தமிழ் | తెలుగు

» Archive

ஆசிரியர் உரை

நவம்பர் – 2015 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! 2015-ம் வருடம், அக்டோபர் மாதம் 3-ம் தேதி நடைபெற்ற நீதியுக ஸ்தாபக விழாவில் அன்புக்கொடி ஏற்றப்பட்டது. மனுஜோதி ஆசிரமத்தில் கூடி வந்திருந்த எல்லாருக்கும் மற்றும் உலகெங்கிலும் அன்புக்கொடி ஏற்றியவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருந்தது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது. செப்டம்பர் மாதத்தில் நான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள அநேக கிராமங்களுக்கு சென்று வந்தேன். என்னுடைய சகோதரன் D. லியோ பால் அவர்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலருடன் அகில இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள அநேக இடங்களுக்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும், புத்தகங்களையும் விநியோகித்து ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையைப் பிரச்சாரம் செய்தார்கள். இறைவன் நம்மை ஆட்சி செய்கிறார் என்பதை காண்பிக்கவே நாம் அன்புக்கொடியை ஏற்றுகிறோம். இறைவனின் பாகமாக இருக்கும் மக்கள் ஐம்புலன்களை சார்ந்து வாழாமல் இறைவனின்மேல் சார்ந்து வாழ வேண்டும். ஆனால் இறைவன் மேல் சார்ந்து வாழ்வதற்குப் பொறுமை தேவைப்படுகிறது. மனிதர்கள் உடனுக்குடன் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம்

அகில இந்திய ஆன்மீக சுற்றுப் பயணம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனையை இந்த உலகிற்கு தெரியப்படுத்துவதற்காக மனுஜோதி ஆசிரமத்தில் ஒரு குழுவாக இந்தியா முழுவதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பறைசாற்றுவதற்கு, காரில் இந்தச் ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பிரயாணம் செய்த அனுபவத்தை பயணக் கட்டுரையாக தொடர்ந்து வரும் இதழ்களில் வாசகர்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில்தான் எத்தனை சிறப்புகள்! எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள், எத்தனை கலாச்சாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், புண்ணியத்தலங்கள், மலைகள், நதிகள் இன்னும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகள். இவை அனைத்தையும் கடந்து, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பாதுகாப்பை, பயணம் செய்த அனைவருமே உணர்ந்தோம். இந்த அனுபவங்களின் மூலம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையை வாசகர்களாகிய நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன். இந்த பயணத்தின்போது அனைத்து மதத்தினரும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை ஏற்றுக்கொண்டு இலவச புத்தகங்களையும் பெற்றுக்கொண்டனர். முதலாவதாக இந்திய வரைபடத்திலுள்ள வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இந்த வருடம் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை ஏறக்குறைய 40 நாட்கள் பல்வேறு மாகாணங்களில் ஸ்ரீமந் … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

சத்தியத்தைச் சொல்லும் சத்திய நகரம்

தமிழ் நாடக மேதை, அவ்வை சண்முகம் அவர்களின் புதல்வர் திரு. டி.கே.எஸ். கலைவாணன் அவர்கள். சிறுவயதிலேயே இசையை இலக்கண முறைப்படி பயின்று அபூர்வ ராகங்களையும் அற்புதமாகப் பாடவல்லவர். ஒன்பதாம் வயதிலேயே திருமுருக கிருபானந்த வாரியார் முன் கந்தர் அனுபூதியைப் பாடி அவரது ஆசி பெற்றவர். 1330 குறட்பாக்களையும் பாடி ஒலித்தகடாகப் பதிவு செய்தவர். மேடைக் கச்சேரி, நடிப்பு, பாட்டு என்று பலதுறைகளில் திறமை கொண்டவர். சிறந்த எழுத்தாளர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல புண்ணியத்தலங்களையும் தரிசித்து வந்தவர். திருமுருக கிருபானந்த வாரியார் மற்றும் இஸ்லாமிய பாடகர் நாகூர் அனிஃபா அவர்களும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை சந்தித்து ஆசி பெற்ற மனுஜோதி ஆசிரமத்திற்கு, டி.கே.எஸ் கலைவாணன் அவர்களும் வருகை தந்தார்கள். டி.கே. எஸ். அவர்கள் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. அவர் மனுஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற கல்கி ஜெயந்தி விழாவில் நடைபெற்ற தேசீய ஒருமைப்பாடு கூட்டத்திலும், சர்வ சமய மாநாட்டிலும் பங்கேற்றார்கள். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் துதிபாடல்களை பாடி, தன்னுடைய இனிய குரலால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களை வசீகரித்தார். அவர்களுடைய இசைக்கச்சேரியும் நடைபெற்றது. மேலும் இனிய சொற்பொழிவும் நிகழ்த்தினார்கள். வாசகர்களுக்காக டி.கே.எஸ். கலைவாணன் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்: நான் எத்தனையோ ஆசிரமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

