தமிழ் | తెలుగు

» Archive

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்

சென்ற இதழில் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு சுற்றுப் பயணங்களைக் குறித்த பொதுவான சில காரியங்களை வெளியிட்டிருந்தோம். இந்த இதழில் முதலாவது இந்திய சுற்றுப்பயணம் எவ்விதமாக ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கலாம். முதலாவது சுற்றுப் பயணத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என முடிவெடுக்க சில காரணங்கள் உண்டு. ஏப்ரல் மாதம் என்று சொல்லும்போது ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 21 நாட்கள் விரதமிருந்தார்கள், அந்த சமயத்தில் அவர் 26 குறிப்புகளை எழுதி வைத்து அதற்காக ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்தார்கள் என்பது அவருடைய பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அதில் அகில இந்திய மக்களுக்கும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிப்பையும் எழுதி, தம்முடைய பக்தர்களையும் அனுதின பிரார்த்தனைகளில் நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும்படி செய்திருந்தார்கள். எனவே இந்த சுற்றுப் பயணத்தை ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று, மனுஜோதி ஆசிரமத்திலிருந்து வட கிழக்கு இந்திய சுற்றுப் பயணத்தை, நாங்கள் செல்லும் வழியிலுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களைத் தரிசித்து விட்டு செல்வதாக அவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். அந்த பயணத்தின்போது ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் எங்களோடு இருந்ததை வெளிப்படுத்தும் விதமாக மழையும், மின்னலும் தொடர்ந்து வந்ததை நாங்கள் பார்த்தோம். இந்த மகிமையின் பிரசன்னம் … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

“எண்ணங்களின் களஞ்சியம்” புத்தக வெளியீட்டு விழா

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆன்மீக மாநாட்டில் “எண்ணங்களின் களஞ்சியம்” புத்தக வெளியீட்டு விழா கோவை மாவட்டத்தில் கவிதை தொகுப்புகள் அடங்கிய “எண்ணங்களின் களஞ்சியம்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சென்னை தொலைக்காட்சி நிலைய உதவி இயக்குநர் திரு. பால இரமணி மற்றும் அவருடைய துணைவியார் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களும் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர். கோவை வானொலியைச் சேர்ந்த குடந்தை R. வேங்கடபதி அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கோவை முத்தமிழ் அரங்கத்தைச் சார்ந்த இரா. சொ. இராமசாமி, வசந்த வாசல் கோவை கோவலன், தேனி கருணைசாமி மற்றும் கவிஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களின் சிறப்புரை: அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். இன்றைய காலைப்பொழுது அற்புதமாக அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கின்ற ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களை நான் இங்கிருந்தே வணங்கி மகிழ்கிறேன். எங்கிருந்தாலும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நம்மோடிருப்பார் என்பதற்கான சத்திய சாட்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. அரங்கத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருமே மிகப் பெரிய கடலாக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கம். பொதுவாக ஒரு நூல் எண்ண களஞ்சியம் என்று வந்தால் என்ன களஞ்சியம் என்று … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

