தமிழ் | తెలుగు

» Archive

ஆகஸ்ட் – 2016

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் ஜூலை 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 47-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகையானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, மலேசியா, பர்மா, போன்ற வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியை பெற்றுச் சென்றனர். ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கல்கி ஜெயந்தி விழா இனிதே ஆரம்பமானது. மனிதனின் பிறவிப்பயன் இறைவனுடன் ஒன்றர கலப்பதாகும். ஒவ்வொரு யுகத்திலும் மனிதன் இதை மறக்கும் தருவாயில் இறைவன் அவதரித்து பிறவிப் பயனை நினைவுபடுத்துகிறார். இந்த கலியுகத்தில் 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதியன்று கல்கி அவதாரமாக காட்சிகொடுத்து நம்முடன் ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக வந்தார். இறைவனுக்கும், பக்தர்களுக்குமிடையே நிலவும் இத்தகைய அன்பைப் பற்றி நாம் ஆண்டாளின் சரித்திரத்தில் கேட்டிருக்கிறோம். ஆண்டாள் இறைவனை தனது மணவாளனாக பாவித்து, இறைவனுக்கு மலர் மாலை சூட்டினாள். கோபிகைகள் மற்றும் மீராபாயும் கிருஷ்ணரை தங்களது மணவாளனாக பாவித்து வணங்கினார்கள். இந்த நிலை ‘மதுர்ய ரசா’ என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் இறைவனை மணந்து அவன் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

அல்லாஹ் நேரான பாதையில் வழிநடத்துகிறார்

சங்கைமிக்க குர்–ஆன் அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-21 வச.60-63: அதற்கவர்களில் சிலர் “ஒரு இளைஞர் இவைகளைப் பற்றி குறை கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் செவியுற்றிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் கூறப்படுகிறது”என்று கூறினார்கள். அதற்கவர்கள், “அவ்வாறாயின், அவரை மக்களின் கண்களுக்கெதிரில் கொண்டு வாருங்கள்; அவரை யாவரும் பார்த்து அவர்கள் சாட்சியம் கூறலாம்”என்று கூறினார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவரிடம், “இப்றாஹீமே! எங்களுடைய வணக்கத்திற்குரிய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானா?”என்று கேட்டனர். அதற்கவர், “அவ்வாறல்ல! அதை அவர்களில் பெரியதுதான் செய்தது; உடைக்கப்பட்ட அவர்கள், பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்!”என்று கூறினார். வச.64-65: அவர்கள் நாணமுற்று தங்கள் பக்கமே திரும்பி ஒருவர் மற்றவரிடம், “நிச்சயமாக நீங்கள்தான் இவற்றை வணங்கி அக்கிரமம் செய்து விட்டீர்கள் என்று கூறிக்கொண்டார்கள். பின்னர், வெட்கத்தால் அவர்கள் தலை குனியச் செய்யப்பட்டார்கள்; சற்று நேரத்திற்குப் பிறகு இப்றாஹீமிடம், “இவைகள் பேசமாட்டா என்பதை நிச்சயமாக நீர் அறிந்திருக்கிறீர்”என்று கூறினார்கள். ✡✡✡✡✡✡✡   … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

