தமிழ் | తెలుగు

» Archive

கடவுளின் கணக்கு

ஒரு ஊரில் ஒரு சாமியார் தனது குடிசையில் வசித்து வந்தார். அன்றாடம் காலை, மாலை இரு வேளைகளிலும் காவி உடை உடுத்தி, பூஜை, புனஸ்காரங்களுடன் தினசரி தியானம் செய்து வந்தார். அவர் துறவி என்பதால் மக்களிடம் அவருக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது. அவரது குடிசைக்கு எதிரில் சிறிது தொலைவில் ஒரு விலை மாது வசித்து வந்தாள். அவள் விலை மாது என்றாலும் தெய்வ பக்தி மிகுந்தவளாக இருந்தாள். வறுமையின் காரணத்தால் அவள் விபச்சாரம் செய்து வந்தாலும் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று கடவுளே! எனக்கு கருணை காட்டு, பாவத்தொழில் செய்யும் என்னை மன்னித்து, பரலோகத்தில் எனக்கு இடம் தர வேண்டும் என்று மனமுருகி தினமும் வேண்டி வந்தாள். காவி உடை உடுத்திய சாமியாருக்கு அவள் வேசித்தனம் செய்வது பிடிக்கவில்லை. தியான நேரம் போக மற்ற நேரங்களில் இவள் முகத்தில் விழிக்க வேண்டி இருக்கிறதே என்று தினமும் அவளை திட்டிக்கொண்டே இருந்தார். தியானம் முடிந்த பின்பு அவள் வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்றும், எப்போதும் அவள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதையே கண்காணித்துக் கொண்டிருந்தார். முடிந்தால் காவல் துறையில் புகார் செய்து அவளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். இந்த நிலையில் துறவியும், விலைமாதுவும் இறந்து விட்டார்கள். விலைமாது பரலோகம் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள், ஆன்மீக கருத்து

காற்றும் கடவுளும்!

ஒரு நாத்திகன், ஞானி ஒருவரிடம் கடவுளைக் குறித்து சில கேள்விகளை கேட்டான். கடவுளை கண்முன்னே காண்பிக்க உம்மால் முடியுமா? என்று குதர்க்கமாக அந்த ஞானியிடம் கேட்டான். அப்பொழுது அவர்கள் அருகில் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஞானி அந்த சைக்கிளை ஓட்டியவரைப் பார்த்து சைக்கிளை நிறுத்தச் சொன்னார். அவனும் சைக்கிளை நிறுத்தினான். ஞானி இப்பொழுது அந்த நாத்திகனைப் பார்த்து இந்த சைக்கிள் எப்படி ஓடுகிறது என்று கேட்டார். நாத்திகனோ, இதுகூட தெரியாத நீரெல்லாம் ஒரு ஞானி என்று கிண்டல் அடித்துவிட்டு, இது சைக்கிளின் டயரிலுள்ள காற்றினால் ஓடுகிறது என்று கூறினான். ஞானியோ புன்முறுவலுடன் அப்பா சைக்கிள் டயர்தான் என் கண்ணுக்குத் தெரிகிறது. அதிலுள்ள காற்று என் கண்ணுக்குத் தெரியவில்லை. கண்ணுக்குத் தெரியாத காற்றால் எப்படி சைக்கிளை ஓட்ட வைக்க முடியும்? அந்த காற்றை எனக்கு கொஞ்சம் காண்பி என்றார். நீ காற்றை என் கண்ணுக்கு காண்பித்து விட்டால், நான் உனக்கு கடவுளை கண்முன்னே காண்பிக்கிறேன் என்றார். நாத்திகன் உடனே காற்றைப் பார்க்க முடியாது உணரத்தான் முடியும் என்றான். தம்பி கடவுளும் அப்படித்தான், அவரை உணரத்தான் முடியும் என்று அந்த ஞானி கூறினார். … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

