தமிழ் | తెలుగు

» Archive

கடிதங்கள்

பேரன்புடையீர், வணக்கம். மனுஜோதி இதழ் கிடைத்தது. மிகவும் நன்றி. கழுகு தன் குஞ்சுகளை வளர்ப்பது பற்றி, இறைவன் நம் மக்களை பாதுகாப்பதைப்பற்றி ஆசிரியர் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார். என்னை மிகவும் கவர்ந்தது. இறைவனின் சித்தமே சால சிறந்தது என்னும் தலைப்பில் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. இதன் மூலம் ‘நடப்பது எல்லாமே நன்மைக்கே’ என தெரிந்துகொண்டேன். கத்தியிடம் தப்பிய கால் என்னும் தலைப்பில் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. இறைவன் நினைத்து வேண்டியதால் கிருபானந்த வாரியாரின் கால் குணமடைந்து விட்டது. மனுஜோதி இதழ் அனைத்து தலைப்பிலும் நல்ல கருத்துக்களை தருகிறது. “வாழ்க மனுஜோதி, வளர்க மனுஜோதி புகழ்”. – S. நாகராஜன், கோபிசெட்டிபாளையம் ********* மனுஜோதி இதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. அதில் “பரீக்‌ஷித் கலியுகத்தை எதிர் நோக்குகிறான்”, “கடவுளின் வருகையைப் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?” என்ற தலைப்பில் வெளிவந்த கருத்து எனக்கு மிக்க பலனாய் இருந்தது. நன்றி! இனிவரும் மனுஜோதி இதழ்களை அனுப்பி வைக்குமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். – ம. பொன்னர், இனாம்புலியூர் ********* தங்கள் மனுஜோதி இதழின் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளது. தாங்கள் பர்மா சென்று வந்த ஆன்மீக தலையங்கம் ஒரு ஆசிரியருக்குரிய பெருமையோடு இருக்கிறது. மனுஜோதி ஆசிரமம் பற்றி ஆண்டாள் பிரியதர்ஷினி கட்டுரை மேலும் தங்களுக்கு புதிய மெருகு போட்டது போல இருக்கிறது. – அருள்நம்பி, … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

“தந்தை மகற்காற்று நன்றிய வையத்து முந்தி யிருப்பச் செயல்” ஒரு தந்தை மகனுக்குக் கல்வி ஞானம் வழங்குவதைப் பார்க்கிலும் சாகாத கல்வியை வழங்குவதே தன் மகனுக்குச் செய்யும் சிறந்த நன்மையாகும். தன்னுடன் உறவாடுவதற்காகவே இறைவன் மனிதனை படைத்தான். ஆனால் மனிதன் சம்சார சக்கரத்தில் வீழ்ந்து இறக்க நேரிட்டான். ஆக இப்பொழுது நாம் இறைவனுடன் என்றென்றும் இருக்கும் பேரின்பத்தை அடைய வேண்டும். சாகாத கல்வி ஒரு தனி விஞ்ஞானமாகும். இந்த மெய்ஞ்ஞான விஞ்ஞானத்தை மனுஜோதி ஆசிரமத்தை ஸ்தாபித்த கல்கி மகா அவதாரம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருவர் மாத்திரமே கற்றுத் தருகிறார். சென்ற இதழில் சாகாத நிலையை அடைய தடையாக இருப்பவை கால நேரம் பார்ப்பது, ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைப்பது மற்றும் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள் வர மறுப்பது என்பதைக் குறித்து பார்த்தோம். “ஈன்று புறந் தருதல் என் தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” மகனைப் பெற்று வளர்த்து உலகுக்குத் தருவது தாயின் முதன்மையான கடமையாகும். அவனை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை என்கிறது புறநானூறு. ஒருவன் எவ்வாறு சான்றோன் ஆகிறான்? சாகாத கல்வியை கற்றறியும்போது அவன் சான்றோன் ஆகிறான். இவ்வாறு மனிதனாகப் பிறந்த நாம் இறப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டோமா? இல்லை. மக்கட் பிறப்பு, படைப்பின் மணிமுடி. மக்கட் பிறப்பினும் மற்றப் பிறப்பு, சிறந்த பிறப்பன்று. அதனால் … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

நாராயணரே சொந்த சரீரத்தில் வருகிறார்

கடவுளின் வார்த்தை அதிக வல்லமையுள்ளது. இந்தியாவிற்கு என்ன சம்பவிக்கும் என்பதை நான் அறிவேன். மந்திரிகள் அதை அறியார்கள் ஆட்சியிலிருப்பவர்கள் அதை அறியார்கள். ஆனால் தேவனுடைய ஜனங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் ‘பகவத்கீதையை’ படிப்பீர்களென்றால் கடைசி அவதாரமாக வருபவர் ஒரு அவதாரம் அல்ல என்பதை அறிவீர்கள். நாராயணரே சொந்த சரிரத்தில் வருகிறார். அது அவர் எப்பொழுதும் இருக்கும் ரூபமாகும். அதனால்தான் அவர் (உலகில்) வரும்போது அவரால் அழிக்க முடிகிறது. அவர் சிருஷ்டிக்க வந்தார். இப்பொழுது தீய சக்திகளை அழிக்க வந்திருக்கிறார். – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ****** … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

