தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள்

மனிதனின் வீழ்ச்சிக்கு காரணங்களாக வள்ளலார் கூறுவதென்ன?

ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர் அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர் மாறாமல் மனஞ் சென்றவழி சென்று திகைப்பீர் வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக் கென் செயக்கடவீர் ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே அருட்பெருஞ்ஜோதி அகவல் 1170-ல் வள்ளலார் குறிப்பிட்டுள்ளது இங்கு ஒப்பிட்டு உணரத்தக்கது. அந்த அகவல் வருமாறு:- துறை இது வழி இது துணிவிது நீ செயும் முறை இது எனவே மொழிந்த மெய்த்துணையே. பொருள்: “உலகத்தில் நாம் செயல் புரியும் இடம் இது எனவும், அதனை அடையும் வழி இது எனவும் செய்தற்குரிய … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

நினைந்திரு

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா!” பெருமை மிகுந்த யானை முகத்தைக்கொண்ட விநாயக கடவுளே, நான் உனக்கு இனிய பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப்பாகினையும், பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் தருவாயாக என்று ஒளவையார் வேண்டுகிறார். முத்தமிழ் போல நினைந்திரு, மகிழ்ந்திரு, போற்றியிரு என்பவை மூன்று சிறப்பு அம்சங்கள் கொண்டவை. ‘நினைந்திரு’ என்பதின் இரண்டாம் கட்டம். இறைவன் நம் வாழ்க்கையில் செய்தவற்றை நினைவு கூறுவதாகும். இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாக இருக்கும். பிறப்பதே ஒரு ஆச்சரியம்! பிரசவத்தில் சிலர் சிக்கல்களை தாண்டி பிறந்திருப்பார்கள். சிலர் மயிரிழையில் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். சிலருக்கு தக்க நேரத்தில் முகம் தெரியாதவர்கள் உதவி செய்திருப்பார்கள். சிலர் நல்ல ஆலோசனைகளை கூறி உதவி செய்திருப்பார்கள். பொருளுதவி, பண உதவி, சிபாரிசு செய்ததில் உதவி, தக்க … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கண்ணன் – என் தாய்

எட்டையாபுரத்து சிங்கம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பலவிதமான பாடல்களை எழுதினார். தெய்வப் பாடல்களில் ‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் 23 விதமாக கண்ணனை பாடியுள்ளார். ‘கண்ணன் – என் தாய்’ என்ற பாடல் 1913-ம் ஆண்டு அக்டோபர் மாத்தில் ஞானபாநு இதழில் வெளிவந்தது. இறைவன் மேலுள்ள அன்பை பக்தியை அவர் பல கோணங்களில் அனுபவித்து எழுதியுள்ளார். ஸ்ரீமத் பகவத்கீதையில் அர்ச்சுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மகனுக்குத் தந்தையாகவும், தோழனுக்குத் தோழனாகவும் காதலிக்கு காதலனாகவும் அருள் செய் என்று வேண்டுகிறார். ஆழ்வார்கள், நாயன்மார்கள், இன்னும் பலர் இறைவனை பல்வேறு விதமாக போற்றி, பக்தி செய்து புகழ்ந்து பாடல்களை எழுதினர். பாரதியாரின் நோக்கு மிகவும் வேறுபட்டதாக உள்ளது. அவருடைய பாடல்கள் அன்பின் வெவ்வேறு பரிமாணங்களை கூறுகின்றது. இந்தப்பாடலில் இறைவனை தாயாக வர்ணிக்கிறார். தாயன்பிற்கு நிகரான அன்பு இல்லை என்பது உலகளாவிய கருத்து. தாய்-மகன் இது ஒரு உறவு. இந்த உறவு போதுமானதா? இல்லை, தந்தை அன்பும் வேண்டும். அதன்பின்னர் இளமைப் பருவத்தில் தோழர்களின் அன்பு – அவர்களோடு உறவாடுகின்றோம். அத்தோடு உறவு நின்று விட்டதா? இல்லை, காதலன் அல்லது காதலியின் அன்பு தேவைப்படுகிறது. அதன்பின் குழந்தையின் அன்பிற்காக ஏங்குகிறோம். மனிதனின் உறவு என்பது இவ்வாறு நீண்டுகொண்டே சென்று இறுதியில் மானிட அன்பெல்லாவற்றையும் வென்ற … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

