தமிழ் | తెలుగు

» Archive

ஆன்மீக கவிதைகள்

மனம் பழுத்த மனிதன்தான் மகாத்மா ஆவான்; மதி பழுத்த கனவினிலே உண்மை துலங்கும்! இனம் பழுத்த நாட்டில்தான் எழுச்சி பொங்கும்; இமயமது பழுத்தால்தான் கங்கை பொங்கும்! தினம் பழுக்கும் நிலாக்கனிபோல் நாட்கள் தோன்றும்; செவ்வானில் பழுத்து வரும் கதிரவன்போல தனம் பழுத்த மாதவனே தனயனாவான்! தமிழ் பழுத்த குலத்தார் கூடி லஹரியின் புகழ் பாடுகின்றார்! கோடிதனில் ஒன்றுதான் தலைமை தாங்கும்; கோபுரத்தில் கலசம்தான் தலைமை தாங்கும்! பாடலிலே மோனைகள்தான் தலைமை தாங்கும்; பாவையரில் கண்ணகிதான் தலைமை கண்டோம்! ஆடி வெள்ளம் பெருக்கெடுக்கும் தாமிரபரணிபோல், ஆறுகளுக்கே தலைமை தாங்கி ஆட்சி செய்யும் லஹரிகிருஷ்ணா! சத்திய நகரெங்கும் கூடியுள்ள நாமெல்லாம், ஒருவனே தேவன் என்ற உண்மையினை உலகிற்கே உரைத்திட்டார்! அவரே லஹரி! லஹரி!! லஹரி!!! என்றுமே போற்றிடுவோம்!                                    – அம்பை  பாலசரஸ்வதி … Read entire article »

Filed under: கவிதைகள்

நீங்கள் சல்லடையா? முறமா?

நீ சல்லடையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது முறமாக இருக்க விரும்புகிறாயா? என்ற வினாவை எழுப்பினார் ஆசிரியர். மாணவர்கள் பதில் சொல்ல தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர். ஒரு மாணவன் எழுந்தான். நான் முறமாக இருக்க விரும்புகிறேன் என்றான். எதற்காக? என்றார் ஆசிரியர். “சல்லடை நல்லவற்றையெல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கல், மண், கசடுகளை மட்டும்தான் தன் வசம் வைத்துக்கொள்ளும். முறம்  அப்படியல்ல, கல், மண், கசடுகளைக் கீழே தள்ளிவிட்டு, நல்லவற்றை மட்டுமே தன் வசம் வைத்துக்கொள்ளும்” என்றான். ஆசிரியர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு, நீங்களும் முறத்தைப் போல் நல்லவற்றைமட்டுமே மனதில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதுவே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றார். அறிவுரைகள் அனுபவத்தின் மூலமாக வருகிறது. அதுவும் அறிஞர்களுடைய அறிவுரைகள் என்றால், பலநீதி நூல்களைப் படிப்பதற்குச் சமம். நல்லவர்களைக் கண் குளிரக் காண்பதும் நன்மை தரும். நல்லவர்களின் உரைகளைச் செவி மகிழ கேட்பதும் நன்மை தரும். நல்லவர்களின் இனிய குணங்களை வாயாரப் புகழ்வதும் நன்மை தரும். இத்தகைய குணங்களையுடைய அவர்களோடு சேர்ந்தே இருப்பதும் நன்மை தரும். “நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க        நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்           குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு              இணங்கி இருப்பதுவும் நன்றே” என்று … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

ஆழ்நிலை தியானம் அல்லது அழிவற்ற யோகம் என்றால் என்ன?

