தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து

கடிதங்கள்

பேரன்புடையீர், மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கம். ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாத என் இதயதுடிப்பான மனுஜோதி இதழை படித்தேன். இதில் 46-வது கல்கி ஜெயந்தி விழாவின் படங்களை கண்டு, என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். “மகா கணபதி எனும் விடுகதை”, “மறுபிறவி ஸ்ரீமந் நாராயணருக்கு மட்டுமே! திரு. தேவாசீர் லாறியின் சொற்பொழிவு கட்டுரை”, “பிரார்த்தனையின் சக்தி”, “கவலைப்படுவதால் என்ன லாபம்?”, “திருந்திய முரடன்”, போன்ற கட்டுரைகள் எல்லாம் பயனுள்ள, படிக்க வேண்டிய, மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய கட்டுரைகள். மதம் வேறாக இருக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகளே! நன்றி! – சு. முத்துச்சாமி, விட்டிலாபுரம் ✡✡✡ மனுஜோதி ஆசிரியர்க்கு, நம்முடைய மும்மாத இதழ் மிகவும் அருமையான கருத்துக்களை வெளியிடுகிறது. முக்கியமாக சமபந்தி போஜனம், சர்வ சமய மாநாடு, கலப்பு திருமணங்கள் போன்றவை மிகவும் இந்த நாட்டிற்கு அவசியமான உத்திகளை, இந்த உலகமறிய நடத்திக் காட்டுவது போன்ற நல்லதொரு சேவைகளை செய்துவருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மட்டுமல்ல, எங்களின் “அறிவுக்கு உணவு மையம்” மற்றும் எங்களின் “மனித நல இயக்கமும்” உங்களை வெகுவாக பாராட்டுகிறது. நன்றி! மேலும் ஆகஸ்டு – அக்டோபர் மாத இதழில் பக்கம் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கடிதங்கள்

பேரன்புடையீர், அன்புடன் வணக்கம். இந்த மனுஜோதி இதழானது மானிட மக்களின் துன்ப, துயர நேரங்களில் இதை வாசிக்கும்போது மனதிலும், சரீரத்திலும் புதிய ஆறுதல் பெற்று பயன் பெறுகிறோம். நன்றி! – எலிசபெத், ஸ்ரீவில்லிபுத்தூர் ******* ஐயா, வணக்கம். தாங்கள் எனக்கு அன்போடு அனுப்பிய மனுஜோதி ஆன்மீக புத்தகம் கிடைக்கப் பெற்றேன். குறிப்பாக “தண்ணீர் அருந்துவதின் முக்கியத்துவம்” மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் மிகவும் அற்புதம். மிக்க நன்றி! – நா. கிருஷ்ணன், சாத்தமங்கலம் ******* அன்புடையீர், மனுஜோதி இதழ் கிடைத்தது. விமான ஆராய்ச்சி மனப்பான்மையும், பணம் சம்பாதித்து வசதியாக வாழ வேண்டும், மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்ற அகங்கார உணர்வும், சுயநலப்போக்கும் மிகுந்து பரவி வரும் இந்நாட்களில் மனிதப் பண்பும், மனிதனுக்கும் இறைவனுக்கும் இயல்பான தொடர்பு நீடிக்க வேண்டும் என்று மனுஜோதி மூலம் வணக்கத்திற்குரிய ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கலியுக கீதை பேருரையைப் பரப்பி வருகிறீர்கள். இந்த அவசியமான, மிகவும் பயனுள்ள சேவை மேலும் சிறப்புடன் தொடர நல்வாழ்த்துகளுடன் வேண்டுகோளையும் வைக்கிறோம், நன்றி! – கு. துரைசுவாமி ஐயர், திருவள்ளூர் ******* என் இனிய அன்பான மனுஜோதி இதழ் ஆசிரியருக்கு, வணக்கம். மனுஜோதி கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். “சகுனம் பார்க்காதே” தகவல் நல்ல விழிப்புணர்வை தந்தது, பாராட்டுக்கள். ஆசிரியர் உரையில் குறிப்பிட்ட ஒன்றே தேவன் என்பதின் வழிகாட்டு … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கடிதங்கள்

