையும் நிலைகுலையச் செய்து ஓர் மிருகத்திற்கொப்பனவனாய் மாற்றி விடுகிறது. இத்தனைக்கும் முதலாய் அமைந்தது ஆசையெனும் அரக்கன். அற்பமாககூட கருதப்படும் சிறு ஆசை மெதுவாக பலமின்றி மனதில் தோன்றி, பின் மனதையே ஆக்கிரமித்துக் கொண்டு வலுப்பெற்று மனப்போர் புரியும் கருவியாகி நம்மை பலி கொண்டு விடுகிறது. அக்கருவியை மெருகேற்றுவதைப்போல் எண்ணங்களையும் எழுப்பி விடுகின்றன. ஒன்று மற்றதைப் போன்று தோன்றி அவை பண்பற்றவனாக மாற்றிவிடும் வல்லமையைப் பெற்று நம்மை அழித்து விடுகின்றது. விஷமே மருந்தாகும் விந்தை மருத்துவத்தில் உண்டு. ஆக சிக்குண்ட மனதை கொண்டே இந்நோய்க்கு மருந்தும் செலுத்தலாம். ஆசைக்கு காரண கர்த்தாவான மனதிற்கு அம்மனதையே மருந்தாக்க நிச்சயம் ஓர் நாளில் நோய்தீரும். வந்த பின் ஒழிக்க முயல்வதைப் பார்க்கிலும், வரும்முன்னே மனதிற்கு அணைபோடலாம். சிறு வழியால் வந்து மனம் முழுமையையும் வியாபித்த அரக்கனை மெல்ல மெல்ல செதுக்கி அழிப்பது நலம். காலம் தவறிப்போயின் அழிக்க இயலா பெரும் விழுதாய் மாறி … Read entire article »

Filed under: மற்றவர் கருத்து