தமிழ் | తెలుగు

» Archive

ஆசிரியர் குறிப்பு -2

ஜனவரி – 2017 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! 2016-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவானது மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது. செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திருச்சி, சேலம், வேலூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக சென்றனர். அக்டோபர் மாத துவக்கத்தில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மக்களுக்கு அறிவிக்க ஆந்திரா மாநிலத்திற்கு நாங்கள் குழுவாக சென்றிருந்தோம். விசாகப்பட்டினத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள பாடேரு என்ற மலைக் கிராமத்திலுள்ள மலைவாழ் மக்களிடையே “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை பரப்புவதற்காக சர்வ சமய மாநாடு மற்றும் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் நடந்தது. அம்மாத இறுதியில் நான் மலேசியாவிற்கு சென்று வந்தேன். தற்போது இந்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

சங்கைமிக்க குர்-ஆன் – 2

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-21 வச.66-71: “கொஞ்சமும் உங்களுக்கு நன்மை செய்யாத, உங்களுக்குத் தீமையும் செய்யாத, அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று இப்ராஹீமாகிய அவர் கேட்டார். “சீச்சீ”  உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைகளுக்கும் நாசம்தான் நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?” என்று கூறினார். அதற்கவர்கள், “நீங்கள் ஏதும் செய்பவர்களாக இருந்தால், இவரை நெருப்பிலிட்டு எரியுங்கள்; அதன்மூலம் உங்கள் வணக்கத்திற்குரிய தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று தங்களைச் சார்ந்தோரிடம் கூறினார்கள். அவர்கள், இப்ராஹீமை நெருப்புக்கிடங்கில் எறியவே, “நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக்கூடியதாகவும் ஆகிவிடு! என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள், அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள்; நாம் அவர்களையே நஷ்டமடைந்தவர்களாகச் செய்துவிட்டோம். நாம் அவரையும், லூத்தையும் அகிலத்தார்க்கு நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸின்) பால் வரச்செய்து ஈடேற்றம் பெறச் செய்தோம் ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது   ஸ்ரீமத் பகவத்கீதை எட்டாம் உபதேசம் ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் உலக மக்கள் அல்லது மனுபுத்திரர்கள் தங்களுடைய நற்கிரியைகளினிமித்தம் புதிய வானம் புதிய பூமியிலே உயிர்ப்பிக்கப்பட்டு, நியாயந்தீர்க்கப்பட்டு பிரவேசிக்கிறார்கள். அர்ச்சுனா! எல்லாக்காலங்களிலும் என்னை மட்டுமே நினைத்து போர் புரிவாயாக. மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்து என்னிடம் நிலைநிறுத்தி சந்தேகமின்றி என்னையே வந்தடைவாய். ஓ! அர்ச்சுனா! அழிவற்ற யோகம் அல்லது ஆதிபலியின்மேல் உன்னுடைய மனதை ஒருமுகப்படுத்தி, என்றும் என்மேல் தியானம் செய்து, உலகத்தின் காரியங்கள் அல்லது ஐம்புலன்களைக் குறித்து நினைக்காமல், அவருடைய சேவையை செய்வதில் மட்டுமே நிலைபெற்று தரித்திருக்கிறவன் பிரகாசிக்கும் தெய்வீக புருஷரை அடைகிறான். பரமாத்மா எல்லாம் அறிந்தவர், காலவரையற்றவர் அல்லது பழமையானவர். அவருக்கு துவக்கம் என்பது கிடையாது. எல்லா உலகங்களுக்கும் நாயகனும், அதை கட்டுப்படுத்துகிறவரும் அவரே. அவர் அளவிலும் சிறியவர், பெரியவற்றில் பெரியவர். அவர் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவர். மனித சிந்தையினால் அவரைப் பற்றிக்கொள்ள (அறிந்து கொள்ள) முடியாது. இந்த உலகத்தை பிரகாசிக்கச்செய்யும் ஒளி அவரே. அவர் இருளுக்கும் அப்பாற்பட்டவர். ஜீவன் முக்தி அல்லது மகிமையை அடைவதற்கு முன்பாக, ஒருவன் பரமபுருஷரின் ஆதிபலியின்மேல் தியானம் செய்து முழு பக்தியுடன் அவரை எப்பொழுதும் நினைக்கின்றானோ அவன் … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

