தமிழ் | తెలుగు

» Archive

ஆசிரியர் உரை

மே – 2016 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! மனுஜோதியை படித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம்  மே மாதம் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே மாதம் 15-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர் அனைவரும் மனுஜோதி ஆசிரமத்தின் சட்டதிட்டங்களையும், வேதங்களையும், ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும், கடவுள் ஒருவரே என்ற சத்தியத்தையும் கற்றுச் சென்றனர். மேலும் பல மாணவ மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். நான் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை அறிவிக்க சட்டீஸ்கரிலுள்ள பிலாய், ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா, கட்டுபிடிபாலேம், விணுகொண்டா, ராவுலபாலேம், விசாகப்பட்டிணம், அசராடா போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். என்னுடைய சகோதரன் D. லியோ பால் மற்றும் சில பக்தர்களுடன் மலேசியா, சீனா … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது எட்டாம் உபதேசம் ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் அர்ச்சுனன் அவதார புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து கேட்ட கேள்வி என்னவெனில்:  அழிவில்லாத பிரம்மம் அல்லது சிருஷ்டிகர்த்தா அல்லது பரமபுருஷர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? ஆதியாத்மா அல்லது கர்த்தருடைய ஆவி அல்லது பரமாத்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? கர்மம் அல்லது கிரியை என்றால் என்ன? ஆதிபூம் அல்லது திடப்பொருள் என்றால் என்ன? ஆதி தெய்வம் என்றால் என்ன? ஆதி யஜ்ஞம் என்றால் என்ன? அவர் சரீரத்தில் எங்ஙனம் வசிக்கிறார்? அவரை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது: அந்த மகத்துவமான அழிவற்ற உருவம் அல்லது சுயம்புவாகிய புருஷனே பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர். அவருக்குள் வாசம் பண்ணுகிற அந்த காணக்கூடாத பரமாத்மாவே ஆதியாத்மா என்று அழைக்கப்படுகிறார். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

ஸூரா – 21 வச. 51: நிச்சயமாக, இப்றாஹீமுக்கு முன்னரே சிறு பிராயத்திலிருந்தே அவருடைய நல்வழியை நாம் கொடுத்திருந்தோம்; அவரைப்பற்றி நாம் நன்கறிந்தோராகவும் இருந்தோம். அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “இச்சிலைகளென்ன? அவை எத்தகையவையென்றால் நீங்கள் அவற்றிற்காக வழிபடுவதில் நிலைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் இவைகளை வணங்கக்கூடியவர்களாக இருந்ததை நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள். வச. 54-59: அதற்கவர், “திட்டமாக நீங்களும், உங்கள் மூதாதையரும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அதற்கவர்கள், “நீர் எங்களிடம் ஏதும் உண்மையான செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது விளையாடுபவர்களில் நீர் இருக்கின்றீரா?” என்று கேட்டனர். அதற்கவர், அவ்வாறு அல்ல! “உங்களுடைய இரட்சகன் அவன்தான் வானங்களுக்கும், பூமிக்கும்  இரட்சகனாவான்; அவனே அவற்றைப் படைத்தான்; இதற்கு சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்” என்று இப்றாஹீம் கூறினார். “இன்னும், அல்லாஹ்மீது சத்தியமாக! நீங்கள் இங்கிருந்து புறங்காட்டியவர்களாகத் திரும்பிச் சென்றபின், உங்கள் சிலைகளுக்குத் திண்ணமாக நான் சதி செய்வேன்” என்றும் கூறினார். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அவற்றில் பெரியதைத் தவிர மற்ற யாவற்றையும் துண்டு துண்டாக ஆக்கி உடைத்துத் தள்ளிவிட்டார்; பெரிய சிலையாகிய அதன்பால் விளக்கம் கேட்டு அவர்கள் திரும்புவதற்காக அதனை மட்டும் உடைக்கவில்லை. திரும்ப வந்து, இவற்றைக் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

