தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து

எது வாழ்க்கை

நிரந்தரமானது துன்பம், வந்து போவது இன்பம், இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாக கண்டு கொண்டு விட வேண்டும். – கவியரசு கண்ணதாசன் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

புறக்கணிப்பு! தோழமை! சேர வேண்டாம்

நன்றாக வாழ நான்கு நபர்களை புறக்கணிக்க வேண்டும் என்று வள்ளலார் கூறியுள்ளார். அவர்கள் யரென்றால், மடையன் சுயநலக்காரன் முட்டாள் ஓய்வாக இருப்பவன். இன்னும் நான்குவிதமான நபர்களுடன் தோழமை கொள்ள வேண்டாம் என்கிறார். அவர்கள் யாரென்றால், 1. பொய்யன் 2. துரோகி 3. பொறாமைக்காரன் 4. மமதை பிடித்தவன். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒன்பது விதமான நண்பர்களுடன் சேர வேண்டாம் என்கிறார். அதிகமாக உண்பவர்களுடன் (பெருந்தீனிக்காரர்கள்) சிநேகமாக இருக்காதீர்கள். குடிகாரர்கள், மாமிசம் புசிப்பவர்களுடனும் சேராதீர்கள். ஒழுங்கின்மையாக வாழுபவர்களிடம் பிரிந்து வாழுங்கள். பொறாமை கொண்டவர்களிடமிருந்து பிரிந்து வாழுங்கள். சண்டை போடுகிறவர்களிடமிருந்து பிரிந்து வாழுங்கள். இச்சையுள்ளவர்களிடமிருந்து பிரிந்து வாழுங்கள். புத்தியில்லாமல் பேசுபவர்களிடமிருந்து பிரிந்து வாழுங்கள். பாவிகளுடன் நீங்கள் சிநேகமாக இருக்க முடியாது. … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

ஏளனம் செய்ய வேண்டாம்!

நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமுதாயம் மற்ற சமுதாயத்தை ஏளனம் செய்ய வேண்டாம். ஒருவேளை இவர்கள் அவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். பெண்கள் (கூட்டத்தினர்) மற்ற பெண்களை ஏளனம் செய்ய வேண்டாம். ஒருவேளை இவர்கள் அவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் உங்கள் சமுதாயத்தினரை இகழவோ, ஒருவருக்கொருவர் பட்டப் பெயர் கூறி அழைக்கவோ செய்யாதீர்கள். நம்பிக்கை கொண்ட பின் கெட்ட பெயர் (வாங்குதல்) தீயது. கழிவிரக்கம் கொள்ளாதவர்கள் அநீதி இழைப்போர் ஆவர். – திருக்குர்-ஆன் 49:12 … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

மகாத்மாவின் மணி மொழிகள்

மன்னிப்பது பலவீனம் அல்ல. பலமானவர்களாலேயே மன்னிக்க முடியும். ஒரு கண்ணுக்கு, மற்றொரு கண் ஒத்துழைக்காவிட்டால் உலகமே இருளாகத்தான் தெரியும். நீ என்ன நினைக்கிறாய், என்ன செய்கிறாய், எவ்வளவு இணக்கமாய் இருக்கிறாய் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. ஒற்றுமையாய் இரு, உறுதியாய் இரு, உண்மையாய் இரு. … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

எதற்கு பொறாமைப்பட வேண்டுமென்று நபிகள் நாயகம் கூறுகிறார்?

பொறாமை கொள்வது குற்றமாகும் என்று கூறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு விஷயங்களுக்கு மட்டும் பொறாமை கொள்ளலாம் என விதிவிலக்கும் அளிக்கிறார். இது பற்றி அவர் கூறுவதை பார்க்கலாம். ஒரு மனிதனுக்கு இறைவன் அறிவை கொடுத்திருக்கிறார். அவன் அதனை மற்றொரு மனிதனுக்கு போதிக்கிறான். அவனை பார்த்து பொறாமைப்படலாம். மற்றொரு மனிதனுக்கு இறைவன் செல்வத்தை கொடுக்கிறான். அவன் அதனை இறைவனின் பாதையில் செலவு செய்கிறான். இந்த மனிதரை பார்த்து பொறாமைப்படலாம். இந்த இரண்டு விஷயத்தையும் தவிர்த்து மற்ற காரியங்களில் பொறாமைப்படுவது கூடவே கூடாது என்கிறார். ஆம், படித்த ஒருவர் மிகவும் சிறப்பாக பேசுகிறார். இவருக்கு இருக்கும் அறிவு எனக்கு இல்லையே என்று பொறாமைப்படுவதின் மூலம், அவரைப்போலவே சிறந்த அறிஞராக வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். பணம் இருந்தாலும் அதை தர்மம் செய்வதை பார்த்து, இதுபோல் நம்மிடம் இருப்பதிலும் சிறிதளவேனும் தர்மத்திற்காக செலவிட வேண்டும் என்ற எண்ணம் வளரும். இந்த எண்ணமே அவரை உழைக்கும்படி தூண்டும். அவரும் செல்வந்தராகும் வாய்ப்பு கிடைக்கும். தர்மம் மேலும் தழைக்கும் என்ற அர்த்தத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