ஆதிவேள்வியின் நற்செய்தி

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி ……வெவ்வேறுதீர்க்கதரிசிகளால்எழுதப்பட்டபரிசுத்தவேதங்களிலிருந்தும் மற்றும் இந்தகலியுகத்திலேஸ்ரீமந்நாராயணர்ஸ்ரீலஹரிகிருஷ்ணாஅருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது ஸ்ரீமத் பகவத்கீதை எட்டாம் உபதேசம் ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் சிருஷ்டிப்பு மற்றும் ஆதிபலி செலுத்துதல் அவருடைய கிரியை என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் எல்லா உலகப் பொருட்களும் அழிவுள்ளது அல்லது ஆதிபூதம் என்று அழைக்கப்படுகிறது. ஒளியான பரமபுருஷர்தான், ஆதி தெய்வம். அர்ச்சுனா! இந்த மனித சரீரத்திலே அவரே ஆதி யக்ஞம் என்றழைக்கப்படுகிறார். அவரையே சிந்தித்துக்கொண்டு அவரை கிரஹித்து உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டு அவன் செல்லுகிறபொழுது மகிமையின் சரீரத்தைப் பெறுகிறான். இதில் சந்தேகமேயில்லை. அர்ச்சுனா!மரணத்தருவாயில் யாதொருவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டுச்செல்லுகின்றானோ, அவனவனுடைய தகுதிக்கேற்ப எது கிடைக்க வேண்டுமோ அதையே பெறுகிறான். தேவலோக மக்கள் பரதீசிற்குச் சென்று தங்களுடைய அழிவற்ற ஜல சரீரத்தை (நவானி தேஹீ) – ஜீவன் முக்தியைப் பெறுகிறார்கள். பூமிக்குரிய மக்கள் தங்களுடைய பூமிக்குரிய சரீரத்தை உயிர்த்தெழுதலின்பொழுது (புனர்தானம்) தர்ம யுகத்தில் திரும்பவும் பெற்றுக்கொள்கிறார்கள். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

தேவேந்திர பூபதி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

கல்கி ஜெயந்தி விழாவில் “வணிக வரித்துறை இணை ஆணையர்                 அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். “நல்லோரை காண்பதும் நன்றே, நலமிக்க நல்லோர் சொல் கேட்பதும் நன்றே, அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே”என்ற ஒளவையாரின் பாட்டைப்போல நல்லோர்கள் அல்லது புனித ஆத்மாக்கள் இருக்கக்கூடிய இந்த இடத்திலே வந்து சேர்ந்தபோது எனக்கு மகாபாரதத்திலுள்ள ஒரு சிறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. யுதிஸ்டிரன் என்ற தருமர், ராஜஸூய யாகம் நடத்தினார். அவருக்கு அதில் ஒரு பெரிய பெருமிதம் ஏற்பட்டது. யாரும் செய்ய முடியாத யாகத்தை தான் செய்து முடித்த இறுமாப்போடு இருந்தபோது, அங்கே ஒரு கீரிப்பிள்ளை வேகமாக வந்தது. அதினுடைய உடலில் பாதி தங்கமாக இருந்தது. மீதியுள்ள உடல் இயல்பாக இருந்தது. அந்த கீரிப்பிள்ளை யாகம் நடந்த யாக சாலையில் வந்து கீழே உருண்டது. பின் சோகமாக எழும்பியது. அவர் கீரிப்பிள்ளையிடம் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டார். ஏன் உன்னுடைய உடல் இவ்வாறு இருக்கிறது என்று தருமர் கேட்டதற்கு, கீரிப்பிள்ளை இவ்வாறு கூறியது: “பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்தண வேதியர் குடும்பம் இருந்தது. அவர்கள் வருகிற யாருக்காவது தர்மம் செய்துவிட்டு, அதன்பின் மிஞ்சிய உணவை உண்டு வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்திலே பெரிய பஞ்சம் வந்தது. … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

