தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து

வாசகர் கருத்து

ஸ்ரீமந் நாராயணர் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்தால் கொடிய நோய் நீங்கிவிடும். நற்செயலில் ஈடுபடுபவர்களை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருபோதும் கைவிடமாட்டார். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை வரவழைக்கும். அறிவுடன் ஒன்றிவிடும்போது பிழைகளை திருத்தி வெற்றி காணலாம். நம்பிக்கையும் ஆழ்ந்த அன்பும் இருந்தால் மட்டுமே அவரை அடைய முடியும். எல்லா உயிர்களும் ஸ்ரீமந் நாராயணரின் படைப்பேயாகும். முக்கிய நோக்கத்திற்காகவே ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இரகசியத்தை யாராலும் அறிய முடியாது. அதை அறிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவினால்தான் முடியும்.ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தி மனதில் வேரூன்றி விட்டால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் சுபாவம் வந்து விடும். மனம் எதை சிந்திக்கிறதோ அதுவாகவே மாறிவிடும் என ஸ்ரீமந் நாராயணர் கூறுகிறார். அதனால் நல்லதையே சிந்திப்போம்.  R. சதாசிவம், சேலம் ✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

வாசகர் கருத்து

ஸ்ரீமந் நாராயணர் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்தால் கொடிய நோய் நீங்கிவிடும். நற்செயலில் ஈடுபடுபவர்களை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஒருபோதும் கைவிடமாட்டார். ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை வரவழைக்கும். அறிவுடன் ஒன்றிவிடும்போது பிழைகளை திருத்தி வெற்றி காணலாம். நம்பிக்கையும் ஆழ்ந்த அன்பும் இருந்தால் மட்டுமே அவரை அடைய முடியும். எல்லா உயிர்களும் ஸ்ரீமந் நாராயணரின் படைப்பேயாகும். முக்கிய நோக்கத்திற்காகவே ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இரகசியத்தை யாராலும் அறிய முடியாது. அதை அறிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவினால்தான் முடியும். ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தி மனதில் வேரூன்றி விட்டால் பகைவன்மீதும் அன்பு செலுத்தும் சுபாவம் வந்து விடும். மனம் எதை சிந்திக்கிறதோ அதுவாகவே மாறிவிடும் என ஸ்ரீமந் நாராயணர் கூறுகிறார். அதனால் நல்லதையே சிந்திப்போம்.  R. சதாசிவம், சேலம் … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

வாசகர் கடிதம்

அன்புடையீர் வணக்கம். மனுஜோதி படித்தேன். வரும் கஷ்டங்களை சமாளிக்க ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா உதவுவார் என மனுஜோதி இதழில் ஆசிரியர் உரையில் படித்தேன். மிகவும் சந்தோஷமாக உள்ளது. என்றென்றும் அவருடைய அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.                           – ம. ஹரி, ஆத்தூர் ✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

வாசகர் கருத்து

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு, எனது வேண்டுகோளை ஏற்று தங்கள் ஆசிரமத்தின் நூல்களை எனக்கு அனுப்பி ஸ்ரீமந் நராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் மகிமையை நான் அறிய உதவியதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் ஆன்மீகத்தில் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு உண்மையை உணர்த்தியதற்கு மீண்டும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் கல்கி மகா அவதாரம் என்பதை பல சான்றுகளுடன் நிரூபிக்கிறது. அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. நிறை மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். கல்கி மகா அவதாரம் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியை பெறவும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் என் உள்ளத்தில் எப்போதும் நிறைந்து அவரின் மகிமையை வெளிப்படுத்த வேண்டும். அவர்களின் அருளாசிக்காகவும் என்றும் பிரார்த்தனை செய்வேன். பொதுவாக உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் உண்பது, உறங்குவது மற்றும் தற்காத்துக்கொள்வது இவற்றிலேயே குறியாக இருக்கும்போது, இதற்கு மேலாக ஆன்மீகம் இருக்கிறது என்பதையும் ஒன்றே குலம், ஒருவனே தேவன்! என உணர்த்திய ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் அனுபவ உண்மைகள் மூலம் அவரையே சரணடைந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பாத மலர்களை பிரார்த்தித்து வெற்றியடைய விரும்பும் உண்மை விசுவாசி. ✍ – ச. காளியப்பன், … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