துன்பச் சுமை

விரைந்தோடும் வாழ்க்கைக்கும் காலத்திற்குமிடையே, செவியால் அறியப்படும் செய்திகள் பல நேரங்களில் மனதில் பெரிய பெரிய மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. நன்னறிவு புகட்டும் புராணக்கதைகளும், நீதி கதைகளும் செல்லறிக்காத சுவடிகள் போல அவை என்றென்றும் வாழ்ந்து, மக்களையும் வழிநடத்துகின்றன. அந்த கதைகள் கலைநயத்தோடும், ஈர்க்கும் தன்மையோடும் மொழியப்படுமேயானால், கேட்பவர்களிடத்தே மனதில் நல்ல மாற்றங்களையும், புதிய சிந்தனையையும் கொடுக்கும். முன்பெல்லாம் தன் மக்களுக்கு வாழ்க்கைக்கு வழி காட்டும் நீதிக் கதைகளை மூத்தோர் உரைப்பர். தற்போது அந்தக் காட்சியை காண முடிவதில்லை. இதைப் பார்த்து தவித்துபோன மூதாட்டி ஒருவர் தன் பேரக்குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லுகிறார்… நாட்டில் மக்கள் மீளா துன்பம் அடைந்து வருந்தி, கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனராம். சிலநாள் கழித்து மக்கள் விண்ணப்பத்திற்கிணங்கி கடவுள் தோன்றினார். கடவுளிடம் மக்கள் நலன்களை வழங்கக்கோரி, தங்களது துன்பம், பாவங்களை நீக்க சொல்கின்றனர். கடவுளோ மக்களிடம் நீங்கள் உங்களது துன்பம், பாவங்களையெல்லாம் ஒரு மூட்டையைப்போல கட்டி, யாரிடம் மாற்ற வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ அவர்களிடம் மாற்றிக்கொள்வதற்காக, நிலவொளியற்ற தினத்தன்று இதே இடத்திற்கு வரும்படியாக கூறினார். கடவுள் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. ஏனெனில் தெளிவு அப்போதுதான் வந்தது. யாரும் மூட்டையை மாற்றிக் கொள்ளவில்லை. அவரவரது மூட்டை அவரவர் கைகளிலேயே இருந்தது. இதை கண்ட கடவுள் நகைத்தார். என் பிள்ளைகளே! உங்கள் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

இறைவனுக்கு எட்டு மலர்கள்

சென்ற இதழில் சத்தியத்தைக் கடைப்பிடித்தல் என்ற மலரைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் ஞானத்தை அடைய தீவிரமான ‘உழைப்பு’ என்ற தலைப்பைப் பற்றி பார்ப்போம். பொதுவாக அறிவை அதிகரிக்க இக்காலத்தில் பெற்றோர், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கலையைப் பற்றிய அறிவை அவர்கள் பெறுவார்கள்.  மருத்துவத்தைப் பற்றிய அறிவு, கட்டட கலையைப் பற்றிய அறிவு, நாட்டிய கலை, ஓவியக்கலை, இசையறிவு என்று இந்த அறிவைப் பெறவே மனிதன் சிறுவயது முதல் பாடுபடுகிறான். ஆனால் ஞானத்தை அடைய வேண்டுமென்று யாராவது நினைக்கிறார்களா? ‘ஞானம்’ என்ற வார்த்தைக்குப் பலபேர் பலவிதமான வியாக்கியானங்கள் கொடுத்துள்ளார்கள். புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார் என்று கூறுகிறார்கள். இந்த உலக மக்களின் துன்பத்திற்கான ஆணிவேர் எது என்பது புத்தருக்குப் புலப்பட்டது. துன்பத்திற்கு காரணம் ஆசைதான் என்கிறார் புத்தர். ஆசை, கோபம், பேராசையை வென்றுவிட வேண்டுமென்று பகவத்கீதை கூறுகிறது. ஆசைக்கு அளவில்லை, போதுமென்ற மனநிலைக்கு வருவதேயில்லை. அதனால்தான் தாயுமானவர், “ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல்மீதிலே ஆணை செலவே விரும்புவார்” என்று பாடினார். மண்டலங்களையெல்லாம் கட்டி அரசாளும் மாபெரும் சக்கரவர்த்தியாக இருப்பவனுக்குக்கூட நிறைவு கிட்டுவதில்லை. பூமியையெல்லாம் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்துவிட்டோம். இன்னும் கடல் பாக்கியிருக்கிறதே! அந்த சமுத்திரத்தின் பரப்பும் சர்வாதிகாரத்துக்கு உட்பட்டதாக ஆக வேண்டுமே! என்று மேலும் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கான மழை பொழிவோம்!

