தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

அரியதொரு பொக்கிஷம்

இக்கலியுகத்தை முடித்தபின் நாராயணராகிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா போதித்த இந்த சத்திய வாக்குகள் இவ்வுலக மக்களுக்கு அரியதொரு பொக்கிஷமாகும். இந்த சத்திய வாக்குகள் ஜனங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிடினும் உலகமெங்கும் பரவும். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

கோவில்களில் நந்தியின் சிலை இருப்பதின் தத்துவம் என்ன?

நந்திதேவர் என்றும், ரிஷபம் என்றும் அழைக்கப்படும் காளை சிவபெருமானின் வாகனமாக உள்ளது. காளை சலிக்காமல் உழைக்கும். தர்ம தொழிலான விவசாயத்தை செய்கிறது. ஓரிடத்தில் விளைந்த பொருள் அப்பகுதி மக்களுக்கு மட்டுமே பயன்படாமல் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் வண்டி இழுக்கும். ஆன்மீக ரிதியாக காளையை பரமாத்மாவின் சின்னம் என்பர். உடலுக்கு பிரதானம் உயிர். உயிர் பிரிந்துவிட்டால் உடலுக்கு வலு இல்லை. உலக உயிர்களை இழுத்து செல்பவர் சிவபெருமான் என்பதை அவருக்கு வாகனமாக இருந்து உணர்த்துகிறது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நந்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியுள்ளார். நந்தி கருவறையை மறைத்துக்கொண்டு கோயிலில் இருக்கிறது. நந்தி சிலை அகன்றால் கருவறையில் உள்ள இறைவனின் திருவுருவச்சிலையை நம்மால் பார்க்க முடியும். நந்தி என்பதற்கு ஆதி யக்ஞம் அல்லது ஆதி வேள்விக்கு அடையாளமாகும். ஆதி யக்ஞத்தை அல்லது ஆதி வேள்வியைப் பற்றி கிரஹித்து உணர்ந்துகொள்ளாமல், நாம் இறைவனை காண முடியாது என்ற தத்துவத்தை கூறவே நந்தியின் சிலை கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது.                                                               ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

ஸ்ரீமந் நாராயணர்

‘நாராயணர்’ என்ற பதத்தின் விளக்கம் இறைவன் நரன் ஆனார் என்பதுதான் நாராயணன் அல்லது நாராயணர் ஆகும். ஸ்ரீமந் நாராயணர் என்றால் மேன் என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது ‘Man’ என்று எழுத வேண்டும். ‘Man’ என்றால் மனிதன் என்று பொருளாகும். இறைவன் மனித குலத்தைப் படைப்பதற்கு முன்னர் தாமே மனிதன் ஆனார். அவர்தான் முதல் மனிதன். இறைவன் மனிதனாகவும், இறைவனாகவும் இருப்பதால் ஸ்ரீமந் நாராயணர் என்று கூறப்படுகிறது. – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ✡✡✡ இறைவனின் ஆன்மா அல்லது பரமாத்மாவையுடைய எல்லோரையும் நேசியுங்கள். பணம் நம்மை விலைக்கு வாங்காதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இச்சந்ததியில் ஒருபோதும் இறக்க மாட்டார்கள். – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவு

1974-ம் வருடம் செப்டம்பர் 22 அன்று அருளிய சொற்பொழிவு ஒவ்வொரு நகரமும் விழும். அது கடைசி காலத்தில் விழவில்லையென்றால், இப்பொழுதுகூட அது விழலாம். இந்த நாட்களில் ஒன்றில் சென்னையில் பயங்கரமான கடும் புயலினால் பேரழிவு ஏற்படும். அந்த நகரம் விழுந்து விடும். இது ஒரு வேடிக்கைக்குரிய காரியமல்ல, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழியத்தை அவர்கள் கண்டார்கள். இன்றைக்கு அந்த இடத்தில்  மிகப்பெரிய பிசாசுகள் இருக்கின்றன. வெகுவிரைவில் அது காணப்படாமற்போகும். பூகோள வரைபட அமைப்பில் முற்றிலுமாக ஒரு மாறுதல் இருக்கும். இறைவன்மேல் கொண்ட அன்பினால் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் மனுஜோதி ஆசிரமத்தைவிட்டு வெளியே எங்கேயாவது செல்லும்போது உண்மையான அன்பை மறந்துவிடாமல் தியானம் செய்யுங்கள். இல்லாவிடில் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். இந்த மனுஜோதி ஆசிரமம் இறைவனுடைய ஆட்சியின்கீழ் இருக்கிறது. ஆனால் வெளியே நீங்கள் செல்லும்பொழுது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நியாயத்தீர்ப்பானது பூமியின்மேல் விழுகிறதை நீங்கள் பார்க்கும்பொழுது, இரண்டு காரியங்களை அறிந்துகொள்ளலாம். நம்முடைய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உண்மையானது என்றும், காலம் முடிவடைந்தது, இந்துக்கள் மத்தியில் நாம் செல்வது சரி என்றும் தெரிந்துகொள்ளலாம். ✡  ✡  ✡ முட்களும் ரோஜாவும் இராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது சீதை ஒரு மாயமானைக் கண்டு, அதின்மேல் ஆசைப்படுகிறாள். தனக்கு அந்த மான் வேண்டும் என கேட்டதினால் ஸ்ரீ … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

இறைவார்த்தையினால் வாழ்ந்து காட்டியவர்!

(ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனுபவம்) இந்த உலகில் வாழ்க்கை நடத்துவது என்றால் தினம் தினம் உழைத்து சம்பாதித்து குடும்பத்தை நிர்வகித்து வருவதுதான் என்று நம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இறைவன் நமக்கு கொடுத்த திறமையினால் அல்லது சக்தியினால்தான் நாம் தினமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களாகிய நாம் மறந்து விடுகின்றோம். நம்முடைய திறமையினாலும், முயற்சியினாலும்தான் சம்பாதித்து உயர்ந்த நிலைக்கு வருகிறோம் என நினைக்கின்றோம். ஆனால் இறைவன் மனிதன்மேல் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன? அவன் இறைவனின் சிருஷ்டிப்புக்கு சாட்சியாக நடவாமல் நான், என் மனைவி, என் பிள்ளைகள் என்று கூறி, தனக்குத்தானே சுயமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பதுதான். ஒரு மனிதன், தான் பிறந்தபின் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழவேண்டும் என அநேக மகான்கள் போதித்தும், வாழ்ந்து காட்டியும் இருக்கின்றனர். இறைதொண்டுக்காக துறவறம் மேற்கொண்டு மக்களை விட்டு ஒதுங்கியும் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களோ இலங்கையில் வாழ்ந்தபோது, இறை சக்தியால் தொடப்பட்டார்.  இலங்கையிலிருந்து அவர் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து வந்து, மணமுடித்து மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்தார். வேலூரில் இன்றளவும் பெயர் பெற்ற சி.எம்.சி மருத்துவமனையில் அவரும் அவரது துணைவியாரும் பணியாற்றி வந்தனர். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

