தமிழ் | తెలుగు

» Archive

கோடைகால விடுமுறை முகாம் – 2015

கோடைகால விடுமுறை முகாம் – 2015 இறைவனின் பிள்ளைகளாகிய நமக்குள் எந்த ஜாதி, மத, இன, மொழி பேதமில்லாமல், ஒற்றுமை உணர்வினை வளர்க்கும் பயிற்சி கூடமாகிய மனுஜோதி ஆசிரமத்தில், ஒவ்வொரு வருடமும் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மனுஜோதி ஆசிரமத்திலும், ஆந்திர மாநிலத்திலுள்ள அசரடாவிலும் கோடைகால விடுமுறை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அநேக மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு அநேக பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர். பயிற்சி நாட்களில் அதிகாலை 4.50 முதல் 6.00 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். 6.30 முதல் 7.00 மணி வரை யோகாப்பியாச பயிற்சி, அதன்பின்னர் காலை உணவு. 8.30 மணி முதல் 9.30 மணி வரை உடல் உழைப்பு. 10.00 மணி முதல் 1.00 மணி வரை வேத ஆராய்ச்சி வகுப்புகள் நடைபெற்றன. மதிய உணவுக்குப்பின் 2 மணி முதல் 4 மணி வரை ஓய்வு. 4 மணி முதல் 5 மணி வரை விளையாட்டு. மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை. இரவு உணவுக்குப் பின் 9.00 மணி வரை பக்திப் படம் காண்பிக்கப்பட்டது. 9.00 மணி முதல் 11.00 மணி வரை பஜனை நடைபெற்றது. இதில் அனைத்து மாணவ மாணவியர்களும் உற்சாகத்துடனும், … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கிழக்கே தோன்றிய மின்னல் – 4

1986-ம் ஆண்டு கிறிஸ்தவ மத திருச்சபைகளுக்கும், கிறிஸ்தவ மத பாதிரிமார்களுக்கும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா மேலும் சில கேள்விகளை முன் வைத்தார். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் கிறிஸ்தவ மத திருச்சபைகளும், பாதிரிமார்களும் எவ்விதமான பதிலையும் சொல்லவில்லை. கிறிஸ்தவ மதம் தவறான கொள்கையின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவிக்க ஆரம்பித்தார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. அவர் கூறியது:- உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டது இயேசுகிறிஸ்து அல்ல. அவருடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்பவன்தான். இயேசு நாதர் மரித்தபின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் நூறு சதவீதம் கற்பனையான கட்டுக்கதை. கட்டு கதைகளுக்கு செவிகொடுக்கக்கூடாது என்று அப்போஸ்தலராகிய பவுலும்கூட எச்சரித்துள்ளார். இயேசு நாதரை கொல்லுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் சிலுவையை கடவுளின் அடையாளமாகத் தொழுவது எந்தவிதத்தில் நியாயமானது? 2,000 வருடங்களுக்கு முன்பாக வந்த நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு அவர்தான் என்று பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா பிரகடனம் செய்தார். பிலாத்துக்கும் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கும் முன்பாக நடந்தவற்றிற்கும் தான்தான் சாட்சி “இன்று நான் இயேசுவாக உங்கள் முன்பாக நிற்கிறேன்” என்று பிரசங்கித்து, எல்லோர் முன்னிலையிலும் பிரகடனம் செய்தார். அதோடு 1988-ம் ஆண்டில் அவர் மாம்சத்தில் உயிரோடு இருந்தபோதிலும் இயேசுவைப்போல நான் இந்த உலகத்தில் … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

சங்கைமிக்க குர்-ஆன்

  அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-2 வச. 37: பின்னர் ஆதம், சில வாக்கியங்களைத் தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக்கொண்டார்; அவற்றைக் கொண்டு அவனிடம் மன்னிப்புக்கோரினார். அதனால் அல்லாஹ் அவரின் பாவமீட்சியை அங்கீகரித்தான்; நிச்சயமாக அவனே தவ்பாக்களை மிகுதியாக ஏற்பவன்; மிகக்கிருபையுடையவன். வச. 38: நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு மறுமையின் காரியங்களில் யாதொரு பயமுமில்லை; மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.” வச. 39: இன்னும், நிராகரித்து விட்டு, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டுமிருக்கிறார்களே அத்தகையோர் – அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்கள். வச. 130-133: மேலும், தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெளிவுசெய்தோம்; நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார். அவருக்கு அவருடைய இரட்சகன், “நீர் எனக்குக் கீழ்ப்படியும்!” எனக் கூறியபோது அவர் “அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்ப்படிந்து விட்டேன்” எனக் கூறினார். இதையே இப்றாஹீம் தன் மக்களுக்கு உபதேசமும் (வஸிய்யத்தும்) செய்தார். யஃகூபும் இவ்வாறே உபதேசம் செய்தார். என் மக்களே! நிச்சயமாக அல்லாஹ் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

ஏழாம் உபதேசம்

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி ……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது   தேவனுடைய முதற்பேறானவர்                                                      ஞானம்                                                    ஆதிபுருஷரைப் பற்றிய இரகசியம் இவர்களுள் பரிசுத்தாவியினால் (ஜீவ ஆத்மா) நிரப்பப்பட்டவனும், என்னுள் நிலைபெற்றவனும், என்னிடம் பிரத்யேகமான பக்தியை உடையவனும் சிறந்தவன் ஆகிறான். நான் அவனுக்குப் பிரியமானவன், அவனும் எனக்குப் பிரியமானவன் (ஆதிவேள்வியில் பங்கெடுத்தவர்கள்). இவர்கள் எல்லோரும் சிறந்தவர்களாக இருப்பினும் என்னுடைய  பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்ட மனிதனும், ஆதிபலி அல்லது அழிவற்ற யோகத்தில் பங்கெடுத்தவனும் என்னுடைய சுயமே அவனுக்குக் கொடுக்கப்பட்டதுமான அந்த பக்தன், மனதையும் அறிவையும் என்னிடத்தில் அர்ப்பணித்து, என்னிடத்தில் மட்டுமே உறுதியாக நிலைபெற்றிருந்தால் அவன் உயர்ந்த லட்சியத்தை அடைகிறான். நான் கடைசியாக வந்திருக்கும் அவதாரத்திலே, பரமபுருஷராகிய நானே முடிவு என்றும் என்னாலே இவையனைத்தும் உண்டாயின என்றும் தெளிவடைந்த ஆத்மா உணர்ந்து, என்னை வணங்குகிறான். அத்தகைய மகத்தான தெளிவுள்ள ஆத்மாவை கண்டுபிடிப்பது அரிது. நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன். நானே ஜமந் நாராயணர் – அல்லா – கிறிஸ்து இயேசு – தாவீதின் குமாரனாக இருக்கிறேன். நான் இறைவனின் உண்மை உருவம். ஆனால் தங்களுடைய சொந்த அறிவால் உண்டாகும் ஆசைகளால் கவரப்பட்டவர்கள், தங்களுடைய கண்டுவிசுவாசிக்கிற தன்மையினால் தூண்டப்பட்டு என்னுடைய மற்ற உருவங்களையும் மற்ற தெய்வங்களையும் … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