மலைவாழ் மக்களிடையே ஒன்றே குலம் ஒருவனே தேவன் பிரச்சாரம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாடேரு என்ற மலைக்கிராமம். கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் இருக்கும் இம்மலைப்பகுதிதான் மலைவாழ் மக்களுக்கு தலைநகரமாகும். இம்மலைக் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்களிடையே “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை பரப்புவதற்காக மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக சர்வ சமய மாநாடு மற்றும் தேசீய ஒருமைப்பாடு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர் D. பால் உப்பாஸ் N. லாறி மற்றும் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள், முக்கிய பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். மலைவாழ் மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களிடம் இறை கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும், கடவுள் ஒருவரே என்ற ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உபதேசங்கள் அடங்கிய புத்தகங்களை இலவசமாக கொடுப்பதற்கும் இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் விழாவில் முக்கிய பிரமுகர்கள், பேச்சாளர்கள், அறிஞர் பெருமக்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் துதிபாடல்களின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. மழைவாழ் மக்கள் நலத்துறை முன்னாள் அமைச்சர் திருமதி. மணிக்குமாரி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இவருடன் சிறப்பு விருந்தினர்களாக அரசு மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் திரு. கிடாரி சர்வேஸ்வரராவ், … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

கீதாஞ்சலி -10

“என்னை மறைத்துக் கொண்டிருப்பது, புழுதியும், இறப்புமே; இருந்தும், ஆசையோடு அதை அணைத்துக் கொள்கிறேன்.” தூக்கம் என்பது இறப்பிற்கு சமானம் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறியுள்ளார். அதே கருத்தை இங்கே கவிஞர் கூறுகிறார். தூக்கத்தில் இறைவன் வருவதை உணர்ந்த பின்னரும் எழுந்திருக்காமல் தூக்கத்தை அணைத்துக் கொள்கிறேன் என்கிறார். இறைவனை காணாதபடி தன்னை மறைத்துக் கொண்டிருப்பது புழுதியும் இறப்பும் என்கின்ற தூக்கமாகும். தூங்கும்போது யாராவது எழுப்பினால், தூக்கம் எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று நாம் எழும்புகிறதில்லை. நன்றாக தூங்குகின்றோம். காலையில் எழுந்து இரவு நேரம் நான் தூங்கும்போது என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி என்று நாம் இறைவனுக்கு கூறுகிறதில்லை. உண்ணுவதற்கும், உறங்குவதற்கும், பணத்திற்கும், புகழுக்கும் பின்னால் ஓடுவதற்கே நாம் வாழுகிறோம். இதற்காகவா நாம் சிருஷ்டிக்கப்பட்டோம்? சிந்தியுங்கள். “என் கடன் சுமைகள் அதிகம்; என் தோல்விகள் அநேகம். என் அவமானம் கனமானது, இரகசியமானது. இருந்தும், உன்னிடம் என் நலத்தை நாடும்பொழுது, என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வேண்டிய வரத்தைக் கொடுத்துவிடப் போகின்றீர்களே என்று நான் பயத்தில் நடுங்குகிறேன்”. நாம் கேட்கின்ற வரம் கிடைக்க வேண்டுமென்றுதான் நாம் ஆசைப்படுவோம். ஆனால் இங்கே கவிஞர் நான் கேட்கும் வரத்தை இறைவன் கொடுத்துவிடுவாரோ என்று பயப்படுகிறேன் என்கிறார். அப்படி என்றால் அவர் என்ன வரத்தை கேட்டிருப்பார்? … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சாந்தியளிக்கும் ஆன்மீகம் – 3

