தமிழ் | తెలుగు

» பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கிழக்கே தோன்றிய மின்னல் -10

இதில் மனுஷகுமாரனின் மாமிசத்தை புசிக்காமலும், அவருடைய இரத்தத்தை அருந்தாமலும் போனால் நீங்கள் நித்திய ஜீவனை பெற முடியாது என்றார். இப்படி சொன்னதும் இயேசுவை பின்பற்றியவர்களில் அநேக சீடர்கள் அவரை விட்டு அகன்றனர். அவருடன் இருந்த எழுபது சீடர்களில் ஐம்பத்தெட்டு பேர் அவரை விட்டு பிரிந்து சென்றனர். நிலையில்லாத வாழ்க்கைக்கு பணி செய்வதை தவிர்த்து நிலையான வாழ்க்கைக்குரிய பணிகளை செய்யுங்கள். அதற்கு மனுஷகுமாரன் உங்களுக்கு உதவியாக இருப்பார். இதுதான் சரீர மீட்பின் நற்செய்தி. சிலுவை அறைதலின் சம்பவத்தின்போது, அவருக்காக நின்ற பதினொரு சீடர்களும் ஓடி விட்டனர். பன்னிரெண்டாவது சீடனான யூதாஸ் மாத்திரமே கடைசி வரை அவருடன் இருந்தான். இதைப்போலவே மனுஷகுமாரனின் காலகட்டத்திலும் நடைபெற்றது. சுகமளிக்கும் ஊழிய நிலையில் பல இலட்சக்கணக்கானோர் அவரை தீவிரமாக பின்பற்றினார்கள். ஆனால் அவர் வேத இரகசியங்களை கூறியதும் இது கடினமான உபதேசம் என்று சொல்லிவிட்டு அநேகர் அவரை விட்டு ஓடிப்போனார்கள். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் அறிவு ஆற்றலையும் – பிரசங்கத் திறமையையும் கண்ட பல அமைப்புகள் அவரை தங்கள் அமைப்புக்குள் கொண்டுவர முயற்சித்தன. அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தன. பணத்திற்கும் புகழுக்கும் விலைபோகாத அவர் கடவுள் பணி செய்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டிருந்தார். அவர் இப்பணிக்காகவே இப்பூமியில் அவதரித்தார். … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கிழக்கே தோன்றிய மின்னல் – 9

ஒரு விதை முளைக்கும் வரை பூமிக்கு அடியில் காத்திருப்பதுபோல பாலாசீரின் மனத்தின் ஆழத்தில் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற சத்திய விதை இது நாள் வரைக்கும் முளைப்பிற்காக காத்துக்கொண்டிருந்தது. மனுஜோதி ஆசிரமத்தின் சத்திய நகரத்தில் முளைத்தெழுந்த ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற ஜீவ விருட்சம் தனது கிளைகளை உலகம் முழுவதிலும் பரப்பி ஆலமரம்போல் தனது விழுதுகளை ஆழமாக இறக்கியுள்ளது. இதனை தொடர்ந்துதான் 1986-ம் ஆண்டு இதை மனுஜோதி ஆசிரமத்தின் பிரதான கொள்கையாக்கினார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இன்று உலகின் எல்லா திசைகளிலும் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற தேவனின் தாரக மந்திரம் பலமதங்களின் வேர்களில் வெந்நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. இனி வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது பற்றியும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா தீர்க்கதரிசனமாக பல செய்திகளை நமக்குத் தந்துள்ளார். சீக்கிரத்தில் தாவீதின் வழித் தோன்றலான கிறிஸ்துவுக்கும் அந்திக்கிறிஸ்துவுக்கும் நேரடி யுத்தம் நடைபெறும். அந்திக்கிறிஸ்துவும் அவனைச் சார்ந்தவர்களும் தோல்வியடைந்து 1000 ஆண்டுகள் சிறைபிடிக்கப்படுவார்கள். இந்த யுத்தத்தில் உலகமெங்கும் 150 கோடி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவார்கள். இராட்சத பேரலைகள் வரும். சென்னை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் தண்ணீரில் மூழ்கும். தேவனுடைய மக்கள் மட்டுமே இந்த அழிவில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். பூகோள எல்லைகள் மாறுபடும். … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கிழக்கே தோன்றிய மின்னல் –

