தமிழ் | తెలుగు

» Archive

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

தாயின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு எவ்வாறு நிகழ்கிறது? ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டையுடன் இசைந்து கரு உண்டாகும். அந்த இணைப்பு சரியாக நிகழாவிட்டால் கரு உண்டாகாது. அதேநேரம், அவை சரியாக இணைந்திருந்தாலும் ஒரு பிரச்சினை உண்டாக வாய்ப்புண்டு. அதாவது ஆணின் உயிரணு பெண்ணின் கருப்பையில் நுழைந்தவுடன், தாயின் மஞ்சள் கருவில் இருந்து மெல்லியதான ஒரு சவ்வுப் படலம் தோன்றி, மற்ற உயிரணுக்களை கருப்பைக்குள் நுழைய விடாமல் கருப்பையின் வாசலை அடைத்துவிடும். இந்தச் செயல் சரிவர நடந்து, வெற்றிகரமாக உண்டாகும் கரு முதல் மாதத்தில் ஒரு தான்றிக்காயின் அளவுக்கு இருக்கும். இரண்டாவது மாதத்தில் நோய்கள், மயக்கம் போன்றவற்றால் தாயின் கருப்பையின் வாசல் மூடப்படாமல் போனால், அந்த மாதத்திலும் சில உயிரணுக்கள் உள்ளே நுழையும். அப்படி நுழைந்தால், அப்போதும் கரு உண்டாகாது. இப்படிப்பட்ட பிரச்சினையிலும் தப்பி, இரண்டாவது மாதம் வெற்றிகரமாக கருவானது நிலைபெற்றுவிடுகிறது. மூன்றாவது மாதத்தில் உருவான கரு நன்கு வளர வேண்டும் அல்லவா? அதற்காக, அதுவரை வெளியேறிக்கொண்டிருந்த தாயின் மதநீர் வெளியேறாமல், கருப்பையிலேயே தங்கும் அதனால் கருப்பை வீங்கும். வயிறு சற்று பெருத்து வீங்கும். சில நேரங்களில் மதநீரை தாங்கமுடியாமல், கருப்பை கிழிவதும் உண்டு. இந்தப் பிரச்சினையிலிருந்தும் தப்பி, இரண்டாவது மாதத்தைத் தாண்டி மூன்றாவது … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

கடிதங்கள்

பேரன்புடையீர், மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கம். மனுஜோதி இதழ் படித்தேன். அதில் கடவுளின் வருகையைப் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?, சங்கைமிக்க குர்-ஆன், ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் மற்றும் கதைகள், செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. இதுபோன்ற செய்திகள் வாழ்க்கை வாழ ஓர் உதாரணமாக விளங்குகிறது. வேறு இயக்கமாக இருந்தால் ஓர் புத்தகம் அனுப்ப வங்கியில் இவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கட்டளையிடுவார்கள். ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு புத்தகத்தையும் தங்கள் செலவில் அனுப்புகிறீர்கள். பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகத்தை எனக்கு அனுப்பியதற்கு தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்கி என் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன். – தி. மேகநாதன், பண்ருட்டி, கடலூர் ✡✡✡ மனுஜோதி ஆசிரியருக்கு வணக்கம். நாங்கள் ஒருநாள் மதியம் எங்களுடைய வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபொழுது பொதிகை டி.வியில் “வரலாற்று சுவடுகள்” என்ற நிகழ்ச்சியில் நீங்கள் வெளியிட்ட லஹரி கிருஷ்ணாவின் வழிமுறைகள் மற்றும் ஆசிரமத்தைப் பற்றி பேசுவதை எங்களால் பார்க்க முடிந்தது. அதினுடைய செய்திகளை நீங்கள் சொல்லும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து  எங்களுக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. இப்பொழுதுள்ள காலகட்டத்தில் இப்படி ஒரு ஆசிரமம் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் இந்த மனுஜோதி ஆசிரமத்தை காண வருவதாக … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

