தமிழ் | తెలుగు

» Archive

கடிதங்கள்

அனைத்து வேதங்களின் ஆய்வு இதழாம் மனுஜோதியின் 2013 நவம்பர்-2014 ஜனவரி 25-ஆம் கதிர் படித்தேன். உணவைக் கொடுத்து உணர்வைத் தூண்டும் வள்ளலார் வழியை ‘ஆசிரியர் பக்கம்’ வெளிச்சமிட்டது. தான் நலமாயிருக்க வேண்டுமென்பதை விட தன்னை பார்ப்பவர்களைக் காட்டிலும் உயர்வாயிருக்க வேண்டுமெனும், அறிவு மழுங்கலின் விளைவான ஆசையை நீக்கிட, நெடுஞ்சேரி கிருத்திகா அவர்களது ‘துன்பச் சுமை’ வழிகாட்டியது. ஒப்பீடு என்பது ஆபத்தானது; ஆரோக்கியமற்ற போட்டி அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை உணர உதவியது. ‘கடவுளின் கணக்கு’, ‘காற்றும் கடவுளும்’ ஆகிய அனைத்து உள்ளடக்கங்களும், படிப்பவர் மனங்களில் வெளிச்சமேற்றுபவை. பயன்பாடு அறியாதவர்களிடமும், பயன்படுத்த தெரியாதவர்களிடமும் சென்று சேருபவை சிறப்படைவதில்லை என்பதைச் சுட்டும், மனுஜோதி போடும் பாதையில் பயணித்து, நெஞ்சத்திலிருந்து தூண்டலும், மூளையிலிருந்து வழிகாட்டலும் வகையாகப் பெற்று வளம் பெறும். பக்குவமான மனித இனம் வளர்ந்திடப் பாடுபடும் நிகழ்ச்சிகள் மனங்குளிரச் செய்தன. அம்பை பாலசரசுவதி அவர்களின் கவிதையில், சத்திய நகரெங்கும் கூடும் உயர்ந்த உள்ளங்களில் ஒலிக்கும் ‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’ என்கிற குரல், என் உள்ளத்துக்கு விழிப்புணர்வூட்டியது.   – நா. முத்தையா, சதாசிவ நகர் ********* பேரன்புடையீர், வணக்கம். த§களின் நவம்பர் மாத மனுஜோதி இதழ் கிடைத்தது. மிகவும் நன்றி. “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்” என்ற பகுதியில் பெற்றோர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல், உலக சூழ்நிலையில் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

ஆன்மீக பார்வையில் திருக்குறள்

தந்தை மகற்காற்று நன்றிய வையத்து முந்தி யிருப்பச் செயல் என்ற குறளுக்கு ஆன்மீக விளக்கமாவது சாகாத கல்வியே ஒருவனுக்குப் புகழை அளிக்கும். சாகாத கல்வி எங்ஙனம் பெற வேண்டும்? ஜீவனை எங்கே இழந்து விட்டோம் என்பதை அறிந்துகொண்டு, அந்த பிழைகளை திருத்தும்போது சாகா ஜீவனைப் பெற்றுக்கொள்வோம் என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறுகிறார். சென்ற இதழில் “சுயசித்தத்தை விட்டு விட்டு இறைவனின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுதல், புலால் உண்ணாமல் இருத்தல், இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்காமல் இருத்தல், வேறு யாரையும் நேசிக்காமல் இருத்தல், பொருளாசை அற்றவனாக இருத்தல், யாரையும் துவேஷிக்காமல் இருத்தல்”, ஆகியவற்றை கடைப்பிடிக்கும்போது ஜீவனுக்கு செல்லும் பாதையில் நடக்கிறோம் என்பதைப் பார்த்தோம். நாம் எவ்வாறு மரணத்தை வெல்ல முடியும்? எதினால் மனிதன் இறக்க நேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பாக நமக்கு கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கூறிவிட்டார். விஞ்ஞானிகள் ஏன் அதை கண்டுபிடிக்க முடியாது? யோபு 28:20-23: “இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே … Read entire article »