பேரன்புடையீர், தங்களின் இந்த மனுஜோதி மாத இதழ் எனக்கு கிடைத்ததற்கு மிக்க நன்றி. இந்த இதழ் பல தகவல்களையும், ஆன்மீக சிந்தனையும் தடையின்றி நம் மனதில் நல்ல சிந்தனைகளை வளர்க்கிறது. தொடர்ந்து இந்த இதழை எனக்கு அனுப்பி ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த இதழை படிப்பதால் நாம் வாழ்வில் பல முன்னேற்றங்களையும், இறைவனின் பல வழிகாட்டுதலையும் காண முடிகிறது. தொடர்ந்து படிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இந்த இதழ் வீட்டிற்கு வந்ததற்கு மிக்க நன்றி.   – s.M. அகமது அலி, மேலப்பாளையம் ****** ஐயா, ஜனவரி 2015 மனுஜோதி இதழை படித்தேன். மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரும் இந்த இதழ் மாதம் ஒன்று வரக்கூடாதா என்ற ஆவல் ஏக்கம் மனதிற்குள் வருகிறது. பொதுவாக இந்த இதழை கையில் எடுத்தாலே ஒருவித மகிழ்ச்சி. அதைப் படித்தாலே மனதிற்கு ஒரு தெளிவு. கிருபானந்த வாரியாரின் “ஏமாற்ற நினைத்தால் ஏமாற்றமே” கட்டுரை அருமை. “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்”, “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்”, “சித்தர் வாக்கு” கட்டுரைகள் எல்லாம் படிக்கத் தகுந்தவை. நன்றி.  – பொதிகை சு. முத்துச்சாமி, தூத்துக்குடி ****** என் இனிய ஆசிரியர்க்கு, இம்மாத இதழ் கிடைத்தது. நலம். நலமறிய ஆவல். சித்தர் வாக்கு பற்றிய சிறப்பான தகவல் மிக பயன் தந்தது. பாராட்டுக்கள். … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கடிதங்கள்

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். தங்கள் ஆசிரம செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆன்மீக நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற உங்கள் சேவை போற்றத்தக்கதாக உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரயில் பயணத்தின்பொழுது காஞ்சிபுரத்தில் இறங்கிய ஒரு அன்பர் என்னிடம் தந்த மனுஜோதி என்னை ஈர்த்தது. பிறகு தாங்கள், என் கடிதத்தின் பெயரில் சில புத்தகங்களை அனுப்பினீர்கள். அவை படிக்கவும், கடைபிடிக்கவும் தக்கவை. “அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ்” மேற்கோள் நேர்மையைச் சொல்கிறது. எம்மதத்தையும் உயர்த்தி, தாழ்த்தி எழுதுவதில்லை, அந்தந்த மதத்தின் சிறப்பான விஷயங்களையே சொல்கிறீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் 2014 இதழில் வெளியான திரு. ஒளவை நடராஜன் அவர்களின் சொற்பொழிவு அருமை. அருமையான பல விஷயங்களை வெளியிடும் தங்களுக்கு என மனமார்ந்த நன்றி. – T. K. சுப்பிரமணியன், விழுப்புரம் ****** பேரன்புடையீர், மனுஜோதி இதழில் எல்லா கட்டுரைகளும் மிக மிக அருமை. படித்து இன்புற்றேன். – சி. மனோ ரஞ்சித்குமார், புதுக்கோட்டை ******* ஐயா, “மனுஜோதி” ஆசிரியருக்கு எனது வணக்கத்தைத் தொpவித்து கொள்கிறேன். நான் உங்கள் இதழை எனது நண்பரின் வீட்டில் படித்தேன், உங்கள் இதழில் உள்ள அனைத்து கருத்துக்களும் எனக்கு பிடித்திருந்தது. மனிதனாக பிறந்த அனைவரும் இந்த “மனுஜோதி” இதழை படிக்க வேண்டும். அப்போதுதான் மனிதனின் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

