தமிழ் | తెలుగు

» Archive

வாசகர் கருத்து

ஸ்ரீமந் நாராயணர் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்தால் கொடிய நோய் நீங்கிவிடும். நற்செயலில் ஈடுபடுபவர்களை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருபோதும் கைவிடமாட்டார். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை வரவழைக்கும். அறிவுடன் ஒன்றிவிடும்போது பிழைகளை திருத்தி வெற்றி காணலாம். நம்பிக்கையும் ஆழ்ந்த அன்பும் இருந்தால் மட்டுமே அவரை அடைய முடியும். எல்லா உயிர்களும் ஸ்ரீமந் நாராயணரின் படைப்பேயாகும். முக்கிய நோக்கத்திற்காகவே ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இரகசியத்தை யாராலும் அறிய முடியாது. அதை அறிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவினால்தான் முடியும்.ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தி மனதில் வேரூன்றி விட்டால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் சுபாவம் வந்து விடும். மனம் எதை சிந்திக்கிறதோ அதுவாகவே மாறிவிடும் என ஸ்ரீமந் நாராயணர் கூறுகிறார். அதனால் நல்லதையே சிந்திப்போம்.  R. சதாசிவம், சேலம் ✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

புத்தாடை அணிவதின் தத்துவம்

மனிதன்தான் புத்தாடை அணிவதற்காக பணம் கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் மரமானது, தன்னுடைய பழைய இலைகளை உதிர்க்கிறது, மிருகங்களும், பறவைகளும் தாங்களே தங்கள் இறகுகளையும், முடிகளையும் உதிர்க்கிறது. அதற்கு பதிலாக புதியது உருவாகிறது. மக்கள் பொதுவாக எல்லா பண்டிகைகளுக்கும் புத்தாடை அணிந்து கோவில், மசூதி மற்றும் ஆலயம் சென்று வழிபடுவார்கள். புத்தாடை அணிவதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. ஸ்ரீமத் பகவத்கீதை 2:22: “மனிதன் எவ்வாறு நைந்துபோன துணிகளை எறிந்துவிட்டு வேறு புதியவற்றை எடுத்துக்கொள்ளுகிறானோ அவ்வாறே உடலில் உறைபவன் நைந்துபோன உடலங்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”. இறைவன் நமக்கு ஜீவன் முக்தியை அருளும்போது நமக்கு ஒரு புதிய தேகத்தை அல்லது புதிய உடலை கொடுக்கிறார். இப்பொழுது நாம் தேகத்தை ‘மெய்’ என்று அழைக்கிறோம். ஆனால் இந்த ‘மெய்’ பொய்யானது, அழியக்கூடியது. இக்கலியுகத்தின் முடிவில் இறைவன் நமக்கு நவானிதேஹியை அல்லது மரணமில்லாத வேறொரு புதிய சரீரத்தை அருளுகிறார் என்ற தத்துவத்தை உணர்த்தவே நாம் பண்டிகையின்போது புத்தாடையை அணிகிறோம். இந்த நவானிதேஹி அல்லது புதிய சரீரம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து ‘வரம்’ என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

வாசகர் கருத்து

ஸ்ரீமந் நாராயணர் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்தால் கொடிய நோய் நீங்கிவிடும். நற்செயலில் ஈடுபடுபவர்களை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருபோதும் கைவிடமாட்டார். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை வரவழைக்கும். அறிவுடன் ஒன்றிவிடும்போது பிழைகளை திருத்தி வெற்றி காணலாம். நம்பிக்கையும் ஆழ்ந்த அன்பும் இருந்தால் மட்டுமே அவரை அடைய முடியும். எல்லா உயிர்களும் ஸ்ரீமந் நாராயணரின் படைப்பேயாகும். முக்கிய நோக்கத்திற்காகவே ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இரகசியத்தை யாராலும் அறிய முடியாது. அதை அறிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவினால்தான் முடியும். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தி மனதில் வேரூன்றி விட்டால் பகைவன்மீதும் அன்பு செலுத்தும் சுபாவம் வந்து விடும். மனம் எதை சிந்திக்கிறதோ அதுவாகவே மாறிவிடும் என ஸ்ரீமந் நாராயணர் கூறுகிறார். அதனால் நல்லதையே சிந்திப்போம்.  R. சதாசிவம், சேலம் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

