தமிழ் | తెలుగు

» ஆன்மீகச் சுற்றுபயணம்

ஆன்மீக சுற்றுப்பயணம்

இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் என்பது இறைவனால் முன்குறிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த பகுதிகளில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருள் வாக்கு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தாரோ அவருடைய திட்டமிடலின்படியே இந்த பயணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஒரு பொழுதுபோக்குக்காக செய்யும் உல்லாசப் பயணம் அல்ல. உதாரணமாக திரேதா யுகத்தில் விசுவாமித்திரர், தான் செய்யும் யாகத்திற்கு பாதுகாவல் அளிப்பதற்காக இராமன், இலட்சுமணன் இருவரையும் என்னுடன் அனுப்ப வேண்டும் என்று தசரத மகாராஜாவிடம் வேண்டினார். அந்த யாகத்தை பாதுகாக்க சென்ற பயணமானது பகவானின் திட்டப்படி ஜானகியை மணம் முடித்து அயோத்திக்கு திரும்பி வந்தார். இவ்விதமாகத்தான் ஆன்மீக சுற்றுப்பயணத்தின் போது நம்மை அறியாமலேயே அவருடைய லீலைகள் நிறைவேறும். உதாரணமாக இந்த வெகுதூரப் பிரயாணத்திற்குப் பிறகு வங்காள தேசத்திற்கு (Bangladesh) சென்றோம். அங்கு என்ன ஆச்சர்யம் என்றால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினரை எங்களால் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைக் குறித்து சிறிது நேரம் உரையாடினோம். உரையாடிய சமயத்தில்தான் அவர்கள் முப்பது ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரம குடும்பத்தினர் யாராவது தங்களது வீட்டிற்கு வரவேண்டும் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்ததாக எங்களிடம் கூறினார்கள். அப்போதுதான் … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் – 4

சென்ற இதழில் இரண்டாவது சுற்றுப்பயணத்தின் ஆரம்பத்தையும் நாங்கள் பயணித்த சில இடங்களைக் குறித்தும், எங்களைச் சந்தித்த நண்பர்களைப் பற்றியும் தெரிந்துகொண்டீர்கள். வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள ஆவலுடன் இருப்பதை நீங்கள் எழுதிய கடிதங்கள் மூலமாக தெரிந்துகொண்டோம். நாங்கள் குஜராத் மாநிலத்தின் தலைநகரான அஹாமதாபாத்திலிருந்து ராஜ்கோட்டிற்கு சென்று இறைவனின் தொண்டை செய்து முடித்து மீண்டும் அஹாமதாபாத்திற்கு வரும்பொழுது பட்டேல் இனத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் விளைவாக ஊரடங்கு உத்தரவான 144 தடை உத்தரவும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் எங்கள் பிரயாணத்தை தொடர முடியுமா என்று நினைக்கும் அளவிற்கு கலவரங்கள், பஸ்ஸை எரிப்பது போன்ற சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டது. அச்சமயத்தில் நள்ளிரவில் புறப்பட்டு உதய்பூருக்குச் சென்று விடலாம் என்று புறப்பட்டபோது வழியில் பாதைகளெல்லாம் அடைக்கப்பட்டு, காவலர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தனர். என்ன செய்வது என்று நாங்கள் திகைத்தபோது, கலவரங்கள் இல்லாத பகுதிகளின் வழியாக நீங்கள் உதய்பூரை சென்றடையலாம் என அந்த காவலர்களே மற்றொரு மாற்றுப்பாதையைக் காண்பித்து எங்களை வழியனுப்பி வைத்தார்கள். வேதங்களிலும், புராணங்களிலும் இறைவனுடைய பிள்ளைகளுக்கு இடையூறுகள் வரும்போது இறைவன் அவர்களை தப்புவித்ததை நாம் படித்திருக்கின்றோம். ஆனால் அன்று நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் கண்ணாரக் கண்டோம். இதுபோன்ற அநேக சம்பவங்கள் இந்த பிரயாணத்தில் ஏற்பட்டாலும் எல்லாவற்றையும் எழுத … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் – 3