ஆன்மீக புலன்கள்

கேட்பது, உணர்வது, முகர்வது, ருசி பார்ப்பது மற்றும் காண்பது என்று நம்முடைய சரீரத்தில் ஐம்புலன்களும் இருக்கின்றன. இந்த ஐம்புலன்கள் இல்லையென்றால் நாம் மிகவும் பரிதாபமானவர்களாக இருப்போம். ஐம்புலன்களுடைய சரீரத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம் என்பதை ஐம்புலன்கள் குறிக்கிறது. ஒரு இயந்திரத்தைப்போல பரிபூரணமான கேட்கும் திறமையானது இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்கள் பரிபூரணமாக இருக்கிறது. அதில் எந்த தவறும் இல்லை. மிகச் சரியாக அறிந்துகொள்ள முகரும் புலன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ருசியை அறிந்துகொள்ள அவர் ருசி பார்க்கும் புலனை வைத்திருக்கிறார். இறைவன் இந்த சரீரத்தை உண்டாக்கினார். இந்த உலகத்தில் இருப்பதற்கும், அதை அனுபவிப்பதற்கும் ஐம்புலன்கள் தேவைப்படுகிறது. அதேவிதமாக பரலோகத்தை அனுபவிப்பதற்குகூட ஐம்புலன்கள் தேவையாக இருக்கிறது. இறைவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்று விவிலியம் கூறுகிறது. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்தால் இறைவனுடைய அன்பு உங்களில் வாசமாயிருக்கிறது. இறைவன் ஜீவிக்கிறார் என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கிறோம்? அன்புதான் அதற்கு அடையாளமாக இருக்கிறது. அன்பின் மூலமாக இறைவன் இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். நம்மால் சில மக்களை நேசிக்க முடியாதபோது, தெய்வீக அன்பானது அப்படிப்பட்ட மக்களை நேசிக்கும்படி செய்து, ஜீவிக்கிற இறைவன் இருக்கிறார் மற்றும் அவரை நம்மால் காண முடியும் என்பதைக் காண்பிக்கிறது. தெய்வீக புலன்கள் என்றால் என்ன? முதலாவது கேட்கும் புலனாகும். … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கிழக்கே தோன்றிய மின்னல்

பாலாசீர்  லாறி  முத்துக்கிருஷ்ணாவின்  வாழ்க்கை  சரிதை நீங்கள் இந்த கடைசி கால செய்திகளை எடுத்துக்கொள்ளாவிட்டால் உங்களால் மரணத்தை வெல்ல முடியாது என்று கூறினார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இந்த செய்திகளால் கிறிஸ்தவ தேவாலயங்களிலிருந்து மனுஷகுமாரனின் பின்னால் வந்த பக்தர்களில் 90 சதவீதத்திற்கு மேல் அவரை விட்டு பிரிந்து சென்றனர். பணம், திருமணம் மற்றும் கல்லறை தோட்டத்திற்காக அவர்கள் மீண்டும் அடைக்கலம் தேடி தங்கள் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு திரும்பிச் சென்றனர். வேதாகமம், குர்-ஆன், பகவத்கீதை மற்றும் பல வேதங்களிலுள்ள செய்திகளை திரட்டி தீர்க்கதரிசனங்கள் மற்றும் எழுதப்படாத ஏழு இடிமுழக்கச் செய்திகள் என்ற புத்தகங்களை பிரசுரம் செய்து பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா உலகம் முழுவதும் விநியோகித்தார். 1969-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டு காலம் இந்த பணியில் அவர் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இயேசுவின் காலத்தில் அவர் ‘பெயெல்செபூல்’ என்னும் பிசாசின் தலைவன் என்று அழைக்கப்பட்டதைப்போல மனுஷகுமாரன் லாறி முத்துக்கிருஷ்ணாவும் மேற்கத்திய உலகத்தினரால் அந்திக்கிறிஸ்து என்றும், பிசாசின் புதல்வன் என்றும் அழைக்கப்பட்டார். இயேசுவிற்காக அவருடைய சீடர்கள் பன்னிரண்டு பேர் தங்கள் உயிரையும் தர தயாராக இருந்தனர். அதைப்போலவே இடிமுழக்கச் செய்திகளை பின்பற்றிய பக்தர்கள் பலர் பரிசுத்த பவுல் சொன்னதைப்போல மரணமில்லா பெருவாழ்வு அடைய, கடவுளுடைய … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

கீதாஞ்சலி-8

            அவன் கைகளில் கடைசியாக அர்ப்பணிப்பதற்கு,             அவன் அருளுக்காகக் காத்திருக்கிறேன்             அவர்கள் சட்டத்தின் துணைகொண்டு வருகிறார்கள்.             ஒழுங்கு முறைகளைக்கொண்டு விரைவில்             என்னை கட்ட வருகிறார்கள். ஆனால் எப்பொழுதும்             நான் நழுவி விடுகிறேன். ஏனெனில்             உன்னிடம் என்னை அர்ப்பணிப்பதற்காக             உன் அன்பிற்கு நான் காத்திருக்கிறேன்”. எல்லா மத சம்பந்தமான ஸ்தாபனங்களும், சங்கங்களும் தங்களுடைய மதத்தில் சேரும்படி கேட்டு கவிஞரிடம் வருகிறார்கள். அதைத்தான் அவர் “ஒழுங்கு முறைகளைக் கொண்டு விரைவில் என்னை கட்ட வருகிறார்கள்” என்று கூறுகிறார். ஸ்தாபனங்களிலும், சங்கங்களிலும் சேரும்போது அவர்களுக்கென்று தனி சட்டங்கள், ஒழுங்குமுறைகள் இருக்கின்றது. அவற்றால் தன்னை வரைமுறைப்படுத்த விரும்புகிறார்கள் என்று கவிஞர் கூறுகிறார். இப்படிப்பட்ட சட்டங்களினாலும்,  ஒழுங்கு முறைகளினாலும் அவர் கட்டப்படவில்லை. நம் நாட்டின் தேசிய தந்தை மகாத்மா காந்தியடிகள் அவரை அரசியலில் சேரும்படி அழைத்தபோது மறுத்து விட்டார். எவ்விதமான கட்டுகளினாலும் கட்டப்பட அவர் விரும்பவில்லை. இப்பொழுது வீதிக்கு ஒரு கட்சி என்ற அவல நிலை தோன்றியிருக்கிறது. ஆனால் தேசத் தந்தை அழைத்தபோதும்  நோபல் பரிசு பெற்ற கவிஞர் மறுத்திருக்கிறாரென்றால் அது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.  அவர் ஏன் யாராலும் கட்டப்பட விரும்பவில்லை? ஏனெனில் அவர் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்க காத்துக் கொண்டிருந்தார். “ஏனெனில் என்னை அர்ப்பணிப்பதற்காக உன் அன்பிற்கு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சாந்தியளிக்கும் ஆன்மீகம்

