தமிழ் | తెలుగు

» Archive

கடிதங்கள்

பேரன்புடையீர், அன்புடன் வணக்கம். இந்த மனுஜோதி இதழானது மானிட மக்களின் துன்ப, துயர நேரங்களில் இதை வாசிக்கும்போது மனதிலும், சரீரத்திலும் புதிய ஆறுதல் பெற்று பயன் பெறுகிறோம். நன்றி! – எலிசபெத், ஸ்ரீவில்லிபுத்தூர் ******* ஐயா, வணக்கம். தாங்கள் எனக்கு அன்போடு அனுப்பிய மனுஜோதி ஆன்மீக புத்தகம் கிடைக்கப் பெற்றேன். குறிப்பாக “தண்ணீர் அருந்துவதின் முக்கியத்துவம்” மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் மிகவும் அற்புதம். மிக்க நன்றி! – நா. கிருஷ்ணன், சாத்தமங்கலம் ******* அன்புடையீர், மனுஜோதி இதழ் கிடைத்தது. விமான ஆராய்ச்சி மனப்பான்மையும், பணம் சம்பாதித்து வசதியாக வாழ வேண்டும், மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்ற அகங்கார உணர்வும், சுயநலப்போக்கும் மிகுந்து பரவி வரும் இந்நாட்களில் மனிதப் பண்பும், மனிதனுக்கும் இறைவனுக்கும் இயல்பான தொடர்பு நீடிக்க வேண்டும் என்று மனுஜோதி மூலம் வணக்கத்திற்குரிய ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கலியுக கீதை பேருரையைப் பரப்பி வருகிறீர்கள். இந்த அவசியமான, மிகவும் பயனுள்ள சேவை மேலும் சிறப்புடன் தொடர நல்வாழ்த்துகளுடன் வேண்டுகோளையும் வைக்கிறோம், நன்றி! – கு. துரைசுவாமி ஐயர், திருவள்ளூர் ******* என் இனிய அன்பான மனுஜோதி இதழ் ஆசிரியருக்கு, வணக்கம். மனுஜோதி கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். “சகுனம் பார்க்காதே” தகவல் நல்ல விழிப்புணர்வை தந்தது, பாராட்டுக்கள். ஆசிரியர் உரையில் குறிப்பிட்ட ஒன்றே தேவன் என்பதின் வழிகாட்டு … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை இதன் பொருள் யாதெனில், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்பர் அன்பின் உண்மையை அறியாதவர். மற்ற பாவச் செயல்களை நீக்குவதற்கும் அவ்வன்பே துணையாகும். அன்பானது புண்ணியம் செய்வதற்கான உபகார சக்தி என மட்டுமே நாம் அறிவோம். ஆனால் வள்ளுவரோ அஃது பாவச் செயலை நீக்குவதற்கும் துணை புரியுமென இயம்புகிறார். அத்தகைய அன்பானது அடுத்தவர்கள் புரிகின்ற கீழான பாவச் செயல்களையும் தனக்குள் ஈர்த்துக்கொண்டு அவர்களை சகோதரத் தன்மையுடன் காண வகை செய்யும். இஃது முழுமையான தூய அன்புடையவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். இவ்வன்பின் ஆழத்தை ஒரு கதையின் மூலம் காண்போம். ஞானி ஒருவர் இரவு நேரத்தில் வெளியே உலாவுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரெதிரே, அவ்வூரில் எல்லோராலும் திறமையுடையவரென மதிக்கத்தக்க வயலின் கலைஞர் ஒருவர் அதிகமான குடி போதையில் தன் நண்பர்களுடன் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அதனைக் கண்ட ஞானியானவர் அவன்மீது இரக்கம் கொண்டு வயலின் கலைஞரை நோக்கி “என்னப்பா, நீயோ திறமைமிக்க சிறந்த வயலின் கலைஞன், உன் திறமையையும் புகழையும் இந்த மதுப்பழக்கத்திற்கு அடகு வைத்து விட்டாயே, இதனால் உன் பெயர்தானே கெடும்” என்று அறிவுரை கூறினார். அந்த அறிவுரையை சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இல்லாத அவன், ஞானியை தகாத கீழான வார்த்தைகளால் திட்டினான். அவனுடமிருந்த … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

