தமிழ் | తెలుగు

» Archive

காலஞானம்

தொடர்ந்து மனுஜோதி இதழை வாசித்து வரும் அன்பர்கள், ‘காலஞானம்’ போத்தலூரி வீரபிரம்மம் அவருடைய வாழ்க்கையில் இறைவன் அருளால் செய்த அநேக அற்புதங்களையும், அறிந்திராத செய்திகளையும் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆந்திர மாநிலத்தில் தோன்றிய வீரபிரம்மம் திருநெல்வேலிக்கு அருகே வருகை புரிந்து, ஸ்ரீமந் நாராயணரைப் பற்றிய கருத்துக்களைக் கூறி மக்களை விழிப்படையச் செய்து, உண்மையான நாராயணரை கண்டுகொள்வதற்கு வழிகாட்டியாக இருந்தார் என்பது பற்றிய கருத்துக்களை தொடர்ந்து வெளிவந்த இதழ்களின் மூலம் அறிந்துகொண்டோம். வாசக அன்பர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியும், பகவான் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் நாமத்தில் வாழ்த்துதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு இறைவனை அடைய வழி தேடிய மக்களுக்கு இறைவனிடம் சேர்வதற்கு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்தான் தீர்க்கதரிசிகள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், தொண்டர்கள், நாயன்மார்கள் மற்றும் திருவள்ளுவரைப் போன்ற தெய்வப் புலவர்கள். அவர்கள் இறைவனின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி முடித்தார்கள். அவர்களுடைய இறைதொண்டின் பலனாக இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு மட்டுமே வெளிச்சம். ஸ்ரீ வீரபிரம்மம் அவர்கள் “வித்துலேனி பண்டு விஸ்வமுலோ உண்டு” என்று தெலுங்கு மொழியில் கூறியுள்ளார். அப்படியென்றால் “விதையில்லா பழம் ஒன்று உண்டு. அதுவும் பூமியிலே உள்ளது. அதைக்கண்டு கொள்ளுங்கள்” – என்று பொருள் விளங்க … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

நல்லதை செய்யுங்கள்

மாடு வாராது, கன்று வாராது, மனைவி வரமாட்டாள், மகன் வரமாட்டான், தேடிய செல்வம் வாராது, ஆடை, ஆபரணம் வாராது, பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே. ஆகையால் நல்லதையே செய்யுங்கள். – பட்டினத்தார் … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம்

தேவனுடைய நியாயத்தீர்ப்பு! தேசமெல்லாம் புலம்பும் தீர்ப்பு! கடவுள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆசீர்வாதம்! கடந்துபோனதென்ன மாயம்! இறைவனின் அழைப்பை ஏற்கவில்லை எவரும்! கடவுள் இவரா? என அசட்டை செய்தனர் பலரும்! காலங்களாய் வந்த தேவன்! காலனை வீழ்த்திய தேவன்! கலியுக முடிவிலும், கல்கி மகா அவதாரமாக வந்த தேவன்! கொள்ளை நோயும் வந்ததே! கொத்தாக மானிடம் மரிக்கிறதே! வியாதிகள் பல வந்ததே! வியந்துபோக வைத்ததே! இன்பப்பொழுதும் நீ! இன்னல் போக்குவதும் நீ! இனிய நாமம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம் தந்து இமைப்பொழுதும் காப்பவர் நீ! – பா. வித்யாலட்சுமி, விழுப்புரம் … Read entire article »

Filed under: கவிதைகள்

வாசகர் கடிதம்

அன்புள்ள ஆசிரியர் மற்றும் அதன் குழுவுக்கு கோடானு கோடி வணக்கங்கள். ஆகஸ்ட்-செப்டம்பர்- அக்டோபர் 2020, காலாண்டிதழ் கையில் கிடைக்கப் பெற்றேன். படித்தேன், மகிழ்ந்தேன், வியந்தேன். அத்துனையும் முத்துக்கள், அகிலத்தின் சொத்துக்கள். ஊரடங்கு உத்தரவால் 51-வது கல்கி ஜெயந்தி விழா எளிமையாக கொண்டாடியது சிறிது வருத்தத்தை அளித்தாலும், மக்களின் நலன் கருதி மக்களின்மேல் அக்கறை கொண்டு செயல்பட்ட விதம் போற்றுதற்குரியது. கௌதம புத்தரின் பொன்மொழிகள் சிந்திக்க வைத்தது. மேலும் பக்த துக்காராம், சுவாமி விவேகானந்தர், கபீர்தாஸ், ஞானதேவர் ஆகியோரின் பொன் மொழிகள் இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் தேவை. நடந்ததெல்லாம் நன்மைக்கே, பிரார்த்தனை, ஸ்ரீபோசலபாவாவின் வரலாறு, சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள், காலஞானம், சங்கைமிக்க குர்-ஆன், படித்ததில் பிடித்தது, சித்தர்களின் எதிர்பார்ப்பு, நினைந்திரு, மனிதனின் வீழ்ச்சிக்கு காரணங்களாக வள்ளலார் கூறுவதென்ன?, வசையை வாழ்த்தாகக் கொள்வதெப்படி?, ஓய்வுநாள் இரகசியம், சாதிக்க பிறந்தவர்கள், பொறுமையோடிருந்தால் பொக்கிஷங்கள் உண்டு, ஆன்மீகம், ஸ்ரீமத் பகவத்கீதை பத்தாம் உபதேசம், இறைவனின் தெய்வீக மகிமைகளைப் பற்றிய இரகசியம், எது பிரம்மம்? போன்ற தகவல்கள் பயனுள்ளதாக இருந்ததுடன், வியப்பாகவும் இருந்தது. வாசகர் குரல் பகுதியில் இடம்பெற்ற கடிதங்கள் அருமையாக இருந்தது. கவிதைகள் அனைத்தும் காதுகளில் தேனாய் பாய்ந்தது. பா. ஹவிலா நட்சத்திரம் மனுஜோதி ஆசிரமம் அவர்கள் எழுதிய அவரும் – நாமும் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

