தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள்

ஸ்ரீ பத்மநாப வேதியர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! வாழ்க்கையிலே காரணங்கூற முடியாத பல ரகசியங்களையும், சிக்கல்களையும் பார்க்கிறோம். நல்ல செயல்களையே செய்து வரும் பலர் துன்பங்களையே அடைவதையும், தீமையே செய்து வரும் பலர் மேன்மேலும் நன்மைகளையே அடைவதையும் காண்கிறோம். நல்ல செயல்களினால் நற்பலன் கிட்டும். “நன்மை விதைத்தால் நன்மை விளையும், தர்மம் தலைகாக்கும்” என்றெல்லாம் முதுமொழிகள் நம்மை ஊக்குவிக்குகின்றன. ஆனால் நடைமுறையில் இவைகளுக்கு நேர்மாறான பலன்களை அடையும் பொழுது, மனம் தளர்ந்து போகிறது. ஒரு சமயம் ஆழ்வார் ஒருவர் ஸ்ரீ ரங்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்க பக்தன் ஓடோடி வந்து, சுவாமி, உம்மை நோக்கி துன்பம் தொடர்ந்து வருகிறது என்றான். இறைவனை நினைத்து நினைத்து உருகுவதிலேயே ஈடுபட்டிருந்தவர், என்ன? துன்பமா? வருகிறதா? வரட்டுமே! தனியே செல்ல வேண்டுமே என்றிருந்தேன். துன்பம் வந்தால் அதையே வழித் துணையாகப் பற்றிக்கொண்டு சென்று விடுகிறேன் என்றாராம் ஆழ்வார். இன்று பெரும்பான்மையோரும் துன்பமே வழித்துணையாகப் பெற்றவர்கள்தாம். அந்த துன்பத்தை துடைக்கவே இறைவன் இணை அடிகளை நாடி ஓடுகின்றது மக்களது நெஞ்சம். இப்படி துன்புற்ற பத்மநாப வேதியரின் சரிதம்தான் இது. காசி நகரிலே ஒரு வணிகன். அளவற்ற செல்வம் உடையவன். ஐந்து குமாரர்களைப் பெற்றான். நிறைந்த மனதோடு நல்ல முறையிலே வாழ்ந்து வந்தான். முன் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

கேனோ கிறிஸ்டேல்ஸ் – ஐந்து வண்ணங்கள் கொண்ட நதி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கொலம்பியா என்ற நாட்டில் ‘ஐந்து வண்ணம் கொண்ட நதி’ அல்லது ‘திரவ வானவில்’ என்று அழைக்கப்படும் கேனோ கிறிஸ்டேல்ஸ் என்னும் நதி பாய்கிறது. கொலம்பியா நாட்டின் கண்கவரும் மற்றும் அற்புதமான இயற்கை விந்தை என்று இந்த நதி அழைக்கப்படுகிறது. செரானிய டே லா மெக்கரீனா என்ற மலைத் தொடரில் இந்த நதி காணப்படுகிறது. மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு என ஐந்து வண்ண தண்ணீரினால் இந்த நதி எல்லாரையும் மயக்குகிறது. கேனோ கிறிஸ்டேல்ஸ் எனும் நதி ஒரு உயிரியல் அதிசயமாகும். ஏனெனில் வருடம் முழுவதும் அது எல்லா நதிகளைப் போலவே காணப்படும். ஆனால் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையே உள்ள காலத்தில் தண்ணீர் அளவு குறைவதால் சூரிய ஒளி பட்டு பாசி மற்றும் கடற்பாசி, செடிகள் செழித்து நதி நீரின் வண்ணத்தை மாற்றுகிறது. நதியின் நீருக்கு பல வண்ணங்களை தருவதற்கு காரணமாக இருப்பது மேக்கரெனியா களாவிகெரா என்னும் செடி. இது சிவப்பு நிற பாசி வகை. இந்த பாசியினால் கேனோ கிறிஸ்டேல்ஸ் எனும் நதிக்கு உலகிலேயே மிகவும் அழகான நதி என்ற பெயர் கிடைத்திருக்கிறது. ஒரு நதியின் நீருக்கு ஐந்து வண்ணம் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

அதிசய மழை மழை என்பதே ஆனந்தமும், ஆச்சரியமும் கலந்ததுதான். அதுவும் இந்தியாவில் நிகழ்ந்த சில மழைப் பொழிவுகள் மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. கேரளாவில் விசித்திரமான சிவப்பு மழை பொழிந்து இரத்த மாதிரியில் மண்ணை நனைத்தது. மும்பை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் மீன் மழை பொழிந்தது. பாலைவன தூசிகள் சிவப்பு மழை பொழிவிக்கிறது. கடல் பரப்பிலிருந்து உருவாகும் புயல்கள் கடல் மீன்களை சுருட்டி கொணர்ந்து மீன் மழையை பொழியச்செய்கிறது. மழை இறைவனின் கருணையென்றால் இவ்விதமான விசித்திர மழைப் பொழிவுகள் அதிசயமே! ✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

