தமிழ் | తెలుగు

» ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஸ்ரீ குணவதி பாய்

மாதவசிங் என்பவர் ஓர் அக்னி குல ரஜபுத்ர வீரர், சிற்றரசராக இருந்தார். இவரது துணைவியே குணாபாய் என்றழைக்கப்படும் குணவதி பாய் இவ்விருவரும் சிறந்த தெய்வ பக்தியுள்ளவர்கள். குடிகளை கண்ணின் மணிபோல் காத்து வந்தனர். குணவதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு இரு செவிலித்தாய்களை ஏற்பாடு செய்தனர். அந்த செவிலிகளுள் ஒருத்தி எப்பொழுதும் தெய்வ ஸ்மரணை செய்துகொண்டே இருப்பது கண்டு குணவதியின் மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது. நம்மிடம் வந்துள்ள ஒரு பணிமகள் தன் வேலைகளுக்கிடையே தெய்வ நாம ஸ்மரணை செய்து வருவது சாத்தியமானால், நம்போன்ற எல்லா வசதிகளும் உள்ளவர்கள் மேலும் சிறந்த முறையிலே பக்தி செய்ய முயல வேண்டாமா என்று நினைத்தாள். இதன்பின் நாளுக்கு நாள் குணவதியின் தெய்வ பக்தி வளரலாயிற்று. அரண்மனையிலே பாகவதர்களது வருகை அதிகமாயிற்று. இவளது இந்த மனமாறுதல் அரசன் மனத்துள் சந்தேகத்தை எழுப்பியது. புத்தி சுவாதீனமற்றுவிட்டதோ? என்றும் நினைத்தான். ஒருநாள் இவளை நோக்கி: நீ சிலநாட்களாய் சரியாய் ஆடை ஆபரணங்கள் அணியாமலும், உற்றார் உறவினரோடு கலகலவென்று பேசாமலும் இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு இவள்: ஸ்ரீதேவியை மார்பிலே தரித்த நீலமணி வண்ணனை நான் எப்பொழுதும் தியானம் செய்து வருகிறேன். என் மனம் அவருடைய திருவடிகளிலே லயித்திருப்பதால், மற்றவைகளில் எனக்கு … Read entire article »

Filed under: ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்று நமது நாட்டின் பெருமையைப் பாடிய பாரதியார், “இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்புக்கு எதிர்எது வேறே?” என்று கங்கையின் புகழைப் பாடுகிறார். இந்த நதிக்கு கூப்பிடும் துாரத்தில், இப்பொழுது ‘ஜான்புரி’ என்று வழங்கும் ஜோன்பூர் என்னும் நகரில் சூர்யாஜி பண்டிதர் என்று பெயர் கொண்ட அந்தணர் வாழ்ந்து வந்தார். இவரது கிருஹ லக்ஷ்மியாய் அமைந்தவள் ராணுபாய் என்னும் பெண்மணி. அவ்விருவரும் மிகச் சிறந்த முறையிலே பிறர் மெச்ச இல்லறம் நடத்தி வந்தனர். இவர்களது குலதெய்வம் சூர்யபகவான்; இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராமபிரான். பன்னிரண்டு வருடங்கள் இவர்கள் ஆதித்யஹ்ருதயத்தை முறைப்படி பாராயணம் செய்தும், ஸ்ரீ ராமபிரானை வழிபட்டும் வந்தனர். ஒருநாள் சூர்ய நாராயணமூர்த்தி இவருக்குப் பிரத்யட்சமானார். நல்ல தெய்வ பக்தியுள்ள ஒரு புதல்வன் வேண்டும் என்று இவர் விரும்பியதை அறிந்த அவர், “அன்பனே! உனக்கு இரண்டு குமாரர்கள் தோன்றுவார்கள். முன்னவன் எனது அம்சமாகவும், பின்னவன் மாருதியின் அம்சமாகவும் தோன்றி உங்கள் விருப்பப்படியே பாரத பூமியிலே பக்தி மார்க்கம் பரவச் செய்வார்கள்” என்றார். சூர்யாஜி ஆனந்தக் கடலிலே ஆழ்ந்தார். நாட்கள் சென்றன. முதற்புதல்வன் தோன்றினான். அவனுக்குக் கங்காதரன் என்று பெயரிட்டு அருமையும் பெருமையுமாய் வளர்த்தனர். கங்காதரனுக்கு ஐந்து வயது முடிந்தது. சூர்ய நாராயண பகவானது வாக்கின்படி இரண்டாவது … Read entire article »

Filed under: ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!, பத்திரிகை செய்திகள்