சென்ற இதழில் கடந்த வருடம் நாங்கள் சென்ற முதலாவது ஆன்மீக சுற்றுப்பயணத்தின் விவரங்களை முழுமையாகவும், சுருக்கமாகவும் தெரிந்து கொண்டோம். வாசகர்களாகிய நீங்கள் அடுத்த பயணத்தைக் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள ஆவலுடன் இருப்பதை நீங்கள் எழுதிய கடிதங்கள் மூலமாக தெரிந்துகொண்டோம். எல்லா எழுத்தாளர்களையும் போல இயற்கையையும் மற்றும் நாங்கள் கண்ட காட்சிகளை வர்ணித்து கூறாததற்கு காரணம் இது ஒரு ஆன்மீக இதழாகவும், எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே இறைவனின் தொண்டாகவும் இருப்பதால் அவருடன் இணைத்து எதையும் வர்ணிக்க முடியாது. உதாரணமாக ஒரு கதையைப் பார்ப்போம். ஒரு ஊரில் மூன்று பக்தர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் ஒரு சிறு வாக்குவாதம் வந்தது. அதில் ஒருவன் மது மிகவும் அருமையானது என்றான். மற்றொருவனோ, மதுவை விட மாதுவே அழகானது என்றான். அந்த மூன்றாம் பக்தனோ நீங்கள் இருவரும் சொல்வது சரியல்ல. இவையெல்லாவற்றையும் விட இதை எல்லாவற்றையும் படைத்த இறைவனே அழகானவன், அவருக்கு நிகர் வேறொன்றும் இல்லை என்றான். இந்த இரண்டாவது ஆன்மீக சுற்றுப்பயணம் 2015, ஆகஸ்டு 15-ம் தேதி தொடங்கலாம் என முடிவெடுத்தோம். ஆகஸ்டு 15-ம் தேதி என்று சொல்லும்போது அது பாரத நாட்டின் சுதந்திர தின நாளாகும். அதுமட்டுமல்லாமல் மனிதனாக அவதரித்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் உலகப்பிரகாரமாக, … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

அகில இந்திய சுற்றுப் பயணம்

சென்ற இதழில் தொடர்ந்து நடைபெற்ற பயணத்தின் சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டோம். இது தொடர்ந்து வர காரணம் என்னவென்றால் உலகெங்கிலும் இல்லாத அளவுக்கு இறை பக்தியானது இந்தியாவில்தான் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம். இருந்தபோதிலும் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், மற்ற மதத்தினரும் இறை பக்தியை உடையவர்களாக இருந்த போதிலும் அந்த ஒரே இறைவன் யார் என்று தெரியாமலேயே வணங்கி வருகின்றனர். அது போன்று நம் நாட்டினருக்கு அனைத்து வேதங்களின் வாயிலாக சொல்லப்படும் ஒரே இறைவன் யார்? என்ற இறை ஞானத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து வேதங்களையும் நம் நாட்டினர் வாசித்து அந்த ஒரே இறைவனின் கீழ் ஒன்றுபடுவார்கள் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த பயணக் கட்டுரையும், பயணமும் ஆகும். தொடர்ந்து பயண நிகழ்வுகளை பார்க்கலாம். சீக்கீமை (கேங்டாக்) தொடர்ந்து நாங்கள் பீகார் மாநிலத்தை நோக்கி எங்களுடைய காரில் பயணமானோம். அதிக மலைப் பகுதிகளிலும் அதிக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவிய அந்த பகுதிகளைக் கடந்து ஒரு நிலப்பரப்பான பகுதிக்கு வந்ததும் கடினமான பாதைகளைக் கடந்து வந்துவிட்டோம் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. இவ்விதமாக பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா வந்து சேர்ந்தோம். அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து மற்றொரு காரில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்

