தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை

மலைவாழ் மக்களிடையே ஒன்றே குலம் ஒருவனே தேவன் பிரச்சாரம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாடேரு என்ற மலைக்கிராமம். கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கும் இம்மலைப்பகுதிதான் மலைவாழ் மக்களுக்கு தலைநகரமாகும். இம்மலைக் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்களிடையே “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை பரப்புவதற்காக மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக சர்வ சமய மாநாடு மற்றும் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர் D. பால் உப்பாஸ் N. லாறி மற்றும் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள், முக்கிய பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களிடம் இறை கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும், கடவுள் ஒருவரே என்ற ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உபதேசங்கள் அடங்கிய புத்தகங்களை இலவசமாக கொடுப்பதற்கும் இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் விழாவில் முக்கிய பிரமுகர்கள், பேச்சாளர்கள், அறிஞர் பெருமக்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் துதிபாடல்களின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. மழைவாழ் மக்கள் நலத்துறை முன்னாள் அமைச்சர் திருமதி. மணிக்குமாரி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இவருடன் சிறப்பு விருந்தினர்களாக அரசு மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் திரு. கிடாரி சர்வேஸ்வரராவ், … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

தேவேந்திர பூபதி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

கல்கி ஜெயந்தி விழாவில் “வணிக வரித்துறை இணை ஆணையர்                 அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். “நல்லோரை காண்பதும் நன்றே, நலமிக்க நல்லோர் சொல் கேட்பதும் நன்றே, அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே”என்ற ஒளவையாரின் பாட்டைப்போல நல்லோர்கள் அல்லது புனித ஆத்மாக்கள் இருக்கக்கூடிய இந்த இடத்திலே வந்து சேர்ந்தபோது எனக்கு மகாபாரதத்திலுள்ள ஒரு சிறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. யுதிஸ்டிரன் என்ற தருமர், ராஜஸூய யாகம் நடத்தினார். அவருக்கு அதில் ஒரு பெரிய பெருமிதம் ஏற்பட்டது. யாரும் செய்ய முடியாத யாகத்தை தான் செய்து முடித்த இறுமாப்போடு இருந்தபோது, அங்கே ஒரு கீரிப்பிள்ளை வேகமாக வந்தது. அதினுடைய உடலில் பாதி தங்கமாக இருந்தது. மீதியுள்ள உடல் இயல்பாக இருந்தது. அந்த கீரிப்பிள்ளை யாகம் நடந்த யாக சாலையில் வந்து கீழே உருண்டது. பின் சோகமாக எழும்பியது. அவர் கீரிப்பிள்ளையிடம் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டார். ஏன் உன்னுடைய உடல் இவ்வாறு இருக்கிறது என்று தருமர் கேட்டதற்கு, கீரிப்பிள்ளை இவ்வாறு கூறியது: “பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்தண வேதியர் குடும்பம் இருந்தது. அவர்கள் வருகிற யாருக்காவது தர்மம் செய்துவிட்டு, அதன்பின் மிஞ்சிய உணவை உண்டு வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்திலே பெரிய பஞ்சம் வந்தது. … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

“எண்ணங்களின் களஞ்சியம்” புத்தக வெளியீட்டு விழா

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆன்மீக மாநாட்டில் “எண்ணங்களின் களஞ்சியம்” புத்தக வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் கவிதை தொகுப்புகள் அடங்கிய “எண்ணங்களின் களஞ்சியம்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சென்னை தொலைக்காட்சி நிலைய உதவி இயக்குநர் திரு. பால இரமணி மற்றும் அவருடைய துணைவியார் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களும் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர். கோவை வானொலியைச் சேர்ந்த குடந்தை R. வேங்கடபதி அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கோவை முத்தமிழ் அரங்கத்தைச் சார்ந்த இரா. சொ. இராமசாமி, வசந்த வாசல் கோவை கோவலன், தேனி கருணைசாமி மற்றும் கவிஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் சிறப்புரை: அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். இன்றைய காலைப்பொழுது அற்புதமாக அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கின்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களை நான் இங்கிருந்தே வணங்கி மகிழ்கிறேன். எங்கிருந்தாலும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நம்மோடிருப்பார் என்பதற்கான சத்திய சாட்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. அரங்கத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருமே மிகப் பெரிய கடலாக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கம். பொதுவாக ஒரு நூல் எண்ண களஞ்சியம் என்று வந்தால் என்ன களஞ்சியம் என்று … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