விசாகப்பட்டினத்தில் திரு. தேவாசீர் லாறி ஆற்றிய சொற்பொழிவு

09.11.2002-ல் இந்த உலகத்தின் காரியங்கள் மாறிக் கொண்டிருக்கிறது. இறைவனின் திட்டத்தின்படி ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் நடக்கிறது. ஆனால் நம்மால் அதை அறிந்துகொள்ள முடியாது. நாம் அதனுடன் ஓடிச்செல்ல முடியாது. இறைவனுடைய மக்களாகிய நீங்கள் அவருடைய கடிகாரத்தின்படி மாறிக் கொண்டிருக்கிறீர்களா? அதுதான் முக்கியமான கேள்வியாகும். சிலர் ஒரு கார் அல்லது வீடு அல்லது நிலத்தை வாங்குவதற்காக மிகவும் தைரியமாக கடன் வாங்குகிறார்கள். ஓ! அரசாங்கம் தருகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். சில வேளைகளில் இப்படி செய்ய வேண்டும்; அப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறோம். அது நடைபெறுவதில்லை. முதலாவதாக நீங்கள் கடவுளுடைய கட்டளைகள், அவருடைய விதிமுறைகள் மற்றும் நியாயங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நியாயங்கள் என்றால் என்ன? அந்த நாட்களில் ஜனங்கள் தவறு செய்தபோது, அவர்கள் ஓய்வுநாளை பரிசுத்தக் குலைச்சலாக்கினார்களென்றால், கல்லெறியுண்டு கொல்லப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது நமக்கு கிருபை இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். உண்மையான இறைவனின் மக்களுக்கு மட்டுமே கிருபையுள்ளது. நீங்கள் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய முடியும் என்பது அதற்கு அர்த்தமல்ல. ஆகவே எல்லாக் காரியமும் திட்டமிடப்பட்டுள்ளது. அது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள்? தங்களுக்கு சிறப்பான அறிவு இருக்கிறது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாக் காரியத்தையும் ஸ்ரீமந் நாராயணர் … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் வெளியீட்டு விழா

உலக நட்புறவு மையம் நடத்திய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் வெளியீட்டு விழா மற்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் கவியரங்க விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள உமாபதி அரங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி, மாலை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழாவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் கவியரங்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. சென்னையிலுள்ள உலக நட்புறவு மையம் மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல் சிடியினை வெளியிட்டது. இவ்விழாவில் ஆன்மீக கவிஞர்கள், அறிஞர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் இறைவணக்கப் பாடலை திருக்குறள் மாமணி டாக்டர். கோ.ப. செல்லம்மாள் அவர்கள் பாடினார். அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் எம். பாஸ்கர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். MFG Lion Dr. கலைமாமணி ஜி. மணிலால் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார். விஜிபி குழுமத்தின் தலைவர் செவாலியர் கலைமாமணி டாக்டர் வி.ஜி சந்தோஷம் அவர்கள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். சென்னை தொலைக்காட்சியின் உதவி இயக்குனர் முனைவர். திரு. பால இரமணி, தொலைக்காட்சி நடிகர் திரு. சிவன் சீனிவாசன், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் திரு. … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