ஆறாம் உபதேசம் Transcendal Meditation   எவன் என்னை எல்லா உயிர்களிடத்திலும் பார்க்கிறானோ, என்னுள் எல்லாம் உயிர்வாழ்வதைப் பார்க்கிறானோ அவனுக்கு நான் காணாமற்போவதில்லை, அவனும் எனக்குக் காணாமற்போவதில்லை. ஒரு பக்தன் என்னுடனே ஐக்கியப்பட்டு என்னில் நிலைத்திருந்து, அனைத்து உயிர்களிலும் வாழும் என்னையே வணங்கினால், இந்த உலகத்திலே அவன் என்ன செய்தாலும் எத்தொழில் செய்தாலும் என்னுடனே வாழ்கிறான். பரமபுருஷரை கிரஹித்து உணர்ந்த ஒருவன் சுகமாயினும், துக்கமாயினும் எங்கும் தன்னையே உபமானமாகக் கொண்டு சமமாகப் பார்க்கின்றானோ, அத்தகைய என்னுடைய பக்தன்தான் சிறந்தவன் அல்லது உண்மையான மணவாட்டி ஆவான். அதுமட்டுமின்றி இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு சிருஷ;டியும் கடவுளை உணர்ந்த ஆத்மாவிற்கு, தேவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. அர்ச்சுனன் கிருஷ்ணரை நோக்கி் ஆண்டவனே! நீ கற்பித்த ஆழ்நிலை தியான முறையின்படி என்னுடைய சஞ்சலமுள்ள மனதால் சமாதானத்தை அடையமுடியவில்லை. ஏனென்றால் இந்த ஐம்புலன்களின் மனதானது அல்லது என்னுடைய கண்டுவிசுவாசிக்கிற தன்மையானது அடங்காததாயும், பிடிவாத முள்ளதாயும், வலிமையுடையதுமாய் உள்ளது. ஆகவே காற்றைப்போல அசைந்தாடிக் கொண்டிருக்கும் என்னுடைய மனித சிந்தையைக் கட்டுப்படுத்துவது எனக்குக் கடினமாயிருக்கிறது என்று கூறினான். அதற்கு கிருஷ்ணர் கூறியதாவது் ஐம்புலன்களால் கண்டு விசுவாசிக்கிற மனம் அடக்குதற்காpயதுதான், நிலையற்றதுதான், இதில் சந்தேகமில்லை. ஆனால் ஆழ்நிலை தியானம் (வைராக்யேன) அல்லது அழிவற்ற யோகத்தினால் அடைந்த சத்தியத்தின் மூலமாக முழு விசுவாசத்துடன் சந்நியாச யோகத்தை மறுபடியும் … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள், ஸ்ரீமத் பகவத்கீதை

கடிதங்கள்

பேரன்புடையீர், ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். மனுஜோதி செப்டம்பர் மாத இதழ் கிடைக்கப்பெற்று விவரம் அறிந்துள்ளதை, மனதில்பட்ட சில கருத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.தெரிந்துகொண்டவை் சத்தியமார்க்கம் என்ற ஆன்மீக கல்வியை தெரிந்துகொண்டேன். பரமசுகச்சாறு என்ன என்பதையும் இதன்லம் தெரிந்துகொண்டேன். ஒரே கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ளக்கூடிய பல்கலைக்கழகம், நமது ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறுவிய மனுஜோதி என தெரிந்துகொள்ள முடிகிறது. நீதிமொழிகள் 4:7,22-ம் வசனத்தின்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும், ஆன்மீக கல்வியே இறைவனிடம் நம்மை இணைக்கும் பாலமாக அமைகிறது என்றும், ஆயிர வருடத்திற்கு முன்னமே ராமானுஜர் ஜாதிகளை ஒழிக்க பாடுபட்டார் என்பதையும், குர்-ஆனை எவரும் எக்காரணத்தாலும் அழிக்க முடியாது என்பதையும், குர்-ஆன் 68:82-ல் கூறுவதையும் என்னிடம் கடவுள் இருக்கிறார் என்றால், அந்த ஓர் வார்த்தையில் மற்றவையெல்லாம் மறைந்து போகிறது எனவும், 18 என்ற எண்ணின் பெருமையைப் பற்றியும், தேவை நிறைவேறும் வரைதான் அது பணம். அதற்குமேல் இருப்பது வெறும் காகிதம் எனவும் தெரிந்துகொண்டேன். பறவைகளின் அலகில் விசேஷமான இரசாயனப் பொருள் இருக்கிறது எனவும், கால்பந்து, புல்லாங்குழல் உவமை மிகவும் சிறப்பு. வாழ்க்கை கல்வி எது? எனவும் உலகம் கண்டறியாத உன்னத பூமி சத்திய நகரம் எனவும், அரூபமாக நம்முன் யார் இருக்கிறார் எனவும், 1969 ஜூலை 21-ம் தேதி தன்னை … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

