தமிழ் | తెలుగు

» Archive

45-கல்கி ஜெயந்தி விழா

பத்மஸ்ரீ அவ்வை நடராசன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு அன்பார்ந்த தலைவர் பெருந்தகை மீனாட்சி சுந்தரம் அவர்களே, நீதியரசராகத் திகழும் பெருந்தகை வள்ளிநாயகம் அவர்களே, என் வாழ்நாளில் பல்லாண்டுகளாக என்னோடு பரிவும், உறவும் காட்டி உலகமெல்லாம் வலம் வருவதற்கு வழிகாட்டியாகத் திகழும் பெருந்தகை டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்களே, அறிஞர் பெருமக்களே, நண்பர்களே, காதார கேட்டு மகிழத்தக்க களிப்பூட்டும் பாடல்களையெல்லாம் ‘அமிர்த கானம்’  என்ற பெயரில் வடித்திருக்கும் நண்பர் மதுசூதனன் அவர்களையும் நான் மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன். எளிய மக்கள் பல நூறு மைல்களைக் கடந்து, நாம் கலி தெலுங்கு என்று பாராட்டுகிற ஆந்திர மாநிலத்தின் மக்களெல்லாம் இங்கே ஆர்வத்தோடு கூடியிருப்பதைக் காணும்போது நமக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொதிகை ஆற்றங்கரையின் புகழ் வளர்க்கின்ற ஒரு பெருநகரம் என்று பாராட்டப்படுகிற நெல்லையை அடுத்த பகுதியில் ஒரு பல ஏக்கர் பரப்பளவில் இப்படிப்பட்ட ஒரு சமய நல்லிணக்க சன்மார்க்க சபையை, மனுஜோதி ஆசிரமத்தை நடத்துகிற முயற்சியை நான் கண்டு வியக்கின்றேன்.மதம் என்று சொன்னால் கொள்கை என்றுதான் பொருள். தமிழிலேகூட ஏதாவது ஒரு கருத்தை வலியுறுத்துகிறார்கள் என்று சொன்னால் அது அவருடைய மதம் என்று சொல்லுவார்கள். மதம் என்று சொன்னால் கொள்கைதான். கொள்கை ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கையாக இருக்கும். கணவருடைய கொள்கையும், … Read entire article »

Filed under: பிரமுகர்களின் உரை

தங்களின் “மனுஜோதி” (மே-ஜுன்-ஜூலை 2014) காலாண்டு இதழை 4 தினங்களுக்கு முன் படித்துப் பரவசம் அடைந்தேன். பல்வேறு உலக நடப்புக்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தங்களின் அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ் கூறும் விளக்கங்கள் யாவும் நூதனமாகவும், சிந்தனையைக் கிளறும் விதத்திலும் அமைந்துள்ளன என்றால் அது மிகையில்லை. அடுத்த முறை தமிழகம் வரும்போது மனுஜோதி ஆஸ்ரமத்துக்கு அவசியம் வரவேண்டும்  என்று பேராவல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அதற்கு உதவ வேண்டும்.  – ராம முத்தையா, மலேசியா ****** … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கடிதங்கள்