Filed under: திருக்குறள் விளக்கம்

நான்முகன் – பிரம்மா

நான்முகன் என்று பிரம்மாவை குறிப்பிடுவார்கள். பிரம்மாவுக்கு நான்கு முகங்கள் இருக்கிறது என்பது ஒரு தத்துவமாகும். பிரம்மா என்பவர் எல்லாவற்றையும் படைப்பவர் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். அவர் நான்கு திசைகளிலும் நடக்கக்கூடியவற்றை பார்க்கக்கூடியவர் என்பதை மக்களுக்கு உணர்த்தவே, பிரம்மாவிற்கு நான்கு முகங்கள் உள்ளன. விவிலியத்திலும் இறைவனுக்கு நான்கு முகங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு முகங்கள் இறைவனின் நான்கு நிலைகளை அல்லது இறைவன் தம்மை மனிதனுக்கு நான்கு நிலைகளில் வெளிப்படுத்திக் கொடுக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. வேறுவிதமாக கூற வேண்டுமென்றால் இறைவனின் நான்கு நிலைகள் அல்லது பதவிகள் என்று கூறலாம். எசேக்கியேல் 1:10 “அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷ முகமும் சிங்கமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன”. விவிலியத்தில் எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசி இறைவனின் நான்கு முகங்களைக் கண்டான். மனுஷமுகம், சிங்க முகம், எருது முகம், கழுகு முகம் போன்றவற்றைக் கண்டான். இறைவன் ஒரு மனிதனாக அவதரிப்பதே எருது முகத்தின் அர்த்தமாகும். அவர் ஒரு மனிதனாக இந்தப் பூமியில் பிறந்து மனிதர்களுக்காக வாழ்ந்து, மனிதனை மீட்க தம் உயிரை துறந்தார். ஒரு எருது பேசாமல் உழைக்கிறது. அதைப் போலவே இறைவனும் மனிதனாக எல்லா கஷ்டங்களையும் சகித்தார். இது இறைவனின் ஒரு முகமாகும். சிங்கம் மிருகங்களின் ராஜா. மனிதர்களுக்கு இறைவன் தான் ராஜா. இந்தப் பூமியில் அவர் அவதரிக்கும்போது நானே வானத்துக்கும், பூமிக்கும் ராஜா என்று … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்

‘மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்று நமது நாட்டின் பெருமையைப் பாடிய பாரதியார், “இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்புக்கு எதிர்எது வேறே?” என்று கங்கையின் புகழைப் பாடுகிறார். இந்த நதிக்கு கூப்பிடும் துாரத்தில், இப்பொழுது ‘ஜான்புரி’ என்று வழங்கும் ஜோன்பூர் என்னும் நகரில் சூர்யாஜி பண்டிதர் என்று பெயர் கொண்ட அந்தணர் வாழ்ந்து வந்தார். இவரது கிருஹ லக்ஷ்மியாய் அமைந்தவள் ராணுபாய் என்னும் பெண்மணி. அவ்விருவரும் மிகச் சிறந்த முறையிலே பிறர் மெச்ச இல்லறம் நடத்தி வந்தனர். இவர்களது குலதெய்வம் சூர்யபகவான்; இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராமபிரான். பன்னிரண்டு வருடங்கள் இவர்கள் ஆதித்யஹ்ருதயத்தை முறைப்படி பாராயணம் செய்தும், ஸ்ரீ ராமபிரானை வழிபட்டும் வந்தனர். ஒருநாள் சூர்ய நாராயணமூர்த்தி இவருக்குப் பிரத்யட்சமானார். நல்ல தெய்வ பக்தியுள்ள ஒரு புதல்வன் வேண்டும் என்று இவர் விரும்பியதை அறிந்த அவர், “அன்பனே! உனக்கு இரண்டு குமாரர்கள் தோன்றுவார்கள். முன்னவன் எனது அம்சமாகவும், பின்னவன் மாருதியின் அம்சமாகவும் தோன்றி உங்கள் விருப்பப்படியே பாரத பூமியிலே பக்தி மார்க்கம் பரவச் செய்வார்கள்” என்றார். சூர்யாஜி ஆனந்தக் கடலிலே ஆழ்ந்தார். நாட்கள் சென்றன. முதற்புதல்வன் தோன்றினான். அவனுக்குக் கங்காதரன் என்று பெயரிட்டு அருமையும் பெருமையுமாய் வளர்த்தனர். கங்காதரனுக்கு ஐந்து வயது முடிந்தது. சூர்ய நாராயண பகவானது வாக்கின்படி இரண்டாவது … Read entire article »