“கடவுளுடைய நாமத்தில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று அவர்கள் சொல்லி, மனுஷகுமாரனாகிய பாலாசீர் லாறியின் பெயரில் அழைத்தாலொழிய அவர்கள் வீடுகள் பாழடைந்து கிடக்கும். இரண்டு சாட்சிகளின் ஊழியம் மூன்றரை வருடங்களுக்கு முடிந்த பின்னர் அவர்களை காப்பாற்ற மணவாளனாகிய பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவும், மணவாட்டியான அவர்களின் பக்தர்களும் ஒலிவ மலைக்கு வருவார்கள். கல்கி மகா அவதாரமாகிய பாலாசீர் லாறி முத்துகிருஷ்ணாவை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அன்புடன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்று அழைக்கின்றனர். இன்றும்கூட பல்லாயிரக்கணக்கான ஆந்திர மாநில பக்தர்கள் ஆசிரமத்திற்கு வந்து செல்கின்றனர். 1986, 1987 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மனுஷகுமாரன் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவுக்கு தங்கள் அன்பின் வெளிப்பாடாக புஷ்பாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். மனுஷகுமாரன் பாலாசீர் லாறி கடவுளைப் பற்றிய உண்மைகளையும், வேதங்களைப் பற்றிய உண்மைகளையும் எடுத்துக் கூறுவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டார். அவற்றுள் பத்திரிகைகளும் ஒன்று. இவை தவிர பல்வேறு சமயங்களில் துண்டு பிரசுரங்கள், சிறு புத்தகங்கள், செய்தி கடிதங்கள், கையேடுகள் என பலவற்றையும் வெளியிட்டு, பக்தர்களுக்கு அவற்றை இலவசமாக விநியோகித்தார். டாக்டர் ராம்பிரசாத் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர். மனுஷகுமாரன் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவை சந்தித்து குடும்பத்துடன் ஞானதீட்சை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் தீவிர விசுவாசியான அவர் “கல்கி மகா அவதாரம்” … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கிழக்கே தோன்றிய மின்னல்

பாலாசீர்  லாறி  முத்துக்கிருஷ்ணாவின்  வாழ்க்கை  சரிதை நீங்கள் இந்த கடைசி கால செய்திகளை எடுத்துக்கொள்ளாவிட்டால் உங்களால் மரணத்தை வெல்ல முடியாது என்று கூறினார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இந்த செய்திகளால் கிறிஸ்தவ தேவாலயங்களிலிருந்து மனுஷகுமாரனின் பின்னால் வந்த பக்தர்களில் 90 சதவீதத்திற்கு மேல் அவரை விட்டு பிரிந்து சென்றனர். பணம், திருமணம் மற்றும் கல்லறை தோட்டத்திற்காக அவர்கள் மீண்டும் அடைக்கலம் தேடி தங்கள் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு திரும்பிச் சென்றனர். வேதாகமம், குர்-ஆன், பகவத்கீதை மற்றும் பல வேதங்களிலுள்ள செய்திகளை திரட்டி தீர்க்கதரிசனங்கள் மற்றும் எழுதப்படாத ஏழு இடிமுழக்கச் செய்திகள் என்ற புத்தகங்களை பிரசுரம் செய்து பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா உலகம் முழுவதும் விநியோகித்தார். 1969-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டு காலம் இந்த பணியில் அவர் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இயேசுவின் காலத்தில் அவர் ‘பெயெல்செபூல்’ என்னும் பிசாசின் தலைவன் என்று அழைக்கப்பட்டதைப்போல மனுஷகுமாரன் லாறி முத்துக்கிருஷ்ணாவும் மேற்கத்திய உலகத்தினரால் அந்திக்கிறிஸ்து என்றும், பிசாசின் புதல்வன் என்றும் அழைக்கப்பட்டார். இயேசுவிற்காக அவருடைய சீடர்கள் பன்னிரண்டு பேர் தங்கள் உயிரையும் தர தயாராக இருந்தனர். அதைப்போலவே இடிமுழக்கச் செய்திகளை பின்பற்றிய பக்தர்கள் பலர் பரிசுத்த பவுல் சொன்னதைப்போல மரணமில்லா பெருவாழ்வு அடைய, கடவுளுடைய … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கிழக்கே தோன்றிய மின்னல் – 6