பழைய சோற்றின் மகத்துவம்

கேஸ் அடுப்பும், குக்கர் சோறும் வந்த பின்னர், பழைய சோறு சாப்பிடுவதே நமக்கு மறந்து விட்டது. குழந்தைகளுக்கு பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகி விட்டனர். ஆனால், பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சென்று அங்கு குடியேறிய நம்மவர்கள் சிலர், தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகளைக் குறித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது. அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆராய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது. உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ்’ பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை உண்பதால், உடல் லேசாகவும், அதேசமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் சுராபுரத்திலே அம்பாஜீ என்பவன் ஒரு பித்தன். அவன் பெற்றோர் மனம் நொந்து வருந்தியிருந்த சமயமும் தாஸர் அங்கே வந்து சேர்ந்த சமயமும் ஒன்றாயிருந்தன. அவர்கள் தாஸரது தாள் பணிந்து அம்பாஜீயை அழைத்து அவருக்கே அர்ப்பணம் என்று சொல்லி விடுத்தனர். தாஸர் உடனே ஐந்து கவிகளினாலே ஸ்ரீ ராமபிரானைத் துதிக்க அம்பாஜீயின் சித்தம் தெளிந்தது. அவன் தாஸருடன்கூடத் தானும் பக்திப் பணியில் ஈடுபடலானான். இப்படியே நாள்தோறும் நடைபெற்றுவர, வெளியூர்களினின்று நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வந்து, காலஷேபங்களிலும் பஜனையிலும் கலந்துகொண்டு திருவருளுக்கு இலக்காயினர். அக்காபாய் மறுபடி வந்து அடி பணிந்து அவருடனேயே இருக்க விரும்பினாள். தாஸர் அவளை நோக்கி, “நீயோ இளம் பெண் அழகும் அறிவும் நிறைந்தவள். இப்படி உள்ள ஒரு பெண் காட்டிலும் மேட்டிலும், சீடர் கூட்டத்திற்கு இடையிலும் வசிப்பது சரியன்று, உனக்கும் நல்லதன்று. மற்றவர்களுக்கும் தீமையே, ராம நாமத்தை உறுதுணையாய்க் கொண்ட நீ வீட்டில் இருந்தால் என்ன, வெளியில் இருந்தால் என்ன? ஆகவே, நீ இப்பொழுது வீடு செல், உரிய காலம் வரும்பொழுது நீ எங்களுடன் தங்கலாம்” என்றார். அழகிய பசுங்குன்று. அதன் நடுவே ஒரு பெரிய சுனை. அருகில் உள்ள மரங்கள் அதன்மீது கவிந்திருந்ததினால் தண்ணீர் முழுவதும் ஒரே இலை மயமாக, அழுகியவும் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

கவிதைகள்

சத்திய நாராயணா! கிருஷ்ணா! கோகுலநாதா! நித்தம் நினைக்கின்றேன், நீரே என் சொந்தம்! சித்தம் தெளிய வைக்கும் ஸ்ரீமந் நாராயணா! புத்தியை அருளுகின்ற புண்ணியனே என் பந்தம்! கண்ணனே! மாயத் திரையகற்றும் விண்ணக கலைஞனே! விண்ணை ஆளும் முழு முதற் தேவனே! என்னை வழிநடத்தும் என் மனக் காவலனே! கண்ணின் மணியாகி என் கருத்தில் நிற்க வாரீர்! பிருந்தாவனத்தின் பிரம்ம சொரூபமே! அருந்தவம் ஆற்றுவோர்க்கு அற்புத ரூபமே! யாருமில்லை உமக்கு இணையென்று திருமறை கூறும் பற்பல சான்று! மனுஜோதியிலுறையும் திவ்விய ஸ்ரீனிவாசனே! தூய மாந்தரின் உயரிய தலைவனே, உத்தம புத்திரனே! வருவீரோ குடியிருக்க அடியேன் மனக்குகையில் தருவீரோ உமதருள் உன் மக்கள் எமக்கு! திருமதி. மணி அர்ஜுனன், உதகை ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா!

அன்பெனும் மந்திரப் பொருளானவன் ஆற்றல்மிகு செம்மை வடிவானவன்! இடற் நீக்கும் இன்பச் சுடரானவன் ஈகைக் குணத்தின் மறு பிறப்பானவன்! உண்மையின் உறைவிடம் ஆனவன் ஊக்கத்தின் உற்ற மருந்தானவன்! எங்கும் எழிலும் நிறைந்தவன் ஏற்றமிகு நல்வாழ்வு அளிப்பவன்! ஐயத்தை அறவே நீக்குபவன் ஒற்றுமையின் வலிமையை உணர்த்துபவன்! ஓங்கார நாதமாய் ஒலிப்பவன் ஒளடதமே பேசி அல்லல் தீர்ப்பவன்! அஃதே வேத நாதம் என்பவன்! பகவத் கீதை எனும் நல்ல பாதை தந்த பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா! நம்பினோர்க்கு நலம் தரும் நாயகனாம் ஸ்ரீமந் நாராயணா! ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை தத்ரூபமாக வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன்! தந்தையின் சொல்லே வேதமென தாயின் தலையை கொய்த பரசுராமன்! மூன்றடி மண்கேட்டு மகாபலியின் ஆணவத்தை அடக்கிய உலகளந்த பெருமாளே! திருக்கோவிலூரை ஆட்சி செய்யும் திருவிக்ரமா! வேண்டும் உந்தன் திருவருளே! – கவிச்செல்வர் ஆ.ச. செல்வராஜு, தேவனூர் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்