மனிதனின் பரிணாம வளர்ச்சி

மனிதனாக பிறந்தவன் படிப்படியாக முன்னேற வேண்டும். மனிதனின் பரிணாம வளர்ச்சியும் படிப்படியானது. இந்த படிப்படியான வளர்ச்சியை அடையவே கொலு வைக்கிறார்கள். கொலு என்றால் ‘அழகு’ என்று பொருள். மேடை அமைத்து 9 படிகள் அமைத்து கொலு வைக்கப்படுகிறது. முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகள் வைக்கப்படுகிறது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது. இரண்டாம் படியில் சங்கினால் செய்த பொம்மைகள் வைக்கப்படுகிறது. நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தை பிடிக்க வேண்டுமென்று உறுதி கொள்வதே இதன் பொருளாகும். மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகள் வைக்கப்படுகிறது. எறும்பைப்போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திடமனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகள் அடுக்கப்படுகிறது. நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெறுகிறது. இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது, எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும். ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவைகள் பொம்மைகள் வைக்கப்படுகிறது. மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்கப்படுகிறது. வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பூமியிலே நாம் கடைபிடிக்க வேண்டியவைகளாக

வேதம் கூறுவது என்ன? ஸ்ரீமந் நாராயணருக்கு அருவருப்பான காரியங்களான மூடப்பழக்க வழக்கங்கள், பாரம்பரியம், சாம்பிரதாயம், நாள் பார்த்தல், ஜோசியம், ராசிபலன் போன்றவைகள் நம்மில் இருக்கக்கூடாது. உபாகமம் 18:10-12: “தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களிடத்தில் இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்”. உடலில் பச்சை குத்துவது, டாட்டூ வரைவது கூடாது. ஏனெனில் நம்முடைய உடல் இறைவன் வாசம் செய்யும் ஆலயமாக உள்ளது. I கொரிந்தியர் 6:19: “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” லேவியராகமம் 19:28: “…அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்”. ஆண்களின் உடைகளை பெண்கள் அணிவது ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கு அருவருப்பானதாகும். உபாகமம் 22:5: “புருஷரின் உடைகளை ஸ்திரிகள் தரிக்கலாகாது, ஸ்திரிகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்”. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்று பழமொழி உள்ளது. தற்போது சிலர் கடன் வாங்கிவிட்டு, அதை திரும்ப செலுத்த முடியாமல் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

தங்கக்கட்டளை

ஒவ்வொரு வேதமும் மனித குலத்திற்கு நன்மை பயக்க வேண்டும் என்பதற்காக பற்பல கட்டளைகளை கூறுகிறது. எல்லா அவதாரப் புருஷர்களும் பேசியவையே வேதங்களாக கருதப்படுகிறது. ஒரு கட்டளையை எல்லாரும் கூறியிருக்கிறார்கள். அதையே நாம் தங்கக்கட்டளை என்கிறோம். மகாபாரதம் 5:15,17-ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “உன் கடமையின் முத்தாய்ப்பாக கூறப்படுவது இதுவே. உனக்கு ஒரு செயல் வேதனை ஏற்படுத்தினால், அதை நீ மற்றவர்களுக்கு செய்யாதே”. சீக்கியர்களின் வேதமாகிய குருகிரந்த் சாஹிப் 1299-ம் பக்கத்தில் குருநானக் இவ்வாறு கூறுகிறார்: “நான் யாருக்கும் அந்நியன் அல்ல, யாரும் எனக்கு அந்நியர் அல்ல. எல்லாருக்கும் நான் சிநேகிதன்”. இதே கருத்தை கன்ஃபூசியஸ் இவ்வாறு கூறுகிறார்: “உனக்கு எது செய்யப்படக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்கு செய்யாதே”. “உனக்கு தீங்கு விளைவிக்கும் செயலை மற்றவர்களுக்கு செய்யாதே” என்று சொராஸ்ட்டிரானிஸம் கூறுகிறது. “உன்னுடைய அயலானின் லாபத்தை உன்னுடைய லாபமாகவும், உன்னுடைய அயலானின் நஷ்டத்தை உன்னுடைய நஷ்டமாக கருது” என்று தாவோயிஸம் கூறுகிறது. யூதர்களின் வேதம் மோசே என்ற தீர்க்கதரிசியால் அருளப்பட்டது. மோசே எழுதிய வேதமாகிய தோரா என்று அழைக்கப்படுகிற இவ்வேதத்தில், “உனக்கு விருப்பமில்லாத செயலை மற்றவர்களுக்குச் செய்யாதே”. இதுதான் தோராவின் சாராம்சமாகும். மற்றவையெல்லாம் வியாக்கியானமாகும். மஹாவீரர் தோன்றியதால் ஜைன மதம் தோன்றியது. மஹாவீரர் சூத்ர கிருத்தங்கா … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கடவுளுடைய அன்பு நித்தியமானது