கேனோ கிறிஸ்டேல்ஸ் – ஐந்து வண்ணங்கள் கொண்ட நதி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கொலம்பியா என்ற நாட்டில் ‘ஐந்து வண்ணம் கொண்ட நதி’ அல்லது ‘திரவ வானவில்’ என்று அழைக்கப்படும் கேனோ கிறிஸ்டேல்ஸ் என்னும் நதி பாய்கிறது. கொலம்பியா நாட்டின் கண்கவரும் மற்றும் அற்புதமான இயற்கை விந்தை என்று இந்த நதி அழைக்கப்படுகிறது. செரானிய டே லா மெக்கரீனா என்ற மலைத் தொடரில் இந்த நதி காணப்படுகிறது. மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு என ஐந்து வண்ண தண்ணீரினால் இந்த நதி எல்லாரையும் மயக்குகிறது. கேனோ கிறிஸ்டேல்ஸ் எனும் நதி ஒரு உயிரியல் அதிசயமாகும். ஏனெனில் வருடம் முழுவதும் அது எல்லா நதிகளைப் போலவே காணப்படும். ஆனால் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையே உள்ள காலத்தில் தண்ணீர் அளவு குறைவதால் சூரிய ஒளி பட்டு பாசி மற்றும் கடற்பாசி, செடிகள் செழித்து நதி நீரின் வண்ணத்தை மாற்றுகிறது. நதியின் நீருக்கு பல வண்ணங்களை தருவதற்கு காரணமாக இருப்பது மேக்கரெனியா களாவிகெரா என்னும் செடி. இது சிவப்பு நிற பாசி வகை. இந்த பாசியினால் கேனோ கிறிஸ்டேல்ஸ் எனும் நதிக்கு உலகிலேயே மிகவும் அழகான நதி என்ற பெயர் கிடைத்திருக்கிறது. ஒரு நதியின் நீருக்கு ஐந்து வண்ணம் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

அதிகாலையில் துயில் எழு!

லௌகீக காரியங்களுக்காக நாம் காலையில் எழுகிறோம். இறைவன் அதைவிட மேலானவர். அவர் செய்த நன்மைகளுக்காக, இலவசமாக கொடுத்த எல்லாவற்றிற்காகவும் நாம் அதிகாலையில் துயில் எழுகிறோமா? இல்லை.உதாரணத்திற்கு நாம் காலை ஒன்பது மணிக்கு ரயிலை பிடிக்க வேண்டுமென்றால், சீக்கிரமாக எழும்பி விடுகின்றோம். ஒருவேளை நமக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்திருக்குமென்றால், அங்கே நாம் சீக்கிரமாக ஆஜராக வேண்டுமென்றால், காலை ஐந்து மணிக்குகூட எழுந்து சென்றுவிடுவோம். யாராவது சீனி இலவசமாக நியாய விலைக் கடையில் கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாமெல்லோரும் காலை ஐந்து மணிக்கே வரிசையில் நின்றுகொண்டிருப்போம்.பறவைகளிடமிருந்து நீங்கள் சிலவற்றை அறிந்துகொள்ள வேண்டும். நான் விடியற்காலை மூன்று மணிக்கு எழும்பினேன். அவைகள் எல்லாம் சேர்ந்து சத்தமிட்டன. சரியாக மூன்று மணிக்கு அவைகள் சத்தமிடுகின்றன. மறுபடியும் நாலரை மணிக்கு அவைகள் சத்தமிடுகின்றன. ஆனால் இறைவனுடைய பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அக்கறையோடு இறைவனை துதிப்பதில்லை. ஆனால் பறவைகள் சேர்ந்து சத்தமிடும்போது அவை இறைவனைத்தான் துதிக்கின்றன. – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

நல்லதை செய்யுங்கள்

மாடு வாராது, கன்று வாராது, மனைவி வரமாட்டாள், மகன் வரமாட்டான், தேடிய செல்வம் வாராது, ஆடை, ஆபரணம் வாராது, பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே. ஆகையால் நல்லதையே செய்யுங்கள். – பட்டினத்தார் … Read entire article »

Filed under: கவிதைகள்

எது வாழ்க்கை

நிரந்தரமானது துன்பம், வந்து போவது இன்பம், இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாக கண்டு கொண்டு விட வேண்டும். – கவியரசு கண்ணதாசன் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து