தமிழ் | తెలుగు

» பிரமுகர்களின் உரை

இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! பாண்டவர்கள் பத்தினி பாஞ்சாலியோடு வனத்தில் வாழ்கிறார்கள் துர்வாச மAரிமூp தனது பத்தாயிரம் சீடர்களுடன் துரியோதன மன்னனின் விருந்தாளிகளாக பல நாட்கள் இருக்கிறார்கள். துர்வாசர் புறப்படும் சமயம் துரியோதனனிடம் உன்றன் உபசாpப்பும் அன்பும் நன்று. என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். பாண்டவர்களின் அழிவையே எண்ணி வந்த துர்யோதனன், துர்வாசாpடம் பாண்டவர்கள் யாவரும் உணவு உண்ட பின்பு தாங்கள் அவர்களிடம் உணவருந்தச் செல்லுங்கள், அது போதும் என்றான். அது அவன் எண்ணம்! பாண்டவர்கள் யாவரும் உணவு உண்டபின் அட்சய பாத்திரம் (உணவளிப்பது) கவிழ்த்து வைக்கப்படும். பின்னர் மறுநாள் தான் பயன்பாட்டிற்கு வரும். உணவு இல்லாதபோது துர்வாசர் பாண்டவர்களிடம் உணவுக்காகச் சென்றால், உணவு இல்லையென்றால் அவர்களை அவர் சபிப்பார். அதனால் பாண்டவர்கள் அழிவர் என்பது துர்யோதனின் எண்ணம்.  அதனை ஏற்று துர்வாசர் தன் சீடர்களுடன் பாண்டவர்களிடம் வந்தார். பாண்டவர்கள் துர்வாசரை வணங்கி நீராடி விட்டு வாருங்கள், உணவு சித்தமாகிவிடும் என்று சொல்லி நதிக்கு அனுப்பினர். பின் பாஞ்சாலியை நோக்கினர். உள்ளே சென்ற பாஞ்சாலி கண்ணீரும் கம்பலையாக ஹே! லஹரி கிருஷ்ணா! மாதவா! மதுNதனா! தீனபாந்தவா! தீனரட்சகா என் செய்வோம்! என ஏங்கினாள். துவாரகையிலிருந்த கண்ணன், பாண்டவர்களுடைய ஆசிரமவாசலில் தோpலிருந்து இறங்கி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள், பிரமுகர்களின் உரை