தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

கேனோ கிறிஸ்டேல்ஸ் – ஐந்து வண்ணங்கள் கொண்ட நதி
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கொலம்பியா என்ற நாட்டில் ‘ஐந்து வண்ணம் கொண்ட நதி’ அல்லது ‘திரவ வானவில்’ என்று அழைக்கப்படும் கேனோ கிறிஸ்டேல்ஸ் என்னும் நதி பாய்கிறது. கொலம்பியா நாட்டின் கண்கவரும் மற்றும் அற்புதமான இயற்கை விந்தை என்று இந்த நதி அழைக்கப்படுகிறது. செரானிய டே லா மெக்கரீனா என்ற மலைத் தொடரில் இந்த நதி காணப்படுகிறது. மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு என ஐந்து வண்ண தண்ணீரினால் இந்த நதி எல்லாரையும் மயக்குகிறது.
கேனோ கிறிஸ்டேல்ஸ் எனும் நதி ஒரு உயிரியல் அதிசயமாகும். ஏனெனில் வருடம் முழுவதும் அது எல்லா நதிகளைப் போலவே காணப்படும். ஆனால் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையே உள்ள காலத்தில் தண்ணீர் அளவு குறைவதால் சூரிய ஒளி பட்டு பாசி மற்றும் கடற்பாசி, செடிகள் செழித்து நதி நீரின் வண்ணத்தை மாற்றுகிறது. நதியின் நீருக்கு பல வண்ணங்களை தருவதற்கு காரணமாக இருப்பது மேக்கரெனியா களாவிகெரா என்னும் செடி. இது சிவப்பு நிற பாசி வகை. இந்த பாசியினால் கேனோ கிறிஸ்டேல்ஸ் எனும் நதிக்கு உலகிலேயே மிகவும் அழகான நதி என்ற பெயர் கிடைத்திருக்கிறது.
ஒரு நதியின் நீருக்கு ஐந்து வண்ணம் தரும்படி ஒரு செடியை படைத்தவன் யார்? அவனே இறைவன்!!!

Filed under: பத்திரிகை செய்திகள்