கீதாஞ்சலி – 9

ஓ தோழனே! நீ ஒருவன்தான் என்னுடைய ஒரே நண்பன். என் உயிரினும் இனியவனே! கனவைப்போல் என்னைப் பாராமுகமாக கடந்து சென்று விடாதே! அவர் வந்து என் அருகில் உட்கார்ந்தார், நான் எழுந்திருக்கவில்லை. நான் மோசம் போனேன்! என்ன பாழும் தூக்கம்! ஐயோ! என் இரவுகள் எல்லாம் ஏன் வீணாயின? ஆ! அவர் வருகையை என் தூக்கத்தில் உணர்ந்தபோதிலும் நான் ஏன் அவரைப் பார்க்க முடியாமல் போகிறது? இறைவனிடம் கனவைப்போல் என்னைப் பார்த்த பின்னரும் கடந்து சென்று விடாதேயும் என்று கேட்ட கவிஞரிடம் இறைவன் அருகில் சென்று உட்கார்ந்தபோது கவிஞரால் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. ஆகையால் பாழாய்ப்போன தூக்கத்தினால் என்னால் அவரை பார்க்க முடியாமல் போனதே என்கிறார். இறைவன் அநேக சமயங்களில் நம் அருகே வந்து உட்காருகிறார். ஆனால் நாம் தூங்குகின்றோம். நாம் ஏன் அவ்வாறு தூங்குகிறோம்? தூக்கத்தை உதறி விட்டு நாம் எழுந்திருக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு செய்கிறதில்லை. அன்பில் பற்றாக்குறை உள்ளது. அதினால் நாம் அவ்வாறு தூங்குகிறோம். எழும்பி அவரை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்குகிறதில்லை என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கம் கூறுகிறார். என்னுடைய இரவுகள் எல்லாம் அவரை காணாமல் வீணாகிவிட்டன என்று கவிஞர் அங்கலாய்க்கிறார். அவர் வருகையை என் தூக்கத்தில் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சாந்தியளிக்கும் ஆன்மீகம்

மத சம்பந்தமான புஸ்தகத்திற்கு மாறாக, ஒருவர் தனது கருத்தை கூறினால் அது ஒரு மதமல்ல. பகவத்கீதையை எடுத்துக்கொள்வோம். நீங்கள் பகவத்கீதையை படித்தீர்கள் என்றால் அதில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதை அதிகாரம் 7:3-ல் “ஆயிரம் பேர் யோகா செய்கிறார்கள், அதில் மிகவும் அபூர்வமாக ஒருவனே சாந்தி அடைகிறான்”என்று கூறுகிறார். இன்றைக்கு, எல்லோரும் யோகாவைப் பற்றி பேசுகிறார்கள். நான்கூட 6 வருடங்களாக ஒரு யோகியாக இருந்தேன். ஆனால் சாந்தியை ஒருபோதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அநேகர் யோகா பயிற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆயிரம் பேரில் ஒருவனே சாந்தியைப் பெற்றுக்கொள்கிறான் என்பது சரிதான். மீதமுள்ள 999 பேர்களின் விதி என்ன? நீங்கள் மத சம்பந்தமான நூல்களைப் படித்து அந்த நூல்கள் கூறியபடி நடக்க வேண்டும். இறைவன் ஒவ்வொரு மத சம்பந்தமான புஸ்தகங்கள் மூலமாக கிரியை செய்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இறைவன் அவர்களுடைய புஸ்தகங்கள் மூலமாக கிரியை நடப்பிக்கிறார். ஒருவன் விவிலியம் கூறியபடி செய்யவில்லையென்றால், அவனிடம் பரிசுத்த ஆவி இல்லை. விவிலியம் கூறியபடி பிரசங்கிப்பவனே ஒரு கிறிஸ்தவனாவான். உலகம் உங்களை புகழ்ந்தால், நீங்கள் ஒரு பிசாசாவீர்கள். பல்கலைக்கழகங்களை நீங்கள் கட்டலாம், பெரிய பெரிய கோபுரங்களை நீங்கள் கட்டலாம், ஆனால் இவையெல்லாம் மக்களை வஞ்சிப்பதற்காகவே செய்யப்படுகிறது. ஆகவே பிரார்த்தனையானது இருதயத்திலிருந்தே … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

