தமிழ் | తెలుగు

» கவிதைகள்

அருளாசி

எல்லாம் வல்ல இறையருளால் எங்கும் எங்கும் இன்ப மயம் வல்லான் இவனின் பேர்சொல்லி வாய் நா அசைத்தால் போதுமது அன்பின் வழியே குழைந்திடுவான் அருளார் கண்டே மயங்கிடுவான் புல்லாங்குழலால் ஊதியவன் புன்மைக் குணங்களை போக்கியவன் செல்லாக் காசும் பெரிதாகும் சிந்தை அவனின் மீதிருந்தால் களையாத் துயரும் களைவானே விளையாட்டுப்பிள்ளை கண்ணனருள் பொன்னினும் மேலாம் பகவானைப் போற்றிட வளரும் தகவுகளாம் ஏடாம் இந்த ‘மனுஜோதி’ என்றும் எமக்கு அருளாசி!                         – துருவன், பெரம்பூர், சென்னை ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே!

உலகெல்லாம் உய்யவே உயர்வழி காட்டும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! நிலமிசை புகழ்பெற நீதியை நிலைநாட்டும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! கலக்கம் நல்கும் ஊழ்தனை வென்றிடும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! பலமதை தருவதும் பல இன்னல்களை போக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! மின்னலாய் மறையும் மானிடர் வாழ்வு நின் மதி முகமாய்! ஒளி தருகின்ற உயர்வு பெறும் நன்னாளே  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! நல்லறம் புரியும் நல்லார் நட்பும் தருகின்ற  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! கல்வியும் கருணையும் செல்வமும் நின்னருளே  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! அறமொழி பொருளும் அளவிலா இன்பமும் தரும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! மறவெளி நீங்கி மன்பதை நிலைக்க அருள்தரும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! திறன்மிகு வாழ்வும் செழிப்பும் சேரவே  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! இமையாய் கண்ணுடைய படைப்பின் நாதனே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! நல்வினை நிகழும் நற்கதி தரும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! நின் காற்பாதத்தில் நாங்கள் சரணடைந்தோம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! எங்களை என்றும் ஏற்றமிகு காத்திடுவாய் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! முக்கடலும் சூழ்நாடு கொண்டவரும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! எக்கடலும் தாண்டிப் புகழ் எய்தியவர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! முக்கனியாய் முத்தமிழாய் அனைவரையுமே  ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! பஞ்சமில்லா வளைந்தனையே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! – தமிழறிஞர் எஸ்.பி. கே. சாமி, தென்காசி ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா போற்றி போற்றி!

ஓம் நமோ பகவதே போற்றி போற்றி! ஓம் இறைவா போற்றி போற்றி! ஓம் எதிர்ப்பை எதிர்ப்பவனே போற்றி போற்றி!     ஓம் ஒளிர்பவனே போற்றி போற்றி!   ஓம் கவலையறச் செய்பவனே போற்றி போற்றி! ஓம் ஞான சக்தியே போற்றி போற்றி! ஓம் அன்பர்க்கு எளியவனே போற்றி போற்றி!      ஓம் இன்பமானவா போற்றி போற்றி! ஓம் ஏழ்மையை அகற்றுபவனே போற்றி போற்றி! ஓம் ஓம் கம்பீர உருவமே போற்றி போற்றி! ஓம் எமை காப்பவனே போற்றி போற்றி! ஓம் ஞான காவலனே போற்றி போற்றி! ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணா போற்றி போற்றி!  – M. ஆண்டாள், பாண்டிச்சேரி ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

