தமிழ் | తెలుగు

» Archive

கடிதங்கள்

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். தங்கள் ஆசிரம செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆன்மீக நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற உங்கள் சேவை போற்றத்தக்கதாக உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரயில் பயணத்தின்பொழுது காஞ்சிபுரத்தில் இறங்கிய ஒரு அன்பர் என்னிடம் தந்த மனுஜோதி என்னை ஈர்த்தது. பிறகு தாங்கள், என் கடிதத்தின் பெயரில் சில புத்தகங்களை அனுப்பினீர்கள். அவை படிக்கவும், கடைபிடிக்கவும் தக்கவை. “அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ்” மேற்கோள் நேர்மையைச் சொல்கிறது. எம்மதத்தையும் உயர்த்தி, தாழ்த்தி எழுதுவதில்லை, அந்தந்த மதத்தின் சிறப்பான விஷயங்களையே சொல்கிறீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் 2014 இதழில் வெளியான திரு. ஒளவை நடராஜன் அவர்களின் சொற்பொழிவு அருமை. அருமையான பல விஷயங்களை வெளியிடும் தங்களுக்கு என மனமார்ந்த நன்றி. – T. K. சுப்பிரமணியன், விழுப்புரம் ****** பேரன்புடையீர், மனுஜோதி இதழில் எல்லா கட்டுரைகளும் மிக மிக அருமை. படித்து இன்புற்றேன். – சி. மனோ ரஞ்சித்குமார், புதுக்கோட்டை ******* ஐயா, “மனுஜோதி” ஆசிரியருக்கு எனது வணக்கத்தைத் தொpவித்து கொள்கிறேன். நான் உங்கள் இதழை எனது நண்பரின் வீட்டில் படித்தேன், உங்கள் இதழில் உள்ள அனைத்து கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. மனிதனாக பிறந்த அனைவரும் இந்த “மனுஜோதி” இதழை படிக்க வேண்டும். அப்போதுதான் மனிதனின் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

இறைவன் வேலைக்காரனைப்போல ஓடி வருகிறார்

இறைவனைத் தேடுகிறேன் என்று கூறுபவர்கள் எல்லாரும் வேதங்களுக்கு அப்பாற்பட்டு வெளியேதான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவன்தான் ஓ! மனிதனே, ஓ! மனுஷியே என்று ஒரு வேலைக்காரனைப்போல ஓடி வருகிறார். – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ****** … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

கிழக்கே தோன்றிய மின்னல் – 2

பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை டேல் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் தீர்க்கதரிசி பிரன்ஹாமின் கடவுள் பணியில் பிரதானமான பங்கு வகித்தவர். அவர் அமெரிக்காவில் உள்ள ‘ஹார்ட் ஃபோர்ட்’ என்னும் நகரத்தைச் சேர்ந்தவர். 1967-ம் ஆண்டு, முதன் முதலில் பாலாசீர் லாறியை அவர் சந்தித்தார். அது முதற்கொண்டு, பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் கருத்துகளுக்கு தன்னைப் பறி கொடுத்தார். மனிதன் சந்திரனில் கால் வைத்த தினத்தன்று பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவிற்குள் கடவுள் இறங்கி வந்த செய்தியை உலகம் முழுவதும் எடுத்து கூறியவர் இவர்தான். இதனால் ஏற்பட்ட பல்வேறு விதமான எதிர்ப்புகளையும் மீறி இந்த காரியத்தை அவர் செய்து முடித்தார். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாதான் மனுஷகுமாரன் என்று தெளிவாக உணர்ந்து கொண்ட டேல் ‘கிழக்கிலிருந்து தோன்றிய மின்னல்’ என்ற ஆங்கில நூலை வெளியிட்டார். இந்த தெய்வீகக் காரியங்கள் அனைத்திலும் அவருக்கு உதவியாக இருந்தவர் அவருடைய மகள் சுசி பேக்கர். இவர்கள் இருவரும் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவுடன் இந்தியாவில் 5 ஆண்டுகள் தங்கி இருந்தனர். லாறி முத்துக்கிருஷ்ணா அமெரிக்காவிலிருந்த சமயத்தில் அவருக்கு உதவியாக அவருடன் தங்கியிருந்தவர் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த ரோஜர் ஜெரார்டு என்பவர். அமெரிக்காவில் லாறி முத்துக்கிருஷ்ணா சென்ற இடமெல்லாம் இடியும், மின்னலும், மேகங்களும், சுழல் காற்றும் புடைசூழ்ந்து வந்ததை கண்டு … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

ரெயின்போ FM புகழ் சோமாஸ்கந்தமூர்த்தி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