சத்தியத்தைச் சொல்லும் சத்திய நகரம்

தமிழ் நாடக மேதை, அவ்வை சண்முகம் அவர்களின் புதல்வர் திரு. டி.கே.எஸ். கலைவாணன் அவர்கள். சிறுவயதிலேயே இசையை இலக்கண முறைப்படி பயின்று அபூர்வ ராகங்களையும் அற்புதமாகப் பாடவல்லவர். ஒன்பதாம் வயதிலேயே திருமுருக கிருபானந்த வாரியார் முன் கந்தர் அனுபூதியைப் பாடி அவரது ஆசி பெற்றவர். 1330 குறட்பாக்களையும் பாடி ஒலித்தகடாகப் பதிவு செய்தவர். மேடைக் கச்சேரி, நடிப்பு, பாட்டு என்று பலதுறைகளில் திறமை கொண்டவர். சிறந்த எழுத்தாளர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல புண்ணியத்தலங்களையும் தரிசித்து வந்தவர். திருமுருக கிருபானந்த வாரியார் மற்றும் இஸ்லாமிய பாடகர் நாகூர் அனிஃபா அவர்களும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை சந்தித்து ஆசி பெற்ற மனுஜோதி ஆசிரமத்திற்கு, டி.கே.எஸ் கலைவாணன் அவர்களும் வருகை தந்தார்கள். டி.கே. எஸ். அவர்கள் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. அவர் மனுஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற கல்கி ஜெயந்தி விழாவில் நடைபெற்ற தேசீய ஒருமைப்பாடு கூட்டத்திலும், சர்வ சமய மாநாட்டிலும் பங்கேற்றார்கள். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் துதிபாடல்களை பாடி, தன்னுடைய இனிய குரலால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களை வசீகரித்தார். அவர்களுடைய இசைக்கச்சேரியும் நடைபெற்றது. மேலும் இனிய சொற்பொழிவும் நிகழ்த்தினார்கள். வாசகர்களுக்காக டி.கே.எஸ். கலைவாணன் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்: நான் எத்தனையோ ஆசிரமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் வெளியீட்டு விழா

உலக நட்புறவு மையம் நடத்திய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் வெளியீட்டு விழா மற்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் கவியரங்க விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள உமாபதி அரங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி, மாலை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழாவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் கவியரங்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. சென்னையிலுள்ள உலக நட்புறவு மையம் மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் சிடியினை வெளியிட்டது. இவ்விழாவில் ஆன்மீக கவிஞர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் இறைவணக்கப் பாடலை திருக்குறள் மாமணி டாக்டர். கோ.ப. செல்லம்மாள் அவர்கள் பாடினார். அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் எம். பாஸ்கர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். MFG Lion Dr. கலைமாமணி ஜி. மணிலால் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார். விஜிபி குழுமத்தின் தலைவர் செவாலியர் கலைமாமணி டாக்டர் வி.ஜி சந்தோஷம் அவர்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். சென்னை தொலைக்காட்சியின் உதவி இயக்குனர் முனைவர். திரு. பால இரமணி, தொலைக்காட்சி நடிகர் திரு. சிவன் சீனிவாசன், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் திரு. … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

ரெயின்போ FM புகழ் சோமாஸ்கந்தமூர்த்தி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

45-வது கல்கி ஜெயந்தி விழாவில் பழமையும், புதுமையுமாக மாறிக்கொண்டிருக்கிற இந்த வளாகமான மனுஜோதி ஆசிரமத்தை நிர்வகித்து வருகிற நிர்வாகிகளை வாழ்த்துகிறேன். 45 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவை நடத்துகிற ஆற்றலைத் தந்த இறைவனை வாழ்த்தி, இறைவணக்கம் பாடிய மலேசிய குழந்தைகளையும் வாழ்த்துகிறேன். உலகத்தின் பல பகுதிகளிலிருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிற இந்த பெருமக்களையும் வாழ்த்துகிறேன். 1998-ம் ஆண்டிலே இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு கல்கி ஜெயந்தி விழாவிலும் கலந்துகொள்வதற்கு ஆற்றுப்படுத்திய உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்கிறேன். மனிதன் என்பவன் ஆறறிவு உள்ளவனாகத்தானே இருக்கிறான். ஓரறிவு உயிர் என்பது தொடு உணர்வை மட்டுமே கொண்டது. இரண்டறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வையும், சுவையுணர்வையும் கொண்டது. மூன்றறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு என்கிற மூன்று தன்மைகளை ஏற்றுக்கொண்டதாகும். நான்கறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, சப்தம் என்கிற ஒலியுணர்வை அறிந்துகொள்கிற ஆற்றலைக் கொண்டது. ஐந்தறிவு என்று வருகிறபோது அந்த உயிரினத்திற்கு தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, ஒலியுணர்வு, ஒளி என்கிற வெளிச்சத்தை உணர்கிற உணர்வு என்கிற இந்த ஐந்து உணர்வுகளையும் கொண்டதுதான் ஐந்தறிவுள்ள உயிரினம் என்று வழங்கப்பட்டது. மனிதர்களாகிய நமக்கு ஆறறிவு என்று வகுத்தார்கள். எப்படி? தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