தங்களின் “மனுஜோதி” (மே-ஜுன்-ஜூலை 2014) காலாண்டு இதழை 4 தினங்களுக்கு முன் படித்துப் பரவசம் அடைந்தேன். பல்வேறு உலக நடப்புக்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தங்களின் அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ் கூறும் விளக்கங்கள் யாவும் நூதனமாகவும், சிந்தனையைக் கிளறும் விதத்திலும் அமைந்துள்ளன என்றால் அது மிகையில்லை. அடுத்த முறை தமிழகம் வரும்போது மனுஜோதி ஆஸ்ரமத்துக்கு அவசியம் வரவேண்டும்  என்று பேராவல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அதற்கு உதவ வேண்டும்.  – ராம முத்தையா, மலேசியா ****** … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கடிதங்கள்

பேரன்புடையீர், வணக்கம். நான் கேட்டுக் கொண்டபடி தங்களின் மனுஜோதி நூலை நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். தங்களின் சேவைகள், ஆன்மீக பணிகள் மற்றும் அனைத்துக் கட்டுரைகளும், செய்திகளும், போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் ஏற்றது. ஜுன், ஜூலை இதழில் ஆசிரியர் கட்டுரையும், சைவ நெறியை கடைபிடிக்க முடியுமா? கட்டுரையும் மிக அருமை. தங்கள் பணி தொடர இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன். – த. கதிரேசன், திருநெல்வேலி ******* மனுஜோதி ஆசிரம தலைவர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மனுஜோதி இதழ் கிடைக்கப் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி. வைரமாவதற்கு விரும்பு, ஆன்மீகப் பார்வையில் திருக்குறள், எப்போது ஞானம் கிடைக்கும் என்ற தலைப்பில் வெளிவந்த கருத்து மிக மிக பயனுள்ளதாக இருந்தது. – ம. பொன்னர், திருச்சி ******* மனுஜோதி இதழ் கிடைத்து வருகின்றது. இடம்பெறும் கருத்துக்கள் சிறப்பாக இருக்கின்றது. சைவ நெறி, கீதாஞ்சலி, சீடன் ஆன மூடன், எது உண்மையான அன்பு, ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் பயனுள்ளவையாக உள்ளது. வாழ்த்துக்கள். – S. மாதவ குமார், ஈரோடு ******* மனுஜோதி படித்தேன். சீடன் ஆன மூடன் மிகவும் அருமை. அதை சொன்ன K. P. பாலு அவர்களுக்கு மிகவும் நன்றி. அதேபோல் “எது உண்மையான அன்பு” என்ற தலைப்பு இக்காலத்திற்கும் பொருந்தும் தலைப்பு. அதில் வரும் கதையை இக்காலத்தில் அனைவரும் படிக்க (முக்கியமாக முதியவர்களைப் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கடிதங்கள்

