தமிழ் | తెలుగు

» Archive

ஆன்மீக சுற்றுப்பயணம்

இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் என்பது இறைவனால் முன்குறிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த பகுதிகளில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருள் வாக்கு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தாரோ அவருடைய திட்டமிடலின்படியே இந்த பயணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஒரு பொழுதுபோக்குக்காக செய்யும் உல்லாசப் பயணம் அல்ல. உதாரணமாக திரேதா யுகத்தில் விசுவாமித்திரர், தான் செய்யும் யாகத்திற்கு பாதுகாவல் அளிப்பதற்காக இராமன், இலட்சுமணன் இருவரையும் என்னுடன் அனுப்ப வேண்டும் என்று தசரத மகாராஜாவிடம் வேண்டினார். அந்த யாகத்தை பாதுகாக்க சென்ற பயணமானது பகவானின் திட்டப்படி ஜானகியை மணம் முடித்து அயோத்திக்கு திரும்பி வந்தார். இவ்விதமாகத்தான் ஆன்மீக சுற்றுப்பயணத்தின் போது நம்மை அறியாமலேயே அவருடைய லீலைகள் நிறைவேறும். உதாரணமாக இந்த வெகுதூரப் பிரயாணத்திற்குப் பிறகு வங்காள தேசத்திற்கு (Bangladesh) சென்றோம். அங்கு என்ன ஆச்சர்யம் என்றால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினரை எங்களால் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைக் குறித்து சிறிது நேரம் உரையாடினோம். உரையாடிய சமயத்தில்தான் அவர்கள் முப்பது ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரம குடும்பத்தினர் யாராவது தங்களது வீட்டிற்கு வரவேண்டும் என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்ததாக எங்களிடம் கூறினார்கள். அப்போதுதான் … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்