தமிழ் | తెలుగు

» Archive

சத்தியத்தின் தந்தை

நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் ஆன்மீக சிந்தை நாம் லஹரியின் ஆட்டு மந்தை இவர்தான் சத்தியத்தின் தந்தை நம் சுயநீதி எல்லாம் ஒரு கந்தை அய்யாவின் வல்லமையே மிகப்பெரிய விந்தை          – செந்தமிழ் ராஜா, சிதம்பரம் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

தெலுங்கு என பெயர் வர காரணம் என்ன?

முன்னொரு காலத்தில் தமிழ் கலாச்சாரமானது உலகெங்கும் பரவியிருந்தது. நம்முடைய இந்தியாவானது ஜாவா, டெஹ்ரான், போர்டியோ, சுமத்திரா அங்கிருந்து இந்தியா வரை ஒரே தேசமாக இருந்தது. அது அகண்ட பாரதம் என்று அழைக்கப்பட்டது. இந்திய சரித்திரத்தை ஆங்கிலேயர்கள் மறைத்து விட்டனர். இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை  ஒரே நிலப்பரப்பாக இருந்தது. உங்களால் இதை நம்ப முடிகிறதா? எகிப்து, பாபிலோன் போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் என்று தெரியுமா? பல நூறு வருடங்களுக்கு முன்னர் தமிழ் கலாச்சாரம்தான் எகிப்து தேசத்திற்கு சென்றது. எகிப்திய ஜனங்கள் அதை ரோம் தேசத்திற்கு எடுத்து சென்றார்கள். அதன்பிறகு கிரேக்க மக்கள் எடுத்துக்கொண்டு சென்றார்கள். பிறகு வடக்கு வழியாக திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள். பின்னர் தமிழ் கலாச்சாரம் ஜப்பானுக்கு சென்றது. பின்னர் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் தமிழ் மொழியானது வேறு எந்த மொழியுடனும் ஒத்துப்போவதில்லை. ஆங்கிலேயர்கள் இந்த பெயர்களையெல்லாம் மாற்றி விட்டனர். அதனால்தான் நாம் யார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. தெலுங்கு என்ற பெயர் தங்களுக்கு எப்படி வந்தது என்று தெலுங்கு மக்களுக்குகூட தெரியாது. தெலுங்கு என்ற மொழி தென்னிந்தியாவில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானத்தில் பேசப்படும் மொழியாகும். உலகில் அதிக அளவில் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பற்று

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” என்று வள்ளுவர் கூறியதின் பொருளாவது ஆசை அல்லது பற்றை விடுவதற்கு எல்லா பொருள்களுக்கும் மூலகாரணராகிய ஆசை அல்லது பற்று அற்ற பரம்பொருளின் அழகிய பாதங்களை இறுகப் பிடித்துக்கொள் என்பதாகும். இறைவன் ஆசை அற்றவன் என்று ஒப்புக்கொள்ளலாம். பற்று இல்லாதவன் என்றால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏன்? அவன் பற்றியிருப்பதினால்தானே வளியில் பூமி சுழன்று கொண்டிருக்கிறது, நட்சத்திரங்கள் தொங்கி கொண்டிருக்கின்றன, சூரியன் தொங்கி கொண்டிருக்கிறது. அத்துடன் அண்டசராசரத்திலுள்ள சகலமும் இறைவன் பற்றி பிடித்துக்கொண்டிருப்பதினால்தானே அவை தத்தம் இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் இந்த பற்றை புவிஈர்ப்பு சக்தி என்றார்கள். மெய்ஞானம் இதனை இறைவனின் கட்டுப்பாடு என்கிறது. அவ்வளவுதான்!!! திருக்குர்-ஆனும் இக்கருத்தை கூறுகிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்-ஆன் 13:2). நீங்கள் பார்க்கக்கூடிய தூணின்றி வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளை போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

படகோட்டி

ஸ்ரீ ராமனை உலகமே அறியும் எனும்படி அவன் மகிமை, பெருமை எங்கும் பரவியிருந்தது.  ராமன் காட்டிற்கு செல்லும்போது சீதை, லக்ஷ்மணனும் செல்கிறார்கள். கங்கை நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் முதன்முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன்னே மரவுரி தரித்து நிற்கும் ராமனை காணமுடியாமல் அவன்  கண்களில் கண்ணீர் வருகிறது. என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா? என பக்தியோடு கேட்கிறான். கங்கையை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும் என்று ராமர் கூறுகிறார். அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்பட தயாராகிறது. ஓடக்காரனான கேவத் என்பவனை அணுகி, உன் படகை இங்கே கொண்டு வா என்று கூறினான். படகு மெதுவாக அவர்களை நெருங்கி வருகிறது. ஓடக்காரனிடம் இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜாவான ராமர், அவர் மனைவி சீதாதேவி ராணி, அவருடைய சகோதரன் லக்ஷ்மணன். இவர்களை அக்கரைக்கு கொண்டு சேர் என குகன் வேண்டுகிறான். கேவத் என்பவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும், இரவில் உறங்குவதற்கு முன்பும் ராம நாமம் சொல்பவன். ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரைக்கு கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