பேரன்புடையீர், வணக்கம். நான் கேட்டுக் கொண்டபடி தங்களின் மனுஜோதி நூலை நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். தங்களின் சேவைகள், ஆன்மீக பணிகள் மற்றும் அனைத்துக் கட்டுரைகளும், செய்திகளும், போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் ஏற்றது. ஜுன், ஜூலை இதழில் ஆசிரியர் கட்டுரையும், சைவ நெறியை கடைபிடிக்க முடியுமா? கட்டுரையும் மிக அருமை. தங்கள் பணி தொடர இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன். – த. கதிரேசன், திருநெல்வேலி ******* மனுஜோதி ஆசிரம தலைவர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மனுஜோதி இதழ் கிடைக்கப் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி. வைரமாவதற்கு விரும்பு, ஆன்மீகப் பார்வையில் திருக்குறள், எப்போது ஞானம் கிடைக்கும் என்ற தலைப்பில் வெளிவந்த கருத்து மிக மிக பயனுள்ளதாக இருந்தது. – ம. பொன்னர், திருச்சி ******* மனுஜோதி இதழ் கிடைத்து வருகின்றது. இடம்பெறும் கருத்துக்கள் சிறப்பாக இருக்கின்றது. சைவ நெறி, கீதாஞ்சலி, சீடன் ஆன மூடன், எது உண்மையான அன்பு, ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் பயனுள்ளவையாக உள்ளது. வாழ்த்துக்கள். – S. மாதவ குமார், ஈரோடு ******* மனுஜோதி படித்தேன். சீடன் ஆன மூடன் மிகவும் அருமை. அதை சொன்ன K. P. பாலு அவர்களுக்கு மிகவும் நன்றி. அதேபோல் “எது உண்மையான அன்பு” என்ற தலைப்பு இக்காலத்திற்கும் பொருந்தும் தலைப்பு. அதில் வரும் கதையை இக்காலத்தில் அனைவரும் படிக்க (முக்கியமாக முதியவர்களைப் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தியைக் கேட்கும்போது, அந்த தாய் அதிக சந்தோஷம் அடைகிறாள் என்பது இக்குறளின் கருத்தாகும். ஒரு தாய் இயற்கையாக குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அக்குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு, தான் அடைந்த அத்தனை துன்பங்களையும் மறந்து மகிழ்ச்சி அடைகிறாள். குழந்தை இப்போது தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதன் மூலம் உலகிற்கு வந்துள்ளது. இவ்வாறு இயற்கையின் வழியில் பிறப்பது மட்டுமே குழந்தைக்குச் சிறப்பல்ல. இந்த இயற்கைப் பிறப்பைத் தாண்டியும் பிறப்பு ஒன்றைக் குழந்தை அடைய வேண்டும். இயற்கையாக பிறப்பது மட்டுமே ஒருவனுக்கு சிறப்பை அளிக்காது. அதற்கடுத்தபடியாக ஒரு மனிதன் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும். அதுவே சாதாரண மனிதன் ‘சான்றோன்’ என்று அழைக்கப்படுவதாகும். முதற் பிறப்பு தாய்ப் பறவையின் வயிற்றிலிருந்து வெளிவரும் முட்டையைப்போல உள்ளது. சான்றோனாவது முட்டையிலிருந்து தானாகவே வெளிவரும் குஞ்சு என்ற நிலையே இரண்டாம் பிறப்பு அல்லது மறுபிறவியாகும். சான்றோனாக இரண்டாம் பிறப்படைந்த நிலையே முழு வளர்ச்சியடைந்த நிலையாகும். உருவத்தால் மனிதர்களாக காட்சி அளிக்கிறவர்கள் யாவரும் மனிதர்கள் அல்ல. அப்படியானால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்? இறைவனைப்போல காட்சியளிப்பவனே மனிதன். இறைவன் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தான் என்று விவிலியம் கூறுகிறது. இறைவனின் சாயலில் யார் உள்ளாரோ அவனே சான்றோன். … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

18-9-1987- திருநெல்வேலியிலுள்ள ஊர்மேலழகியான் என்ற கிராமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் சொற்பொழிவு ஒரு மார்க்கத்திலிருந்து இன்னொரு மார்க்கத்திற்கு ஜனங்களை மதம் மாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டமல்ல இது. நான் உங்களை இந்தியர்களாக நேசிக்கிறேன். இன்றைக்கு அநேகர் என்னை வெளிநாடுகளிலிருந்து தொலைபேசியில் கூட அழைக்கிறார்கள். ஆனால் இந்திய மக்களிடம் பேசி அவர்கள் யார் என்பதை உணர வைக்க விரும்புகிறேன். நீங்கள் யார் என்பதை உணர்ந்தாலொழிய உங்களுடைய ஸ்தானத்தை நீங்கள் உரிமை கொண்டாடவே மாட்டீர்கள். நான் எல்லா வேத புராணங்களையும் ஆராய்ந்திருக்கிறேன். பவிஷ்ய புராணம், உபநிஷத்துக்கள், பைபிள், குர்-ஆன், பகவத் கீதை ஆகிய புத்தகங்களை ஆராய்ந்திருக்கிறேன். அதிலே பெரிய மார்க்க தலைவர்கள் அறியாத அநேக இரகசியங்கள் அவர்களுடைய புத்தகங்களிலேயே இருக்கிறது. 1969 -ம் வருடத்தில் நான் அமெரிக்காவிலே பிரயாணம் செய்யும்போது அநேக அமெரிக்கர்கள் எனக்கு அதிகமாக பணம் கொடுத்து என்னை அவர்களுடைய பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் என்னுடைய தேசத்தை நேசிக்கிறேன். 1942-ம் ஆண்டு காந்தியடிகளோடு நான் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடினவன். என்னுடைய படிப்பு, அந்தஸ்து எல்லாம் அந்த சமயத்திலே அப்படியே போய்விட்டது. அதன்பிறகு அரசியல்வாதியாக விரும்பினேன். அந்த சமயத்திலே கடவுள் என்னை சந்தித்தார்.  ஈ.வெ.ரா பெரியார் அவர்களையும் கடவுள் அதிக சக்தியோடு உபயோகித்துக் … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

