தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு

பிப்ரவரி 2015

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை “ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையடைந்த தினவிழா” கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் அநேக பக்தர்கள் கலந்துகொண்டனர். மலேசியாவிலிருந்தும் சில பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அனைவரும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னத்தை உணர்ந்தனர். ஜனவரி மாதத்தில் வேலூர், திருப்பதி மற்றும்  வேறு சில இடங்களுக்கும் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பால் மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களில் சிலரும் சென்று கைப்பிரதிகளை விநியோகித்தனர். ஜனவரி மாதத்தில் நானும், என்னுடைய சகோதரனும் ஆன்மீக சேவைக்கான இந்தியாவின் நட்சத்திரம் 2015 என்ற விருதிற்கு தெரிந்தெடுக்கப்பட்டதினால் பெங்களூருக்கு சென்று, முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடாவிடமிருந்து விருதினைப் பெற்றுக்கொண்டோம்.   “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பதற்கிணங்க பூலோக வைகுண்டமாகிய மனுஜோதி ஆசிரமத்தில் மகிமையடைந்த தினவிழாவின் போதும், கல்கி ஜெயந்தி விழாவின்போதும் கலப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. முற்காலத்தில் திருமணங்கள் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

நவம்பர் – டிசம்பர் 2014 – Jan 2015

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! 2014-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவானது, மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது. செப்டம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையும், அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், ராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களுக்கு ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்யச் சென்றனர். நான் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தேன். நவம்பர் மாதத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மக்களுக்கு அறிவிக்க ஆந்திரா மாநிலத்திற்கு நாங்கள் குடும்பமாக சென்றிருந்தோம். 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இன்றைக்கு ஜனங்கள் தங்களுடைய திறமைகளை உபயோகிக்க விரும்புவதில்லை. இந்த தாலந்துகளைக் கொடுத்தது யார்? இறைவன் இந்த திறமைகளை உங்களுக்கு அளித்திருக்கிறார். ஆனால் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஆகஸ்ட் 2014 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாரயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் ஜூலை 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 45-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக  ஆன்மீக கூடாரப் பண்டிகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, மலேசியா, ஜெர்மனி போன்ற வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியைப் பெற்றுச் சென்றனர். ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கல்கி ஷெயந்தி விழா இனிதே ஆரம்பமானது. 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி மனிதன் சந்திரனுக்கு முதல் முறையாகச் சென்றான். அப்பொழுது இறைவன் கல்கி மகா அவதாரமாக இப்பூமியில் அவதரித்தார். மனிதன் எதற்காக சந்திரனுக்குச் சென்றான்? பூமியிலிருந்து சிதறிய ஒரு பாகம் தான் சந்திரன் என்பது விஞ்ஞானிகளின் கூற்றாகும். ஆக சந்திரனில் மனிதன் வாழ முடியுமா என்று சோதித்தறிய அங்கேயிருந்து சில கற்களை மனிதன் கொண்டு வந்தான். ஆனால் அந்த கற்களை ஆராய்ச்சி செய்தபோது என்ன கண்டறிந்தனர்? பூமியின் கற்கள் வேறுவிதமாக உள்ளது, சந்திரனின் கற்கள் வேறுவிதமாக உள்ளது. அத்துடன் சந்திரனில் மனிதன் வாழத் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

மே 2014 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஒவ்வொரு முறையும் ‘மனுஜோதி’ பத்திரிக்கையின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிம். ‘மனுஜோதி’ பத்திரிக்கையை வாசித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். இன்னும் சிலர் தொலைபேசியிலும்கூட தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறார்கள். அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம் மே மாதம் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், 2-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து மாணவ மாணவியர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். “தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்று கீதை கூறுகிறது. கல்கி மகா அவதாரமாக வந்த ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தர்மத்தை ஸ்தாபிக்க வந்தார் என்று கீதையின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். தர்மம் என்றால் என்ன? தர்மம் என்ற வார்த்தைக்கு பல பரிமாணங்கள் இருக்கிறது. ஆனால் ஒரு தனி மனிதனுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைக் காண … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தன் அல்லது மணவாட்டியின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் திருவருட்பா 6-ம் திருமுறை பாடல் எண்: 1058 அங்கலிட்ட களத்தழகர் அம்பலவர் திருத்தோள் ஆசையெனும் பேய் அகற்றல் ஆவதிலை எனவே பொங்கலிட்ட தாயர் முகம் தொங்கலிட்டுப் போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் எங்கள் இட்டம் திருவருள் மங்க வஞ்சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே தங்களிட்டம் யாது திருவாய் மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே. தெளிவுரை: ஞான சபையில் (மணவாட்டியின் மத்தியில்) திருவிளையாடல் புரிகின்ற தனக்கு நிகரில்லாத சீமானே! இருளைத் தமக்கு மறைவிடமாகக் கொண்ட கருமை நிறம் கொண்ட அழகர் நீரே! வேதங்களில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்களை நீர் கோபியருக்கு பகிரங்கப்படுத்துபவராக விளங்குகிறீர். ஆகவே எனது தோழியாகிய உமது காதலி (கோபிகை) உமது அழகிய தோளின்மீது பேயாசை கொண்டவளாக இருக்கிறாள். அதை அவளுடைய தோழியாகிய என்னாலும்கூட அகற்ற முடியவில்லை. அவளுடைய உறவினர்கள், அவள் உம்மீது வைத்திருக்கும் பேயாசையை அகற்ற பலவாறு முயற்சித்தனர். ஆனால் தோல்வியடைந்தனர். இறுதியில் அவர்கள் தங்களின் குல தெய்வங்களுக்குப் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அதனாலும் எந்தவிதப் பயனும் இல்லாமல் போயிற்று. ஆகவே அவர்கள் தங்கள் முகங்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு, சோகம் மேலிட்டுத் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்கள் அவளை … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