“தானம்” மற்றும் “தர்மம்”

“தானம்” மற்றும் “தர்மம்” என்ற இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. அது ஒரு பொதுவான காரியமாகும். சில வேளைகளில் நாம் சில எதிர்பார்ப்புகளுடன் மக்களுக்கு உதவி செய்கிறோம். அதுவே தானம் என்றழைக்கப்படுகிறது. தர்மம் என்றால் மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் நாம் எல்லாவற்றையும் கொடுக்கிறோம். அதுவே தர்மமாகும். இவைகள் இரண்டு வெவ்வேறு காரிய ங்களாக உள்ளன. தேவைப்படுவதினால் நாம் ஜனங்களுக்கு உதவி செய்கிறோம். அங்கே ஜாதி, மதம், தேசம், இனம், நிறம் என்ற பேதம் இருக்கக்கூடாது. எல்லோரும் இறைவனுடைய சிருஷ்டிப்பு என்ற அடிப்படையில் நாம் உதவி செய்ய வேண்டும். – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ****** … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா -2

வழக்கமாக ஆசிரமத்தில் நடக்கும் கூடாரப் பண்டிகை, 1970-ம் ஆண்டு வேலூரில் நடந்தது. இதில் லாயிட் வில்லியம்ஸ் என்னும் அமெரிக்க நாட்டவர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அந்த சமயம் வேலூர் கோட்டை மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான பிரச்சார கூட்டத்தை நடத்தினார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. பைபிளில் ஏசாயா 61-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடி கடவுள் கீழே இறங்கி வந்ததின் நோக்கம் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தி அளித்தல், இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்டுதல், கலியனால் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை கூறுதல். கடவுளுடைய அநுக்கிரக வருஷத்தை அறிவித்தல். மோசே தீர்க்கதரிசனம் உரைத்தவிதமாக அவை இயேசு தீர்க்கதரிசியாக வந்தபோது நிறைவேறியது. இரண்டாம் நிலையாவது நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாள் என்பது தேவன் திருடனைப்போல, கீழே இறங்கி வந்து, உபத்திரவ காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்நிய ஜனங்கள் மீது நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கு மனுஷகுமாரனாக வருவது. இது மனுஷகுமாரனாகிய பாலாசீர் லாறியில் நிறைவேறியது. இவர்தான் தாவீதின் வம்சாவழியில் வந்த தாவீதின் குமாரன். மூன்றாம் நிலையாக ஒலிவ மலையில் துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூற யூதர்களுக்கு தாவீதின் குமாரனாக இவர் வெளிப்படுவார். 2000 ஆண்டுகளுக்கு முன் யூதர்களுக்கு இயேசுவின் வருகையைப் பற்றி முன்னறிவித்தார் தீர்க்கதரிசி யோவான். அந்த சமயம் வாழ்ந்த யூதர்கள் அவதார புருஷராகிய இயேசுவை புறக்கணித்தார்கள். அதன் விளைவாக யூதர்களின் இராஜ்ஜியம் அழிவு பெற்று தீத்து ராயனால் அவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். இந்த யுகத்திலே யூதர்கள் அல்லாத பிற சமுதாயத்தினருக்கு இறை ஒளி … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! அடர்ந்த காடு ஊரை விட்டு நெடுந்தூரம் வந்த நாராயணன் அந்த வனத்துள்ளே புகுந்து, தன்னைத் தேடி வருபவர்களது கண்களுக்குப் புலனாகாவண்ணம் நடந்துகொண்டே இருந்தான். எப்படியும் ராமபிரானைத் தரிசனம் செய்தே தீருவது என்ற உறுதியுடன் புதர்கள் அடர்ந்த ஒரு மறைவிடத்தைத் தேடி உட்கார்ந்தான். அது ஒரு குகை. குகைக்குள் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் இருளும் சூழ்ந்தது. பசி, தாகம் ஒன்றையும் பற்றிச் சிந்தியாமல், ராம மந்திரத்தையே தியானிப்பதில் அவன் முனைந்தான். வாரம் ஒன்றாயிற்று, அந்தக் குகையை அடுத்து ஓர் அழகிய நீரோடை இருந்தது. இடையிலே தியானம் கலைந்து எழும்போதெல்லாம் கிட்டும் காய் கனிகளைத் தின்று நீரோடையின் தெளிந்த நீரை அள்ளிப் பருகி, மீண்டும் தியானத்திலே ஆழ்ந்துவிடுவான். இப்படியே நாட்கள் சென்றன. ராமபிரான் அருள் தரவில்லை. “இறைவனை நேரில் அடைவது இயலாதோ! நாம் செல்லும் வழி முறையற்றதோ என்ற சந்தேகம் அவன் உள்ளத்திலே எழுந்தது. சரிதான், ராமன் திருவடிகளை அடைவதற்கு முதற்படி அவனது தாசனாகிய அனுமனை வழிபடுவதுதான் சரியானது என்ற முடிவுக்கு வந்தான். அவ்வளவுதான்! மீண்டும் அனுமானை நோக்கி தவம் செய்யலானான் நாராயணன். அனுமான் தோன்றவில்லையானால் உயிரை விட்டுவிடுவது என்றே முடிவு செய்துகொண்டான். இப்படி ஏழு நாட்கள் அனுமானை வழிபட, இவனது உறுதியைக் கண்ட அனுமான் இவன் எதிரே தோன்றினான். இவனோ … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஹிட்லர் யூத இனத்தைச் சேர்ந்தவரா?