வாசகர் கடிதம் – 3

பேரன்புடையீர், மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கம். மனுஜோதி இதழ் படித்தேன். அதில் கடவுளின் வருகையைப் பற்றி வள்ளலார் கூறுவது என்ன?, சங்கைமிக்க குர்-ஆன், ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் மற்றும் கதைகள், செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. இதுபோன்ற செய்திகள் வாழ்க்கை வாழ ஓர் உதாரணமாக விளங்குகிறது. வேறு இயக்கமாக இருந்தால் ஓர் புத்தகம் அனுப்ப வங்கியில் இவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கட்டளையிடுவார்கள். ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு புத்தகத்தையும் தங்கள் செலவில் அனுப்புகிறீர்கள். பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகத்தை எனக்கு அனுப்பியதற்கு தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்கி என் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன். – தி. மேகநாதன், பண்ருட்டி, கடலூர் ✡✡✡ மனுஜோதி ஆசிரியருக்கு வணக்கம். நாங்கள் ஒருநாள் மதியம் எங்களுடைய வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபொழுது பொதிகை டி.வியில் “வரலாற்று சுவடுகள்” என்ற நிகழ்ச்சியில் நீங்கள் வெளியிட்ட லஹரி கிருஷ்ணாவின் வழிமுறைகள் மற்றும் ஆசிரமத்தைப் பற்றி பேசுவதை எங்களால் பார்க்க முடிந்தது. அதினுடைய செய்திகளை நீங்கள் சொல்லும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து  எங்களுக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. இப்பொழுதுள்ள காலகட்டத்தில் இப்படி ஒரு ஆசிரமம் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் இந்த மனுஜோதி ஆசிரமத்தை காண வருவதாக … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

வாசகர் கடிதம்

பேரன்புடையீர், என்மேல் அன்புகூர்ந்து தவறாது மனுஜோதி இதழை அனுப்பி வைப்பதற்கு தங்களுக்கு முதற்கண் என் இதய பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட்-செப்டம்பர்-அக்டோபர் 2016 “மனுஜோதி” இதழில் இடம்பெற்ற கட்டுரைகள் ஒவ்வொன்றும் சமயம், பக்தி, வழிபாடு சம்பந்தப்பட்ட பல்வேறு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. இது வெறும் முகஸ்துதி அல்ல, அதிலும் “நம்பினால் நம்புங்கள்! எது நிலையானது, சிற்றின்பமா? பேரின்பமா?”கட்டுரை அற்புதம், அதி அற்புதம், மகா அற்புதம்! நிகழ்கால மக்களின் அவலங்களை (என்னையும் சேர்த்துதான்) அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. தங்களுக்கு நன்றி. – ராம முத்தையா, மலேசியா ✡✡✡ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். மனுஜோதி இதழ் கிடைத்தது. நானும் படித்து அதை எல்லோருக்கும் விநியோகமும் செய்துகொண்டிருக்கிறேன். எல்லா மதத்தின் கருத்துக்களையும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். ஒன்றே குலம் என்பது மனித குலம் வாழ சிறந்த கொள்கை. அது மாறினாலே மனிதன் மனிதனாக மாறிவிடுவான். தங்களின் பணி என்றும் சிறப்பாக தொடரட்டும். மனிதனை மனிதனாக உருவாக்குங்கள். அதில் சொர்வடையாதீர்கள். நான் லஹரி அய்யாவை நேசிக்கிறேன். அதினால் சிறப்பாக இருக்கிறேன் என்பதே உண்மை. அதை மறுக்க முடியாது. – இரா. சண்முகவேல், திருநெல்வேலி ✡✡✡ தாங்கள் அனுப்பி வரும் மனுஜோதி இதழை பெற்று, அதில் வரும் நீதிக்கதைகளையும் மற்றும் தேவனாகிய கர்த்தர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும் படித்து … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

