தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள்

புரந்தரதாஸர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! இறைவன் இசை வடிவானவன், நாதப்பிரம்மம் என்று சொல்லுகிறோம். “ஏழிசையாய் இசைப்பயனாய்”விளங்குகிறான் சிவ பெருமான் என்று பேசுகிறது திருமுறை. இறைவன் ஸ்ரீமந் நாராயணன் நாத முனிவரிடம், “நாஹம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே ரவெள மத் பக்தா: யத்ர காயந்தி தத்ரதிஷ்டாமி நாரத” என்றாராம். அதாவது, “நான் வைகுண்டத்திலும் இல்லை. ‘யோகிஹ்ருத்யான கம்யம்’ என்று சொல்லுகிறார்களே அந்த யோகிகளின் இதயத்திலும் இல்லை. என் மெய்யடியார்கள் எங்கெங்கெல்லாம் பாடுகிறார்களோ அங்கெல்லாம் நான் உறைகின்றேன்” என்றவுடன் நாரதர் மெய்சிலிர்த்தார். கலியுகத்திலே கானத்தின் மூலம் முக்தி அடையலாம் என்பதை மக்களிடையே வற்புறுத்த வேண்டும் என்று நினைத்தார். ‘பிறந்து பிறந்து உன் புகழ் பாட வேண்டும். ஆதலால் பிறவி வேண்டேன் என்பானேன்? உன் புகழைப் பாடிப் பயன் பெறுவதினால் மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று நினைத்தார். நம்முடைய வீடுகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் சங்கீதம் பயிலுகிறார்கள். சுருதியுடன் சேர்ந்து மாயாமாளவகௌள ராகத்திலே குழந்தை தன் மெல்லிய குரலால் “ச ரி க ம ப த நி ச” என்று ஸ்வராவளியைப் பாடுகிறாள். அந்த ஸ்வரங்கள் ஒன்றுடன் ஒன்று அடுத்து அமைந்திருப்பதனால் குழந்தை சுலபமாக ஸ்வர ஸ்தானங்களைப் பயில முடிகிறது. “72 மேள கர்த்தாக்களிருக்க இந்த அருமையான ராகத்தில் ஸ்வராவளிகளை அமைத்துக் கொடுத்தது யார்?” … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

நிகழாண்டில் 5 சூரிய, சந்திர கிரகணங்கள்

நிகழாண்டில் 2 சூரிய கிரகணங்களும், 3 சந்திர கிரகணங்களும் என மொத்தம் 5 கிரகணங்கள் நிகழவுள்ளன என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வு மையத்தின் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா, இந்தூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நிகழாண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் மாதம் 9-ம் தேதி நிகழவுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி நிகழவுள்ள மற்றொரு சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. இதுபோன்று மார்ச் 23, ஆகஸ்ட் 18 ஆகிய தேதிகளில் நிகழவுள்ள சந்திர கிரகணங்களையும் இந்தியாவில் பார்க்க இயலாது. இருப்பினும், செப்டம்பர் 16-ம் தேதி மற்றொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 5 கிரகணங்கள் நிகழவுள்ளன என்று தெரிவித்தார். நன்றி: தினமணி, 24-01-2016 ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

வற்றாத ஜீவ நதி

ஒரு ஊர் அல்லது நதி பெயரால் அடையாளப்படுத்தப்படும்போது, அந்த பெயர் வந்ததற்கு ஏதேனும் காரணம் அல்லது அது தொடர்பாக வரலாற்று செயல்பாடு கூறப்படும். பதினெட்டாவது நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஆர். கால்டுவெல், அவர் தமது நூலில் தாமிரபரணி நதியின் தோற்றம், அதின் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் அந்த நதிக்கான பெயர் காரணம் எதுவாக இருக்கலாம் என்ற தகவல்களையும் தந்திருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடிவரும் தாமிரபரணி, மிகப் பழமை வாய்ந்தது. தாம்ரா என்பது சிவப்பு நிறத்தைக் குறிக்கும். பரணி அல்லது பரனா என்பதற்கு அர்த்தம் இலைகள் ஆகும். அப்படி பார்க்கும்போது தாமிராபரணி என்றால் சிவப்பு நிற இலைகள் கொண்ட மரம் என்று அர்த்தமாகும். ஆனால் ஒரு நதிக்கு இவ்வாறு பெயர் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே தாமிரபரணி என்பதற்கு வேறு ஒரு பெயர் காரணமும் அல்லது அது தொடர்பான வேறு வரலாறோ இருக்கலாம். கி.மு. 3-வது நூற்றாண்டு கால பௌத்தர்கள் இந்தியாவிற்கு தெற்கே உள்ள, இலங்கையை தாம்பபன்னி என்று அழைத்தார்கள். கிருனாரிலுள்ள அசோகர் கல்வெட்டிலும், மாமன்னர் அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்தபோது, கிரேக்கர்கள் எழுதிய குறிப்பிலும், தாப்ரபேன் என்பது காணப்படுகிறது. தாப்ரபேன் என்பது பௌத்தர்கள் குறிப்பிட்ட தாம்பபன்னி என்பதின் தவறான உச்சரிப்பாக இருக்கலாம். ஆனால் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

மதங்களை கடந்து வாழும் வாட்டிகன் உச்சநீதிமன்ற நீதியரசர் பேரருள் திரு. எம். சேவியர்  லியோ ஆரோக்கியராஜ் அவர்களின் கருத்துரை “இந்தியா மகத்தான ஆன்மீக நாடு. மிக உயர்ந்த கலாச்சாரத்தைப் பின்பற்றும், போற்றும் நாடு. ஆனால் இங்கும் தனிமனித ஒழுக்கம் பல்கிப் பெருகியுள்ளது. தேவாரம், திருவாசகம் இவற்றிலெல்லாம் எனக்கு நிறையவே ஆர்வம் உண்டு. இளையராஜாவின் பாடல்களை மெய்மறந்து கேட்பேன். மார்கழி மாதத்தில் அகில இந்திய வானொலியில் ஆண்டாள் பாடல்களை ரசித்து கேட்பேன். டி. எம். சௌந்தரராஜன் பாடும் பக்திப்பாடல்கள், உள்ளம் உருகுதையா பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் உள்ளமும் சேர்ந்தே உருகும். அதேபோல வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வடலூர் வள்ளலார் மனம் கசிவதைக் கேட்டு என் மனமும் கசியும். உண்மையான ஆன்மீகம் என்பது மதங்களைக் கடந்தது. நம் தாய்நாடான இந்தியாவின்மீது எனக்கு அளவற்ற பற்றும், பாசமும் உண்டு. இந்தியாவுக்கென்று தனித்த கலாச்சாரம், பண்பாடு, கூட்டுக்குடும்பம், விருந்தோம்பல் போன்ற உயரிய குணங்கள் உண்டு. அவற்றை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். இளையராஜா பாடிய ஒரு பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். அதை அடிக்கடி என் மனசுக்குள் பாடி பார்த்து மகிழ்ச்சி கொள்வேன். அது எந்த பாடலென்றால், “சொர்க்கமே என்றாலும் அது நம் ஊருபோல வருமா? அட எந்நாடு என்றாலும் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்-7