பிள்ளைக்கு தந்தை இறைவன்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் தன்னை ஒரு சாதாரண மனிதனாக இவ்வுலகத்திற்கு காண்பித்துக்கொண்டாலும், தன்னை நம்பிய உண்மையான பக்தர்களுக்கு தாம் ஒருவரே இறைவன் என்றும், சிருஷ்டி கர்த்தரென்றும் தெரியப்படுத்தினார். 1985-ம் வருடம் மனுஜோதி ஆசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தாம் யார் என்பதை இப்பதிவில் தெரியப்படுத்தியதை காணலாம். மனுஜோதி ஆசிரமத்தில் இறைவனை அடைவதற்காகவும், ஆன்மீக பயிற்சி பெறுவதற்காகவும், அநேகர் இங்கே வந்து தங்குவதுண்டு. சில பெற்றோர்கள்கூட தங்களுடைய பிள்ளைகளை ஆன்மீக பயிற்சி பெறுவதற்காக கொண்டுவந்து விட்டு செல்வதுண்டு. அவ்விதமாக ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் என்ற மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளி என்னுமிடத்தில் மலைவாழ் பகுதியை சார்ந்த ஒரு வாலிபனும் மனுஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்தான். அவனுடைய பெயர் இலட்சணா. மலைவாழ் பகுதியில் இருந்து வந்த காரணத்தினால் ஆசிரமத்தில் பனை மரங்கள், மற்ற சோலைவனங்களில் சுற்றி திரிவது அவனது வழக்கமாகும். ஒருநாள் ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு அவனை தீண்டியது. இந்த தகவல் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவோ அவனை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் நீ இறைவனை தேடு, நீ உன்னுடைய வாயை திறந்து பரமபுருஷர் உனக்காக அளித்த பலியை நினைவுகூர்ந்து இறைவனை துதித்துக்கொண்டு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

காலஞானம்

காலஞானம் என்பது இறைவனின் தீர்க்கதரிசியாகிய போத்தலூரி வீரப்பிரம்மம் தன்னுடைய காலத்தில் நிகழ்ந்த இறை நிகழ்ச்சிகளை மட்டும் குறிப்பதல்ல. வருங்காலத்தில் நடக்க இருக்கும் காரியங்களைக் குறித்தும், இறைவனுடைய வருகையைக் குறித்தும், அவரைக் கண்டுகொள்ளும் வழியைக் குறித்தும், இறைவனுடைய பெயரையும் சூட்சமமாக மக்களுக்கு எடுத்துரைத்த உபதேசமே காலஞானம் என்ற நூலாகும். அவருடைய காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்களையும், அவர்கள் இறைவனுடைய திட்டத்தை அந்த காலகட்டத்தில் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பதைக் குறித்தும் உங்களுக்கு தொடர்ந்து எழுதி வருகின்றோம். இன்றைய நாட்களில் சினிமா நடிகர் நடிகைகள் குறித்தும், அரசியல்வாதிகளைக் குறித்தும், மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இறைவனை அடையாளம் காட்டிய அந்த தீர்க்கதரிசிகளைப் பற்றிய காரியங்களை மறந்து விடுகிறார்கள். எனவே மக்கள் ஆன்மீக விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த மனுஜோதி இதழ்களில் தீர்க்கதரிசிகளைக் குறித்து விளக்கமாக எழுதி வருகின்றோம். சென்ற இதழில் வீரப்பிரம்மம் கர்நூல் நவாப் கோட்டையில் செய்த அற்புதத்தைப் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் பிணி மற்றும் மரணத்திலிருந்து ஒருவரை உயிர்ப்பித்த சம்பவத்தைப் பார்க்கலாம். ஸ்ரீ போத்தலூரி வீரப்பிரம்மம் அவர்கள் தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரவு நேரமாகி விட்டபடியால் அவர் ஒரு மரத்தடியில் தங்க நேரிட்டது. தன் சீடர்களுடன் அவர் அளவளாவிக் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

வள்ளலாரின் திருவருட்பா

தெளிதேன் துளிகள் (தெரிந்தெடுக்கப்பட்டவை) உலகர்க்கு உய்வகை கூறல் கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரிர் கொட்டோடே முழக்கோடே கோலங்காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எட்டோடே இரண்டு சேர்த்தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே விளக்கவுரை (தொடர்ச்சி): “பட்டோடே பணியோடே திரிகின்றீர்” என்று வள்ளலார் மக்களில் ஒரு சாராரை விமர்சிக்கிறார். அவர்கள் பசியுடன் வருபவர்களுக்கு உணவளிப்பதில்லை என்றும் அவர்களைப்பற்றி தமது வருத்தத்தை இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார். பட்டு என்றால் ஏழை மக்கள் அணியக்கூடிய வஸ்திரமல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும். பணி என்றால் பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை குறிக்கும். பட்டாடை அணிந்து பொன் ஆபரணங்களை கொண்டு அலங்கரித்தல் தவறா? என்ற கேள்வி சாதாரணமாக எழக்கூடும். இதைப்பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதைப்பற்றியும், ஞானிகள் என்ன கூறியிருக்கிறார்கள்? என்பதுபற்றி நாம் தெரிந்துகொண்டால் தெளிவான உண்மைகளை அறிய முடியும். வள்ளலாரின் இந்த கருத்துக்களை தன்னைத்தான் கிரஹித்து உணர்ந்து இறைவனையும் கிரஹித்து உணர்ந்த மக்கள் மாத்திரமே புரிந்துகொள்வர். விவிலியம் என்ன கூறுகிறது?I பேதுரு 3:3-5: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்