கிழக்கே தோன்றிய மின்னல் – 1

1983, 1986-ம் ஆண்டுகளில் பாண்டிச்சேரி மாநிலத்தில் கடவுளின் நற்செய்தி கூட்டங்களை பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா நடத்தினார். இந்த கூட்டங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒஹையோ மாகாணத்தைச் சேர்ந்த சகோதரி சுசி பேக்கரும், ஜெர்மனியைச் சேர்ந்த சகோதரி எல்லா குந்தரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டார்கள். தீர்க்கதரிசி பிரன்ஹாம்தன்னுடைய சொற்பொழிவிலே இயேசு கொல்லப்படவில்லை என்பதை மறைமுகமாக தன் பக்தர்களுக்கு அறிவித்தார். கிறிஸ்து 1900 ஆண்டுகளுக்கு முன்பாக சிலுவையில் கொல்லப்பட்டாரா? இல்லை. இந்த கேள்வியை கேட்டதும் அல்லாமல் கிறிஸ்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக தம்மை ஜீவ பலியாக அர்ப்பணித்தார் என்று கூறியுள்ளார். இது ஒரு மாபெரும் இரகசியம். பல்வேறு மத போதகர்கள் கடவுள் நிகழ்த்திய இந்த பிரம்ம யக்ஞம் என்னும் ஆதிவேள்வியை இருட்டடித்து  விட்டனர். இதை ஆதியிலே நிகழ்த்தியவர் தான் மனுஷகுமாரனாக அவதரித்த பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இந்த மகா புருஷரை பற்றி சொல்வதற்கு என் நா எழவில்லை. இவர் எந்நேரத்திலும் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்துவார் என தீர்க்கதரிசி பிரன்ஹாம்  கூறியுள்ளார். பூமியில் அவதரித்த ஆதி புருஷரின் கலியுக காரணப் பெயர்தான் மனுஷகுமாரன் அல்லது கல்கி மகா அவதாரம். வேதங்களின் நாயகன் இவரே. இவர் தான் கிறிஸ்து இயேசு என்றும் அல்லாஹ் என்றும் ஸ்ரீமந் நாராயணர் என்றும் வேதங்களில் அழைக்கப்படுகிறார். … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

மட்டாஞ்சேரியில் குடியேறிய யூதர்கள்

கொச்சி, மட்டாஞ்சேரிக்கு ஒரு தனி சிறப்பு இருக்கிறது. இங்கு யூத இன மக்கள் வாழ்கின்றனர். கி.மு. 605-ல், பெர்ஷிய மன்னரால் நாடு கடத்தப்பட்ட, பத்து யூத குடும்பத்தினர், கேரளா கொடுங்கல்லூரில் குடியேறினர். பின், பாபிலோன் மற்றும் ஜெருசலேமில் இருந்தும், பல யூத குடும்பங்கள் கேரளாவில் குடியேறினர். இவர்கள் அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த மன்னரின் விருந்தினர்களாக போற்றப்பட்டனர். மட்டாஞ்சேரியில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மன்னர் வழங்கினார். கேரளாவில் முதன்முதலாக, ‘டிபார்ட்மென்ட் ஸ்டோர்’ நிறுவியதும், யூதர் ஒருவர்தான். இந்த கடையில், மது விற்பனை செய்யும் அனுமதியும் மன்னரால் வழங்கப்பட்டது. இன்று நிலைமை மாறி, பல குடும்பங்கள், இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பிவிட்டனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் மட்டாஞ்சேரியை விட்டுப்போக மனமின்றி, அங்கேயே தங்கி உள்ளனர். சாமுவேல் ஹலேகுவா என்ற முதியவர், மட்டாஞ்சேரியை மிகவும் நேசிக்கிறார். ‘இறுதிவரை இங்கேயே இருப்பேன். இந்த மண்ணில் கலந்துவிடுவேன்’ என்கிறார். – நன்றி் தினமலர் * வாரமலர் * 3-11-2013 ******* … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

எப்போது பகவானைக் காணலாம்?

“பகவானை எப்போது காண முடியும்?” என ஒவ்வொருவரையும் அணுகிக் கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். அப்போது ‘அந்த ஓர் ஆசிரமத்தில் இருக்கும் மகான் அதற்கான பதிலைக் கூறமுடியும்’ என்று சிலர் கூறினர். அவனும் அங்கு சென்றான். ஆசிரமத்தின் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லை. அவன், “குருவே” என்றான். “என்ன வேண்டும்?” என்றார் மகான். “பகவானை அடையும் வழி பற்றிய விபரத்தைக் கேட்க வந்திருக்கிறேன்” என்றான். “அப்படியா! முதலில் அந்தக் கைவிளக்கை ஏற்று” என்றார். அவன் விளக்கை ஏற்ற முயன்றான். ஆனால் முடியவில்லை. “குருவே விளக்கில் நீர் உள்ளதால் ஏற்ற முடியவில்லை” என்றான்.  “நீரை எடுத்து வெளியே கொட்டு. இந்த எண்ணெயை ஊற்று” என்றார். “எண்ணெய் ஊற்றினாலும் திரி ஈரமாக உள்ளது” என்று கூறினான். “திரியினைப் பிழிந்து காய வை. பிறகு ஏற்றிப்பார்” என்றார். “குருவே, இப்போது விளக்கை ஏற்றிவிட்டேன். என் சந்தேகத்திற்கு இனிமேலாவது விடையைக் கூறுவீர்களா?” என்று கேட்டான். அதற்கு அந்த மகான்: “மகனே, அதையே இப்போது விளக்கினேன். புரியவில்லையா? நமது ஜீவாத்மாதான் அந்தத் திரி நூல். அது ஆசை எனும் நீரில் நனைந்துள்ளது. ஆசையாகிய நீரை வெளியேற்றிவிட்டு வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வைக்க வேண்டும். பின்பு இறைநாமம் எனும் எண்ணெயைக் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்