Filed under: ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!, பத்திரிகை செய்திகள்

ஐந்து கிரகங்களில் தண்ணீர் – நாசா கண்டுபிடிப்பு

மனிதர்கள் வசிப்பதற்கேற்ற, ஐந்து கிரகங்களை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின், ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், பல்வேறு கிரகங்களில், மனிதன் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் பலனாக, சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ள, ஐந்து கிரகங்களில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து கிடைத்த பல்வேறு ஆய்வறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த கிரகங்களில், தண்ணீர் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால், ஒவ்வொரு கிரகத்திலும் வெவ்வேறு அளவில் தண்ணீர் உள்ளது. நாசா மையத்தின் சார்பில், விண்வெளியில் ‘ஹப்பிள்’ தொலைநோக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன், ஐந்து கிரகங்களில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ******* … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

சர்வமும் லஹரி கிருஷ்ணா

அறிவு தந்த லஹரி கிருஷ்ணா ஆண்டவன் என்பதும் லஹரி கிருஷ்ணா இரக்கம் கொண்ட லஹரி கிருஷ்ணா ஈகை குணம் கொண்ட லஹரி கிருஷ்ணா உயிரும் உடலும் லஹரி கிருஷ்ணா ஊக்கம் தரும் லஹரி கிருஷ்ணா என்றும் நம் தேவன் லஹரி கிருஷ்ணா ஏழையின் தெய்வம் லஹரி கிருஷ்ணா ஐயன் நம் தேவன் லஹரி கிருஷ்ணா ஒளியின் வடிவம் லஹரி கிருஷ்ணா ஓய்வுநாளை தந்தவர் லஹரி கிருஷ்ணா ஒளஷத ஞானம் தந்தவர் லஹரி கிருஷ்ணா அஃதே நாமும் லஹரி கிருஷ்ணாவை துதிப்போம் – ஜெ. வேல்மணி, சேலம் … Read entire article »

Filed under: கவிதைகள்

நித்திய ஜீவன்

கடவுளை உணர்! ஒரே கடவுளை உணர்! மனிதா இம்மண்ணில் உம் தெளிவு பேச்சு மற்றவர்களை கோப மூட்டாது. சினத்தை அடக்கு – இல்லையேல் அது உம்மையே கொல்லும்! வெல்லும்! திருசொல் வேத வசனங்களே! வேதங்களைப் போற்று! நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்! – து. அங்கமுத்து, காஞ்சிபுரம் … Read entire article »

Filed under: கவிதைகள்

அவர் நாமம் சொல்லுவோம்!

உலகில் நட்புறவு இதனால் மலரும்! உன்னத செயல்கள் புரிந்திட விளையும்! சமத்துவ நேயமே நாலும் வளரும்! சங்கதி பலவும் ஸ்ரீ லஹரி உரைக்கும்! தொண்டுகள் புரிய உள்ளம் நினைக்கும்! தொய்விலாப் பணிகள் செய்திட சொல்லும்! துயரம் யாவையும் கரைந்திட மறையும்! ஸ்ரீ லஹரி என்றாலே காரிருள் போகும்! நன்மைகள் யாவும் வந்தே அமரும்! நானிலம் மகிழ்ந்து வணக்கம் செய்யும்! ஸ்ரீ லஹரியை மனதினில் நினைத்தால் போதும்! ஸ்ரீ ரங்கனின் அருள்தான் வந்தே சேரும்! அன்பது உதிக்கும் பண்பது செழிக்கும்! அயர்விலாப் பணிகள் ஆற்றிடச் செய்யும்! ஸ்ரீ லஹரி நாமத்தை தினமும் சொன்னால் ஸ்ரீ கவி போலே கவிதைகள் படைப்போம்! – கவிஞர் எஸ். இரகுநாதன், சென்னை – ஜெ. வேல்மணி, சேலம் … Read entire article »

Filed under: கவிதைகள்