வாழ்க்கைப் பாடங்கள்

“வாழ்க்கையை கையாள்வது எப்படி?” என்று தாயாரிடம் கேட்டேன். அவள் சொன்னாள், நான் வாழும் வீட்டின் அறையே எனக்கு எல்லா விடைகளையும் அளித்தது!” என்றாள். வீட்டின் மேல்தளம் : நோக்கம் உயர்வாக இருக்கட்டும். மின் விசிறி : எப்போதும் குளிர்ச்சியாயிரு. கடிகாரம் : நேரத்தை மதி. நாட்காட்டி : நேரப்படி அனைத்தையும் முடித்து விடு. பணப்பை : எதிர்காலத்திற்காக இன்று சேமி. கண்ணாடி : எப்போதும் உன்னையே கவனி. சுவர் : மற்றவர்களின் சுமையைத் தாங்கு. ஜன்னல் : பார்வையை விரிவாக்கு. தரை : எப்போதும் அடக்கத்தோடு இரு. மாடிப்படிகள்: எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் விழிப்புடனிரு. கழிவறை : வேண்டாதவற்றையும், விட்டுவிட வேண்டியவற்றையும் உடனுக்குடனே விட்டுத் தள்ளு. – தகவல்: எம். பைரவசுப்ரமணியம் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கேள்வி – பதில்கள்

கேள்வி: மரியாதைக்குரியவர் யார்? பதில்: யாரிடமும் எதையும் வேண்டாதவர். கேள்வி: எது சுகம்? பதில்: நல்லவர்களின் நட்பு. கேள்வி: உலகை வெல்ல எவரால் முடியும்? பதில்: உண்மையும் பொறுமையும் உடையவரால். கேள்வி: எவரை தேவர்களும் வணங்குவார்கள்? பதில்: கருணை உடையவரை. கேள்வி: மனிதனுக்கு எது அலங்காரம்? பதில்: நல்ல குணங்கள். கேள்வி: பேச்சிற்கு அழகு எது? பதில்: உண்மை. கேள்வி: ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிற்கு … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

வேதங்களை அருளிய இறைவன் ஒருவனே!

மேலே உள்ள தலைப்பை நிரூபிக்கும் வண்ணமாக பல்வேறு வேதங்களில் ‘மனநிறைவு’ பற்றி கூறப்படும் ஒரேவிதமான கருத்தை வாசகர்களுக்கு முன் வைக்கிறோம். மலர்களிலிருந்து வண்டு தேன் எடுப்பதுபோல, எல்லா வேதங்களின் சாரத்தையும் புத்திசாலி எடுத்துக்கொள்வான் என்று ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவருக்குக் கூறியதின்படி வாருங்கள். நாம் தேனை பருகலாம். சங்கைமிக்க குர்-ஆன்: “அல்லாஹ் அருளியதை கொண்டு திருப்தியடையுங்கள். இவ்விதமாக திருப்தியடைந்தவர்கள் செல்வந்தர்களில் ஒருவர் ஆவர்”. ஜோராஸ்ட்ரியனிசம்: எவன் ஒருவன் செல்வந்தனாக இருந்து தன் நிலைமையை குறித்து திருப்தியடையாமல் இருக்கிறவனும், எல்லாவற்றையும் அதிகமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என மன பதட்டம் அடையும் செல்வந்தன் ஏழையாவான். தனக்கு கிட்டியதை வைத்து திருப்தியடைபவனும் தன்னிடமுள்ளவற்றை அதிகமாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஏழை ஒருவன் பணக்காரனாவான். கன்ஃபூசியஸ்: “உண்மையிலே சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கும் மன நிலையை அடைய சந்தோஷமான மனநிலை மற்றும் திருப்தியான மனநிலையைப் பற்றிய பற்றை விட வேண்டும்”. லாவோ ஸீ: “உங்களிடம் இருப்பதை வைத்து திருப்தியடையுங்கள். குறை இல்லை என்ற உணர்வு ஏற்படும்போது, இந்த உலகமே உங்களுக்கு சொந்தமாகும்”. மஹாவீர்: “உங்களுடைய தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்காதீர்கள். உங்களிடமிருக்கும் உங்கள் தேவைக்கு மிஞ்சிய செல்வம் இந்த சமுதாயத்திற்குரியது. மற்றும் நீங்கள்தான் அறங்காவலர்”. கௌதம புத்தர்: “ஆரோக்கியம் மிகப் பெரிய வரம், திருப்தி மகத்தான செல்வம், விசுவாசமாக இருப்பது … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து