தமிழ் | తెలుగు

» Archive

மக்கள் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்

ஸூரா-10 வச.42: மேலும், உமக்கு செவியேற்போரும் அவர்களில் இருக்கின்றனர்; செவிடர்களே – அவர்கள் எதனையும் விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் – நீர் செவியேற்கச் செய்வீரா? வச.43: இன்னும், உம்மைப் பார்ப்போரும் அவர்களில் சிலர் இருக்கின்றனர்; குருடர்களுக்கு அவர்கள் பார்க்காதவர்களாக இருப்பினும் நீர் வழிகாட்டுவீரா? ஸூரா-17 வச.72: எவர் இம்மையானதில் நேர் வழியைக் காணாது குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே; இன்னும், பாதையால் அவர் மிகத் தவறியவராவார். ஸூரா-18 வச.57: மேலும், தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக்கொண்டு நினைவுபடுத்தப்பட்டு, பின்னர் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகள் முற்படுத்தியவற்றை மறந்தும் விட்டவனைவிட மிக அநியாயக்காரன் யார்? குர்ஆனாகிய இதனை அவர்கள் விளங்கிக்கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களின்மீது திரைகளையும், அவர்களுடைய காதுகளில் அடைப்பையும் நிச்சயமாக நாம் ஆக்கிவிட்டோம். ஆதலால், நபியே! நீர் அவர்களை நேர்வழியின்பால், எவ்வாறு வருந்தி அழைத்தபோதிலும், அப்போது அவர்கள் ஒருபோதும் நேர்வழியை அடையவே மாட்டார்கள். வச.100: மேலும், நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு, அந்நாளில் நரகத்தை நாம் நிச்சயமாக அவர்கள் முன்னிலையில் எடுத்துக் காட்டுவோம். வச.101: அவர்கள் எத்தகையோரென்றால், என்னை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய கண்கள் திரைக்குள் இருந்தன் இன்னும், அவர்கள் நல்லுபதேசங்களைச் செவியேற்கச் சக்தியற்றவர்களாக ஆகிவிட்டனர். ஸூரா-22 வச.46: பூமியில் அவர்கள் பிரயாணம் செய்யவில்லையா? அவ்வாறு பிரயாணம் செய்வார்களாயின் உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்கள் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்; அல்லது நல்லுபதேசத்தைக் கேட்கக்கூடிய காதுகள் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

நாடுங்கள்

மனுஜோதி ஆசிரமத்தை நாடுவோம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கொள்கையை பாடுவோம்! ஒரு சாதி குலமென்று சொல்லுவோம் நம்பிக்கை மனதில் வைத்துக்கொள்வோம்! மானுடத்தை வாழவைக்கும் ஆசிரமம் மனதினில் இல்லையொரு சிரமம்! ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமத்தை சொல்லுவோம்! வாழ்விலுள்ள துன்பங்களை வெல்லுவோம்! வாழ்வுக்கு அவர்தானே ஆதாரம் வாழ்க்கையிலே இல்லையொரு சேதாரம்! நம்பிக்கைக் கொண்டவரை வணங்குவோம் அவர் காட்டும் பாதையிலே இணைவோம்!         – கே.வி. ஜெனார்த்தனன், ஏனாத்தூர் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

சர்வமும் நீரே லஹரி கிருஷ்ணா!

கேள்வியும் நீரே! பதிலும் நீரே! அறிவும் நீரே! ஆற்றலும் நீரே! அழிவும் நீரே! ஆக்கமும் நீரே! சிந்தையும் நீரே! செயலும் நீரே! துன்பமும் நீரே! இன்பமும் நீரே! கஷ்டமும் நீரே! இஷ்டமும் நீரே! வாழ்வும் நீரே! தாழ்வும் நீரே! சொந்தமும் நீரே! பந்தமும் நீரே! துவக்கமும் நீரே! முடிவும் நீரே! என்னிலும் நீரே! எதிலும் நீரே! வண்ணங்களும் நீரே! என் எண்ணங்களும் நீரே! சகலமும் நீரே! சர்வமும் நீரே! எல்லாம் நீரே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா!                 – சீனிவாசன், கிருஷ்ணகிரி ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

வந்தாரே கலி அழிக்க!

