தமிழ் | తెలుగు

» Archive

பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா

வெளிநாட்டில் இருந்து வந்த அநேகர், மனுஜோதி ஆசிரமமான சீயோனில் தங்கியிருந்தனர். 197,0 1972 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 3,000 பேருக்கும்மேல் மனுஷகுமாரன் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றினர். ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் மிக எளிமையாக வாழ கற்றுக் கொடுக்கப்பட்டனர். மேசை, நாற்காலி, கட்டில் போன்ற வசதிகளும் இல்லை. ஆசிரமத்திற்கு அருகில் ஹோட்டல், கடைகள்  என்று எதுவும் கிடையாது. சாலை வசதி இல்லை, பஸ் வசதி இல்லை, மின் இணைப்பு இல்லை. ஆசிரமத்தில் அளிக்கப்படும் எளிமையான உணவை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் பொதுவான உணவை உட்கொண்டு, ஜாதி, மதம், தேசம் என்ற பாகுபாடின்றி ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு பைபிள், குர்ஆன், பகவத்கீதை போன்ற பல்வேறு வேதங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் நடக்கும் முழு இரவு பிரார்த்தனைக் கூட்டங்களில் வெளிநாட்டினர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். யோகா, இசை, இந்திய கலாச்சார ரீதியான தற்காப்பு கலைகள் போன்றவற்றிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தி, தமிழ் போன்ற மொழி பயிற்சியும் அளிக்கப்பட்டது. கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பது, ஆசிரம பண்ணைகளில் வேலை பார்ப்பது, மரம், செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, சமையல் கூடங்களில் சமைப்பது போன்ற எல்லா வேலைகளையும் அவர்கள் விருப்பமுடன் … Read entire article »

Filed under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை