தமிழ் | తెలుగు

» சொர்க்கலோக விழாக்கள்

47-வது கல்கி ஜெயந்தி விழா நிகழ்வுகள்

மனுஜோதி ஆசிரமத்தில் 47-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் விவிலியம், குர்-ஆன், பகவத்கீதை ஆகிய வேதங்களிலிருந்து ஆன்மீக உரை நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் அநேக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜூலை 1-ம் தேதி கொடியேற்றி, ஆசிரமத்தினர் கொடியை தங்கள் கைகளில் ஏந்தி, ஆசிரமத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். 15.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மனுஜோதி ஆசிரமம் “சௌந்தர்ய லஹரி” இன்னிசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு விழா ஆரம்பமானது. மாலை 6.00 மணி முதல் பரிசுத்த ஓய்வுநாள் ஆரம்பமானது. அன்று முழு இரவு பிரார்த்தனை நடைபெற்றது. 16-ம் தேதி சனிக்கிழமை ஓய்வு நாள் அன்று பலத்த மழை பெய்தது. கூடாரப்பண்டிகையில் கலந்துகொண்ட எல்லா பக்தர்களும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னத்தை மழையின் மூலமாகவும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையின் மூலமாகவும் உணர்ந்துகொண்டனர். அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது. 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தேசீய ஒருமைப்பாடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செய்யாறு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. J.A. கருணாநிதி, அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இராமேஸ்வரம் – அகில இந்திய வானொலி கடல் ஓசை … Read entire article »

Filed under: சொர்க்கலோக விழாக்கள்

46-வது கல்கி ஜெயந்தி விழா

மனுஜோதி ஆசிரமத்தில் 46-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பைபிள், குர்-ஆன், பகவத்கீதை ஆகிய வேதங்களிலிருந்து ஆன்மீக உரை நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் அநேக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்கி ஜெயந்தி விழா துவக்கமாக ஜூலை 1-ம் தேதி கொடியேற்றி, ஆசிரமத்தினர் அன்புக் கொடியை தங்கள் கைகளில் ஏந்தி, ஆசிரமத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். 10-ம் தேதி வெள்ளிக்கிழமை “பாவநிவாரண நாள்” விரத நாளாக கடைபிடிக்கப்பட்டது. 15.07.2015 புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு மனுஜோதி ஆசிரமம் “சௌந்தர்ய லஹரி” இன்னிசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு விழா இனிதே ஆரம்பமானது. 16-ம் தேதி வியாழக்கிழமை அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது. 17-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை பெண்கள் கூட்டமும், மாலை ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது. வெள்ளி மாலை 6 மணி முதல் சனி மாலை 6 மணி வரை பரிசுத்த ஓய்வு நாள் அனுசரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முழு இரவு பிரார்த்தனையும் நடைபெற்றது. 18-ம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இந்தி மொழியில் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் மற்றும் சர்வ சமய மாநாடு நடைபெற்றது. இந்தியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். 19-ம் தேதி … Read entire article »

Filed under: சொர்க்கலோக விழாக்கள்