இந்துக்கள் எல்லாருமே விக்கிரக ஆராதனைக்காரர்கள், நாங்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் அல்ல என்று இன்றைக்கு அநேகர் வெறுமனே கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இந்து மதத்தை சரியாக அறிந்திருக்கவில்லை. இந்துக்கள் தத்துவத்தை வணங்குகிறார்கள். இன்றைக்கு நாம் அநேக போலியான மதங்களை காண்கிறோம். மேலும் அவர்கள் பணம் சேகரித்து நன்கு வளமுடன் வாழ எத்தனிக்கிறார்கள். ஆனால் நாங்கள் பணத்துக்காக வரவில்லை. உங்களுக்கு சத்தியத்தை கூற விரும்புகிறோம். நீங்கள் சத்தியத்தை நம்பினால், வருங்காலத்தில் இந்தியா ஒரு பலமிக்க நாடாக இருக்கும். இந்தியாவை ஒரு பலம்மிக்க தேசமாக ஆக்க கடவுள் என்னை எழுப்பியுள்ளார் என்று நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். இன்றைக்கு எல்லா ஜனங்களும் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய மாநிலமே தலைசிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடவுள் அதைச் செய்ய வில்லை. ஒவ்வொரு தேசமும் மற்றொரு தேசத்தின்மீது சார்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவு பொருட்களை இறைவன் வைத்திருக்கிறார். அந்த தேசம் சிறந்தது, இந்த தேசம் சிறந்தது என்று நாம் கூற முடியாது. ஆனால் நமக்கு ஒரு கடமை உண்டு. நாம் இறைவனுக்கென்று ஒரு ஐக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும். மேலும் கடவுள் திட்டமாக அதை நிறைவேற்றுவார். உங்களைப் படைத்த கடவுளின்கீழ் ஐக்கிய இந்தியா உருவாகும் என்று நீங்கள் நம்பினால், உங்களுடைய … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன?            சென்ற இதழின் தொடர்ச்சி….. திருவருட்பா 6-ம் திருமுறை. 78 பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் பாடல் எண் 1064:       “……பிறர் பெயர் கேட்டிடிலோ      நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள்      நாடறிந்தது இது எல்லாம் நங்கை இவள் அளவில்      நீர் ஆசைப்பட்டதுண்டேல் வாய் மலர வேண்டும்      நித்திய மாமணிமன்றில் நிகழ் பெரிய துரையே விளக்கவுரை: “….பிறர் பெயர் கேட்டிடிலோ……என்ன நலிகின்றாள்” “இறைவனது பெயரைத்தவிர, வேறு பெயர்களை கோபிகை செவிமெடுக்க நேர்ந்தால், இரும்பினாலான அம்பு ஒன்று செவிக்குள் புகுந்து குடைந்தால் உண்டாகும் துன்பத்திற்கொப்பான துன்பத்தை அவள் அடைகின்றாள்”, என்பதுதான் இதன் பொருள். பொதுவாக, சத்திய மார்க்கத்தில் தீவிரமாக இருப்பவர்கள், இந்த உலக ஆசைகளின் பின்னால் விரைந்து சென்று கொண்டிருப்பவர்களுடன் இணைந்து செல்ல முடியாது என்பது ஓர் வெளிப்படையான உண்மை. கடவுளின் பெயரைக் குறித்து தெளிவான வெளிப்படுத்தலை, அவரது அருளால் பெற்றுக்கொண்ட கோபிகை அந்தப் பெயரின்மீதில் தீவிர பக்தி கொண்டு, பல அற்புதங்களைத் தனது வாழ்க்கையில் கண்டிருப்பது மட்டுமல்ல, உண்மையான, நிலையான உள்ளச் சாந்தியையும் பெற்றிருக்கிறாள். இறையன்பை தனது வாழ்க்கையில் அனுபவித்துப் பார்த்து அதைப்பற்றி பிறருக்கும் சொல்லி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

திறவோர் காட்சியில்…

பழம்பெரும் நூல்கள் எல்லாம் பகுத்தறிவு தூண்டியே! அவை நமக்கு சொல்லாத அறிவுரை இல்லை. கேளும் செவிக்கே அது சேரும். கற்பினும் தெரியாதது பட்டதும் புரியும் அரும்பழம் நூல்கள் எல்லாம் உரைத்தது நன்றே அன்றி வேறில்லை. உணர்ந்ததால் ஏதும் கேடில்லை. புறபொருள் விளக்கும் நானூற்றில் திறவோர் காட்சியில் கண்டதாக: நீர்வழிப்படும் புணைபோ லாருயிர் முறைவழிப்ப படூஉ மென்பது….. என பூங்குன்றனார் மொழிந்தார். மானிடர்களின் அக உள்ளம்தனை ஆராய்ந்து பார்த்தோனைப்போல தெளிவாக்கி உள்ளார் புலவர். இவ்வரி சொல்லும் மெய்மை கற்றோர் அறிவர். ஆற்று பெருவெள்ளம் வீறு கொண்டு பாய்ந்து வருகையில், அவ்வெள்ள நீர் போகிற திசையிலேயே அந்நீரில் மிதக்கும் தெப்பம் பயணிக்கும். இங்கு ஆற்று பெருவெள்ளமாக ஊழ்வினையையும், தெப்பத்திற்கு உலக மக்களையும் ஒப்புமை காட்டியுள்ளார். அந்த ஊழ்வினையின் வழியில்தான் உலக மக்கள் பயணிப்பார் என்பதை உறுதியிட்டிருக்கிறார். இந்த உலக மக்கள் உலகம் ஓடுகிற பாதையிலேயே தன்னையும் அமைத்துக் கொள்வானேயொழிய, அதன் நன்மை தீமையை ஆராய்ந்து செயல்படுவாரில்லை என்ற உண்மை இதில் மையமாக்கப்பட்டது. இங்கு திரைப்பட பாடல் வரி ஒன்று நினைவில் எழுகிறது… “ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே! ஆனால்  ஆண்டவன் எண்ணம்போல் இந்த பூமி அமையலையே!” உலகத்தையும், மக்களையும் கடவுள் படைத்தாரேயன்றி அது இப்போது கடவுள் என்ற எல்லையை தாண்டி செல்ல முயல்கிறது. வெற்றி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்