பிரம்மனின் பின்னே பிறந்தது பாவம்! பாவம்தானே ஆனது அதர்மம்! பாவத்தின் மனையாள் பொய்தானன்றோ! பொய்யின் மகன் பொறாமையன்றோ! பொறாமையின் விளைவு கோபமன்றோ! மாயையின் ஆசையில் இச்சை பிறந்தது! இச்சையின் முதிர்வால் ஹிம்சை பிறந்தது! ஹிம்சையின் முதிர்வு பலாத்காரம் ஆனது! பலாத்காரம் தானே கலியாய் பிறந்தது! கலி வசிக்க காரணம் தேடி, மது, மாது, சூது, தனம் என களியாட்டம் ஆடி தீய வார்த்தை பிறந்தது! தீதால் வந்தது பயம்! பயத்தால் வந்தது வலி! வலியின் மக்கள் ஆயிரம்! ஆயிரம் ஆயிரமாய் பெருகி ஆளுகின்றது பூவுலகில்! வந்தாரே கலி அழிக்க வைகுண்டர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா!               – K. இரவிக்குமார், சேலம் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா துதிபாடல்

வெண்தாமரை நெஞ்சம் கொண்டவரே தடாகத்தின் மலராக மலர்ந்தது நீர்தானே உந்தன் மணவாட்டி தாமரை இலைபோலே தடாகத்தின் ஜீவனும் நீரே               சேற்றின் நீரில் விளைந்த நெல் கதிரானாலும்               அது களஞ்சியத்தில் சேர காய்ந்திட வேண்டும்               கரிக்கும் நீரில் மீன் வாழ்ந்தாலும் – அது               கரிப்பை ஏற்காதது மீனின் குணமல்லவா வாத்து நீரில் இறங்கியும் நீர் ஒட்டாததுபோல் நாம் உலகத்தை தொடாத வாழ்க்கை வாழ வேண்டும் கருடன் வாழ்க்கை ஆகாய வாழ்க்கை நாம் மனதும் விழியும் மேல்நோக்க வேண்டும்               உந்தன் புறாக்களின் அன்பு கபடற்ற அன்பு               அதற்கு ஈடாக மணவாட்டியின் அன்பு               காட்டுக்கு ராஜா சிங்கத்தைப்போல               நம் அண்டசராசரத்திற்கும் ராஜா ஸ்ரீ லஹரிகிருஷ்ணா – கமலா தண்டபாணி, பாண்டிச்சேரி ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

புத் (பேர்) ஒளி மனுஜோதி

புவிதனில் எங்கும் சுபமங்களம்பொங்கிடவே வந்தது “மனுஜோதி” – என்கவிதையால் இனிமை தம்மை – என்றும்குவிந்திடவே வந்தது “மனுஜோதி”தவித்திடும் நல்ல உள்ளங்கள் – என்றும்தழைத்திடவே வந்தது “மனுஜோதி”பவித்திரமாக மக்கள் வாழவே – எங்கும்சுபீட்சம் தந்திட வந்தது “மனுஜோதி”பேராசையை களைந்து இன்றுபகுத்தறிவினை பாகுபாடின்றி – உள்ளத்தில்புகுத்திடுவோம் பேர் அறிவு புத்தொளிநன்மைகள் தந்திடும் பேரோளி மனுஜோதி – செ. நாகூர்மீரான் பிள்ளை, பொட்டல்புதூர் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

ஜீவ ஜோதியாய்

அமைதியின் ரூபமாய்மென்மையின் புனிதமாய்புன்னகை வடிவமாய்எதற்கும் அஞ்சாதஞான சொரூபமாய்நின்றாய் நிலைத்தாய்எங்களை சுற்றியேஓம் ஸ்ரீ லஹரி ஓம் என்னும்ஜீவ ஜோதியாய்வலம் வரும் வாழ்நாளில்சர்வ வல்லமையோடுநிறைந்திருக்க வேண்டுகிறோம்.            – நல. ஞானபண்டிதன், திருப்புவனம்புதூர் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

போற்றித் துதித்திடுவேன்

மதுசூதனா என் மாதவா மணவாளனே லஹரி கிருஷ்ணா வைகுண்ட வாசா…  வாசுதேவா வணங்குகிறேன் உந்தன் பாதம் போற்றித் துதித்திடுவேன் உந்தன் நாமம் – 2 1.     என்றுன்னைக் காண்பேன் என ஏங்கிய        என் ஏக்கங்களை எல்லாம் போக்கினீரே        உந்தன் எழில் முகம் கண்டு மயங்குகிறேன்        உந்தன் நேசத்தைப் புகழ்ந்து பாடுகிறேன் – 2 2.      ஸ்தலமொன்று எனக்காய் ஆயத்தம் செய்தீர்        லஹரி கிருஷ்ணா உந்தன் வாக்குப்படி        வாக்கு மாறா இறைவன் நீரல்லவோ        உமக்கு நிகர் உலகில் யாருளரோ – 2 3.      கார்மேக வண்ணா என் இதய மன்னா        வானிற்கும் பூமிக்கும் நீரே ராஜா        நிலம் நீர் வானம் என்றும் உம்மை துதிக்க        நீதியின் ஆட்சியை நிறுவினீர் உலகில் – 2         – மா. வெள்ளைராஜ், பாண்டிச்சேரி ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்