இது எனக்கு வேண்டியதுதான்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! இறையே அபயம்!                                               யாவும் இறையின் உபயம்! நன்கு முதிர்ந்த முத்து ஒன்று அந்தச் சிப்பியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. அந்த முத்துக்கு ஒரே ஆனந்தம். ஆஹா, எத்தனை வெளிச்சம், எத்தனை காற்று என்று ஆனந்த கூத்தாடியது. அது இதுவரைக்கும் குடியிருந்த சிப்பியைப் பார்த்து கூறியது: நாற்றம், இருட்டு, குளிர் இப்படி காலமெல்லாம் உன்னிடம் கிடந்தேன். இன்று எனக்கு விடுதலை என்று கூறிக்கொண்டே போனது. முத்து தனது பிறந்த இடத்தை இப்படி பழிப்பதைக் கேட்டு கண்ணீர் சிந்தியது சிப்பி. சில நாட்கள் சென்றன. அழகான மாலையாகக் கோர்க்கப்பட்டு, அலங்கார கண்ணாடிகளில் முத்துக்கள் அடுக்கி வைக்கப்பட்டன. கழுத்துக்கு என தயாரிக்கப்பட்ட மாலையில், நடுநாயகமாக நாம் மேலே கண்ட முத்து வீற்றிருந்தது. அந்தக் கடையில் பளபளப்பும், பகட்டும் ஒளிவீசும் செழிப்பும் அதற்குப் பிடித்திருந்தன. அதற்கு ஒரு கர்வமே வந்துவிட்டது. அந்த முத்து அடங்கிய மாலையை பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள் எடுப்பதும், பார்ப்பதும் அணிந்து கண்ணாடியில் பார்த்து மகிழ்வதும் விலை பேசுவதும், கடைக்காரர் விலையைக் குறைக்க மறுப்பதும், இதெல்லாம் அந்த முத்துக்கு மிகுந்த அதிசயங்களாக தோன்றின. ஒருநாள் சீமான் வீட்டுப் பெண்மணி தனது கணவருடன் வந்தாள். அந்த முத்து மாலையின் விலையை கேட்டாள். 25,000 … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

மதங்களை இணைத்த மகாகவி

கடவுள் வாழ்த்து பாடி, எல்லா கடவுளும் ஒரே கடவுள் என்று ஒருவர் புரியவைத்தார். அவர் யார்? செய்குதம்பிப்பாவலர். அவர் ஒரு இஸ்லாமியர், நூறு விஷயங்களை ஒருங்கே புரியும் திறனாளராவார். அவரிடம் கடவுள் வாழ்த்து பாடச் சொன்னார்கள். சிரமாறு உடையான் என்று ஆரம்பித்து பாடினார். எந்த இறைவனை குறித்து பாடினீர்கள்? என்று கேட்டதற்கு, “எந்த இறைவனையும் குறிக்கும் எல்லாரையும் குறித்து” என்றார் பாவலர். அதற்கு விளக்கம் கேட்டனர். “விநாயகர் மாறுபாடான சிரம் உடையவர். எனவே சிரம்மாறு உடையார். முருகன் ஆறு சிரம் உடையவர். எனவே சிரம்+ஆறு+உடையவர். சிவனோ, கங்கை ஆறு தலைமேல் உடையவார். எனவே சிரம் ஆறு அதாவது கங்கையை தலைமேல் உடையவர். திருமாலோ, காவிரி, கொள்ளிடம் நடுவே ஆற்றில் தலைவைத்து (சிரம்) படுத்திருக்கும் ஸ்ரீரங்கநாதர். அவரும் சிரம்+ஆறு+உடையவர்” என்றார். உடனே அனைவரும் கைதட்டினார்கள். இஸ்லாமியராகிய நீங்கள் இந்து கடவுளைப் பற்றி கூறினால் போதுமா? இது இஸ்லாமிய கடவுள் வாழ்த்து இல்லையா? என்று கேட்டபோது “எல்லாம் ஒன்றுதான். அல்லாஹ் என்ற பேரருளாளன் உலகுக்கு தலையாய வழியாகிய இஸ்லாத்தை உடையவன் என்ற பொருள் கொண்டாலும் பொருந்துமே” என்றார். சாமர்த்தியம் மட்டுமல்ல, சத்தியமும் அதுதான். இப்படி மனங்களை இணைத்த மகாகவியாவார் செய்குதம்பிப்பாவலர். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

இறைவன் தம்முடைய மக்களுக்கு சட்டத்தை எதற்காக கொடுத்திருக்கிறார்?