லண்டன் ஆகஸ்ட் – 29: சர்வாதிகாரி ஹிட்லர் யூத இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாமென ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது, லட்சக்கணக்கான யூதர்களை கொடூரமாக சித்ரவதை செய்து, கொன்று குவித்தவர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். ஜெர்மானியர்கள்தான் உயர்ந்தவர்கள் என கூறிக்கொண்டு, யூத இனத்தையே அழிக்க நினைத்தார் ஹிட்லர். ஆனால் அவரே யூத இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தற்போது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புலனாய்வு பத்திரிகையாளரான ஜேன் பால் முல்டர் என்பவர் இது குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். நியூயார்க்கில் வசித்து வரும் ஹிட்லரின் உறவினர்கள் அலெக்சாண்டர் ஸ்டூவர்ட் ஹஸ்டன் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த நார்பர்ட் உள்ளிட்ட உறவினர்கள் 39 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், வட ஆப்பிரிக்காவில் உள்ள யூதர்களின் மரபணுவுடன், ஹிட்லர் உறவினர்களின் மரபணு ஒத்துப்போனது. இதன் மூலம், ஹிட்லரின் 20 தலைமுறைக்கு முந்தைய மூதாதையர்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. ஹிட்லரின் உறவினர்களின் மரபணு மாதிரிகளில், ‘அப்லாப்கு ரூப் இ1பி1பி’ என்ற ‘ஒய்’ குரோமோசோம் இருந்தது. பொதுவாக, இந்த குரோமோசோம் ஜெர்மானியர்களிடம் இருக்காது. யூதர், அஸ்கென்சி இனத்தினர் மற்றும் மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வடக்கு ஆப்பிரிக்காவின் ‘பெர்பர்ஸ்’ இனங்களில் இந்த குரோமோசோம் இருக்கும். எனவே, ஹிட்லரும் யூத இனத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ****** … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

இன்றைய கோயில் வழிபாடு நிலை

ஏப்ரல் 2-2014, லண்டன்: ஒரு கோயிலில் பீர்தான் வழிபாடு செய்யப்படுகின்றது. இன்னொரு கோயிலில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றது. சமீப காலமாக பிரிட்டனில் புதுவிதமான மாற்றம் நடைபெற்று வருகிறது. மதப்பற்று குறைந்ததினாலும், வரலாற்றுச் சின்னங்களை பராமாரிக்கும் விலை அதிகமானபடியினால் அநேக கோயில்களுக்கு புது வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இது கோயில்களை கட்டியவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு லண்டனில் உள்ள பிரஸ்பெட்டோரியன் கோயிலின் வெளிப்புறம் மாற்றப்படவில்லை. இக்கோயில் 1902-ம் வருடத்தில் கட்டப்பட்டது. உள்ளேயோ இது ஒரு பப். இது ஒரு கோயிலாக இருந்திருந்தால் 2,3 பேர்தான் வருவார்கள். ஆனால் இப்பொழுதோ வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் பிரிட்டனில் குறைந்து வருகிறது. கோயில் அதிகாரிகள் அவற்றை பராமாரிக்கும் வேறு வழிகளை யோசிக்க பலவந்தத்திற்குள்ளாயிருக்கிறார்கள். மேன்செஸ்டாரில் உள்ள கோயில் மலையேறும் சென்டராகவும், பிரிஸ்டோலில் உள்ள கோயில் சர்க்கஸ் பள்ளியாகவும் மாறியிருக்கிறது. வேறு சில கோயில்கள் சூப்பர் மார்க்கெட்டாகவும், நூலகமாகவும், சீக்கியர்களின் ஆலயமாகவும், ஆடம்பர வீடுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. நன்றி்: தி டைம்ஸ் ஆப் இந்தியா ******* … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்