45-வது கல்கி ஜெயந்தி விழாவில் பழமையும், புதுமையுமாக மாறிக்கொண்டிருக்கிற இந்த வளாகமான மனுஜோதி ஆசிரமத்தை நிர்வகித்து வருகிற நிர்வாகிகளை வாழ்த்துகிறேன். 45 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவை நடத்துகிற ஆற்றலைத் தந்த இறைவனை வாழ்த்தி, இறைவணக்கம் பாடிய மலேசிய குழந்தைகளையும் வாழ்த்துகிறேன். உலகத்தின் பல பகுதிகளிலிருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிற இந்த பெருமக்களையும் வாழ்த்துகிறேன். 1998-ம் ஆண்டிலே இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு கல்கி ஜெயந்தி விழாவிலும் கலந்துகொள்வதற்கு ஆற்றுப்படுத்திய உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்கிறேன். மனிதன் என்பவன் ஆறறிவு உள்ளவனாகத்தானே இருக்கிறான். ஓரறிவு உயிர் என்பது தொடு உணர்வை மட்டுமே கொண்டது. இரண்டறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வையும், சுவையுணர்வையும் கொண்டது. மூன்றறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு என்கிற மூன்று தன்மைகளை ஏற்றுக்கொண்டதாகும். நான்கறிவுள்ள உயிரினம் என்பது தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, சப்தம் என்கிற ஒலியுணர்வை அறிந்துகொள்கிற ஆற்றலைக் கொண்டது. ஐந்தறிவு என்று வருகிறபோது அந்த உயிரினத்திற்கு தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, ஒலியுணர்வு, ஒளி என்கிற வெளிச்சத்தை உணர்கிற உணர்வு என்கிற இந்த ஐந்து உணர்வுகளையும் கொண்டதுதான் ஐந்தறிவுள்ள உயிரினம் என்று வழங்கப்பட்டது. மனிதர்களாகிய நமக்கு ஆறறிவு என்று வகுத்தார்கள். எப்படி? தொடு உணர்வு, சுவையுணர்வு, வாச உணர்வு, … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றமே!

சீதையை எவ்வாறு அடைவது என்று எண்ணி எண்ணி ராவணன் ஏங்கினான். ராமரை எவ்வாறு அடைவது என்று எண்ணி சூர்ப்பனகை ஏங்கினாள். இருவரும் மாயாவிகள். மாயம் செய்வதில் வல்லவர்கள். திடீரென்று ராவணனுக்கு ஒரு யுக்தி தோன்றியது. ‘சீதை ராமருடைய வரவையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாம் ராமர் வடிவுடன் சென்றால் கணவன் என்று ஓடி வந்து என்னைத் தழுவிக் கொள்வாள்’ என்று எண்ணி ராமருடைய வடிவத்தைக் கொண்டு புறப்பட்டான். சூர்ப்பனகை, நாம் சீதை வடிவம் எடுத்துக் கொண்டு கிஷ்கிந்தையில் சீதைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ராமன் முன் போய் நின்றால், அவன் நம்மை கட்டியணைத்துக் கொள்வான். இது சரியான யுக்தி’ என்று கருதி, சீதை வடிவத்துடன் புறப்பட்டாள். மாறு வடிவம் கொண்ட ராவணனும், சூர்ப்பனகையும் அசோகவனத்தில் சந்தித்தார்கள். சூர்ப்பனகையைச் சீதையென்று ராவணன் கருதினான். ராவணனை ராமர் என்று சூர்ப்பனகை கருதினாள். “மானே! தேனே! மயிலே! குயிலே! உன்னைத் தேடி வந்தேன்” என்றான் ராவணன். ‘என் பிராணாதிபதியே! உமது வரவுக்காக இத்தனை நாள் காத்திருந்தேன். தங்கள் வரவினால் நான் மகிழ்ச்சியடைகின்றேன்’ என்றாள் சூர்ப்பனகை. ஒருவரையொருவர் நெருங்கினார்கள். குரலில் மாற்றம் இருந்தது. ராவணன், இது சீதை குரல் அல்லவே என்று ஐயுற்றான். சூர்ப்பனகையும், இது ராமர் குரல் அல்லவே என்று கருதிச் சந்தேகப்பட்டாள். அவர்களின் மாய வடிவம் நீங்கிற்று. சூர்ப்பனகையைக் கண்டு ராவணன் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

நான்கு கேள்விகள்

அந்த அரசனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் சகலகலா வல்லவன்; அழகன். அவனுக்குப் பெண்தருவதற்காக பல தேசங்களிலிருந்து பெண்ணைப் பெற்றவர்கள் முன் வந்தனர். ஆனால் அரசன் தான் கேட்கும் நான்கு கேள்விகளுக்கும் சரியான பதில் கூறும் பெண்ணே தன் மருமகளாக வர வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தான். அரசகுமாரிகள், மந்திரிகுமாரிகள் என எவரும் ஏற்ற பதில் கூறவில்லை! ஒரு நாள் அரசன் முன்பு பால்காரி ஒருத்தி வந்து வணங்கி, “பிரபு! உங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறப் பதவி, பணம், அந்தஸ்து இவை அவசியமா?” என்று கேட்டாள். அரசன் அவளது துணிச்சலை ரசித்து, “இல்லை” என்றான். ‘சரி, நாளை சபைக்கு வருகிறேன்’ என்றாள். அவ்வாறே மறுநாள் வந்தாள். அவளிடம் முதல் கேள்வி கேட்கப்பட்டது. ‘நிரந்த்தரமாகக் கரைவது எது?’ அவளது பதில்் ‘ஆயுள்! நாம் பிறந்த கணத்திலிருந்து நம் ஆயுள் கரைய ஆரம்பிக்கிறது. வளர்ச்சி இதன் இன்னொரு முகம். பிறகு இறங்குமுகமாகிறது! ஓர் உடலில் கரைந்து போன ஆயுள் திரும்பி வராது’ என்றாள். அரசன் மகிழ்ந்தான். இரண்டாம் கேள்வி் ‘நிரந்தரமாக வளருவது எது?’ அவளது பதில்் ‘பசி! வயிற்றுப் பசி ஒன்றேயல்ல, பணம், சுகம் அதிகாரம் இப்படிப் பல லௌகீக ஆசைகளின் பசி வளர்ந்து கொண்டிருக்கும்; இவற்றுக்கு … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு: நாசா

சூரியனில் மிக வீரியமான பிழம்புகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. அந்தச் சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும். இந்தச் சூரிய நடுக்கம் ஒவ்வொறு 11 ஆண்டுகளுக்கும் உச்சத்தை அடையும். அப்போது அதன் பிழம்புகள் மிக வீரியத்துடன் இருக்கும். வெளிப்படும் சில நெருப்புப் பிழம்புகளின் அளவு பூமியின் அளவைப் போன்று 14 மடங்கு அதிகமாக இருக்கும். அதிலிருந்து கதிரியக்கமும் ஏற்படும். இந்தச் சூரிய நடுக்கம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள விண்வெளி மையமான நாசா தன்னிடம் உள்ள ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி அண்ட் சோலார் ஹீலோஸ்பெரிக் அப்சர்வேட்டரி’ எனும் கண்காணிப்புக் கருவி மூலம் சூரிய நடுக்கத்தை ஆராய்ந்து உறுதி செய்துள்ளது. இதுபற்றி நாசாவின் செய்தித் தொடர்பாளர் கேரன் ஃபோக்ஸ் கூறும்போது, “இந்தச் சூரியப் பிழம்புகள் பூமியில் உள்ள ஜி.பி.எஸ். மற்றும் இதர தொலைதொடர்பு சிக்னல்களைப் பாதிக்கும்” என்று கூறியுள்ளார். நாளடைவில் சூரியப் பிழம்புகள் குறைந்துகொண்டே வந்தாலும் கூட சூரிய நடுக்கம் அதன் குறைந்தபட்ச அளவை அடையும்வரை இந்தப் பிழம்புகளின் தாக்கம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் மனிதர்களுக்கோ, பூமியில் உள்ள … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் சத்திரபதி சிவாஜி உபதேசம் பெறுதல் நாள்தோறும் பஜனையும், உஞ்சவிருத்தியும் நடந்து வந்தன. கிடைத்ததை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து, பாகவதர்களுக்கு ஈந்து, பிறகு தாமும் உண்பார். பிறகு காட்டை நோக்கிச் சென்று தவத்தில் ஈடுபடுவார். ஒருநாள் சத்திரபதி சிவாஜி காட்டிற்கு வேட்டையாட வந்தார். காடு ஒரே அமைதியில் ஆழ்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். விலங்குகளின் கூட்டத்திற்கிடையே ஒரு பெரியவர் கண்மூடியவராய்ப் பாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. ‘நாம் புகுந்தால் இந்த மிருகங்கள் கலைந்து ஓடி அவரைத் துன்புறுத்தவும் கூடும்’ என்று அஞ்சியவராய் மறுநாள் அதிகாலையிலேயே வந்து தரிசிப்போம் என்று திரும்பினார். மறுநாளும் அவ்வாறே அவர் வந்து சேரும் சமயத்தில் விலங்குகளின் கூட்டம் காணப்பட்டது. உள்ளே புகமுடியாத நிலையில் திரும்ப நேர்ந்தது. உரிய காலம் வரவில்லை என்று ஏங்கினார் சிவாஜி. பிறகு ஒருநாள் திரும்பும்பொழுது, எழுதப்பட்ட சில ஓலைகள் கிருஷ்ணா நதியிலே மிதந்து வருவது தெரிந்து பணியாட்களை ஏவி எடுக்கச் செய்தார். அவற்றில் அழகிய கருத்துக்கள் அமைந்த கவிதைகள் மராத்தி மொழியிலே எழுதப்பட்டிருந்தன. அடியிலே ராமதாஸ் என்ற கையொப்பமும் கண்டு, அவற்றை எழுதியவர் காட்டிலே தாம் கண்ட பெரியவராகத்தான் இருக்க வேண்டும் என்று சிவாஜி நினைத்தார். அந்த அருமையான கவிதைகளைச் சபையோருக்கும் படித்துக் காட்டி வியந்தார். சிவாஜி நாள்தோறும் சென்றும் சந்திக்க இயலாமல் திரும்புவதும், … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்