நுகர்வோர் விழிப்புணர்வு மாநாடு

ஹைதராபாத்தில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு மாநாட்டில் திரு. D. பால் உப்பாஸ் N. லாறி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹ! இந்த நுகர்வோர் விழிப்புணர்வு மாநாட்டிலே ஆன்மீக விழிப்புணர்வைக் குறித்து ஒரு சிலவார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். ‘Consumer’ என்றால் நுகர்வோர் என்று பொருள். மனிதனால் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிற எந்த ஒரு சேவையிலும் குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் (Human Error) ஏற்படத்தான் செய்யும். எல்லா நிறுவனங்களும் தாங்கள் மக்களுக்களிக்கும் சேவைக்கு ஏற்ப அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். இறைவன் நமக்கு அருளிய அனைத்துமே சுத்தமானது, தரமானது, நிறைவானது மற்றும் பரிபூரணமானது. அதேசமயம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், மனிதன் தயாரித்து வழங்குகின்ற எல்லா பொருட்களுக்கும் மூலப் பொருள் என்னவென்று தெரியுமா? அது அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகிலுள்ள அனைத்து பொருட்களும் பூமியில் இறைவன் படைத்தவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்பதை மறந்து விடாதீர்கள். இதை நாம் இயற்கைவளங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளுகின்றோம். சூரியன் நமக்கு ஒளியைக் கொடுக்கிறது. கடவுள்தான் அந்த ஒளியை நமக்கு இலவசமாகத் தந்திருக்கிறார். வேறு ஒருவராலும் தரமுடியாது. அதற்காக நீங்கள் கடவுளுக்கு எப்பொழுதாவது நன்றி செலுத்தியிருக்கிறீர்களா? ஆனால் அவர்தான் அனைத்து பொருட்களின் சிருஷ்டிகர்த்தா. … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து, பிரமுகர்களின் உரை

தெட்சணத்தில் ஆன்மீகப் பிரச்சாரம்

அன்பார்ந்த மனுஜோதி வாசகர்களுக்கு வணக்கம். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருக்கருணையினால் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழ் நாடு முழுவதும் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். மனுஜோதி ஆசிரமத்திலிருந்து, திரு. னு. லியோ பால் ஊ. லாறி அவர்களோடு கூட ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களை சந்திக்கும் வண்ணமாகவும், அத்துடன் “நம்பினால் நம்புங்கள்” என்ற கைப்பிரதியை விநியோகிக்கவும் 9 பேர் கொண்ட குழுவாக வேனில் புறப்பட்டோம். ஸ்ரீமந் நாராயணாரின் தெய்வீக ஆட்சி நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவும், ஆன்மீக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், இறைவன் படைத்த அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஸ்ரீமந் நாராயணரின் போதனைகளை அறிவிக்கவும், உலக அறிவை விடுத்து தெய்வீக ஞானத்தைப் பெறுவதற்கும், அவரின் இருப்பிடமாகிய மனுஜோதி ஆசிரமத்திலிருந்து இந்த பயணத்தை மேற்கொண்டோம். இதன்மூலம் தெய்வீக மக்களின் மனதில் இருள் நீங்கி, தெய்வீக ஒளி பெற்றிட இந்த தமிழக சுற்றுப் பயணம் அமைந்தது. முதலாவதாக 8-ம் தேதி, புத்தகங்கள் மற்றும் கைப்பிரதிகள் விநியோகித்த வண்ணம் தென்காசி, குற்றாலம் வழியாக பயணத்தைத் தொடங்கினோம். அன்று மதியம் கோவில்பட்டி அருகிலுள்ள ஏழாயிரம் பண்ணைக்கு சென்றோம். இரவு வத்தலக்குண்டு என்ற இடத்தில் தங்கினோம். மறுநாள் மதியம் கருர் என்ற ஊரிலிருக்கிற மனுஜோதி வாசகர்களை … Read entire article »

Filed under: ஆன்மீகச் சுற்றுபயணம்

இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் எச்சரிக்கை

கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தால் அநேக உயிர் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டன. இந்த சக்தி வாய்ந்த இப்பூகம்பத்தின் காரணமாக பாகிஸ்தானில் ஜுவேடர் நகரத்தின் கடலோரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில், 175 மீட்டர் நீள அகலம் கொண்ட நிலப்பரப்பானது அரபிக்கடலில் வெளிப்பட்டது. 18 முதல் 20 மீட்டர் உயரம் கொண்ட இந்த புதிய தீவிலிருந்து, தீப்பற்றக்கூடிய வாயுவானது வெளியேறத் துவங்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 500-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த விஷ வாயுவினால் கடலில் அதிக அளவில் மீன்கள் இறந்துள்ளது என ஆங்கில செய்திப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின. இதேபோல் 2005-ம் வருடம், அக்டோபர் 8-ம் தேதி பாகிஸ்தானில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த பூகம்பத்தில் பாகிஸ்தான் துருப்புகள் 75 ஆயிரம் பேர் பலியாயினர் என உங்களில் அநேகர் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். பாகிஸ்தானில் பூகம்பம் நிகழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக அங்கு ஜனாதிபதியாக இருந்த முஷாரஃப்பும் நம்முடைய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அதாவது அவர்கள் ஏவுகணைகளை பரிசோதிக்க வேண்டுமென்றால் அதன்முன்னதாகவே ஒருவருக்கொருவர் தெரியப்படுத்த வேண்டும் என்பதாகும். என்னதான் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்தினாலும் அவ்வப்போது இந்தியாவிடம் அவர்கள் வாலாட்டுவதுமுண்டு. வாங்கிக் கட்டிக்கொள்வதுமுண்டு. … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

டிசம்பர் 2013

அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!   மனுஜோதி ஆசிரமத்தில் அக்டோபர் மாதம் 3-ம் தேதி நீதியுக ஸ்தாபக விழா சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கிலுமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் அனைவரும் இந்த நாளில், ஸ்ரீமந் நாராயணரின் அன்புக்கொடியை தங்கள் இல்லத்தில் ஏற்றி, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர். இந்த நாளில் தெய்வீக ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொண்டாடிய  இறைவனின் பிள்ளைகள் அனைவருக்கும் இது ஆசீர்வாதமாக அமைந்தது. மனுஜோதி ஆசிரமத்திலும் மற்றும் அன்புக்கொடி எங்கெல்லாம் ஏற்றப்பட்டதோ அங்கு ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் பிரசன்னம் அந்நாள் முழுவதும் இருந்ததை உணர முடிந்தது. செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவி லுள்ள சிட்னி மாநகாரில் சிட்னி தமிழ் சங்கம் மற்றும் வி.ஜி.பி உலகத் தமிழ் சங்கத்தின் 13-வது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நானும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் சென்றிருந்தோம். மேலும் மெல்போர்னிலும், மலேசியாவிலும் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் புத்தகங்கள் மற்றும் சி.டிக்கள் வாயிலாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. என்னுடைய சகோதரன் திரு. D. லியோ பால் C. லாறியும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் சிலரும் குழுவாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் சென்றனர். ஒன்றே … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு, ஆன்மீக கருத்து