தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து » கடிதங்கள்

கடிதங்கள்

பேரன்புடையீர், ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். மனுஜோதி செப்டம்பர் மாத இதழ் கிடைக்கப்பெற்று விவரம் அறிந்துள்ளதை, மனதில்பட்ட சில கருத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.தெரிந்துகொண்டவை் சத்தியமார்க்கம் என்ற ஆன்மீக கல்வியை தெரிந்துகொண்டேன். பரமசுகச்சாறு என்ன என்பதையும் இதன்லம் தெரிந்துகொண்டேன். ஒரே கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ளக்கூடிய பல்கலைக்கழகம், நமது ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறுவிய மனுஜோதி என தெரிந்துகொள்ள முடிகிறது. நீதிமொழிகள் 4:7,22-ம் வசனத்தின்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும், ஆன்மீக கல்வியே இறைவனிடம் நம்மை இணைக்கும் பாலமாக அமைகிறது என்றும், ஆயிர வருடத்திற்கு முன்னமே ராமானுஜர் ஜாதிகளை ஒழிக்க பாடுபட்டார் என்பதையும், குர்-ஆனை எவரும் எக்காரணத்தாலும் அழிக்க முடியாது என்பதையும், குர்-ஆன் 68:82-ல் கூறுவதையும் என்னிடம் கடவுள் இருக்கிறார் என்றால், அந்த ஓர் வார்த்தையில் மற்றவையெல்லாம் மறைந்து போகிறது எனவும், 18 என்ற எண்ணின் பெருமையைப் பற்றியும், தேவை நிறைவேறும் வரைதான் அது பணம். அதற்குமேல் இருப்பது வெறும் காகிதம் எனவும் தெரிந்துகொண்டேன். பறவைகளின் அலகில்

விசேஷமான இரசாயனப் பொருள் இருக்கிறது எனவும், கால்பந்து, புல்லாங்குழல் உவமை மிகவும் சிறப்பு. வாழ்க்கை கல்வி எது? எனவும் உலகம் கண்டறியாத உன்னத பூமி சத்திய நகரம் எனவும்,

அரூபமாக நம்முன் யார் இருக்கிறார் எனவும், 1969 ஜூலை 21-ம் தேதி தன்னை மனுஷகுமாரன் என பிரகடனப்படுத்தியதையும் இதன் மூலம் தெரிந்துகொண்டேன். படிப்பினை் இறைவனுக்குக் கீழ்ப்படிவதே உண்மையான தர்மமாகும். இறைவனின் விருப்பப்படி கீழ்ப்படிந்து நடப்பதினாலேயே தர்மம் நிலைநாட்டப்படுகிறது. மனுஜோதி தீபம் ஏற்றினால் இருள் தானாகவே விலகும் என்றும், கோபப்படும்போது இடைவெளி அதிகமாகிறது. ஆனால் அருகில் இருந்தாலும் இடைவெளி

அதிகமாவதால் நாம் சத்தமிடுகிறோம். அனுபவத்தால் பொறுமை, சாந்தம், பயிற்றுவிக்கப்படுகிறது. மனுஜோதி ஆசிரமத்தாலும், அதின் இதழ்களாலும் நாம் நடத்தப்படுவதால், கடைப்பிடிப்பதால் இறைவனுடன் நாம் இணைகிறோம். ஆன்மீக கல்வியே இறைவனுடன் இணைக்கும் பாலமாக இருப்பது உண்மையே. இதனால் பரம சந்தோஷம் ஏற்படுகிறது. ரூஸ்வெல்ட் கருத்து அனைவருக்கும் முன் மாதிரியாக இருந்தது. மனுஜோதி இதழ் மிகவும் அருமை.

  – டி. குப்புசாமி, செய்யாறு.

Filed under: வாசகர் கருத்து