அன்பையும் பக்தியையும் மட்டுமே ஏற்கும் இறைவன்

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு சூட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரத்தில், கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்கப்பட்ட சந்தோஷத்தில் ராஜ ராஜ சோழன் நிம்மதியாய் தூங்கும்போது, பரமசிவன் கனவில் அவன் முன்னே எழுந்தருளினார். உடனே ராஜ ராஜ சோழன் “இறைவா, என் பாக்கியம் என்னவென்று சொல்வது? தாங்கள் எனக்கு காட்சி தந்தது, நான் செய்த பாக்கியமல்லவா? தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது? இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய கோயிலாக கட்டியுள்ளேன். அதற்கு ‘தஞ்சை பெரிய கோயில்’ என்று பெயர் சூட்டப் போகிறேன்” என்று ஆனந்தமாக இறைவனிடம் கேட்டான். அதற்கு இறைவன் சிரித்துக்கொண்டே, “மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம். ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின்கீழ், யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்” என்று கூறி மறைந்தார். ராஜ ராஜ சோழனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜ ராஜன், தான் கண்ட கனவைப்பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. பின்னர் நேராக கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றான். கோயில் சிற்பியிடம், தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான். சிற்பி தயங்கியவாறே, “அரசே, கடந்த மூன்று மாதங்களாக … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஸ்ரீ ஜனாபாய்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! ஒருநாள் நடுநிசியில் நாமதேவர் தமது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தார். கடும் காற்றும் மழையும் உண்டாயின. காற்று கூரைகளையெல்லாம் தூக்கி எறிந்தது, மழையும் இடியும், மின்னலுமாய் பொழிய ஆரம்பித்தது. இறைவன் கோயிலினின்று ஓடிவந்து தமது சக்ராயுதத்தை அவரது வீடு பறந்து செல்லாமல் மேலே குடைபோல் நிறுத்தி அவ்வீட்டை காத்தார். ஆனாலும் சுவர்கள் ஈரம் தாங்காமல் சரிந்து உட்கார்ந்துவிட்டன. பொழுது புலரும் சமயம் நாமதேவர் மழை பெய்த செய்தியே அறியாதவராய் மெல்ல எழுந்து எட்டிப்பார்த்தார். ஒளி பொருந்திய பீதாம்பரம் தரிப்பவனும், காதுகளிலே குண்டலங்கள் சூரிய சந்திரர்கள்போல் பிரகாசிப்பவனும், ரத்தினமயமான கிரீடம் தரிப்பவனுமான இறைவன் மண்ணை தன் கையினால் பிசைந்து சுவர் எழுப்புவதைக் கண்டார். “அடடா, இதென்ன அபச்சாரம்! என் வீட்டிற்கு தாங்கள் மண் பூசுவது அடுக்குமா? இது தகுமா” என்று கதறினார். இறைவனோ மிகுந்த கனிவுடன் “அப்பா குழந்தாய் காற்றிலே உன் சிறு குடிசை பறந்துபோயிருக்கும். நீயோ என் நாமத்தை தவிர வேறொன்றிலுமே பற்று இல்லாமலிருக்கிறாய். உனக்கு வரும் தீமையை விலக்குவது என் பணியல்லவா! அப்படி செய்யாவிட்டால், உன் தாயார் என்னை சும்மாவிடுவாளா?” என்றார். இங்கே பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த குணாயி இறைவன் திருவடிகளிலே வீழ்ந்து “தங்களை நான் தூஷித்ததுண்டு, உண்மைதான். மன்னிக்க வேண்டும்” … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள் -10

தாயின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு எவ்வாறு நிகழ்கிறது? ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டையுடன் இசைந்து கரு உண்டாகும். அந்த இணைப்பு சரியாக நிகழாவிட்டால் கரு உண்டாகாது. அதேநேரம், அவை சரியாக இணைந்திருந்தாலும் ஒரு பிரச்சினை உண்டாக வாய்ப்புண்டு. அதாவது ஆணின் உயிரணு பெண்ணின் கருப்பையில் நுழைந்தவுடன், தாயின் மஞ்சள் கருவில் இருந்து மெல்லியதான ஒரு சவ்வுப் படலம் தோன்றி, மற்ற உயிரணுக்களை கருப்பைக்குள் நுழைய விடாமல் கருப்பையின் வாசலை அடைத்துவிடும். இந்தச் செயல் சரிவர நடந்து, வெற்றிகரமாக உண்டாகும் கரு முதல் மாதத்தில் ஒரு தான்றிக்காயின் அளவுக்கு இருக்கும். இரண்டாவது மாதத்தில் நோய்கள், மயக்கம் போன்றவற்றால் தாயின் கருப்பையின் வாசல் மூடப்படாமல் போனால், அந்த மாதத்திலும் சில உயிரணுக்கள் உள்ளே நுழையும். அப்படி நுழைந்தால், அப்போதும் கரு உண்டாகாது. இப்படிப்பட்ட பிரச்சினையிலும் தப்பி, இரண்டாவது மாதம் வெற்றிகரமாக கருவானது நிலைபெற்றுவிடுகிறது. மூன்றாவது மாதத்தில் உருவான கரு நன்கு வளர வேண்டும் அல்லவா? அதற்காக, அதுவரை வெளியேறிக்கொண்டிருந்த தாயின் மதநீர் வெளியேறாமல், கருப்பையிலேயே தங்கும் அதனால் கருப்பை வீங்கும். வயிறு சற்று பெருத்து வீங்கும். சில நேரங்களில் மதநீரை தாங்கமுடியாமல், கருப்பை கிழிவதும் உண்டு. இந்தப் பிரச்சினையிலிருந்தும் தப்பி, இரண்டாவது மாதத்தைத் தாண்டி மூன்றாவது … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

வண்ணத்து பூச்சிகளை பிடித்து விளையாட வேண்டும் என்று எல்லோருக்கும் ஆர்வம் ஏற்படலாம். அதன் கொள்ளை அழகுதான் இதற்கு காரணம். ஆனால் இந்த வண்ணத்துபூச்சிகள் எல்லாம் பார்த்தாலே அருவருப்பை ஏற்படுத்தும் கம்பளி பூச்சியிலிருந்து உருவானவை என்றால் நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். உலகம் முழுவதும் 24 ஆயிரம் வகை வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக இதுவரை கண்டறிந்து உள்ளனர். வண்ணத்துப்பூச்சி வெப்ப மண்டல உயிரினமாகும். ஆனாலும் இவை கடும் குளிர் வீசும் இமயமலை மற்றும் கனடாவின் வடபகுதி ஆகியவற்றிலும்கூட காணப்படுகின்றன. இந்தியா வெப்ப மண்டல பகுதி என்பதாலும், வண்ணத்து பூச்சிகள் வாழ ஏற்ற சூழ்நிலை இருப்பதாலும், இந்தியாவில் 1800 வகை வண்ணத்து பூச்சிகள் உள்ளன. இவை சராசரியாக மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்திலிருந்து 15 கிலோமீட்டர் வேகம்வரை செல்லும். சில வண்ணத்து பூச்சிகள் 50 கிலோமீட்டர் வேகத்தில்கூட பறக்கின்றன. இவை குளிர் இரத்தம் கொண்டவை. இதனால் அவற்றின் உடல் வெப்ப நிலை 86 டிகிரிக்கு மேல் இருந்தால் மட்டுமே பறக்க முடியும். இவற்றுக்கு 2 பெரிய கண்கள் உண்டு. அவற்றில் 6 ஆயிரம் லென்சுகள் உள்ளன. ஆனாலும் இவற்றால் நீண்ட தூரத்துக்கு பார்க்க முடியாது. 10 அடியிலிருந்து 12 அடி தூரம் வரை மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். ஆனால் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

புரந்தரதாஸர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! நாரத முனிவரை உலகிற்கு அனுப்பிய இறைவன்தான் திருவுள்ளம் கொண்டிருந்தால் முதலிலேயே நல்வாழ்வு வாழும்படி பணிந்திருக்க முடியாதா? முடியும். ஆனால் ஏன் அப்படி செய்யவில்லை? “மனிதன்” மனிதன் செய்யக்கூடிய தவறுகளையெல்லாம் செய்தாலும் பின்பு திருந்தி தெய்வ வாழ்க்கையைப் பெறமுடியும்”என்பதை உலகிற்கு காட்டவே இப்படிச் செய்த முயற்சிகள் பல. அர்ஜுனனுக்கும் உத்தவருக்கும் கீதோபதேசம் செய்ததுபோல ரகுநாதனுக்கும் போதிக்கின்ற முறையாலே நம் எல்லோர்க்கும் போதிக்கின்றான் இறைவன். ஒருநாள் காலை, வேமன்னபுரி வீதிகளில் ஒரு கிழவர், “ரகுநாதன் என்ற வட்டி வியாபாரியின் வீடு எது?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். தம்மை விசாரித்தவர்களிடம், “கொஞ்சம் பண உதவி வேண்டும்”என்றார். “ஐயோ பாவம்! அவன் கொடையாளி என்று உமக்கு யார் சொன்னார்கள்? வேறு யாரையாவது பார்த்தாலும் பயன் உண்டு” என்று சொன்னார் சிலர். “அவனிடமா?” என்று பரிகசித்தனர் சிலர். அதை ஏற்காமல் மெல்ல மெல்ல நடந்து ரகுநாதனின் வீட்டை அடைந்தார் முதியவர். அவரது பஞ்சைக் கோலம் கண்ட ரகுநாதன், “இந்த பிராமணனிடம் என்ன இருக்கப்போகிறது அடகு வைக்க?”என்று எண்ணி, “யாரைய்யா நீர், அசாத்ய வேலை இருக்கிறது, வந்த விஷயத்தை சுருக்கமாகச் சொல்லும்” என்றான். கிழவர், “ஏதேது ஆரம்பமே சுப சூசகமாகக் காணோமே” என்று நினைத்து, மூட்டையை அவிழ்த்து, எலுமிச்சம்பழம் ஒன்றைக் கையிலெடுத்து … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்