ஷோஃபார்

“ஷோஃபார்” அல்லது ஆட்டுக்கடாவின் கொம்பு, இன்றைக்கு யூத ஆலயங்களில் நடக்கும் சடங்குகளில் உபயோகிக்கப்படும் பழமையான ஓர் இசைக்கருவியாகும். ஆட்டுக்கடாவின் கொம்பை மக்கள் ஏன் இதற்கென்று தெரிந்தெடுக்கவேண்டும்? ஆபிரகாம் பலி செலுத்துவதற்கென்று தன் மகனாகிய ஈசாக்கை கறுகளினால் கட்டியதின் மூலம் வெளிப்படுத்திய ஒப்பற்ற விசுவாசத்தை, அந்த இசைக்கருவியின் ஓசையைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் நினைப்பூட்டவே இக்கொம்பு தெரிந்தெடுக்கப்பட்டது. இறைவன் ஆபிரகாமை இடைமறித்து, மகனுக்குப் பதிலாக ஆட்டுக்கடாவைப் பலிசெலுத்த அனுமதித்தார். பசு அல்லது எருதின் கொம்பை ஷோஃபாராக உபயோகிக்க யூத பிரமாணம் அனுமதிப்பதில்லை. ஏனெனில் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் நன்றி கெட்டவர்களாகி இறைவனை விட்டுத் திரும்பி, பொன்னினால் வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை வணங்கிய சம்பவத்தை அது நினைவுபடுத்தும். ஆபரணம் ஒவ்வொன்றும் ஒரு தெய்வத்திற்கு அடையாளமாயிருக்கிறது. ஆரோன் பொன்னினால் கன்றுக்குட்டியை உண்டாக்கினபிறகு அதைச் சுட்டிக் காண்பித்து “இதோ உங்கள் தெய்வங்கள்” என்றான். வித்தியாசமான தெய்வங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டன. ஒவ்வொரு ஆபரணமும் ஒரு தெய்வத்தைச் சித்தரிப்பதன் காரணத்தால்தான், அதை அணிவது பாவமாகக் கருதப்படுகிறது, அது விலையுயர்ந்த பொருள் என்பதினாலல்ல. இவ்வுலகில் இந்தியாவில் மாத்திரமே பசுவை தெய்வமாக வழிபடுகின்றனர். “ஷோஃபார்” என்னும் இசைக்கருவி 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை நீளமாயிருக்கும். பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு நொறுங்குண்ட இருதயத்தின் அடையாளமாக, அது வளைந்திருக்கிறது. அதுவுமின்றி, ஆட்டுக்கடாவின் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கோபம்

‘ஆறுவது சினம்’ என்றார் ஒளவை. ‘சினம் என்பது சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுடைய இனம் என்னும் இன்பத்தெப்பத்தையும் சுட்டெரிக்கும்’ என்ற பொருளில் சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்           ஏமப் புணையைச் சுடும் என்றார் வள்ளுவர். ‘கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம். கொடுங்கோபம் பேரதிர்ச்சி’ என்று பேசுவார் பாரதி. ‘கர்வம் உள்ளவன் இறைவனை இழக்கிறான். பொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான். கோபக்காரனோ தன்னையே இழக்கிறான்’ என்பது நம் ஆன்றோர்களின் அனுபவத்தில் பிறந்த பொன்மொழி. ‘காமம், கோபம், பேராசை மூன்றும் நரகத்தின் முக்கிய வாயில்கள். இவை நம் ஆன்மாவை அன்றாடம் களங்கப்படுத்தும் மோசமான எதிரிகள்’ என்கிறது விதுரநீதி. கூடாத குணங்கள் பதினெட்டு என்று மகாபாரதத்தில் சாந்தி பருவம் பட்டியலிடுகின்றது. அவற்றுள், ‘இல்லாத குற்றத்தைச் சுமத்துவது, குற்றமற்றவனை தண்டிப்பது, வஞ்சனையாக கொலை செய்வது, பிறர் பெருமையில் பொறாமை கொள்வது, அடுத்தவர் குணங்களை குற்றமாகக் கூறுவது, உரிமையற்ற பொருளை கவர்வது, கடுஞ்சொற்களைப் பேசுவது, கொடுந்தண்டனை அளிப்பது ஆகிய எட்டும் கோபத்தின் கூட்டாளிகள்’ என்று கோடிட்டு காட்டுகிறது பாரதம். காமம், குரோதம் என்று சேர்த்து சொல்வது வழக்கம். காமம் என்பது ஆசை. குரோதம் என்பதுதான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாமாகும். மனிதனை பாவத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறியிருக்கிறார். ஒரு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 5