காற்று இல்லாத இடத்தில் நெருப்பு எரியாது. அப்படியென்றால், காற்று இல்லாத இடத்தில் இருக்கும் சூரியன் தொடர்ந்து எரிகிறதே எப்படி? உண்மைதான். சூரியன் இருக்கும் இடத்தில் காற்று இல்லை. அதனால் அங்கே ஆக்சிஜன் வாயு இருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் ஏராளமான ஜூவாலைகள் கக்கி வெப்பத்தையும், வெளிச்சத்தையும் உமிழும் சூரியன் எப்படித்தான் எரிகிறது? சூரியனில் எரிவது சாதாரண வேதியல் ரிதியிலான நெருப்பல்ல. அங்கே நிகழ்வது அணு உலையில் நிகழ்வதைப் போன்ற சம்பவம்தான். சூரியன் ஒரு வினாடிக்கு மில்லியன் டன் ஹைட்ரஜனை எரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் சூரியனுக்கு வெப்பத்தை உமிழும் சக்தி குறைந்து வருகிறது. ஆகவே அதை ஒரு இறந்து கொண்டிருக்கும் நட்சத்திரம் என்று வானியல் வல்லுநர்கள் வர்ணிக்கின்றனர். அதற்காக நீங்கள் பயப்படாதீர்கள். இன்று மாலையே சூரியன் எரிந்து காலியாகிவிடும் என்று முடிவு கட்டி விடாதீர்கள். நிச்சயமாக நாளை காலை சூரியன் உதிக்கும். ஏனெனில் சில மில்லியன் ஆண்டுகளுக்கு தேவையான ஹைட்ரஜன் சூரியனில் இருக்கிறது. இதைச் செய்தவன் யார்? அவனே இறைவன்!!! ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஸ்ரீ ஜனாபாய்-2

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! அங்கே கோயில் அர்ச்சகர்கள் கந்தலைப் பார்த்து “ஐயனே, இது யாருடைய கந்தல்? நேற்றிரவு அருமையான காசிப்பீதாம்பரம் அணிந்திருந்தோமே? எங்கே? ஆபரணங்களையும் காணோமே?” என்று திடுக்கிட்டனர். இதற்குள் மற்றோர் அர்ச்சகர் “இறைவன் பக்தர் வீட்டை நாடிப்போவது இந்த பண்டரீபுரத்திலே சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிதானே! இந்த கந்தலான வெள்ளை சேலையைப் பார்த்தால் ஜனாபாயின் துணிபோல் தோன்றுகிறது. வாருங்கள். நாமதேவர் குடிசைக்குப் போய் சோதனை செய்வோம்” என்றார். எல்லோரும் நாமதேவர் வீட்டை அடைந்தனர். அவள் அணிந்திருந்த பீதாம்பரத்தைக் கண்டதுமே அவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. ஆகவே “அம்மணி இந்த பீதாம்பரத்தோடு ஆபரணங்களும் உம்மிடம் இருக்கவேண்டும். எடுத்துக்கொடுங்கள்” என்றனர். ஜனாபாய் விஷயம் அறியாதவளாய், “எனக்கு ஆபரணங்களை அளிக்கவில்லை” என்றாள். அவர்கள் உட்புகுந்து சோதிக்க எல்லா ஆபரணங்களும் அவள் படுக்கையின் பக்கத்திலேயே இருப்பது கண்டு இவள் பொய் சொல்கிறாள். மோசக்காரி என்று பேசி, இவளை பொதுச்சாவடியிலே கழுவேற்றுவோம் என்று கூச்சலிட்டனர். இதற்குள் அரசனுக்கு அறிவிக்க சிலர் ஓடி தண்டனை நிறைவேற வழி செய்தனர். மற்றும் சிலரோ ஊரெல்லாம் புயலால் சிதைந்தது. நாமதேவர் குடிசை மாத்திரம் புதுப் பூச்சுடன் நிற்கிறது. அவர்கள் இறைவனின் அருள் பெற்றவர்கள். அவர்களை நிந்திப்பது பாபம் என்று பேசினர். இப்படி பேசும் அர்ச்சகர்களும், அதிகாரிகளும் ஜனாபாயை கழுமைதானத்திற்கு … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

