தமிழ் | తెలుగు

» ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் உரை – ஜனவரி 2021

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி நீதியுக ஸ்தாபக விழாவானது மனுஜோதி ஆசிரமத்தில் எளிய முறையில் கொண்டாடப்பட்டது. உலகெங்கிலுமுள்ள பக்தர்கள் தங்கள் இல்லங்களில் ஆதிபலி அன்புக் கொடியை ஏற்றினர். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் அந்த நாள் முழுவதும் இருந்ததை அனைவராலும் உணர முடிந்தது. வரவிருக்கும் ராம ராஜ்ஜியத்தை பறைசாற்றி பிரகடனம் செய்யும் விதமாகவும், வைகுண்ட லோகத்தில் நிலவும் தெய்வீக அன்பிற்கு சாட்சியாகவும் நாம் கொடியேற்றுகிறோம். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்தேன். அதேவிதமாக என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பாலுடன், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலுள்ள பல இடங்களுக்கு சென்று பக்தர்களை சந்தித்தார்கள். பருத்தியின் பூவாகிய பஞ்சிலிருந்து திரிக்கப்படும் ‘நூல்’ ஆடை நெய்வதற்கு உரியதாகும். இறைவனின் வாயினால் உரைத்த அறிவுரைகள் அடங்கிய வேதங்கள் எனும் ‘நூல்’ மனிதர்களின் வாழ்க்கை நலத்திற்கு உரியதாகும். “வனையப்பட்ட நூல் ஒருவரின் வடிவ வனப்புக்கு வகையாகிறது. வரையப்பட்ட வேத நூல் ஒருவரின் வாழ்வு வளத்திற்கு வழியாகிறது”. இருவகை நூலுமே இன்றியமையாததாகும். என்றாலும் வேத நூல்கள் வரையறைக்கு … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஜூலை 2019

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள். மனுஜோதியை படித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம்  மே மாதம் 5-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், மே மாதம் 3-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர் அனைவரும் மனுஜோதி ஆசிரமத்தின் சட்டதிட்டங்களையும், வேதங்களையும், ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும், கடவுள் ஒருவரே என்ற சத்தியத்தையும் கற்றுச் சென்றனர். மேலும் பல மாணவ மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். மனிதன் தன் எல்லையை விட்டு சந்திரனுக்குச் சென்றபோது, இறைவன் தான் பூமியில் இருக்கிறேன் என்று நிரூபித்தார். இறைவன் விஸ்வரூபத்தை காண்பித்த நாளை கல்கி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு பொன்விழாவாக கொண்டாடப்படவிருக்கிறது. ஒரு மனிதன் சந்திரனுக்குச் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் குறிப்பு -2

ஜனவரி – 2017 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! 2016-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவானது மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது. செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திருச்சி, சேலம், வேலூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக சென்றனர். அக்டோபர் மாத துவக்கத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மக்களுக்கு அறிவிக்க ஆந்திரா மாநிலத்திற்கு நாங்கள் குழுவாக சென்றிருந்தோம். விசாகப்பட்டினத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள பாடேரு என்ற மலைக் கிராமத்திலுள்ள மலைவாழ் மக்களிடையே “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை பரப்புவதற்காக சர்வ சமய மாநாடு மற்றும் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் நடந்தது. அம்மாத இறுதியில் நான் மலேசியாவிற்கு சென்று வந்தேன். தற்போது இந்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஆகஸ்ட் – 2016

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் ஜூலை 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 47-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகையானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, மலேசியா, பர்மா, போன்ற வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியை பெற்றுச் சென்றனர். ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கல்கி ஜெயந்தி விழா இனிதே ஆரம்பமானது. மனிதனின் பிறவிப்பயன் இறைவனுடன் ஒன்றர கலப்பதாகும். ஒவ்வொரு யுகத்திலும் மனிதன் இதை மறக்கும் தருவாயில் இறைவன் அவதரித்து பிறவிப் பயனை நினைவுபடுத்துகிறார். இந்த கலியுகத்தில் 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதியன்று கல்கி அவதாரமாக காட்சிகொடுத்து நம்முடன் ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக வந்தார். இறைவனுக்கும், பக்தர்களுக்குமிடையே நிலவும் இத்தகைய அன்பைப் பற்றி நாம் ஆண்டாளின் சரித்திரத்தில் கேட்டிருக்கிறோம். ஆண்டாள் இறைவனை தனது மணவாளனாக பாவித்து, இறைவனுக்கு மலர் மாலை சூட்டினாள். கோபிகைகள் மற்றும் மீராபாயும் கிருஷ்ணரை தங்களது மணவாளனாக பாவித்து வணங்கினார்கள். இந்த நிலை ‘மதுர்ய ரசா’ என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் இறைவனை மணந்து அவன் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் உரை