காரிருள் போக்கிடும் ஸ்ரீ லஹரி கருணையைப் பொழிந்திடும் ஸ்ரீ லஹரி கற்பனைக் கெட்டா ஸ்ரீ லஹரி துவாரகை கிருஷ்ணனே ஸ்ரீ லஹரி அற்புதமானவர் ஸ்ரீ லஹரி ஜோதியாய் இருப்பவர் ஸ்ரீ லஹரி ஆனந்தம் அளிப்பார் ஸ்ரீ லஹரி ஆற்றலை வளர்ப்பார் ஸ்ரீ லஹரி! மனுஜோதி கண்டவர் ஸ்ரீ லஹரி மங்களம் தருபவர் ஸ்ரீ லஹரி எல்லாம் அறிந்தவர் ஸ்ரீ லஹரி நர நாராயணராய் நின்றவர் ஸ்ரீ லஹரி! கவிதையில் வாழ்பவர் ஸ்ரீ லஹரி வியாதியைக் களைந்தவர் ஸ்ரீ லஹரி உலகம் புகழும் ஸ்ரீ லஹரி உத்தம புருமூராம் ஸ்ரீ லஹரி! ஆன்மீக மாநாட்டில் ஸ்ரீ லஹரி ஐயங்கள் அகற்றிடும் ஸ்ரீ லஹரி காக்கின்ற கடவுளாம் ஸ்ரீ லஹரி தர்மத்தைப் போற்றிடும் ஸ்ரீ லஹரி சோதனை களைந்திடும் ஸ்ரீ லஹரி அன்பினை அறிந்தேன் ஸ்ரீ லஹரி கவிபாடிட செய்தாய் ஸ்ரீ லஹரி கானமழை பொழிவோம் ஸ்ரீ லஹரி! -கவிஞர் எஸ். இரகுநாதன், சென்னை … Read entire article »

Filed under: கவிதைகள்

எது வாழ்வு?

மக்களெல்லாம் ஒன்றென்பது வாழ்வு – தினம் மனுஜோதி இதழைப் படிப்பது வாழ்வு! அக்கறையாய் அன்பை வளர்ப்பது வாழ்வு-மனிதன் ஆண்டவன் ஒருவனே என்றுணர்வது வாழ்வு! எட்டுத்திசையும் லஹரியைப் பரப்புவது வாழ்வு – மக்கள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்வது வாழ்வு! இட்டுண்டு வாழ்வது வாழ்வு – மானிட மக்கள் இறவாப் பெருநிலை பெறுவது வாழ்வு! சத்திய நகரம் வருவது நல்ல வாழ்வு – மனிதன் சாந்தம் சமாதானத்துடன் வாழ்வது வாழ்வு! நித்தமும் தியானம் செய்வது வாழ்வு – மக்கள் நித்திய ஜீவனைப் பெறுவது வாழ்வு! பைபிளைப் படிப்பது சிறந்த வாழ்வு – நாளும் பகவத் கீதை படிப்பது உயர்ந்த வாழ்வு! வையகம் புகழ வாழ்வது வாழ்வு – லஹரியை வாழ்த்திப் பாடுவது சிறந்த வாழ்வு! தேவாசீரின் போதனையைப் படிப்பது வாழ்வு – தினம் திருக்குறள் திருக்குர்-ஆனைக் கற்பது வாழ்வு! கோபத்தைப் போக்கி வாழ்வது வாழ்வு – மனிதன் குறிக்கோளுடன் வாழ்வதே மாண்புடைய வாழ்வு! சிரித்து வாழ்வது சிறந்த வாழ்வு – லஹரி அய்யாவை சிந்தனை செய்வது நல்ல வாழ்வு! அறியாமை போக்கும் உயர்ந்த வாழ்வு – லஹரி நாயகனின் அறிவான நு]ல்களைப் படிப்பதும், கேட்பதும் வாழ்வு! புலவர் திருக்குறள் இரா. நடராசன், தென்காசி … Read entire article »

Filed under: கவிதைகள்

கடவுளின் வருகை பற்றி வள்ளலார் கூறுவது என்ன ?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தன் அல்லது மணவாட்டியின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? கடவுளின் வருகை பற்றிய வள்ளலாரின் அரிய கருத்துக்களை சென்ற மனுஜோதி இதழ்களில் வாசகர்கள் படித்து தௌpவு பெற்றிருப்பீர்கள். இந்த இதழில் கடவுள் எப்படிப்பட்ட பக்தர்களைத் தேடி வருகிறார்? அவர்களுடைய குணாதிசயங்கள் எப்படி இருக்க வேண்டும்? என வள்ளலார் அவரது பாடல்களில் வரையறுத்துச் சொல்லியிருப்பவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம். கடவுளுக்கும், அவரது பக்தனுக்கும் உள்ள உறவை காதலன் (மணவாளன்) காதலி (மணவாட்டி) இடையே ஏற்படும் காதலுக்கு ஒப்பிட்டுச் சொல்வது, இறை ஞானிகள் சிலரின் பழக்கமாக இருந்து வந்துள்ளது. மகாகவி பாரதியார் கண்ணன் என் காதலன் கண்ணம்மா என் காதலி என்ற தலைப்புகளில் எழுதிய பாடல்கள் அனைத்தும் ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிறைந்தவை. ஸ்ரீமத் பாகவதம் 2-ம் பாகத்தில் பிருந்தாவன லீலை ராஸக்கிரிடை என்ற தலைப்பில் ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களோடு நிகழ்த்திய லீலைகள் எழுதப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடவுளுடைய அன்பு எவ்வளவு உன்னதமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்த எழுதப்பட்டுள்ளதேயன்றி வெறும் மாம்சீகக் காதல் அல்ல என்பதை ஆன்மீக சிந்தையுள்ள மக்கள் அறிந்துகொள்வார்கள். மற்றவர்கள் இதை உணர்ந்துகொள்ள மாட்டார்கள். இஸ்லாமிய புலவர் மஸ்தான் சாகிப், தனது பாடல் ஒன்றில் இவ்விதமாகக் கூறியுள்ளார். “என்னை விட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோபேர் உன்றனுக்கே உன்னை விட்டால் பெண் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

மஹா விஷ்ணுவை தரிசித்த துருவன்

பக்தியில் சிறந்த பக்தி எது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த சிறுவன் துருவனைப் பற்றி தெரிந்துகொள்வோம். இறைவன் மீது கொண்ட பக்தியினால் தன்னுடைய சொந்த காரணத்திற்காக பகவான் விஷ்ணுவை மானிடப் பிறவியில் தரிசிக்க முடியும் என்பதை உலகிற்கு புரிய வைத்தவன். வெற்றியின் இரகசியம் நம்பிக்கைதான் என்பதை உணர்ந்த துருவன், வானில் துருவ நட்சத்திரமாக தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டான். இக் கதையை விஷ்ணு புராணத்தில் இருந்து வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம். முன்னொரு காலத்தில் வாழ்ந்த மனு சக்கரவர்த்தியின் பேரனும், உத்தானபாதனின் மகனுமான துருவன், அவனுடைய தந்தை போருக்கு சென்று வெற்றியோடு திரும்பி வருகிறார் என கேள்விப்பட்டு, அவருக்கு வாழ்த்து சொல்ல தாயை அழைக்கிறான். ஆனால் அவனது தாயான சூநிதியோ நான் மகாராணியாக இருந்தபோதும் உன் சிற்றன்னைக்குத்தான் முதல் உரிமையை உன்னுடைய தந்தை வழங்கி இருக்கிறார். ஆகவே நீயும் செல்லாதே என்கிறாள். அவனோ தந்தையைப் பார்ப்பது என் கடமை என சொல்லி செல்கின்றான். அவனுடைய தந்தையின் மடியில் அமர்ந்திருந்த துருவனைக் கண்ட அவனுடைய சிற்றன்னையோ, என் மகனுக்குத்தான் முதல் உரிமை உனக்கு முதலுரிமை வேண்டுமானால் நீ என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும் எனக்கூறி, அவனை கீழே தள்ளி அவமானப்படுத்தி விடுகிறாள். நீ வணங்கும் மகா விஷ்ணுவிடம் அடுத்த முறையாவது என் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்