அன்புடையீர், “மனுஜோதி” ஆகஸ்டு-அக்டோபர் 2016 இதழ் படித்தேன். வனாந்தரத்திலிருந்து ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அழைக்கும் செய்தியை அட்டைப்படம் உணர்த்தியது. வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீமந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகட்டும் என்ற ஆசிரியர் ஜெபதுதியில் நானும் பங்கேற்று பிரார்த்திக்கிறேன். மகத்தான கலாச்சாரத்தை கொண்டிருக்கும் ஒப்பற்ற மதம் இந்து மதம் என்பதில் இருவேறு கூற்றுக்கு இடமேயில்லை. ஸ்ரீமந் நாராயணரை கிரஹித்து உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டு செல்கிறபோது, மகிமையின் சரீரத்தை பெறுவது நிச்சயம் என்பதனை நான் நம்புகிறேன். வணிக வரித்துறை இணை ஆணையர் தேவேந்திர பூபதி அவர்கள் கூறியபடி, எப்போதெல்லாம் இந்த உலகிலே தீமை தலை தூக்குகிறதோ, எப்போது தர்மம் தன்னுடைய சக்தியை இழக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த தர்மத்தை காத்து நிலைநாட்டுவதற்காக நான் அவதாரம் எடுத்து வருவேன் என்ற உண்மையான மகா அவதாரத்தையே கல்கி ஜெயந்தி நினைவுறுத்துகிறது என்ற அவரது உள்ளக்கிடக்கையை நான் அப்படியே வழிமொழிந்து பதிவு செய்கிறேன். தொலைக்காட்சி பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும் அல்லது வேறு எதற்காவது முக்கியத்துவம் கொடுத்தால் அது இறைவனின் பார்வையில் அசுத்தமான காரியங்களாகும் என்பது நூற்றுக்கு நூறு உண்மையே. சிவனும், … Read entire article »

Filed under: வாசகர் கருத்து

கடிதம்

பேரன்புடையீர், மனுஜோதி மே–ஜுன்–ஜூலை 2016 இதழ் கிடைத்தது. ஆன்மீக வழியை அறிந்து, உணர்ந்து வளமுடன், நலமுடன், மகிழ்வுடன் வாழ ஆர்வத்துடன் முயற்சிக்கும் அனைத்து மதத்தினரும் அன்புடன், சமபாவத்துடன் விருப்பு வெறுப்பின்றி ஒரு வரி விடாமல் தொடர்ந்து படிக்கும் மற்றும் படிக்க வேண்டிய ஆன்மீக இதழ் மனுஜோதியாகும். பயனுள்ள பல புதிய தகவல்கள், பரந்த மனம் விழிப்பு தரும் கட்டுரைகள், குறிப்புகள் கொண்டதாகும். உங்களது உயர்ந்த சேவைக்கு நன்றி. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருவடிக்கு நமஸ்காரங்கள். தொடரட்டும் தொண்டு மேலும் சிறப்பாக!  – கு. துரைசாமி ஐயர், திருவள்ளூர்  வணக்கம். தங்கள் சேவைக்கு இறைவன் துணை இருப்பான், தைரியத்துடன் மேலும் தாங்கள் சேவை செய்ய தங்களுக்கு பூரண ஆரோக்கியம் அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!  – Dr. S.N. முரளீதர், ஈரோடு  “மனுஜோதி” பத்திரிக்கையில் ஆன்மீக செய்திகளோடுகூட “பனைமரத்தின் சிறப்பு”மற்றும் நமது தாமிரபரணி நதியின் சிறப்பை பற்றி “வற்றாத ஜீவநதி”, “சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்”, “நிகழாண்டில் 5 சூரிய சந்திர கிரகணங்கள்” பற்றிய அரிய ஆக்கப்பூர்வமான தகவல்களையும் மனுஜோதி மே–ஜுன்–ஜூலை-2016 இதழில் வெளியிட்டு, பலரும் அறியும் வண்ணம் பெருமை சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள், நன்றி!  – இரா. நல்லகண்ணு, பாளையங்கோட்டை  இந்த … Read entire article »

Filed under: வாசகர் கருத்து