கடவுளுடைய அன்பு நித்தியமானது, மற்றெல்லா உலக அன்பும் கடந்து போகும் நிழல்களே என்று அன்பைப் பற்றி ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். ஒருவர்மேல் எவ்வாறு அன்பு ஏற்படுகிறது? அது நிறத்தினாலோ, அழகினாலோ, முக அமைப்பினாலோ வருகிறதில்லை. ஏன்? ஏனென்றால் இவற்றினால் ஏற்படும் அன்பு கடந்துபோய்விடும். ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதை வளர்க்கிறாள். அந்த குழந்தையிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறாள். ஆனால் இவ்வுலகத்தில் என்ன நடக்கிறது என்று ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுகிறார். இலங்கையில் திருமதி எஸ்தர் என பெயர் கொண்ட ஒரு பெண்மணியை அறிவேன். ஒருநாள் அவளின் தாயார் வந்தார்கள். இவர்கள் யார் என்று கேட்டபோது, அவர்கள் எங்களுடைய வேலைக்காரி என்றாள். இது எஸ்தருடைய தாயாரின் காதுக்கு வந்தது. அவர்கள் அழுதுகொண்டே அவளுடைய பெருமையைப் பாருங்கள். அவளுடைய கணவன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறதினால் என்னை வேலைக்காரி என்று எல்லோரிடமும் கூறுகிறாள். என்னுடைய தாயார் என்று சொல்ல என் மகள் வெட்கப்படுகிறாள். அவளுடன் வாழ எனக்கு விருப்பமில்லை, எனக்கு இந்தியா செல்ல பயணச் சீட்டு எடுத்து தாருங்கள் என்று அப்பெண்மணி ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் கூறினார்கள். தாய் மனது அன்பைத்தான் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த தாயார் பார்க்க கிராமத்து பெண்மணியைப்போல … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

நீங்களும் கண்ணப்பன் ஆகலாம்!

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா என்று இறைவனுக்கு ஒரு பெயர் இருக்கிறது. ஸ்ரீ என்றால் ‘சிலந்தி’ என்று ஒரு பொருள் உள்ளது. ‘காளம்’ என்றால் ‘சர்ப்பம்’, ‘ஹஸ்தி’ என்றால் ‘யானை’. கற்பனை வலையைப் பின்னிக்கொள்ளும் நம் அறிவே சிலந்தி. சிலந்திக்குத் தன் பெருமையே அதிகம் போல நமக்கு நம் பெருமை. சிலந்தி தன்னுடைய பெருமையையும், திறமையையும் பரமேஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்ததாக வரலாறு கூறுகிறது. நம் அறிவும் சிவார்ப்பணம் ஆக வேண்டும் என்பதே சிலந்தி காண்பிக்கும் உட்பொருளாகும். நம்மில் படமெடுக்கும் அகம்பாவமே பாம்பு. ‘தேகமே நான்’ என்ற நம் எண்ணமே யானை. இந்த அகம்பாவத்தைத் துறந்து நம் செயல்களை இறை தொண்டிற்கே பயன்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான தகுதியே ‘திண்ணன்’. அவர் கண்ணை அர்ப்பணித்து, கண்ணப்பன் ஆனார். இது பக்தனின் பெயர் மட்டுமல்ல, பக்திக்குக் கிடைத்த பெயராகும். திண்ணனின் கதையை சமஸ்கிருதத்தில் எழுதிய உபமன்யு முனிவர், கண்ணப்பனை தீரன் என்றார். ‘திண்ணன்’, ‘தீரன்’, ‘கண்ணப்பன்’ இம்மூன்று பெயர்களுமே பக்தியின் லட்சணங்கள் ஆகும். எதற்கும் வளையாத ஏகாக்ரசித்தமே திண்ணனாக உருவெடுத்தது. சிதறாத விடாமுயற்சியே தீரனின் குணமாகும். மனதைச் சிதறவிடாமல் அனைத்தையும் சிவமயமாகத் தரிசித்தலே கண்களை (பார்வையை) அர்ப்பணித்தல் ஆகும். அதுவே கண்ணப்பனின் லக்ஷணமாகும். புத்தி, அகங்காரம், சரீர செய்கை இவற்றை ஒரு முனைப்போடு, சிரத்தையுடன் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து