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? சென்ற இதழின் தொடர்ச்சி….. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்: திருவருட்பா 6-ம் திருமறை (வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக இப்பாடல் பதம் பிரித்து எழுதப்பட்டுள்ளது). பாடல் எண் 1064:   ஊராசை உடலாசை உயிர் பொருளின் ஆசை                 உற்றவர் பெற்றவராசை ஒன்றுமிலாள் உமது                 பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்                 பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர் கேட்டிடிலோ                 நாராசம் செவிபுகுந்தால் என்ன நலிகின்றாள்                 நாடறிந்தது இது எல்லாம் நங்கை இவள் அளவில்                 நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய் மலர வேண்டும்                 நித்தியமாமணிமன்றில் நிகழ் பெரிய துரையே விளக்க உரை: உயிர் ஆசை:  நபிகள் நாயகம், அவர்களுக்கு பிரபலமான ஸஹாபியாக ஹஜ்ரத்ஹுதைபா என்பவர் இருந்தார். ஹஜ்ரத்ஹுதைபா அவர்களுக்கு மரண நேரம் நெருங்கியபோது, திடுக்கமுற்று நிம்மதியற்றவர்களாக அழுது கொண்டிருந்தார்கள். அதனைப்பற்றி ஜனங்கள் விசாரித்தபோது, “உலகத்தை விட்டுச் செல்வதற்காக நான் அழவில்லை. மாறாக மரணிப்பது எனக்கு மிக விருப்பமான விஷயமாகும். எனினும் இறைவனுடைய திருப்தியைப் பெற்றவனாக உலகத்தை விட்டுச் செல்லவிருக்கின்றேனா அல்லது அவருடைய கோபத்திற்குள்ளவனாகச் செல்லவிருக்கின்றேனா என்பது தெரியவில்லையே என்றுதான் அழுது கொண்டிருக்கிறேன் என்று கூறிய பின்னால், இது உலகில் என்னுடைய கடைசி நேரமாகும். யா அல்லாஹ்! எனக்கு உன்மீது அன்பு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

ஐம்புலன்களுடைய ஜீவராசிகளிடமிருந்து ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய பாடங்கள்

இறைவனை விட்டு விட்டு மனிதன் வழி தவறிப்போகிறான். அவருக்கு நன்றி கூறுகிறதில்லை என்று ‘சுகாமணி’ என்ற புனித நூலில் குரு அர்ஜுனன் என்பவர் இவ்வாறு அங்கலாய்க்கிறார். “மானுடனே! இறைவனின் நன்மைகளையும், அதிசயங்களையும் எண்ணிப்பார். நீ எப்படிப்பட்ட கீழான நிலையிலிருந்து மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறாய் என்று எண்ணிப்பார். உன் தாயின் கர்ப்பத்தில் உன்னை அவர் பத்திரமாக பாதுகாத்தார். நீ குழந்தையாக இருக்கும்போது, நீ அருந்த தாய்ப்பாலை கொடுத்தார். நீ இளைஞனானபோது நல்ல உணவையும், சௌகரியங்களையும் கொடுத்தார். மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், நண்பர்களுடன் உறவாடி மகிழ்ந்திருக்கிறாய். நீ வயதானபோதோ உன்னை கவனிக்க நண்பர்களையும், உறவினர்களையும் அருளினார். அவருடைய அருளினால் உனக்கு குடிக்க குளிர்ந்த நீர் கிடைக்கிறது. இனிய தென்றலையும், உணவு சமைக்க அக்கினியையும் வழங்கினார். கை, கால், கண், காது, மூக்கு, வாய் போன்ற அவயவங்களைப் படைத்தார். ஆனால் மனிதன் உன் நன்மைகளை மெச்சிக்கொள்ளுகிறதில்லை, பாராட்டுகிறதில்லை. இவ்வளவு நன்மைகளை கொடுத்த இறைவனை விட்டு விட்டு மற்றவர்களிடம் மனிதனுக்கு பற்று ஏற்படுகிறது. கழுதையின்மேல் சந்தனத்தைப் பூசினால், அது அதை உதறி விட்டு, சாம்பலில் சந்தோஷமாக புரளும். அதைப்போல மனிதன் இறைவனை விட்டு விட்டு மாயையில் புரளுகிறான்” என்கிறார். ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்பது பழமொழியாகும். கழுதையைப்போல … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கீதாஞ்சலி – 7