ஜூலை 2019

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள். மனுஜோதியை படித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம்  மே மாதம் 5-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், மே மாதம் 3-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர் அனைவரும் மனுஜோதி ஆசிரமத்தின் சட்டதிட்டங்களையும், வேதங்களையும், ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும், கடவுள் ஒருவரே என்ற சத்தியத்தையும் கற்றுச் சென்றனர். மேலும் பல மாணவ மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். மனிதன் தன் எல்லையை விட்டு சந்திரனுக்குச் சென்றபோது, இறைவன் தான் பூமியில் இருக்கிறேன் என்று நிரூபித்தார். இறைவன் விஸ்வரூபத்தை காண்பித்த நாளை கல்கி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு பொன்விழாவாக கொண்டாடப்படவிருக்கிறது. ஒரு மனிதன் சந்திரனுக்குச் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஒன்பதாம் உபதேசம்

ராஜரீக ஞானம் ! ராஜரீக இரகசியம்! அர்ச்சுனா! சில பக்தர்கள் தவறான முறையில் தேவர்களின் உருவங்களை வணங்கி, விசுவாசத்துடன் கூடியவர்களாய் அவர்களுடைய நாமங்களை அழைத்து என்னை வணங்குகிறார்கள். அது ஒரு தவறான முறையாகும். அவர்கள் நேரடியாக பரமபுருஷரை வணங்குவதில்லை. எனவே அடையப் பெற்ற பலனும் வேறேயாகும். சுகம், செல்வம், வாழ்க்கையில் செழிப்பு, பிள்ளைகள் போன்ற வெகுமதிகளை வெவ்வேறு தேவர்கள் அளிப்பார்கள். ஆனால் பரமபுருஷரை வணங்குவதே நித்திய ஜீவன் அல்லது மோட்சமாகிய, மேலான உயர்ந்த வெகுமதியை அளிக்கிறது. அவர்கள் கண்டுவிசுவாசிக்கிற தன்மைக்கு விழுந்துபோகிறார்கள். ஏனென்றால் அவர்கள் என்னை உண்மையாக அறியவில்லை அல்லது அந்த பரமனின் ஞானத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். நானே அனுபவிக்கிறவனும், எல்லா யக்ஞங்களின் கர்த்தனுமாயிருக்கிறேன். அழிவற்ற யோகம் அல்லது ஆதிபலியின் ஞானம் ஒன்றே, ஒரு மனிதனை வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்கிறது. தேவர்களை வழிபடுகிறவர்கள் தேவர்களின் மூலமாக பலனை அடைகிறார்கள். முன்னோர்களை (பித்ருக்களை) வழிபடுவோர் முன்னோர்கள் (பித்ருக்கள்) மூலமாக பலனை அடைகிறார்கள். ஆவிகளை வழிபடுவோர் ஆவிகளின் மூலம் பலனை அடைகிறார்கள். ஆனால் என்னை அறிந்து என்னை மட்டுமே வணங்குகிறவர்கள் என்னை அடைகின்றனர். எனவே அவர்கள் மரிப்பதில்லை, நித்தியமாக வாழ்கிறார்கள். சர்வ வல்லமையுள்ள பரமபுருஷராகிய என்னை எவன் உணர்ந்தவனாக இருக்கின்றானோ, அவன் ஒரு பச்சிலையையோ, புஷ்பத்தையோ, கனியையோ அல்லது தண்ணீரையோ சமர்ப்பித்தாலும், நான் நேரிலே தோன்றி … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