பேரன்புடையீர், வணக்கம். மனுஜோதி இதழ் கிடைத்தது. மிகவும் நன்றி. கழுகு தன் குஞ்சுகளை வளர்ப்பது பற்றி, இறைவன் நம் மக்களை பாதுகாப்பதைப்பற்றி ஆசிரியர் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார். என்னை மிகவும் கவர்ந்தது. இறைவனின் சித்தமே சால சிறந்தது என்னும் தலைப்பில் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. இதன் மூலம் ‘நடப்பது எல்லாமே நன்மைக்கே’ என தெரிந்துகொண்டேன். கத்தியிடம் தப்பிய கால் என்னும் தலைப்பில் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. இறைவன் நினைத்து வேண்டியதால் கிருபானந்த வாரியாரின் கால் குணமடைந்து விட்டது. மனுஜோதி இதழ் அனைத்து தலைப்பிலும் நல்ல கருத்துக்களை தருகிறது. “வாழ்க மனுஜோதி, வளர்க மனுஜோதி புகழ்”. – S. நாகராஜன், கோபிசெட்டிபாளையம் ********* மனுஜோதி இதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. அதில் “பரீக்‌ஷித் கலியுகத்தை எதிர் நோக்குகிறான்”, “கடவுளின் வருகையைப் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?” என்ற தலைப்பில் வெளிவந்த கருத்து எனக்கு மிக்க பலனாய் இருந்தது. நன்றி! இனிவரும் மனுஜோதி இதழ்களை அனுப்பி வைக்குமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். – ம. பொன்னர், இனாம்புலியூர் ********* தங்கள் மனுஜோதி இதழின் கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளது. தாங்கள் பர்மா சென்று வந்த ஆன்மீக தலையங்கம் ஒரு ஆசிரியருக்குரிய பெருமையோடு இருக்கிறது. மனுஜோதி ஆசிரமம் பற்றி ஆண்டாள் பிரியதர்ஷினி கட்டுரை மேலும் தங்களுக்கு புதிய மெருகு போட்டது போல இருக்கிறது. – அருள்நம்பி, … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கடிதங்கள்

அனைத்து வேதங்களின் ஆய்வு இதழாம் மனுஜோதியின் 2013 நவம்பர்-2014 ஜனவரி 25-ஆம் கதிர் படித்தேன். உணவைக் கொடுத்து உணர்வைத் தூண்டும் வள்ளலார் வழியை ‘ஆசிரியர் பக்கம்’ வெளிச்சமிட்டது. தான் நலமாயிருக்க வேண்டுமென்பதை விட தன்னை பார்ப்பவர்களைக் காட்டிலும் உயர்வாயிருக்க வேண்டுமெனும், அறிவு மழுங்கலின் விளைவான ஆசையை நீக்கிட, நெடுஞ்சேரி கிருத்திகா அவர்களது ‘துன்பச் சுமை’ வழிகாட்டியது. ஒப்பீடு என்பது ஆபத்தானது; ஆரோக்கியமற்ற போட்டி அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை உணர உதவியது. ‘கடவுளின் கணக்கு’, ‘காற்றும் கடவுளும்’ ஆகிய அனைத்து உள்ளடக்கங்களும், படிப்பவர் மனங்களில் வெளிச்சமேற்றுபவை. பயன்பாடு அறியாதவர்களிடமும், பயன்படுத்த தெரியாதவர்களிடமும் சென்று சேருபவை சிறப்படைவதில்லை என்பதைச் சுட்டும், மனுஜோதி போடும் பாதையில் பயணித்து, நெஞ்சத்திலிருந்து தூண்டலும், மூளையிலிருந்து வழிகாட்டலும் வகையாகப் பெற்று வளம் பெறும். பக்குவமான மனித இனம் வளர்ந்திடப் பாடுபடும் நிகழ்ச்சிகள் மனங்குளிரச் செய்தன. அம்பை பாலசரசுவதி அவர்களின் கவிதையில், சத்திய நகரெங்கும் கூடும் உயர்ந்த உள்ளங்களில் ஒலிக்கும் ‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’ என்கிற குரல், என் உள்ளத்துக்கு விழிப்புணர்வூட்டியது.   – நா. முத்தையா, சதாசிவ நகர் ********* பேரன்புடையீர், வணக்கம். த§களின் நவம்பர் மாத மனுஜோதி இதழ் கிடைத்தது. மிகவும் நன்றி. “ஆன்மீகப் பார்வையில் திருக்குறள்” என்ற பகுதியில் பெற்றோர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல், உலக சூழ்நிலையில் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து