மே – 2016 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! மனுஜோதியை படித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம்  மே மாதம் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே மாதம் 15-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர் அனைவரும் மனுஜோதி ஆசிரமத்தின் சட்டதிட்டங்களையும், வேதங்களையும், ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும், கடவுள் ஒருவரே என்ற சத்தியத்தையும் கற்றுச் சென்றனர். மேலும் பல மாணவ மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். நான் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை அறிவிக்க சட்டீஸ்கரிலுள்ள பிலாய், ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா, கட்டுபிடிபாலேம், விணுகொண்டா, ராவுலபாலேம், விசாகப்பட்டிணம், அசராடா போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். என்னுடைய சகோதரன் D. லியோ பால் மற்றும் சில பக்தர்களுடன் மலேசியா, சீனா … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் உரை

பிப்ரவரி – 2016 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை “ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையடைந்த தினவிழா” கொண்டாடப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் அநேக பக்தர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்காவிலிருந்தும் பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். ஜனவரி மாதத்தில் மலேசியாவிற்கும், பிப்ரவரி மாத துவக்கத்தில் பர்மாவிற்கும் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்ய என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பாலுடன் சில பக்தர்களும் சென்றனர். ஜனவரி மாத துவக்கத்தில்  பத்து  நாட்களாக ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆந்திராவிற்கு நானும் சில சகோதரர்களும் சென்றோம். மகிமையடைந்த தின விழா என்றால் 1921-ம் வருடம் பிப்ரவரி மாதம் 24-ம் நாள் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா இப்பூமியில் கல்கி மகா அவதாரமாக அவதரித்து, 1989-ம் வருடம் பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று இப்பூவுலகத்தை விட்டு தமக்கு சொந்த இடமான வைகுண்டம் சென்றார். அந் நன்னாளையே அவருடைய குடும்பத்தினராகிய நாங்களும், உலகமெங்கிலுமுள்ள அவருடைய பக்தர்கள் அனைவரும் மகிமையடைந்த தின விழாவாக … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் உரை

நவம்பர் – 2015 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! 2015-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவில் அன்புக்கொடி ஏற்றப்பட்டது. மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் அன்புக்கொடி ஏற்றியவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது. செப்டம்பர் மாதத்தில் நான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள அநேக கிராமங்களுக்கு சென்று வந்தேன். என்னுடைய சகோதரன் D. லியோ பால் அவர்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் அகில இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள அநேக இடங்களுக்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும், புத்தகங்களையும் விநியோகித்து ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையைப் பிரச்சாரம் செய்தார்கள். இறைவன் நம்மை ஆட்சி செய்கிறார் என்பதை காண்பிக்கவே நாம் அன்புக்கொடியை ஏற்றுகிறோம். இறைவனின் பாகமாக இருக்கும் மக்கள் ஐம்புலன்களை சார்ந்து வாழாமல் இறைவனின்மேல் சார்ந்து வாழ வேண்டும். ஆனால் இறைவன் மேல் சார்ந்து வாழ்வதற்குப் பொறுமை தேவைப்படுகிறது. மனிதர்கள் உடனுக்குடன் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் உரை

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் ஜூலை 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 46-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, மலேசியா, பர்மா, ஜெர்மனி போன்ற வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியைப் பெற்றுச் சென்றனர். ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கல்கி ஜெயந்தி விழா இனிதே ஆரம்பமானது. கலியனை அழிக்க ஆறு யுகங்களின் முடிவில் கல்கி அவதாரமாக தோன்றுவார் என்று தீர்க்கதரிசி முத்துக்குட்டி அகிலத்திரட்டில் கூறியபடி, இறைவன் 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி கல்கி அவதாரமாக தோன்றினார். ஆறு யுகங்களாக கலியனை அழிக்காமல் பொறுமையாக இருந்தார், அவர் பொறுமையின் சிகரமாக திகழ்பவர். ‘அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’, ‘பொறுமை கடலினும் பெரிது’ என்ற பழமொழிகளை நாம் கேட்டிருக்கிறோம். பூமியை ஆள பொறுமை வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இறைவனின் பக்தர்கள், மகான்கள், தீர்க்கதரிசிகளுக்கு பொறுமை என்ற குணம் மிகவும் அவசியமாகும். விவிலியத்தில் யோனா என்ற … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு