தமிழ் | తెలుగు

» Archive

பிப்ரவரி 2015

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை “ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையடைந்த தினவிழா” கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் அநேக பக்தர்கள் கலந்துகொண்டனர். மலேசியாவிலிருந்தும் சில பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அனைவரும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னத்தை உணர்ந்தனர். ஜனவரி மாதத்தில் வேலூர், திருப்பதி மற்றும்  வேறு சில இடங்களுக்கும் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை மக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பால் மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களில் சிலரும் சென்று கைப்பிரதிகளை விநியோகித்தனர். ஜனவரி மாதத்தில் நானும், என்னுடைய சகோதரனும் ஆன்மீக சேவைக்கான இந்தியாவின் நட்சத்திரம் 2015 என்ற விருதிற்கு தெரிந்தெடுக்கப்பட்டதினால் பெங்களூருக்கு சென்று, முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடாவிடமிருந்து விருதினைப் பெற்றுக்கொண்டோம்.   “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பதற்கிணங்க பூலோக வைகுண்டமாகிய மனுஜோதி ஆசிரமத்தில் மகிமையடைந்த தினவிழாவின் போதும், கல்கி ஜெயந்தி விழாவின்போதும் கலப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. முற்காலத்தில் திருமணங்கள் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞால முழுதும் நயந்தளந்தான் – வாலறிவன் வள்ளுவரும் தங்குறள் வெண்பாவடியால் வையத்தார் உள்ளுவவெல்லாமளந்தார் ஓர்ந்து” என்பது பரணர் பாடிய பாட்டாகும். இதின் பொருளாவது முன்னொரு காலத்தில் திருமால் குறுகிய வடிவமுடைய வாமனாய் தோன்றி, பின் நெடுமாலாக ஓங்கி உயர்ந்து தன் இரண்டடியால் உலக முழுதும் ஒருங்கேயளந்த காட்சிபோல, அறிவினால் மேம்பட்ட ஆசிரியர் வள்ளுவரும் தம் குறுகிய குறளடியிரண்டால் மக்கள் கருதும் கருத்தையெல்லாம் அளந்து விட்டார். இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளில் உடமைகள் என்னும் தலைப்பில் 10 அதிகாரங்கள் உள்ளன. அதில் முதல் உடைமை அன்புடைமை. ‘அன்பு’ என்பது அதை நாம் உணரும் இடத்திற்கேற்ப வேறு பல பெயர்களை கொண்டதாக உள்ளது. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாம் இறைவன்பால் வைத்த அன்பு பக்தி என்றும், மனைவிமேல் வைத்த அன்பு காதல் என்றும், தன்னைப் போன்றவர்மேல் வைத்த அன்பு நட்பென்றும், நாட்டின்மேல் வைத்த அன்பு நாட்டுப்பற்று என்றும், பிற உயிர்கள்பால் அன்பு செலுத்துவதை ஜீவ காருண்யம் என்றும், தாய்மொழிமேல் வைக்கும் அன்பு மொழிப்பற்று என்றும், எஜமான்மேல் வேலைக்காரன் வைக்கும் அன்பு விசுவாசம் என்றும், மாணவர்கள் ஆசிரியர்கள்மேல் வைக்கும் அன்பு குருபக்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்பிற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில் ஒரு மனிதன் … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

அல்லா இயேசு நாராயணா நீர் மூவரும் ஒருவர் தானய்யா எம்மை மீட்க லஹரியாக வந்தீரய்யா நீர் வந்தபின் உங்கள் இடத்தை அடைந்தோமைய்யா! மூன்று நதியை ஒரே கடலில் சேர்த்தீரய்யா மூன்று வேதத்தை ஒரே வேதமாக விளக்கினீரய்யா மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவரைய்யா மூன்று அடையாளத்தை வெறுமையாக்கி விட்டீரய்யா! நீரில்லா குளத்தில் மீனாக துடித்தேனய்யா உந்தன் அன்பு நீர்பட்டதால் மகிழ்ந்தேனய்யா நீரில் உப்புக்கல்லாய் உம்மில் கரைந்தோமையா சேற்றில் கலந்த நீராக தெளிந்தோமையா! – A. வேணுகோபால், கீரிப்பட்டி ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

அய்யா வாழ்க!

மனுஜோதி என்ற மனித ஜாதி மதங்கள் கருத்தை மனமாய் மகிழ்வாய் எங்கும் மங்களம் வாழ்ந்திட மார்க்கம் புதிதாய் மதியால் சூழ்ந்திட அனுசரிப்புடனே யாரையும் கூட்டி ஆனந்தம் பெறவே ஒருமையும் நீட்டி அங்கும் இங்கும் எங்கும் சூழ்ந்து அணியாய் ஈர்க்கும் அய்யா வாழ்க! – பழனிச்சாமி, கோவை ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

கற்றார் போற்றிடும் லஹரி மகான்!

கருணையைப் பொழிந்திடும் தூயன் மகான் கற்றார் போற்றிடும் ஸ்ரீ லஹரி மகான் கடமையை செய்திட உதவும் மகான் காருண்ய மூர்த்தி ஸ்ரீ லஹரி மகான்! வருத்தம் போக்கிடும் நல்ல மகான் ஸ்ரீ லஹரி என்றிடும் ஜீவன் மகான் குவலயம் காத்திடும் உயர்ந்த மகான் குறிப்பறிந் தருளும் ஸ்ரீ லஹரி மகான்! ஒன்றே குலமென்று சொன்ன மகான் ஒருவனே தேவனென்று பதித்த மகான் ஒற்றுமை நமக்கு வழிகாட்டிய மகான் உலகநட் புறவிற்கு ஸ்ரீ லஹரி மகான்! உலகில் பகையாற்றி வாழும் மகான் உன்னத வாழ்வுதரும் நித்திய மகான் சத்திய நகரம் வாழும் மகான் மனுஜோதி ஆசிரம பூரண மகான்! நமக்கு எல்லாம் ஒளிதரும் மகான் நன்மைகள் வழங்கி போற்றும் மகான் பெரியார், சிறியார் காக்கும் மகான் பாசம் அருளும் ஸ்ரீ லஹரி மகான்! – கவிஞர். எஸ். இரகுநாதன், சென்னை ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

சங்கமம்

முக்கூடலில் சங்கமம் முக்கடலும் சங்கமம் மும்மதங்களும் சங்கமம் மும்மூர்த்திகளும் சங்கமம்! சத்திய நகரத்தில் சங்கமம் சத்தியமே ஜெயத்தில் சங்கமம் சமய சகோதர சாத்வீக சங்கமம் சந்ததி சகித சங்கமம்! லஹரி கிருஷ்ணாவில் சங்கமம் லட்சோப லட்ச மக்கள் சங்கமம் லட்ச ஒளியில் சங்கமம் லயித்துப் போய் நிற்பவர் சங்கமம்! உபன்யாச சங்கமம் உலகை உய்விக்க சங்கமம் உறவை வளர்க்க சங்கமம் உயிர் வாழ உரமிட்டவருக்கே சங்கமம்! – R. தங்கவேல்,  ஓய்வுபெற்ற  இரயில்வே நிலைய மேலாளர், திருநெல்வேலி. ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

நீயருள வேண்டும்!

கலியுகத்தைக் காக்கவந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கவலைகளைத் தீர்க்கவந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நலிந்தவர்க்கு நாளெல்லாம் வாழ்வுதர வேண்டும் நாடுநலம் பெறவேண்டி அனுகிரகமும் வேண்டும்! கல்கியாக வாழவந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கடவுளுக்கு கடவுளனாய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா வாழ்வியலின் தத்துவத்தை தந்தருளிச் செய்தவா வள்ளலுக்கு வள்ளலாக வந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாடிவந்த மக்களுக்கு நாலும் செய்தாய் கிருஷ்ணா நிலையான வாழ்வுக்கு வழியமைத்தாய் கிருஷ்ணா தீயவற்றை வெல்லவேண்டும் என்றுரைத்தாய் கிருஷ்ணா தீயவர்க்கும் நேர்வழியைக் காட்டுகின்றாய் கிருஷ்ணா! – கே.வி. ஜனார்தனன், காஞ்சிபுரம் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

கடிதங்கள்

பேரன்புடையீர், தங்களின் இந்த மனுஜோதி மாத இதழ் எனக்கு கிடைத்ததற்கு மிக்க நன்றி. இந்த இதழ் பல தகவல்களையும், ஆன்மீக சிந்தனையும் தடையின்றி நம் மனதில் நல்ல சிந்தனைகளை வளர்க்கிறது. தொடர்ந்து இந்த இதழை எனக்கு அனுப்பி ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த இதழை படிப்பதால் நாம் வாழ்வில் பல முன்னேற்றங்களையும், இறைவனின் பல வழிகாட்டுதலையும் காண முடிகிறது. தொடர்ந்து படிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இந்த இதழ் வீட்டிற்கு வந்ததற்கு மிக்க நன்றி.   – s.M. அகமது அலி, மேலப்பாளையம் ****** ஐயா, ஜனவரி 2015 மனுஜோதி இதழை படித்தேன். மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் இந்த இதழ் மாதம் ஒன்று வரக்கூடாதா என்ற ஆவல் ஏக்கம் மனதிற்குள் வருகிறது. பொதுவாக இந்த இதழை கையில் எடுத்தாலே ஒருவித மகிழ்ச்சி. அதைப் படித்தாலே மனதிற்கு ஒரு தெளிவு. கிருபானந்த வாரியாரின் “ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றமே” கட்டுரை அருமை. “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்”, “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்”, “சித்தர் வாக்கு” கட்டுரைகள் எல்லாம் படிக்கத் தகுந்தவை. நன்றி.  – பொதிகை சு. முத்துச்சாமி, தூத்துக்குடி ****** என் இனிய ஆசிரியர்க்கு, இம்மாத இதழ் கிடைத்தது. நலம். நலமறிய ஆவல். சித்தர் வாக்கு பற்றிய சிறப்பான தகவல் மிக பயன் தந்தது. பாராட்டுக்கள். … Read entire article »

Filed under: வாசகர் கருத்து