கவிதைகள்

அனுக்ரகித்தாய் மனுஜோதி ஆஸ்ரமத்தை நீ படைத்தாய் மனுகுலம் ஒன்றினையும் நீ படைத்தாய் அறியாமை சாகரத்தில் வீழ்ந்தவர்கள் ஆறுதல் நீ கொடுத்து ஆதரித்தாய் ஆநிரை கன்றுகளை மேய்த்தவன் நீ ஆயிரம் வேதமொழி கற்றவன் நீ கற்பக மலர்களிலே நீயிருப்பாய் குலம்வாழ அற்புதங்கள் நீ புரிவாய் வன்மம் மனதைவிட்டு போக்கிடுவாய் வறுமை இல்லையென்று ஆக்கிடுவாய் முந்தையர் செய்த நல்ல தவத்தினாலே முரளி கிருஷ்ணா நீ அனுக்ரகித்தாய் – கே. வி. ஜெனார்த்தனன், காஞ்சிபுரம் —- வழிகாட்டுமே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நற் கொள்கை தனையே இன்றே நாமெல்லாரும் ஏற்றுக்கொள்வோம் கூடி வாரீர்……..! ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அரும்பெரும் போதனைகள் பின்பற்றியே எல்லோரும் ஓர் குலம் என்ற கொள்கை தன்னை யேற்றே இம்மண்ணில் மாந்தரெல்லாம் இணைந்தொன்றாய் வாழ்ந்துயர்வோம் வாரீர்…..! வாரீர்……! – நல்லாசிரியர் கவிஞர் பி. வேலுசாமி, எடப்பாடி —— விண்ணும் . . . மண்ணும் . . . விண்ணை மறந்தவர் கோடி! மண்ணை இழந்தவர் கோடி! விண்ணையும் மண்ணையும் அளந்தவன் ஒருவனே! விண்ணின்று மண்ணுக்கு வந்தவன் அவனே! வந்தவர் தன்னைக் கண்டவர் யாரோ? கண்டவர் செல்வார் கைலாசந்தானே! கைலாசம் என்பது இமயமில்லையே! கயிலை நாதன் இருக்குமிடந்தானே! கடைகோடி தன்னில் இருப்பவன் அவனே! விரைந்திடுவோம் அங்கு! வீழ்ந்திடுவோம் அவர் திருப்பாதம். வினை தீர்க்கும் மன்னன் அவன் – நம்மை விண்ணுக்கு கொண்டு செல்வான்! விந்தையவன் கல்கி தானே! விண்ணையும் மண்ணையும் ஒன்றாக்கி விண்ணவர் கொடி தானேற்றி, வீரத்திலகம் தனதாக்கி வீரமாய் வீற்றிருக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! – இறைத்தொண்டர் K. ரவிக்குமார், கோவை —– அன்பின் மறு அவதாரம் ஸ்ரீ லஹரி அய்யா பிரார்த்தனையில் உன் அன்பு தரிசனம் கண்டேன் வந்தவர்கள் அனைவரின் பசி … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து, கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா

ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என உணர்ந்திட நன்றாக அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா மத வெறியும் இன வெறியும் இல்லாமல் மக்கள் வாழ்ந்திட மனுஜோதிக்கு அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா உத்தம மார்க்கத்தில் வாழவேண்டும் என்றால் சத்திய நகருக்கு அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா கொலை, களவு, கள், காமம், கோபத்தை மறந்திட தலையாய நகருக்கு அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா எல்லோரும் வாழ்ந்து பேரின்பம் பெற்றிட நல்லோர்கள் வாழ்ந்திட அழைக்கின்றார் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அய்யா – புலவர் திருக்குறள் இரா. நடராசன், தென்காசி ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

அன்பின் மறு அவதாரம் ஸ்ரீ லஹரி அய்யா பிரார்த்தனையில் உன் அன்பு தரிசனம் கண்டேன் வந்தவர்கள் அனைவரின் பசி தீர்த்த ஸ்ரீ லஹரி இன்முக வரவேற்பு, மானுடனும் மனித குலமாம் இதை மனதில் தந்த லஹரி அய்யா கண்டேன் உன் வரவை அனுதினமும் லஹரி கிருஷ்ணாவைப் பாடுவோம் சேர்ந்து வாழ்வோம் மனுஜோதிஆசிரமத்தில்….. – சு. பொருநை பாலு, திருநெல்வேலி ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருக்குரல்

மெய்யான சத்தியத்தைக் கூற மன சமாதானத்தை தர இறை அருள் பெற உங்களை அழைக்கிறது ஒரு குரல் வேத இரகசியங்களை விவரிக்க மர்மங்களைத் தெரிவிக்க ஞானத்தைப் போதிக்க உங்களை அழைக்கிறது ஒரு தெய்வீக குரல் வானத்தையும், பூமியையும் படைத்தவரின் குரல் வனாந்தரத்திலிருந்து உங்களை அழைக்கும் குரல் அதுவே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருக்குரல் – ரா. ரஞ்சித், மனுஜோதி ஆசிரமம் … Read entire article »

Filed under: கவிதைகள்

இன்ப நிலை

நெல்லையிலே நீயமைத்தாய் ஆசிரமம் நல்லபேரை நீயெடுத்தாய் சீக்கிரம் சொல்லெடுத்து நீ வடித்த நூல்களை சேகரித்து வைப்பதொரு இன்பமே விஸ்வரூ தரிசனத்தைக் காட்டினாய் விசுவாச ஜீவியத்தை போதித்தாய் மனுஜோதி ஆஸ்ரமத்தை நாடினால் மனதிலொரு இன்பவொளி தோன்றுமே மனித வாழ்வின் தத்துவத்தை ஓதினாய் மனிதருக்குள் நம்பிக்கையை ஊட்டினாய் இறைவனிடம் சார்ந்து வாழ வேண்டினாய் இருளகற்றி இன்ப நிலை காட்டினாய் – கே.வி. ஜெனார்த்தனன், காஞ்சிபுரம் ✡✡✡✡✡✡✡    … Read entire article »

Filed under: கவிதைகள்