நீயா! நானா!

எஜமானா, தொழிலாளியா, கணவனா, மனைவியா, ஆசிரியரா, மாணவனா, மாமியாரா, மருமகளா யார் ஜெயிப்பது? என்ற போட்டி சமுதாயத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. இதை ஈகோ (ego) என்று ஆங்கிலத்திலும் ‘சுயம்’ அல்லது ‘தனித்தன்மை’ அல்லது ‘அகராதி’ என்று கூறுகிறோம். இறைவனா, பக்தனா யார் ஜெயிப்பது? என்ற போட்டியும் காலாகாலமாக நடந்து கொண்டே இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையைப் பற்றி ‘ஊடலில் தோற்றவரே வென்றவர்’ என்று வள்ளுவர் கூறுகிறார். இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே நடக்கும் போட்டியில் ‘தோற்றவரே வென்றவராவர்’ என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் அர்ஜுனனின் வாழ்க்கையில் நடந்தது. வில் வித்தையில் சிறந்தவனான அர்ஜுனன் சிவனுக்கு மிகப் பிரியமானவன். தீர்த்த யாத்திரைக்கு செல்லும்போது கூட சிவலிங்கத்தை காட்டில் பார்த்தால் அவன் அதற்கு பூஜை செய்யாமல் இருந்ததில்லை. ஒருமுறை அர்ஜுனன் வேட்டையாடச் சென்றபோது சிவனும், பார்வதியும் காட்டுவாசிகளைப்போல வேடமிட்டுக்கொண்டு, அர்ஜுனன் வேட்டையாடும் காட்டிற்கு வந்தனர். அப்பொழுது ஒரு காட்டுப் பன்றி அர்ஜுனனை தாக்கியது. சிவன் தன் வில்லை நாணேற்றி காட்டுப் பன்றியை குறிபார்த்து அம்பை எய்தார். அதேசமயம் அர்ஜுனனும் அம்பை எய்தான். கிராட்டா என்ற காட்டுவாசிகள் தங்கள் தலைவன் எய்த அம்பினால் தன் காட்டுப் பன்றி ஒழிந்தது என்றனர். அர்ஜுனனோ தான் எய்த அம்புதான் காட்டுப் பன்றியை கொன்றது என்றான். இதினால் அர்ஜுனனுக்கும், … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

டிசம்பர் 2013

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!   மனுஜோதி ஆசிரமத்தில் அக்டோபர் மாதம் 3-ம் தேதி நீதியுக ஸ்தாபக விழா சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கிலுமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரும் இந்த நாளில், ஸ்ரீமந் நாராயணரின் அன்புக்கொடியை தங்கள் இல்லத்தில் ஏற்றி, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர். இந்த நாளில் தெய்வீக ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொண்டாடிய  இறைவனின் பிள்ளைகள் அனைவருக்கும் இது ஆசீர்வாதமாக அமைந்தது. மனுஜோதி ஆசிரமத்திலும் மற்றும் அன்புக்கொடி எங்கெல்லாம் ஏற்றப்பட்டதோ அங்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது. செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவி லுள்ள சிட்னி மாநகாரில் சிட்னி தமிழ் சங்கம் மற்றும் வி.ஜி.பி உலகத் தமிழ் சங்கத்தின் 13-வது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நானும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் சென்றிருந்தோம். மேலும் மெல்போர்னிலும், மலேசியாவிலும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் புத்தகங்கள் மற்றும் சி.டிக்கள் வாயிலாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பால் C. லாறியும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் குழுவாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் சென்றனர். ஒன்றே … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு, ஆன்மீக கருத்து