தாய்க்குப் பின் மனைவி இந்திய நாடோடி கொங்கணிக் கதை

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! இறையே அபயம்!                              யாவும் இறையின் உபயம்! ஒரு கிராமத்தில் மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். இவள் உழைத்துப் பாடுபட்டு மகனை நன்றாக வளர்த்து வந்தாள். கவலை தெரியாமல் வளர்ந்து வாலிப வயதை அவன் அடைந்தான். கிழவி ஒருநாள் தன் மகனைப் பார்த்தாள். மகனே இனிமேல் எனக்குத் தள்ளாத காலந்தான். வீட்டுப் பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்து விட்டு நான் நிம்மதியாக சாமிப் பெயரைச் சொல்லிக் கொண்டு, என் வாழ் நாளை நல்லபடியாகக் கழிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். நீ சீக்கிரம் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து கொண்டு வா என்றாள். பையனும் சம்மதித்தான். அம்மா இனிமேல் நீ வீட்டிலேயே இரு. நான் போய் உழைத்துப் பொருள் கொண்டு வருகிறேன். மருமகள் வந்ததும் இந்த அடுப்படி வேலை கூட உனக்கு இருக்காது என்று தாய்க்கு ஆறுதல் கூறினான். பையனுக்கும் திருமணம் ஆயிற்று. புதுமண வாழ்க்கையில் அவன் தனி ஆனந்தம் பெற்றான். வந்த புதிதில் சாதுவாகத் தோன்றிய மருமகள் போகப்போக தன் உண்மை சொரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கினாள். கிழவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மருமகள் பார்த்து சாப்பாடு போட்டால்தான் உண்டு. மகன் தன் தாயை கவனிப்பதே இல்லை. காலையில் வேலைக்குப் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

சந்நியாசியின் கமண்டலம்

காட்டில் சந்நியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நாட்டு அரசரை ஒருநாள் அந்த சந்நியாசி அரண்மனையில் சந்தித்தார். அந்த அரசனும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவனாக விளங்கினான். இதை அறிந்துகொண்ட சந்நியாசி, மன்னரின் ராஜபோகத்திற்கு ஆன்மீகத் தேடல் ஒத்துவராது என்று அலட்சியமாகப் பேசினார். சுகபோகங்களைத் துறந்து காட்டுக்குத் தன்னுடன் வருமாறு சவாலும் விட்டார். அரசனும் சம்மதித்து அரண்மனையைத் துறந்து சந்நியாசியின் பின் வந்தார். காட்டில் சிறிது தூரம் சென்றதும் தன் கமண்டலத்தை அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது. “அடடா, என் கமண்டலத்தை அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். வாருங்கள், அரண்மனைக்குப் போகலாம்” என்று அரசனை அழைத்தார் சந்நியாசி. அதற்கு அரசன் மிக்க பணிவோடு, “நான் அரசையே துறந்து உங்கள் பின்னால் வந்துவிட்டேன். நீங்களோ, ஒரு கமண்டலத்துக்காக அரண்மனைக்குப் போகலாம் என்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டீர்கள் என்று சொல்வதை நான் எப்படி நம்ப முடியும்?” என்றார் அரசன். சந்நியாசி தலைகுனிந்தார். ******* … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

தேட வேண்டிய சொத்துக்கள்

நாம் தேடவேண்டிய சொத்துக்கள் பத்து. இந்தச் சொத்துக்கள் யாராலும், எதனாலும் அழியாதவை. இதனை உடைமை என்று வள்ளுவம் கூறுகிறது. அவை அடக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை, பொறையுடைமை, நாணுடைமை என்பனவாகும். இந்த பத்து சொத்துக்களும் (உடைமைகள்) தேடுபவர் வாழ்வில் வசந்தம் நிச்சயம். ******* … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

சிறுமையைக் கண்டு இகழாதே!

ஒரு தையற்காரர் தனது கடையில் தைத்துக் கொண்டிருந்தார்; அவரது மகன் அவனிடமிருந்து அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை ஒரு அழகிய பளபளக்கும் கத்தரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலை காலருகே போட்டு விட்டு துணியைத் தைக்கலானார். துணி தைத்து முடிந்ததும் அந்த சிறிய ஊசியை எடுத்து தனது தலையிலிருந்து தொப்பியில் குத்தி பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் அவரிடம் அப்பா, கத்தரிக்கோல் விலையுயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது, மலிவானது. ஆனால் அதை தலையில் பாதுகாக்கிறீர்களே அது ஏன்? என்று கேட்டான். அதற்கு தந்தை நீ சொல்வது உண்மைதான். கத்தரிக்கோல் அழகாகவும், மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் அதன் செயல் வெட்டுவது, அதாவது பிரிப்பதாகும். ஆனால் ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன்செயல் சேர்ப்பதாகும் என்றார். உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து – வினைத் திட்பம் உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அதனால் ஒருவரது உருவின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாது. ******* … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து