இதில் மனுஷகுமாரனின் மாமிசத்தை புசிக்காமலும், அவருடைய இரத்தத்தை அருந்தாமலும் போனால் நீங்கள் நித்திய ஜீவனை பெற முடியாது என்றார். இப்படி சொன்னதும் இயேசுவை பின்பற்றியவர்களில் அநேக சீடர்கள் அவரை விட்டு அகன்றனர். அவருடன் இருந்த எழுபது சீடர்களில் ஐம்பத்தெட்டு பேர் அவரை விட்டு பிரிந்து சென்றனர். நிலையில்லாத வாழ்க்கைக்கு பணி செய்வதை தவிர்த்து நிலையான வாழ்க்கைக்குரிய பணிகளை செய்யுங்கள். அதற்கு மனுஷகுமாரன் உங்களுக்கு உதவியாக இருப்பார். இதுதான் சரீர மீட்பின் நற்செய்தி. சிலுவை அறைதலின் சம்பவத்தின்போது, அவருக்காக நின்ற பதினொரு சீடர்களும் ஓடி விட்டனர். பன்னிரெண்டாவது சீடனான யூதாஸ் மாத்திரமே கடைசி வரை அவருடன் இருந்தான். இதைப்போலவே மனுஷகுமாரனின் காலகட்டத்திலும் நடைபெற்றது. சுகமளிக்கும் ஊழிய நிலையில் பல இலட்சக்கணக்கானோர் அவரை தீவிரமாக பின்பற்றினார்கள். ஆனால் அவர் வேத இரகசியங்களை கூறியதும் இது கடினமான உபதேசம் என்று சொல்லிவிட்டு அநேகர் அவரை விட்டு ஓடிப்போனார்கள். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் அறிவு ஆற்றலையும் – பிரசங்கத் திறமையையும் கண்ட பல அமைப்புகள் அவரை தங்கள் அமைப்புக்குள் கொண்டுவர முயற்சித்தன. அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தன. பணத்திற்கும் புகழுக்கும் விலைபோகாத அவர் கடவுள் பணி செய்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டிருந்தார். அவர் இப்பணிக்காகவே இப்பூமியில் அவதரித்தார். … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கிழக்கே தோன்றிய மின்னல் – 5

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மக்களின் நலனுக்காக நிகழ்த்தப்பட்ட பிரம்ம யக்ஞம் அல்லது ஆதிபலி என்ற இரகசியத்தை, மனுஷகுமாரன் லாறி முத்துகிருஷ்ணா 1986-ம் ஆண்டு பக்தர்களுக்கு வெளிப்படுத்தினார். அந்த ஆதி வேள்வியானது உன்னத நிலையில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை பக்தர்களுக்கு விளக்கினார். அது பூலோகத்தில் மாத்திரம் அல்ல, பரலோகத்தின் கீழ் உள்ள சர்வ சிருஷ்டிக்கும் நிகழ்த்தப்பட்டது. ஆதி புருஷராக அதை நிகழ்த்தி காட்டினார். இந்த பலியானது தேவ புத்திரரால் செலுத்தப்பட்டது என்று கூறினார். வார்த்தையானவர் அல்லது கிறிஸ்து அவருடைய குமாரனாக அதைச் செய்தார். உலகத்தோற்ற முதல் தேவனுடைய பிள்ளைகளால் பலி செலுத்தப்பட்டது. சிருஷ்டிப்பின் துவக்கம் ஆதி பாவம் கலியன் உருவெடுத்தல், பாதாளத்தின் தோற்றம் என்பவைகளைப் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தினார். இந்த இரகசியத்தை அறிந்து கொண்டவர்தான் மரணமில்லாமல் பெருவாழ்வு அடைவர், என ஆணித்தரமாக கூறினார். இந்த ஆதி வேள்வியை நிகழ்த்தியவர்களுக்கு ஜீவாத்மா வரப்பிரசாதமாக கொடுக்கப்பட்டது என்ற நற்செய்தியானது பக்தர்களுக்கு சந்தோஷத்தை அருளிச் செய்தது. பலி என்றால் ஒருவரை கொல்வது என்று அர்த்தமல்ல. அந்த வார்த்தையானது தியாகத்தையும் குறிக்கும். இந்த ஆதி வேள்வி என்ற சொல் கீதையில் அழியாத யோகம் என வர்ணிக்கப்படுகிறது. இந்த வேள்வியை நினைவுகூர்ந்து இஸ்லாமியர் பக்ரீத் பண்டிகையாகவும், கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். ஆனால் அதின் உள் … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கிழக்கே தோன்றிய மின்னல் – 4