இன்றைக்கு அநேக மக்கள் இறைவனை உடையவர்களாக இல்லை. அநேக மக்கள் இறைவனைப் பற்றிய குழப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும் தற்காலத்தில் எங்கும் வன்முறை காணப்படுகிறது. வன்முறையினால் எல்லாவற்றையும் அடைந்துகொள்ளலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த உலகத்தில் நீதி இல்லை. எங்கும் பிரிவினைகள் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். உலக அழிவினை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இந்த உலக மக்களை அழிப்பதற்கு எதுவும் நடைபெறலாம் என அனைவரும் அச்சம் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இன்று அதற்கு தீர்வுதான் என்ன? இந்தியாவில் நம்மைப் பிரிக்கக்கூடிய பிளவுகளை நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் சுயநலம் கொண்டவர்களாக இருந்துகொண்டு, தங்களுடைய சொந்த மதத்தைப் பற்றித்தான் நினைக்கிறார்கள். தேசம் முழுவதைப் பற்றியும் நினைப்பது கிடையாது. கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ மதத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரோமாபுரி முதலிய நாடுகளுக்குச் செல்வது பற்றி பேசுகிறார்கள். முஸ்லீம்கள் மெக்காவுக்கு செல்வது பற்றி பேசுகிறார்கள். இந்துக்கள் எங்கே செல்வார்கள்? ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே மிகச் சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் ‘ஒரே இறைவன்தான் உண்டு’ என்று சொல்லக்கூடிய சில மக்கள் இருக்கிறார்கள். காரியம் அப்படி இருக்குமாயின், நம்மில் அநேக மக்கள் வித்தியாசமான பெயர்களில் இறைவனை வழிபடுகிறோம். இறைவனுடைய குணாதிசயம் என்ன? அவர் நம்மிடம் பணம் கேட்கிறாரா? … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

தக்ஷிணாமூர்த்தி

சத்தியம், சிவம், சுந்தரம் என்று அழைக்கப்படுபவன் சிவன். அவர் கங்கையை தலையில் வைத்திருப்பதால் கங்காதரன் என்றும், நடனத்திற்கு ஆண்டவராக இருப்பதால் நடராஜர் என்றும், தெற்கு முகமாக நோக்கி புலித்தோல் மேல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதால் தக்ஷிணாமூர்த்தி என்றும், ஆண் பாதி பெண் பாதியாக தோன்றுவதால், அர்த்தநாரீஸ்வரர் என்றும், மூன்றாவது கண்ணை உடையவராக இருப்பதினால் திரிநேத்ரா, திரிநயனா, திரிஅக்ஷரா என்றும், அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை கற்றுக்கொடுக்கும் முதல் ஆசானாக விளங்குவதால், ஆதிநாத் என்றும், பிறையை தன் தலையில் அணிந்திருப்பதால் பிறைசூடன், சந்திரசூடன் அல்லது சந்திரசேகரா என்றும், உயிரை அல்லது ஜீவனை குறிப்பதால் சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனின் உடலில் சாம்பல் பூசப்பட்டிருக்கும். சாம்பல் பூசுவதின் அர்த்தமாவது சிவன் ‘நான்’ என்ற அகங்காரத்தை மாயை அழிப்பவர். அவருடைய நெற்றியிலுள்ள மூன்று கோடுகள் மூன்று உலகத்தைக் குறிக்கும். புலித்தோல் அணிபவர் என்றால் இச்சை, காமம் போன்றவற்றை அடக்கியாள்பவன். மாயையான உலகத்துடன் அவர் பற்றில்லாதவர் ஆவார். சிவன் கையிலிருக்கும் திரிசூலமானது சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று குணங்களைக் குறிக்கிறது. அவர் இடது கையில் இருக்கும் உடுக்கை ‘ஓம்’ என்ற புனித ஒலியின் அடையாளமாக உள்ளது. அவரின் நெற்றிக் கண்ணினால் எல்லாவற்றையும் அழிக்கிறார். அவர் எதை அழிக்கிறார்? ஒரு யுகத்தின் முடிவில் வானத்தையும், … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்