தக்ஷிணாமூர்த்தி

தெற்கு நோக்கி ஆலமரத்தின்கீழ் வீற்றிருக்கிறார் தக்ஷிணாமூர்த்தி. வாஸ்து சாஸ்திரத்தின்படி அத்திசை மரணத்தின் திசையாகும். ஆம், அது எதினுடைய மரணமாகும்? ‘நான்’என்ற அகங்காரம் மரணித்தால்தான், புது பிறவியை ஒருவன் அடைய முடியும் என்பதை காண்பிப்பதாக உள்ளது. தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் சிவன் மரணத்தையும், காலத்தையும் வென்றவராவார். சர்ப்பங்களை தம்முடைய கழுத்தில் மாலையாகவும், தம் கரத்திலும் சிவன் அணிந்திருக்கிறார். சர்ப்பம் என்பது ஞானம் மற்றும் நித்தியத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. அவர் முடிவில்லாதவர் மற்றும் ஞானத்தின் மூலமானவர் என்பதைக் குறிக்கிறது. சிவபெருமானை லிங்க வடிவத்திலும் வழிபடுகிறார்கள். அவர் ஏன் லிங்க வடிவத்தில் பூஜிக்கப்படுகிறார்? சிவன் என்றால் ஜீவன் அல்லது உயிர் என்று பொருளாகும். உயிரை அல்லது ஜீவனை எவ்வாறு விளக்கி கூற முடியும்? சிறு பிள்ளைகளுக்கு சூரியன் எப்படியிருக்கும் என்பதை விளக்கி கூற, ஒரு வட்டத்தை வரைந்து சிறு கோடுகளை வரைவோம். அது சூரியனா? இல்லை. அதைப்போலவே சிவபெருமான் எல்லா ஜீவராசிகளுக்கும் ஜீவனாக, உயிராக திகழ்கிறார் என்பதை காண்பிக்க மிக சிறந்த உதாரணம் லிங்கமாகும். சிவபெருமான்தான் இந்திய கர்நாடக இசையில் இரகசிய ராகங்களை மஹரிஷி நாரதருக்கு வெளிப்படுத்தி கூறினார். சிவபெருமான்தான் யோகாவின் கர்த்தாவாக விளங்குகிறார். அது சரீரம் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த உதவி செய்கின்றது. அவர் அணிந்திருக்கும் வஸ்திரம் இயற்கையானது. அவருக்கு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 7

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் – திருவருட்பா 6-ம் திருமுறை பாடல் எண் 1064: ……உமது பேராசைப் பேய் பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும் பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ நாராசம் செவிபுகுந்தால் என்ன நலிகின்றாள் விளக்க உரை: “உமது பேராசைப் பேய் பிடித்தாள்” கோபிகையின் தோழி, இறைவனிடம் கோபிகை அளவுமிகுந்த ஆசை வைத்துள்ளதைக் கண்டு இறைவனிடம் இந்த விதமாக கூறுகின்றாள். “இறைவனை கிரஹித்து உணர்ந்த பக்தர்கள், இறைவன் மீதுதான் தங்களின் ஆசையை வைக்க வேண்டும். உலகத்தின்மீதுள்ள ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை இங்கு வள்ளலார் வலியுறுத்துகிறார். அந்தவிதமாக இறைவனிடம் பிரேமை பக்தியின் உச்சநிலை அடைந்தவர்களைப் பார்த்து, இந்த உலகத்தவர்கள் பேய் பிடித்தவன், பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள். அதை இறைவனை கிரஹித்து உணர்ந்த ஒரு பக்தன் பொருட்படுத்துவதில்லை. ‘உலகர்க்கு உய்வகை கூறல்’என்ற தலைப்பின்கீழ் உள்ள பத்து பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதி வரியிலும், “எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே”என்று வள்ளலார் உலகத்தவரை சாடுவதை நாம் காணலாம். ஆகவே உலக ஆசைகளின் பின்னால் தீவிரமாக சென்று கொண்டிருப்பவர்களும், இறைவன்மீது தீவிரமான பக்தி கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் இணைந்து செல்ல முடியாது என்பது தெளிவான உண்மையாகும். “கள்ளுண்டு பிதற்றும்….. பிச்சி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்