ஆன்மீக வாழ்க்கை

சென்ற இதழில் ஆன்மீகம் என்ற தலைப்பில் மெய்ஞானமாகிய இறைவனை அடைவது பற்றியும், இறையருளைப் பெருவதைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் ஆன்மீக வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். உலகில் மனித இனம் உருவான நாளிலிருந்து ஆன்மீகம் என்ற அம்சம் இருந்து வருகிறது. அந்தந்த நாட்டு மக்களின் அறிவு, வாழ்வியல் முறைகள், நாகரீகத்தை பொறுத்து ஆன்மீக நெறிகள் வேறுபடுகின்றன. ஐம்பூதங்களால் உயிருக்கு அச்சம் ஏற்படும் நிலையில், பாதுகாப்பு வேண்டி இறைவனை தேடுவது ஒருவகை ஆன்மீகமாகும். ஒவ்வொரு இன்பத்தையும் அனுபவிக்கும்போது, ஏற்படும் மகிழ்ச்சியினால் நன்றி உணர்வுடன் பகவானை ஆராதிப்பது ஒரு வகை ஆன்மீகம். பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுவதுபோல ஆன்மீகம் என்பது இறைவனுடன் கூடிய சொந்த அனுபவமே. நாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என முப்பரிமாணங்களானவர்கள். இதை உணராமல் பிறப்பது, பின்பு இறப்பது இதுதான் வாழ்க்கை என பலர் நினைப்பதுண்டு. ஆவி, ஆன்மாவினை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. மண்ணான சரீரம் மண்ணுக்குள் செல்வதுடன் முடிவடைகிறதா வாழ்க்கை? “தேடிச் சோறு நிதம் தின்று – தினம் சின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம் வாட துன்ப மிகவுழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் புரிந்து – நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கு இரையென மாயும் பல வேடிக்கை மனிதரைபோல நானும் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சித்தர்கள் எதிர்பார்ப்பு

மனிதன் வளமாகவும், நலமாகவும், சந்தோஷமாக வாழவும் அத்துடன் இம்மானிட தேகத்திலிருந்து விடுபட்டு இறைவனுடன் ஒன்றர கலந்து நித்திய நித்தியமாக வாழ வேண்டும் என்று சித்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அதை தங்கள் பாடல்களின் வாயிலாக எழுதியும் நமக்கு கொடுத்துள்ளனர். அதையே நாம் “சித்தர்களின் எதிர்பார்ப்பு” என்ற தலையங்கத்தில் கூறி வருகிறோம். இது குறித்த கருத்துக்களை அநேகர் கடிதங்கள் மூலம் தெரிவித்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். சித்தர்களின் எதிர்பார்ப்பு என்ற இந்த மனுஜோதி இதழில் நாம் பார்க்க இருப்பது 131-ம் பாடலாகும். “சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள் தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்” இன்றைய உலகில் மனிதன் தன்னைப் பாதுகாத்து கொள்ள அநேக வழிகளை கையாள்வதை காணலாம். இள வயதில் தன் உடல் வலிமையை நம்பி, சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை, ஜூடோ போன்ற கலைகளை கற்று அதுதான் தன்னை பாதுகாக்க முடியும் என்று நினைக்கிறான். தன் இளமை நாட்கள் போன பின் வேறு வழிகளை தேடுகிறான். அப்போது மத சடங்காச்சாரங்களில் ஈடுபட்டு, அதிலும் திருப்தி இல்லாமலேயே மடிகிறான். இதனைக்கண்ட சிவவாக்கியர் “சாவதான … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

காலஞானம்

தொடர்ந்து மனுஜோதி இதழை வாசித்து வரும் அன்பர்கள், ‘காலஞானம்’ போத்தலூரி வீரபிரம்மம் அவருடைய வாழ்க்கையில் இறைவன் அருளால் செய்த அநேக அற்புதங்களையும், அறிந்திராத செய்திகளையும் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆந்திர மாநிலத்தில் தோன்றிய வீரபிரம்மம் திருநெல்வேலிக்கு அருகே வருகை புரிந்து, ஸ்ரீமந் நாராயணரைப் பற்றிய கருத்துக்களைக் கூறி மக்களை விழிப்படையச் செய்து, உண்மையான நாராயணரை கண்டுகொள்வதற்கு வழிகாட்டியாக இருந்தார் என்பது பற்றிய கருத்துக்களை தொடர்ந்து வெளிவந்த இதழ்களின் மூலம் அறிந்துகொண்டோம். வாசக அன்பர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியும், பகவான் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் நாமத்தில் வாழ்த்துதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு இறைவனை அடைய வழி தேடிய மக்களுக்கு இறைவனிடம் சேர்வதற்கு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்தான் தீர்க்கதரிசிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், தொண்டர்கள், நாயன்மார்கள் மற்றும் திருவள்ளுவரைப் போன்ற தெய்வப் புலவர்கள். அவர்கள் இறைவனின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி முடித்தார்கள். அவர்களுடைய இறைதொண்டின் பலனாக இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு மட்டுமே வெளிச்சம். ஸ்ரீ வீரபிரம்மம் அவர்கள் “வித்துலேனி பண்டு விஸ்வமுலோ உண்டு” என்று தெலுங்கு மொழியில் கூறியுள்ளார். அப்படியென்றால் “விதையில்லா பழம் ஒன்று உண்டு. அதுவும் பூமியிலே உள்ளது. அதைக்கண்டு கொள்ளுங்கள்” – என்று பொருள் விளங்க … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கணங்களின் அதிபதி கணபதி

