தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து

ஸ்ரீ ஜயவந்த பக்தர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! இருண்ட சிறையிலே தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தார் ஜயவந்தர். சிறையில் அசுத்தமும், நாற்றமும் கலந்த அந்த சூழ்நிலை அவருக்கு அருவருப்பு உண்டாக்கவில்லை. சிறையை கண்டவுடனேயே, நீதி நெறியற்ற இந்த செயல்கள் இன்று புதிதல்லவே. கம்சனின் கொடுமையினால் ஒரு பாவமும் அறியாத வசுதேவர் சிறையில் இருக்கவில்லையா? இன்று எப்படி நடைபெற வேண்டுமென்பது அவன் திருவுள்ளமோ? விடிந்ததும் நம்மை கட்டிப்போட நபர்கள் வந்துவிடுவார்கள். ஆகவே எஞ்சியுள்ள இந்த நேரத்திலே இறைவனுடைய திருநாமத்தை ஓதுவோம். இப்பிறவி போனால் மறுபடியும் எப்பிறவி வாய்க்குமோ? இந்த நிலையில்லாத சரீரத்தினால் எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ செய்தாயிற்று. இனி அவருடைய திருவடிகளை அடைவது ஒன்றுதான் பாக்கி. ஆனால் இதற்கு ராஜ தண்டனை என்ற பழி வேண்டாம் என்று நினைத்தவராய், தியானத்தில் ஆழ்ந்தார். எவ்வளவு நேரம் தியானம் செய்தார் என்பதே அவருக்கு தெரியாது. சிறைச்சாலையில் பெரிய இரும்பு கதவுகள் திறக்கப்படும் ஓசையினால் அவரது தியானம் கலைந்தது. மிகப் பெரியதோர் குளம். அதிலேதான் இவரைப் போட வேண்டும் என்று உத்தரவு. விஷயம் தெரிந்த ஊரார் அரசனை தூற்றினர். இப்படிப்பட்ட மகானுக்கு தண்டனையா? என்று துடிதுடித்தனர். அருமையான மைந்தர்கள் அறுவறும்கூட அங்கே வந்திருந்தனர். வீரர்கள் ஜயவந்தரை கட்டி வைத்த பையைத் தடால் என்று குளத்தில் வீசினர். அப்பொழுதும் அவர் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

வள்ளாரின் திருவருட்பா

தெளிதேன் துளிகள் (தெரிந்தெடுக்கப்பட்டவை) உலகர்க்கு உய்வகை கூறல் கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நோPர் கொட்டோடே முழக்கோடே கோலங் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எட்டோடே இரண்டு சேர்த்தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே விளக்கவுரை (தொடர்ச்சி):  சென்ற இதழில், “கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்” என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. சிலர் “கண்ணும் கருத்துமாக மிகவும் பிரயாசப்பட்டு இறைவனை அறிய வேண்டுமா?” என்று மிகவும் விசனப்பட்டு கொள்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஞானி ஜேம்ஸ் ஆலன் இயற்றிய அகம்மே புறம் என்ற புஸ்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்காட்டுவது உகந்ததாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பது தெளிவாகும். அவர் தமது 24-ம் வயதில் ‘ஆசிய தீபம்’ என்ற புஸ்தகத்தை வாசித்தார். அந்த புஸ்தகத்தை வாசித்த பிறகு அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. அது முதற்கொண்டு நமது நாட்டு நூல்களுள் பெரு விருப்பம் கொண்டு மிகுதியாக படிக்க தொடங்கினார். “கீழ்நாட்டாரே மெய்ஞான கருவூலம் என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. அவருடைய நூல்களை நமது இந்திய சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் என்று சிறப்பிக்கப்படுபவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாசித்து, அவற்றின் அருமை பெருமைகளை உணர்ந்து “யான் பெற்ற இன்பம் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கவிதைகள்

பாரதப் போரில் தேரோட்டி பகைவரும் உன்னை பாராட்டி – இடையே நீரதன் தலைமைப் பொறுப்பேற்று நடத்திய திறமைக்கு நிகரேது? இரு தாரங்கள் கொண்டவனே அவதாரங்கள் பத்து எடுத்தவனே – மணி வண்ணா உன் திருநாமம் சொன்னால் பகையும் நெருங்காது. வீ. உதயகுமாரன், திருவாரூர் ✡✡✡ ஒன்றே இறைவன் ஆகும் – அதை ஒதுக்கின் நிம்மதி போகும் துன்பங்கள் எங்கும் படரும் – மனித வாழ்வினில் என்றும் தொடரும் மனிதனை மனிதன் கொல்லும் – கொடும் மடமையே எதுவிங்கு வெல்லும் வாழ்வதும் தடம்மாறிச் செல்லும் – நெடும் வறுமையும் பற்றியே கொள்ளும் மானுடம் ஒன்றே குலமாம் – அதை மனதினில் கொண்டால் நலமாம் மதத்துடன் மதத்தினைச் சேரு – அதில் மாண்புகள் கிடைத்திடும் பாரு பொதிகை மு. செல்வராசன், சென்னை ✡✡✡   ஸ்ரீ லஹரி அய்யா துணை! அன்பு இருந்தால் ஆதரிக்கும் சுத்தம் குறை இருந்தாலும் ஸ்ரீ லஹரி அய்யாவை வணங்கு! இறைவன் சொல்லுவது உண்மை நோய் இருந்தால் நோன்பு வினை இருந்தால் விரதம்தான் வாழ்வை வந்து வலி நீக்கும் வாசம் மலர் பூ மணக்கும் கோடி மக்களை கொண்டு அணைக்கும் உலகம் பூரா உறவாகும் பாப்பாக்குடி பக்கத்தில் வந்தவருக்கு வரம் கொடுக்கும் அய்யா என்று சொல்லி தரும் எல்லாரும் கும்பிடும் ஏழை மக்களை ஏந்தி வளர்க்கும் பாவங்களை போக்கும் எங்களுக்கு ஸ்ரீ லஹரி அய்யாவே துணை! M.S. முனியம்மாள், வள்ளியூர் ✡✡✡   வந்தார் அய்யா வந்தாரு லஹரிகிருஷ்ணா வந்தாரு தந்தார் அய்யா தந்தாரு ஒருமைப்பாட்டை தந்தாரு சென்றார் அய்யா சென்றாரு மேலை நாடுகளெல்லாம் சென்றாரு வென்றார் அய்யா வென்றாரு வேதங்கள் ஆய்வில் வென்றாரு நின்றார் அய்யா நின்றாரு – ஒரு தெய்வமாய் உலகில் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பரந்த மனப்பான்மை

ஒரு ஞானியிடம் ஒரு மனிதர் வாழ்வில் நிறைய கஷ்டங்களை சந்திப்பதாகவும் தொடர்ந்து ஏற்படும் வலிகளை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் புலம்பினார். ஞானி ