தமிழ் | తెలుగు

» திருக்குறள் விளக்கம்

ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்

‘அன்புடைமை’ என்ற வார்த்தையிலேயே அன்பு நம்மிடமிருக்கும் ஒரு உடைமையாக இருக்க வேண்டும் அல்லது ஒரு உறுப்பாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். ‘அன்பு’ என்பது அகத்துறுப்பாகும்.                “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை                அகத்துறுப்பு அன்பிலவர்க்கு?” உடம்பினுள்ளே இருக்கின்ற மனதின்மேல் அன்புற்றவர்களுக்குப் புறத்தே உள்ள உறுப்புகளால் ஆகும் பயன் என்ன? எதுவுமில்லை என்பது இக்குறளின் பொருளாகும். அதாவது கை, கால், கண், மூக்கு, செவி, வாய் போன்றவை புற உறுப்புகளாகும். ஆனால் ‘அன்பு’ என்ற கண்ணுக்குத் தெரியாத அகத்துறுப்பு இல்லாவிட்டால், புற உறுப்புகள் இருந்தும் பயன் இல்லை. அன்புணர்ச்சி என்பது தனித் தன்மையுடையது. அன்பின் அடிப்படையிலேதான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உயர்ந்த நிலையிலிருக்கும்போதுதான் அன்பு செய்கிறார்கள். அதே நபர் வாழ்க்கை சக்கரத்தில் கீழான நிலைக்கு வரும்போதும், அன்பு செலுத்த வேண்டும். அதுவே உண்மையான அன்பாகும். அன்பு என்ற உறுப்பு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்றவற்றிலும் காணப்படுகிறது என்பதை நிரூபிக்கிறது இச்சம்பவம். காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விஷமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மகான்கள் அருகிலிருக்கக் கண்டு மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு மானையடிக்க குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை இதன் பொருள் யாதெனில், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்பர் அன்பின் உண்மையை அறியாதவர். மற்ற பாவச் செயல்களை நீக்குவதற்கும் அவ்வன்பே துணையாகும். அன்பானது புண்ணியம் செய்வதற்கான உபகார சக்தி என மட்டுமே நாம் அறிவோம். ஆனால் வள்ளுவரோ அஃது பாவச் செயலை நீக்குவதற்கும் துணை புரியுமென இயம்புகிறார். அத்தகைய அன்பானது அடுத்தவர்கள் புரிகின்ற கீழான பாவச் செயல்களையும் தனக்குள் ஈர்த்துக்கொண்டு அவர்களை சகோதரத் தன்மையுடன் காண வகை செய்யும். இஃது முழுமையான தூய அன்புடையவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். இவ்வன்பின் ஆழத்தை ஒரு கதையின் மூலம் காண்போம். ஞானி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே உலாவுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரெதிரே, அவ்வூரில் எல்லோராலும் திறமையுடையவரென மதிக்கத்தக்க வயலின் கலைஞர் ஒருவர் அதிகமான குடி போதையில் தன் நண்பர்களுடன் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அதனைக் கண்ட ஞானியானவர் அவன்மீது இரக்கம் கொண்டு வயலின் கலைஞரை நோக்கி “என்னப்பா, நீயோ திறமைமிக்க சிறந்த வயலின் கலைஞன், உன் திறமையையும் புகழையும் இந்த மதுப்பழக்கத்திற்கு அடகு வைத்து விட்டாயே, இதனால் உன் பெயர்தானே கெடும்” என்று அறிவுரை கூறினார். அந்த அறிவுரையை சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இல்லாத அவன், ஞானியை தகாத கீழான வார்த்தைகளால் திட்டினான். அவனுடமிருந்த … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞால முழுதும் நயந்தளந்தான் – வாலறிவன் வள்ளுவரும் தங்குறள் வெண்பாவடியால் வையத்தார் உள்ளுவவெல்லாமளந்தார் ஓர்ந்து” என்பது பரணர் பாடிய பாட்டாகும். இதின் பொருளாவது முன்னொரு காலத்தில் திருமால் குறுகிய வடிவமுடைய வாமனாய் தோன்றி, பின் நெடுமாலாக ஓங்கி உயர்ந்து தன் இரண்டடியால் உலக முழுதும் ஒருங்கேயளந்த காட்சிபோல, அறிவினால் மேம்பட்ட ஆசிரியர் வள்ளுவரும் தம் குறுகிய குறளடியிரண்டால் மக்கள் கருதும் கருத்தையெல்லாம் அளந்து விட்டார். இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் உடமைகள் என்னும் தலைப்பில் 10 அதிகாரங்கள் உள்ளன. அதில் முதல் உடைமை அன்புடைமை. ‘அன்பு’ என்பது அதை நாம் உணரும் இடத்திற்கேற்ப வேறு பல பெயர்களை கொண்டதாக உள்ளது. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாம் இறைவன்பால் வைத்த அன்பு பக்தி என்றும், மனைவிமேல் வைத்த அன்பு காதல் என்றும், தன்னைப் போன்றவர்மேல் வைத்த அன்பு நட்பென்றும், நாட்டின்மேல் வைத்த அன்பு நாட்டுப்பற்று என்றும், பிற உயிர்கள்பால் அன்பு செலுத்துவதை ஜீவ காருண்யம் என்றும், தாய்மொழிமேல் வைக்கும் அன்பு மொழிப்பற்று என்றும், எஜமான்மேல் வேலைக்காரன் வைக்கும் அன்பு விசுவாசம் என்றும், மாணவர்கள் ஆசிரியர்கள்மேல் வைக்கும் அன்பு குருபக்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்பிற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில் ஒரு மனிதன் … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தியைக் கேட்கும்போது, அந்த தாய் அதிக சந்தோஷம் அடைகிறாள் என்பது இக்குறளின் கருத்தாகும். ஒரு தாய் இயற்கையாக குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அக்குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு, தான் அடைந்த அத்தனை துன்பங்களையும் மறந்து மகிழ்ச்சி அடைகிறாள். குழந்தை இப்போது தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதன் மூலம் உலகிற்கு வந்துள்ளது. இவ்வாறு இயற்கையின் வழியில் பிறப்பது மட்டுமே குழந்தைக்குச் சிறப்பல்ல. இந்த இயற்கைப் பிறப்பைத் தாண்டியும் பிறப்பு ஒன்றைக் குழந்தை அடைய வேண்டும். இயற்கையாக பிறப்பது மட்டுமே ஒருவனுக்கு சிறப்பை அளிக்காது. அதற்கடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும். அதுவே சாதாரண மனிதன் ‘சான்றோன்’ என்று அழைக்கப்படுவதாகும். முதற் பிறப்பு தாய்ப் பறவையின் வயிற்றிலிருந்து வெளிவரும் முட்டையைப்போல உள்ளது. சான்றோனாவது முட்டையிலிருந்து தானாகவே வெளிவரும் குஞ்சு என்ற நிலையே இரண்டாம் பிறப்பு அல்லது மறுபிறவியாகும். சான்றோனாக இரண்டாம் பிறப்படைந்த நிலையே முழு வளர்ச்சியடைந்த நிலையாகும். உருவத்தால் மனிதர்களாக காட்சி அளிக்கிறவர்கள் யாவரும் மனிதர்கள் அல்ல. அப்படியானால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்? இறைவனைப்போல காட்சியளிப்பவனே மனிதன். இறைவன் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தான் என்று விவிலியம் கூறுகிறது. இறைவனின் சாயலில் யார் உள்ளாரோ அவனே சான்றோன். … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“தந்தை மகற்காற்று நன்றிய வையத்து முந்தி யிருப்பச் செயல்” ஒரு தந்தை மகனுக்குக் கல்வி ஞானம் வழங்குவதைப் பார்க்கிலும் சாகாத கல்வியை வழங்குவதே தன் மகனுக்குச் செய்யும் சிறந்த நன்மையாகும். தன்னுடன் உறவாடுவதற்காகவே இறைவன் மனிதனை படைத்தான். ஆனால் மனிதன் சம்சார சக்கரத்தில் வீழ்ந்து இறக்க நேரிட்டான். ஆக இப்பொழுது நாம் இறைவனுடன் என்றென்றும் இருக்கும் பேரின்பத்தை அடைய வேண்டும். சாகாத கல்வி ஒரு தனி விஞ்ஞானமாகும். இந்த மெய்ஞ்ஞான விஞ்ஞானத்தை மனுஜோதி ஆசிரமத்தை ஸ்தாபித்த கல்கி மகா அவதாரம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருவர் மாத்திரமே கற்றுத் தருகிறார். சென்ற இதழில் சாகாத நிலையை அடைய தடையாக இருப்பவை கால நேரம் பார்ப்பது, ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைப்பது மற்றும் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள் வர மறுப்பது என்பதைக் குறித்து பார்த்தோம். “ஈன்று புறந் தருதல் என் தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” மகனைப் பெற்று வளர்த்து உலகுக்குத் தருவது தாயின் முதன்மையான கடமையாகும். அவனை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை என்கிறது புறநானூறு. ஒருவன் எவ்வாறு சான்றோன் ஆகிறான்? சாகாத கல்வியை கற்றறியும்போது அவன் சான்றோன் ஆகிறான். இவ்வாறு மனிதனாகப் பிறந்த நாம் இறப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டோமா? இல்லை. மக்கட் பிறப்பு, படைப்பின் மணிமுடி. மக்கட் பிறப்பினும் மற்றப் பிறப்பு, சிறந்த பிறப்பன்று. அதனால் … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

தந்தை மகற்காற்று நன்றிய வையத்து முந்தி யிருப்பச் செயல் என்ற குறளுக்கு ஆன்மீக விளக்கமாவது சாகாத கல்வியே ஒருவனுக்குப் புகழை அளிக்கும். சாகாத கல்வி எங்ஙனம் பெற வேண்டும்? ஜீவனை எங்கே இழந்து விட்டோம் என்பதை அறிந்துகொண்டு, அந்த பிழைகளை திருத்தும்போது சாகா ஜீவனைப் பெற்றுக்கொள்வோம் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். சென்ற இதழில் “சுயசித்தத்தை விட்டு விட்டு இறைவனின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுதல், புலால் உண்ணாமல் இருத்தல், இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்காமல் இருத்தல், வேறு யாரையும் நேசிக்காமல் இருத்தல், பொருளாசை அற்றவனாக இருத்தல், யாரையும் துவேஷிக்காமல் இருத்தல்”, ஆகியவற்றை கடைப்பிடிக்கும்போது ஜீவனுக்கு செல்லும் பாதையில் நடக்கிறோம் என்பதைப் பார்த்தோம். நாம் எவ்வாறு மரணத்தை வெல்ல முடியும்? எதினால் மனிதன் இறக்க நேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பாக நமக்கு கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறிவிட்டார். விஞ்ஞானிகள் ஏன் அதை கண்டுபிடிக்க முடியாது? யோபு 28:20-23: “இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“தந்தை மகற்காற்று நன்றிய வையத்து முந்தி யிருப்பச் செயல்” – என்ற குறளில் வள்ளுவர்  ஒருவன்  தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் இருக்கும் அவையின்  தலைமகனாக  தன் மகன்  இருக்குமாறு உருவாக்க  வேண்டும்  என்கிறார். கல்வியை  மட்டும்  கற்றால் போதாது, வாழ்க்கைக் கல்வி  அதாவது  எவ்வாறு வாழ வேண்டும்  என்ற கல்வியையும் கற்க வேண்டும் என்று  சென்ற  இதழில்  பார்த்தோம். இக்காலத்தில்  பெற்றோர் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட  சூழ்நிலையிலும்  வாழும் கலையை கற்றுக்கொடுக்காமல்  பணத்தை  அவர்களுக்காக சேர்த்து  வைக்கிறார்கள். நான் கஷ்டப்பட்டது போல என்  பிள்ளைகளும்  கஷ்டப்படக்கூடாது என்ற மனநிலை உடையவர்களாக பெற்றோர்கள் இருக்கக்கூடாது. பிள்ளைகள் கஷ்டப்படும்போது வாழ கற்றுக்கொள்ளுவார்கள் என்ற மனநிலைபெற்றோர்களிடம் இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும். ஸ்ரீமந் நாராயணர்  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாஅமைத்த மனுஜோதி  ஆசிரமத்தில் “வாழ்க்கைகல்வி” முறை  இளைஞர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.  பள்ளிக் கூடம்  மற்றும்  கல்லூரி  செல்பவர்களுக்காக  கோடை காலத்தில், இந்த பயிற்சியை  மேற்கொள்ள  வாய்ப்பளிக்க  “கோடை கால விடுமுறை முகாம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கல்வியறிவு, வாழ்க்கை கல்வி இவற்றை மட்டுமே பிள்ளைகளுக்கு  அளித்தால் போதுமா? ஒருவன் சாகாத கல்வியை கற்றுணர வேண்டாமா?வள்ளுவரே  தம்  குறளில்  இதைக் கூறுகிறார். “கற்றதனால் ஆய  பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்” கல்வியில் சிறந்தது சாகாத கல்வியாகும் … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்