தாயின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு எவ்வாறு நிகழ்கிறது? ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டையுடன் இசைந்து கரு உண்டாகும். அந்த இணைப்பு சரியாக நிகழாவிட்டால் கரு உண்டாகாது. அதேநேரம், அவை சரியாக இணைந்திருந்தாலும் ஒரு பிரச்சினை உண்டாக வாய்ப்புண்டு. அதாவது ஆணின் உயிரணு பெண்ணின் கருப்பையில் நுழைந்தவுடன், தாயின் மஞ்சள் கருவில் இருந்து மெல்லியதான ஒரு சவ்வுப் படலம் தோன்றி, மற்ற உயிரணுக்களை கருப்பைக்குள் நுழைய விடாமல் கருப்பையின் வாசலை அடைத்துவிடும். இந்தச் செயல் சரிவர நடந்து, வெற்றிகரமாக உண்டாகும் கரு முதல் மாதத்தில் ஒரு தான்றிக்காயின் அளவுக்கு இருக்கும். இரண்டாவது மாதத்தில் நோய்கள், மயக்கம் போன்றவற்றால் தாயின் கருப்பையின் வாசல் மூடப்படாமல் போனால், அந்த மாதத்திலும் சில உயிரணுக்கள் உள்ளே நுழையும். அப்படி நுழைந்தால், அப்போதும் கரு உண்டாகாது. இப்படிப்பட்ட பிரச்சினையிலும் தப்பி, இரண்டாவது மாதம் வெற்றிகரமாக கருவானது நிலைபெற்றுவிடுகிறது. மூன்றாவது மாதத்தில் உருவான கரு நன்கு வளர வேண்டும் அல்லவா? அதற்காக, அதுவரை வெளியேறிக்கொண்டிருந்த தாயின் மதநீர் வெளியேறாமல், கருப்பையிலேயே தங்கும் அதனால் கருப்பை வீங்கும். வயிறு சற்று பெருத்து வீங்கும். சில நேரங்களில் மதநீரை தாங்கமுடியாமல், கருப்பை கிழிவதும் உண்டு. இந்தப் பிரச்சினையிலிருந்தும் தப்பி, இரண்டாவது மாதத்தைத் தாண்டி மூன்றாவது … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஸ்ரீ ஜனாபாய்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! ஒருநாள் நடுநிசியில் நாமதேவர் தமது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தார். கடும் காற்றும் மழையும் உண்டாயின. காற்று கூரைகளையெல்லாம் தூக்கி எறிந்தது, மழையும் இடியும், மின்னலுமாய் பொழிய ஆரம்பித்தது. இறைவன் கோயிலினின்று ஓடிவந்து தமது சக்ராயுதத்தை அவரது வீடு பறந்து செல்லாமல் மேலே குடைபோல் நிறுத்தி அவ்வீட்டை காத்தார். ஆனாலும் சுவர்கள் ஈரம் தாங்காமல் சரிந்து உட்கார்ந்துவிட்டன. பொழுது புலரும் சமயம் நாமதேவர் மழை பெய்த செய்தியே அறியாதவராய் மெல்ல எழுந்து எட்டிப்பார்த்தார். ஒளி பொருந்திய பீதாம்பரம் தரிப்பவனும், காதுகளிலே குண்டலங்கள் சூரிய சந்திரர்கள்போல் பிரகாசிப்பவனும், ரத்தினமயமான கிரீடம் தரிப்பவனுமான இறைவன் மண்ணை தன் கையினால் பிசைந்து சுவர் எழுப்புவதைக் கண்டார். “அடடா, இதென்ன அபச்சாரம்! என் வீட்டிற்கு தாங்கள் மண் பூசுவது அடுக்குமா? இது தகுமா” என்று கதறினார். இறைவனோ மிகுந்த கனிவுடன் “அப்பா குழந்தாய் காற்றிலே உன் சிறு குடிசை பறந்துபோயிருக்கும். நீயோ என் நாமத்தை தவிர வேறொன்றிலுமே பற்று இல்லாமலிருக்கிறாய். உனக்கு வரும் தீமையை விலக்குவது என் பணியல்லவா! அப்படி செய்யாவிட்டால், உன் தாயார் என்னை சும்மாவிடுவாளா?” என்றார். இங்கே பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த குணாயி இறைவன் திருவடிகளிலே வீழ்ந்து “தங்களை நான் தூஷித்ததுண்டு, உண்மைதான். மன்னிக்க வேண்டும்” … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்