45-கல்கி ஜெயந்தி விழா

பத்மஸ்ரீ அவ்வை நடராசன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு அன்பார்ந்த தலைவர் பெருந்தகை மீனாட்சி சுந்தரம் அவர்களே, நீதியரசராகத் திகழும் பெருந்தகை வள்ளிநாயகம் அவர்களே, என் வாழ்நாளில் பல்லாண்டுகளாக என்னோடு பரிவும், உறவும் காட்டி உலகமெல்லாம் வலம் வருவதற்கு வழிகாட்டியாகத் திகழும் பெருந்தகை டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்களே, அறிஞர் பெருமக்களே, நண்பர்களே, காதார கேட்டு மகிழத்தக்க களிப்பூட்டும் பாடல்களையெல்லாம் ‘அமிர்த கானம்’  என்ற பெயரில் வடித்திருக்கும் நண்பர் மதுசூதனன் அவர்களையும் நான் மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன். எளிய மக்கள் பல நூறு மைல்களைக் கடந்து, நாம் கலி தெலுங்கு என்று பாராட்டுகிற ஆந்திர மாநிலத்தின் மக்களெல்லாம் இங்கே ஆர்வத்தோடு கூடியிருப்பதைக் காணும்போது நமக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொதிகை ஆற்றங்கரையின் புகழ் வளர்க்கின்ற ஒரு பெருநகரம் என்று பாராட்டப்படுகிற நெல்லையை அடுத்த பகுதியில் ஒரு பல ஏக்கர் பரப்பளவில் இப்படிப்பட்ட ஒரு சமய நல்லிணக்க சன்மார்க்க சபையை, மனுஜோதி ஆசிரமத்தை நடத்துகிற முயற்சியை நான் கண்டு வியக்கின்றேன்.மதம் என்று சொன்னால் கொள்கை என்றுதான் பொருள். தமிழிலேகூட ஏதாவது ஒரு கருத்தை வலியுறுத்துகிறார்கள் என்று சொன்னால் அது அவருடைய மதம் என்று சொல்லுவார்கள். மதம் என்று சொன்னால் கொள்கைதான். கொள்கை ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கையாக இருக்கும். கணவருடைய கொள்கையும், … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

நுகர்வோர் விழிப்புணர்வு மாநாடு

ஹைதராபாத்தில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு மாநாட்டில் திரு. D. பால் உப்பாஸ் N. லாறி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹ! இந்த நுகர்வோர் விழிப்புணர்வு மாநாட்டிலே ஆன்மீக விழிப்புணர்வைக் குறித்து ஒரு சிலவார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். ‘Consumer’ என்றால் நுகர்வோர் என்று பொருள். மனிதனால் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிற எந்த ஒரு சேவையிலும் குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் (Human Error) ஏற்படத்தான் செய்யும். எல்லா நிறுவனங்களும் தாங்கள் மக்களுக்களிக்கும் சேவைக்கு ஏற்ப அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இறைவன் நமக்கு அருளிய அனைத்துமே சுத்தமானது, தரமானது, நிறைவானது மற்றும் பரிபூரணமானது. அதேசமயம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், மனிதன் தயாரித்து வழங்குகின்ற எல்லா பொருட்களுக்கும் மூலப் பொருள் என்னவென்று தெரியுமா? அது அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகிலுள்ள அனைத்து பொருட்களும் பூமியில் இறைவன் படைத்தவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்பதை மறந்து விடாதீர்கள். இதை நாம் இயற்கைவளங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளுகின்றோம். சூரியன் நமக்கு ஒளியைக் கொடுக்கிறது. கடவுள்தான் அந்த ஒளியை நமக்கு இலவசமாகத் தந்திருக்கிறார். வேறு ஒருவராலும் தரமுடியாது. அதற்காக நீங்கள் கடவுளுக்கு எப்பொழுதாவது நன்றி செலுத்தியிருக்கிறீர்களா? ஆனால் அவர்தான் அனைத்து பொருட்களின் சிருஷ்டிகர்த்தா. … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து, பிரமுகர்களின் உரை