1986-ம் ஆண்டு கிறிஸ்தவ மத திருச்சபைகளுக்கும், கிறிஸ்தவ மத பாதிரிமார்களுக்கும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா மேலும் சில கேள்விகளை முன் வைத்தார். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் கிறிஸ்தவ மத திருச்சபைகளும், பாதிரிமார்களும் எவ்விதமான பதிலையும் சொல்லவில்லை. கிறிஸ்தவ மதம் தவறான கொள்கையின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவிக்க ஆரம்பித்தார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. அவர் கூறியது:- உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டது இயேசுகிறிஸ்து அல்ல. அவருடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்பவன்தான். இயேசு நாதர் மரித்தபின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் நூறு சதவீதம் கற்பனையான கட்டுக்கதை. கட்டு கதைகளுக்கு செவிகொடுக்கக்கூடாது என்று அப்போஸ்தலராகிய பவுலும்கூட எச்சரித்துள்ளார். இயேசு நாதரை கொல்லுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் சிலுவையை கடவுளின் அடையாளமாகத் தொழுவது எந்தவிதத்தில் நியாயமானது? 2,000 வருடங்களுக்கு முன்பாக வந்த நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு அவர்தான் என்று பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா பிரகடனம் செய்தார். பிலாத்துக்கும் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கும் முன்பாக நடந்தவற்றிற்கும் தான்தான் சாட்சி “இன்று நான் இயேசுவாக உங்கள் முன்பாக நிற்கிறேன்” என்று பிரசங்கித்து, எல்லோர் முன்னிலையிலும் பிரகடனம் செய்தார். அதோடு 1988-ம் ஆண்டில் அவர் மாம்சத்தில் உயிரோடு இருந்தபோதிலும் இயேசுவைப்போல நான் இந்த உலகத்தில் … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கிழக்கே தோன்றிய மின்னல் – 3

ஒரு நாள் கலிபோர்னியாவில், லாறி தெருமுனை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ‘உங்களுக்கு என்ன வேண்டும்? கடவுளிடம் கேளுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்ற அவர் காத்திருக்கிறார் என்று, தனக்கே உரிய கம்பீரமான சிம்மக் குரலில் முழங்கி கொண்டிருந்தார் லாறி முத்துக்கிருஷ்ணா. அவர் பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் சட்டென ஒரு கேள்வியை கேட்டு அவரை திக்குமுக்காடச் செய்தான். “பிரசங்கியாரே! நீர் சொன்னது உண்மையா என்று சோதித்து பார்க்க விரும்புகிறேன். இப்பொழுது எனக்கு தேவை நூறு டாலர். கடவுள் எனது தேவையை நிறைவேற்றுவாரா” என்று கேட்டு, கை நீட்டி நின்றான். சுற்றியிருந்தவர்கள் ஏளனமாக லாறியைப் பார்த்தனர். ‘ஆண்டவரே நான் சொன்னது பொய்யா. நான் சொன்னது சத்தியம் என்று எப்படி நிரூபிக்க போகிறீர்’ என்று ஆண்டவரிடம் மனதிற்குள் முறையிட்டார் லாறி முத்துக்கிருஷ்ணா. கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த அதிசயம் நடந்து முடிந்தது. அந்த கூட்டத்தினர் ஆண்டவரின் பிரதிநிதியாக மரியாதை கலந்த பயத்துடன் லாறியைப் பார்த்தனர். அதற்கு காரணம், கூட்டத்திலிருந்த ஒரு நபர் சட்டென தன் பாக்கெட்டிலிருந்த நூறு டாலரை எடுத்து அந்த மனிதனின் கையில் வைத்ததுதான். ‘இது எனக்கு கடவுள் இட்ட கட்டளை. நேற்று கடவுள் என் கனவில் வந்தார்’ என்று லாறியின் காதில் கிசுகிசுத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக, கடவுளின் பிரதிநிதியாக … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை