தமிழ் | తెలుగు

எங்களை பற்றி

மனுஜோதி ஆசிரமம்

1963-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மனுஜோதி ஆசிரமம் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகில் 7 கி.மீ. தொலைவில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. திருநெல்வேலி ஜங்ஷனிருந்து மனுஜோதி ஆசிரமத்திலிருந்து தினமும் டவுண் பஸ் வசதி உள்ளது. பஸ் எண் 34 D, 34 G. காலை 7.00, 9.00; மதியம் 12.30, 2.30; மாலை 5.30, இரவு 9.30

மனுஜோதி ஆசிரமத்தை உருவாக்கியவர் வேதங்களின் நாயகனாகிய பரமபுஷரும் கலியை அழிக்க வந்த கல்கி மகா அவதாரமுமாகிய ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என்று மக்களுக்குத் திட்டவட்டமாக அறிவிக்கிறோம். அவர்தான் விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள மனுஷகுமாரனும் இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கும் இமாம் மஹதியுமாவார்.
கடவுள் ஒருவரே அவரை இந்துக்கள் ‘ஸ்ரீமந் நாராயணர்’ என்றும், யூதர்கள் ‘யெகோவா’ என்றும், கிறிஸ்தவர்கள் ‘கிறிஸ்து இயேசு’ என்றும், இஸ்லாமியர்கள் ‘அல்லாஹ்’ என்றும் பிற மதத்தினர் ‘ஹரி’ என்றும் அழைக்கிறார்கள். அதுதான் உண்மை என்று நாங்கள் நம்புகிறோம். பரிசுத்த வேதாகமம் திருக்குர்-ஆன் ஸ்ரீமத் பகவத்கீதை அவைகளெல்லாம் அந்த ஒரே கடவுளால்தான் அருளப்பட்டது. நம் எல்லோரும் மதபேதமின்றி அவைகளின் சொல்லப்பட்டுள்ளவைகளை பயபக்தியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.

கடவுள் நமக்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்திருக்கிறார். காற்று, தண்ணீர், வெளிச்சம் முதலியவற்றை அவர் இலவசமாகவே கொடுக்கிறார். இலவசமாகப் பெற்றீர்கள்; ஆகவே இலவசமாகக் கொடுங்கள் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் ஜனங்களோ வெளி நாட்டு பணத்தின் மூலமாக அதைச் செய்வதாக எண்ணிக்கொள்கிறார்கள். இந்தியாவிலுள்ள ஆன்மீக மக்களால் கொடுக்கப்படும் உதவியை வைத்துத்தான் இந்த செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் குறைகூற வேண்டாம்.  என்றைக்காவது ஒருநாள் அது உண்மை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

கல்கி மகா அவதாரம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவைப்பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் எங்கள் ஆசிரமத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து செல்லலாம். ஒவ்வொரு வருடமும் ஜூலை 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கல்கி ஜெயந்தி விழா இங்கு நடைபெறுகிறது, இவ்விழாவிலும் நீங்கள் கலந்துகொள்ளலாம்.

வழிபாட்டு நேரங்கள்

கடவுளை வழிபட இரவென்றும் பகலென்றும் கிடையாது. 24 மணி நேரமும் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளை நினைத்து கானங்கள் பாடி ஸ்தோத்திரம் செய்து அவரை யாரும் எந்நேரமும் எக்காலமும் வழிபடலாம். எங்கள் ஆசிரமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக 24 மணி நேரமும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருப்பெயரால் பாடல்கள் பாடி உலக மக்களின் நலனுக்காக ஜெபம் செய்துகொண்டு வருகிறோம். முக்கிய வழிபாட்டு நேரங்கள், காலை 4.50 முதல் 6.00 மணி வரை மாலை 6.00 முதல் 7.00 மணி வரை மற்றும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 4.50 மணி வரை. நீங்களும் உங்கள் வீடுகளில் அந்த நேரங்களில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை தியானித்து கீர்த்தனைகளைப்பாடி ஜெபம் செய்து பலன் பெறுங்கள். தொடர் சங்கிலி குடும்பக் கூட்டுப் பரார்த்தனைகளும் 24 மணி நேரமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஓய்வுநாள்

வேதங்களின்படி சனிக்கிழமைதான் கடவுளால் அருளப்பட்ட ஓய்வுநாளாகும். அது யூதமார்க்கமல்ல. உங்கள் இல்லங்களில் இந்த ஓய்வுநாளை அனுசரித்தால், ஸ்ரீமந்  நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் முழு ஆன்மீக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளலாம். முழு இதியாவும் இந்நாளை கடைபிடிக்கும் நாளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

வெள்ளி மாலை 6 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை உங்கள் சொந்த வேலைகளில் ஈடுபடாமல் உதாரணமாக: தண்ணீர் எடுப்பது, சமைப்பது, கடைக்குப் போவது, துணி துவைப்பது, சொந்தப் பேச்சை பேசுவது, சினிமா பார்ப்பது போன்றவைகளைத் தவிர்த்து உங்கள் வீட்டில் அமைதியாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் கலியனாகிய சாத்தானின் செயல்களை முறியடிக்கிறீர்கள். சனிக்கிழமைக்குத் தேவையான ஆகாரத்தை முன்கூட்டியே தயார்செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஓய்வுநாளைப் பற்றிய முழு விளக்கமும் அறிய விரும்புபவர்கள் எங்களுக்கு எழுதி புஸ்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மூன்று பண்டிகைகள்

1.    கல்கி ஜெயந்தி விழா – ஜூலை 21
2.    நீதியுக ஸ்தாபக விழா – அக்டோபர் 3
3.    மகிமையடைந்த தினவிழா – பிப்ரவரி 24

 

பகுதி – 1

 

பகுதி – 2

✡✡✡✡✡✡✡