விசாகப்பட்டினத்தில் திரு. தேவாசீர் லாறி ஆற்றிய சொற்பொழிவு

09.11.2002-ல் இந்த உலகத்தின் காரியங்கள் மாறிக் கொண்டிருக்கிறது. இறைவனின் திட்டத்தின்படி ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் நடக்கிறது. ஆனால் நம்மால் அதை அறிந்துகொள்ள முடியாது. நாம் அதனுடன் ஓடிச்செல்ல முடியாது. இறைவனுடைய மக்களாகிய நீங்கள் அவருடைய கடிகாரத்தின்படி மாறிக் கொண்டிருக்கிறீர்களா? அதுதான் முக்கியமான கேள்வியாகும். சிலர் ஒரு கார் அல்லது வீடு அல்லது நிலத்தை வாங்குவதற்காக மிகவும் தைரியமாக கடன் வாங்குகிறார்கள். ஓ! அரசாங்கம் தருகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். சில வேளைகளில் இப்படி செய்ய வேண்டும்; அப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறோம். அது நடைபெறுவதில்லை. முதலாவதாக நீங்கள் கடவுளுடைய கட்டளைகள், அவருடைய விதிமுறைகள் மற்றும் நியாயங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நியாயங்கள் என்றால் என்ன? அந்த நாட்களில் ஜனங்கள் தவறு செய்தபோது, அவர்கள் ஓய்வுநாளை பரிசுத்தக் குலைச்சலாக்கினார்களென்றால், கல்லெறியுண்டு கொல்லப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது நமக்கு கிருபை இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். உண்மையான இறைவனின் மக்களுக்கு மட்டுமே கிருபையுள்ளது. நீங்கள் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய முடியும் என்பது அதற்கு அர்த்தமல்ல. ஆகவே எல்லாக் காரியமும் திட்டமிடப்பட்டுள்ளது. அது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள்? தங்களுக்கு சிறப்பான அறிவு இருக்கிறது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாக் காரியத்தையும் ஸ்ரீமந் நாராயணர் … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

கடவுளின் அன்பால் நிறைந்திருக்க வேண்டும்

ஸ்ரீமந்  நாராயணர்  ஸ்ரீ  லஹரி  கிருஷ்ணாவின் சொற்பொழிவில் இருந்து தொகுக்கப்பட்டது ஜனங்கள் இறைவனுடய வார்த்தைக்கு உண்மையாக நின்று வந்திருக்கிறார்கள். எதற்காக? ஆதாயம் இல்லாமல் எவரும் எதுவும் செய்கிறதில்லை. ஜோதி ராமலிங்கம் அடிகளார் ஒரு சிவபக்தனாக இருந்தார். அவர் இறைவனுடைய பெயரை “அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை” என்று அழைக்கிறார். அவர் கிருபையுள்ள மகத்தான ஒளி, ஒப்பில்லாத பரிபூரண கிருபை என்று கூறினார். அவர் கிருபையில் மகத்தான ஒளியாக இருக்கிறார். தனிப்பெரும் கிருபை என்பது ஒப்பற்ற பரிபூரண கிருபையாகும்.  ஒப்பற்றவிதத்தில் அவர் அவருக்கு மட்டுமே விசேஷமான கிருபையை அளித்துள்ளார். அந்த இறைவன் மூலமாக மரணமில்லாத வரத்தை நான் பெற்றிருக்கிறேன் என்கிறார். அவர் மூலமாக நித்திய ஜீவனை நான் பெற்றுக்கொண்டேன் என்று ராமலிங்க அடிகளார் கூறுகிறார். இன்று இறைவனுடைய அன்பு நம்முடைய அன்பையும் உரிமையுடன் கேட்கிறது. அன்பு என்பது முகத்தையோ, அல்லது நிறத்தையோ, அழகையோ குறிப்பதல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஏன்? அவைகள் காலத்தினால் மறைந்து மாறிப்போகும் தன்மையுடையவை ஆகும். ஆதிபலியை (ஆதியக்ஞத்தை) பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும்போது, அந்த அன்பைப் பார்க்கிலும் மேலான அன்பாக எந்த அன்பையும் நான் காணவில்லை. நாம் இந்த பூமியில் வந்து கஷ்டப்படுவோம் என்பதை அறிந்துகொண்டு, அவர்  நமக்காக எல்லாவற்றையும் முடித்துவிட்டார். அவர் இனிமேல் நமக்காக செய்ய வேண்டிய … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்

இறைவன் வேலைக்காரனைப்போல ஓடி வருகிறார்

இறைவனைத் தேடுகிறேன் என்று கூறுபவர்கள் எல்லாரும் வேதங்களுக்கு அப்பாற்பட்டு வெளியேதான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவன்தான் ஓ! மனிதனே, ஓ! மனுஷியே என்று ஒரு வேலைக்காரனைப்போல ஓடி வருகிறார். – ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ****** … Read entire article »

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்