“உன் உலகத்தில் எனக்கு செய்வதற்கு வேலை இல்லை. என்னுடைய பயனற்ற வாழ்க்கை, குறிக்கோள் இல்லாத நாதங்களில் வெளிப்படுகின்றது. நேரம் வரும்போது, என் தெய்வமே உன் சந்நிதானத்தில் உன் எதிரே நின்று பாடுவதற்கு எனக்கு உத்தரவிடு! இந்த உலகின் பெருவிழாவிற்கு எனக்கு அழைப்புக் கிடைத்து விட்டது. ஆகவே என் வாழ்வு வளம் பெற்று விட்டது. என் கண்கள் பார்த்து விட்டன. என் காதுகள் கேட்டுவிட்டன”. இந்த உலகின் பெருவிழாவிற்கு எனக்கு அழைப்பு கிடைத்து விட்டது என்று கவிஞர் கூறுகிறார். “உலகின் பெருவிழா” என்பது என்ன? அதுதான் இறைவன் எல்லாரையும் அழைக்கும் கலியாண விருந்தாகும். கலியாண விருந்தைக் குறித்து இயேசுபிரான் ஒரு கதையை கூறியுள்ளார். “இறைவனுடைய ராஜ்யம் என்பது, தன் குமாரனுக்கு கலியாணஞ் செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. ராஜா தன் பணிவிடைக்காரரிடம் அழைக்கப்பட்டவர்களை கலியாணத்திற்கு அழைத்து வரச்சொல்லும்படி அனுப்பினான். ஆனால் அழைக்கப்பட்டவர்கள் வர மறுத்துவிட்டு, நொண்டிச் சாக்கு கூறினார்கள். ஒருவன் நான் ஒரு நிலத்தை வாங்கினேன். நான் அவசியமாக அதை சென்று பார்க்க வேண்டும், என்னை மன்னிக்கும்படி கூறு என்று ராஜாவின் பணிவிடைக்காரரிடம் கூறினான். வேறொருவன் ஐந்தேர் மாடுகளை வாங்கினேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி கூறு என்றான். மூன்றாமவன் ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன். … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

நான்கு திறமைகள்

ஒரு நாட்டில் நல்ல உள்ளம் படைத்த நால்வர் நண்பர்களாக இருந்தனர். நான்கு பேரும் நான்கு விதமான திறமைகளோடு திகழ்ந்தவர்கள். முதலாமவன் ஆசாரி. இரண்டாமவன் நெசவாளி. மூன்றாமவன் பொற்கொல்லன். நான்காமவன் மந்திரவாதி ஆவர். இவர்கள் நால்வரும் மக்களுக்காக உழைத்தது போதும், நம்முடைய பிறவிப் பயனை அடைய வேண்டுமானால் இறைவனைத் தேடி செல்ல வேண்டும் என முடிவு செய்து பயணித்தனர். அவர்கள் தங்களுடைய திறமையின்மேல் பற்று கொண்டமையால் தாம் பயன்படுத்தும் கருவிகளையும் தங்களோடு எடுத்துச் சென்றனர். நெடு நேர பிரயாணத்தில் களைப்புற்றவர்களாக ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். நால்வரும் உறங்கி விட்டால் நம்முடைய உடைமைகளை யார் பாதுகாப்பது என்று நினைத்து, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட மணி நேரம் விழித்திருப்போம், பிறகு மற்றவனை எழுப்பி விட்டு ஒருவர் மாற்றி ஒருவர் தூங்க வேண்டும் என முடிவு செய்தனர். முதலாவதாக ஆசாரியானவன் வெறுமனே உட்கார்ந்தால் தூங்கி விடுவோமே! என்ன செய்வது என சிந்தித்து, தான் எடுத்து வந்த கருவியைக் கொண்டு ஏதாவது செய்யலாம் என்று நினைத்து, ஒரு கட்டையில் அழகான பெண்ணின் உருவத்தை செதுக்கினான். அவனுடைய நேரம் முடியும் தருவாயில் அந்த பெண்ணின் உருவம் முழுமை பெற்றது. அவன் இரண்டாமவனை எழுப்பி விட்டு தூங்கினான். நெசவாளியான இவன் அதைப் பார்த்தவுடனே இந்த பொம்மை நிர்வாணமாக … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்