இறைவன் தன்னுடைய மக்கள் கலியனின் மாய வலையில் சிக்கிக் கொள்ளாதபடி வளமோடு வாழ்வதற்காக வேதங்களில் அநேக சட்டதிட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார். இறைவனுக்கு ஒரு சொந்த சட்டம் இருக்கிறது. மனிதன் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் நாம் பிரச்சினைக்குள்ளாவோம். இந்த பூமியிலுள்ள அரசாங்கத்தில் மனிதர்களின் நலனுக்காக சட்டதிட்டங்கள் இருக்கிறதுபோல இறைவனுடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டவர்கள் சுபீட்சமாக வாழ்வதற்காகவும் அநேக சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரால் சிருஷ்டிக்கப்பட்ட மக்கள் எப்பொழுதும் அவருக்கு கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர் கட்டளையிடும் எதையும் அவர்கள் செய்வார்கள். அதுதான் தேவலோக மக்களின் தகுதி மற்றும் குணாதிசயமாகும். நூறு சதவீதம் அவருடைய சட்டங்களுக்கு அடிபணிவதினாலும், அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதினாலும் நாம் நீதிமான்களாகிறோம். இறைவனுடைய சட்டமானது அறத்தையும், நன்நெறியையும் மக்களுக்குப் போதிக்கிறது. சட்டத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் அவரால் தண்டிக்கப்படுவார்கள். அன்பினால் இறைவனின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தாங்களே நியாய விதிகளும் சட்டமுமாக இருக்கிறார்கள் என்பதை முதலாவதாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மாணவன் ஒழுங்காக இல்லையென்றால், அவனுக்கு அடி கிடைக்கின்றது. அதுதான் சட்டமாகும். நீங்கள் சட்டத்திற்கு கீழ்ப்படியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். ஆனால் ஒரு சட்டம் இருக்கின்றபோது, மற்றொரு வழியில் இறைவனின் கருணையும் அவருடைய மக்களுக்கு இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையை நியாயப்பிரமாணத்துடனும், கட்டளைகளுடனும், நியாயங்களுடனும் அளந்து பார்க்க நாம் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இரயிலில் செல்லவிருந்தால், உங்களுடைய பயணச்சீட்டை … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவு

1974-ம் வருடம் செப்டம்பர் 22 அன்று அருளிய சொற்பொழிவு ஒவ்வொரு நகரமும் விழும். அது கடைசி காலத்தில் விழவில்லையென்றால், இப்பொழுதுகூட அது விழலாம். இந்த நாட்களில் ஒன்றில் சென்னையில் பயங்கரமான கடும் புயலினால் பேரழிவு ஏற்படும். அந்த நகரம் விழுந்து விடும். இது ஒரு வேடிக்கைக்குரிய காரியமல்ல, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழியத்தை அவர்கள் கண்டார்கள். இன்றைக்கு அந்த இடத்தில்  மிகப்பெரிய பிசாசுகள் இருக்கின்றன. வெகுவிரைவில் அது காணப்படாமற்போகும். பூகோள வரைபட அமைப்பில் முற்றிலுமாக ஒரு மாறுதல் இருக்கும். இறைவன்மேல் கொண்ட அன்பினால் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் மனுஜோதி ஆசிரமத்தைவிட்டு வெளியே எங்கேயாவது செல்லும்போது உண்மையான அன்பை மறந்துவிடாமல் தியானம் செய்யுங்கள். இல்லாவிடில் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். இந்த மனுஜோதி ஆசிரமம் இறைவனுடைய ஆட்சியின்கீழ் இருக்கிறது. ஆனால் வெளியே நீங்கள் செல்லும்பொழுது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நியாயத்தீர்ப்பானது பூமியின்மேல் விழுகிறதை நீங்கள் பார்க்கும்பொழுது, இரண்டு காரியங்களை அறிந்துகொள்ளலாம். நம்முடைய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உண்மையானது என்றும், காலம் முடிவடைந்தது, இந்துக்கள் மத்தியில் நாம் செல்வது சரி என்றும் தெரிந்துகொள்ளலாம். ✡  ✡  ✡ முட்களும் ரோஜாவும் இராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது சீதை ஒரு மாயமானைக் கண்டு, அதின்மேல் ஆசைப்படுகிறாள். தனக்கு அந்த மான் வேண்டும் என கேட்டதினால் ஸ்ரீ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்