சென்ற இதழில் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு சுற்றுப் பயணங்களைக் குறித்த பொதுவான சில காரியங்களை வெளியிட்டிருந்தோம். இந்த இதழில் முதலாவது இந்திய சுற்றுப்பயணம் எவ்விதமாக ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கலாம். முதலாவது சுற்றுப் பயணத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என முடிவெடுக்க சில காரணங்கள் உண்டு. ஏப்ரல் மாதம் என்று சொல்லும்போது ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 21 நாட்கள் விரதமிருந்தார்கள், அந்த சமயத்தில் அவர் 26 குறிப்புகளை எழுதி வைத்து அதற்காக ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்தார்கள் என்பது அவருடைய பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அதில் அகில இந்திய மக்களுக்கும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிப்பையும் எழுதி, தம்முடைய பக்தர்களையும் அனுதின பிரார்த்தனைகளில் நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும்படி செய்திருந்தார்கள். எனவே இந்த சுற்றுப் பயணத்தை ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று, மனுஜோதி ஆசிரமத்திலிருந்து வட கிழக்கு இந்திய சுற்றுப் பயணத்தை, நாங்கள் செல்லும் வழியிலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களைத் தரிசித்து விட்டு செல்வதாக அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். அந்த பயணத்தின்போது ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் எங்களோடு இருந்ததை வெளிப்படுத்தும் விதமாக மழையும், மின்னலும் தொடர்ந்து வந்ததை நாங்கள் பார்த்தோம். இந்த மகிமையின் பிரசன்னம் … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனையை இந்த உலகிற்கு தெரியப்படுத்துவதற்காக மனுஜோதி ஆசிரமத்தில் ஒரு குழுவாக இந்தியா முழுவதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பறைசாற்றுவதற்கு, காரில் இந்தச் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பிரயாணம் செய்த அனுபவத்தை பயணக் கட்டுரையாக தொடர்ந்து வரும் இதழ்களில் வாசகர்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில்தான் எத்தனை சிறப்புகள்! எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள், எத்தனை கலாச்சாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், புண்ணியத்தலங்கள், மலைகள், நதிகள் இன்னும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகள். இவை அனைத்தையும் கடந்து, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பாதுகாப்பை, பயணம் செய்த அனைவருமே உணர்ந்தோம். இந்த அனுபவங்களின் மூலம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையை வாசகர்களாகிய நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். இந்த பயணத்தின்போது அனைத்து மதத்தினரும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு இலவச புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர். முதலாவதாக இந்திய வரைபடத்திலுள்ள வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை ஏறக்குறைய 40 நாட்கள் பல்வேறு மாகாணங்களில் ஸ்ரீமந் … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

தெட்சணத்தில் ஆன்மீகப் பிரச்சாரம்

அன்பார்ந்த மனுஜோதி வாசகர்களுக்கு வணக்கம். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருக்கருணையினால் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழ் நாடு முழுவதும் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். மனுஜோதி ஆசிரமத்திலிருந்து, திரு. னு. லியோ பால் ஊ. லாறி அவர்களோடு கூட ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களை சந்திக்கும் வண்ணமாகவும், அத்துடன் “நம்பினால் நம்புங்கள்” என்ற கைப்பிரதியை விநியோகிக்கவும் 9 பேர் கொண்ட குழுவாக வேனில் புறப்பட்டோம். ஸ்ரீமந் நாராயணாரின் தெய்வீக ஆட்சி நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவும், ஆன்மீக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், இறைவன் படைத்த அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஸ்ரீமந் நாராயணரின் போதனைகளை அறிவிக்கவும், உலக அறிவை விடுத்து தெய்வீக ஞானத்தைப் பெறுவதற்கும், அவரின் இருப்பிடமாகிய மனுஜோதி ஆசிரமத்திலிருந்து இந்த பயணத்தை மேற்கொண்டோம். இதன்மூலம் தெய்வீக மக்களின் மனதில் இருள் நீங்கி, தெய்வீக ஒளி பெற்றிட இந்த தமிழக சுற்றுப் பயணம் அமைந்தது. முதலாவதாக 8-ம் தேதி, புத்தகங்கள் மற்றும் கைப்பிரதிகள் விநியோகித்த வண்ணம் தென்காசி, குற்றாலம் வழியாக பயணத்தைத் தொடங்கினோம். அன்று மதியம் கோவில்பட்டி அருகிலுள்ள ஏழாயிரம் பண்ணைக்கு சென்றோம். இரவு வத்தலக்குண்டு என்ற இடத்தில் தங்கினோம். மறுநாள் மதியம் கருர் என்ற ஊரிலிருக்கிற மனுஜோதி வாசகர்களை … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்