மக்கள் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்

ஸூரா-10 வச.42: மேலும், உமக்கு செவியேற்போரும் அவர்களில் இருக்கின்றனர்; செவிடர்களே – அவர்கள் எதனையும் விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் – நீர் செவியேற்கச் செய்வீரா? வச.43: இன்னும், உம்மைப் பார்ப்போரும் அவர்களில் சிலர் இருக்கின்றனர்; குருடர்களுக்கு அவர்கள் பார்க்காதவர்களாக இருப்பினும் நீர் வழிகாட்டுவீரா? ஸூரா-17 வச.72: எவர் இம்மையானதில் நேர் வழியைக் காணாது குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே; இன்னும், பாதையால் அவர் மிகத் தவறியவராவார். ஸூரா-18 வச.57: மேலும், தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக்கொண்டு நினைவுபடுத்தப்பட்டு, பின்னர் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகள் முற்படுத்தியவற்றை மறந்தும் விட்டவனைவிட மிக அநியாயக்காரன் யார்? குர்ஆனாகிய இதனை அவர்கள் விளங்கிக்கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களின்மீது திரைகளையும், அவர்களுடைய காதுகளில் அடைப்பையும் நிச்சயமாக நாம் ஆக்கிவிட்டோம். ஆதலால், நபியே! நீர் அவர்களை நேர்வழியின்பால், எவ்வாறு வருந்தி அழைத்தபோதிலும், அப்போது அவர்கள் ஒருபோதும் நேர்வழியை அடையவே மாட்டார்கள். வச.100: மேலும், நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு, அந்நாளில் நரகத்தை நாம் நிச்சயமாக அவர்கள் முன்னிலையில் எடுத்துக் காட்டுவோம். வச.101: அவர்கள் எத்தகையோரென்றால், என்னை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய கண்கள் திரைக்குள் இருந்தன் இன்னும், அவர்கள் நல்லுபதேசங்களைச் செவியேற்கச் சக்தியற்றவர்களாக ஆகிவிட்டனர். ஸூரா-22 வச.46: பூமியில் அவர்கள் பிரயாணம் செய்யவில்லையா? அவ்வாறு பிரயாணம் செய்வார்களாயின் உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்கள் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்; அல்லது நல்லுபதேசத்தைக் கேட்கக்கூடிய காதுகள் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

நாடுங்கள்

மனுஜோதி ஆசிரமத்தை நாடுவோம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கொள்கையை பாடுவோம்! ஒரு சாதி குலமென்று சொல்லுவோம் நம்பிக்கை மனதில் வைத்துக்கொள்வோம்! மானுடத்தை வாழவைக்கும் ஆசிரமம் மனதினில் இல்லையொரு சிரமம்! ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமத்தை சொல்லுவோம்! வாழ்விலுள்ள துன்பங்களை வெல்லுவோம்! வாழ்வுக்கு அவர்தானே ஆதாரம் வாழ்க்கையிலே இல்லையொரு சேதாரம்! நம்பிக்கைக் கொண்டவரை வணங்குவோம் அவர் காட்டும் பாதையிலே இணைவோம்!         – கே.வி. ஜெனார்த்தனன், ஏனாத்தூர் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

சர்வமும் நீரே லஹரி கிருஷ்ணா!

கேள்வியும் நீரே! பதிலும் நீரே! அறிவும் நீரே! ஆற்றலும் நீரே! அழிவும் நீரே! ஆக்கமும் நீரே! சிந்தையும் நீரே! செயலும் நீரே! துன்பமும் நீரே! இன்பமும் நீரே! கஷ்டமும் நீரே! இஷ்டமும் நீரே! வாழ்வும் நீரே! தாழ்வும் நீரே! சொந்தமும் நீரே! பந்தமும் நீரே! துவக்கமும் நீரே! முடிவும் நீரே! என்னிலும் நீரே! எதிலும் நீரே! வண்ணங்களும் நீரே! என் எண்ணங்களும் நீரே! சகலமும் நீரே! சர்வமும் நீரே! எல்லாம் நீரே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா!                 – சீனிவாசன், கிருஷ்ணகிரி ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்