இந்தியாவில் சுமார் கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரை ஆந்திர மாநிலம், அமராவதி சிற்பங்களில் விநாயகரின் உருவம் காணப்படுகிறது. இந்திய தேசத்தில், ஏன் முழு உலகமெங்கிலும் கணபதியை வணங்காதவர்கள் கிடையாது. ஹைதராபாத், மஹாராஸ்டிரா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், புவனேஷ்வர், ஒடிசா, பஞ்சாப், உத்திர பிரதேசம், காசியில் ஆரம்பித்து, தமிழ்நாட்டில் திருநெல்வேலி வரை அனைத்து மாநிலங்களிலும் கணபதியை வணங்காதவர்கள் இல்லை எனலாம். இந்துக்கள் ஒரு வியாபாரத்தை துவக்குவதற்கு முன்பாக, பரீட்சை எழுதுவதற்கு முன்பாக, ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ‘உ’ என்ற தமிழ் எழுத்தை அதாவது பிள்ளையார் சுழியை போட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். பிள்ளையார் சுழியை ‘உ’ என எழுதும்போது சிறு வட்டத்தில் துவங்கும். வட்டத்திற்கு முடிவே கிடையாது. அதன்பின் வளைந்து நேர்கோடு நீளும். சமஸ்கிருதத்தில் “ஆர் ஜவம்” எனப்படும். இதற்கு நேர்மை என்பது பொருள். “வளைந்தும் கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே” என்பதே பிள்ளையார் சுழியின் தத்துவம். ‘உ’ என்ற தமிழ் எழுத்து கணபதியின் உருவத்தைக் குறிக்கிறது. கணபதி ஓங்காரத்தின் வடிவம். ஆகவேதான் இந்துக்கள் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறார்கள். அதினால்தான் புலவர்கள் எல்லாரும் விநாயகர் துதியை பாடியபிறகுதான் தங்கள் பாடல்களை எழுதுவார்கள். … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

பிள்ளைக்கு தந்தை இறைவன்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் தன்னை ஒரு சாதாரண மனிதனாக இவ்வுலகத்திற்கு காண்பித்துக்கொண்டாலும், தன்னை நம்பிய உண்மையான பக்தர்களுக்கு தாம் ஒருவரே இறைவன் என்றும், சிருஷ்டி கர்த்தரென்றும் தெரியப்படுத்தினார். 1985-ம் வருடம் மனுஜோதி ஆசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தாம் யார் என்பதை இப்பதிவில் தெரியப்படுத்தியதை காணலாம். மனுஜோதி ஆசிரமத்தில் இறைவனை அடைவதற்காகவும், ஆன்மீக பயிற்சி பெறுவதற்காகவும், அநேகர் இங்கே வந்து தங்குவதுண்டு. சில பெற்றோர்கள்கூட தங்களுடைய பிள்ளைகளை ஆன்மீக பயிற்சி பெறுவதற்காக கொண்டுவந்து விட்டு செல்வதுண்டு. அவ்விதமாக ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் என்ற மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளி என்னுமிடத்தில் மலைவாழ் பகுதியை சார்ந்த ஒரு வாலிபனும் மனுஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்தான். அவனுடைய பெயர் இலட்சணா. மலைவாழ் பகுதியில் இருந்து வந்த காரணத்தினால் ஆசிரமத்தில் பனை மரங்கள், மற்ற சோலைவனங்களில் சுற்றி திரிவது அவனது வழக்கமாகும். ஒருநாள் ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு அவனை தீண்டியது. இந்த தகவல் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவோ அவனை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் நீ இறைவனை தேடு, நீ உன்னுடைய வாயை திறந்து பரமபுருஷர் உனக்காக அளித்த பலியை நினைவுகூர்ந்து இறைவனை துதித்துக்கொண்டு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்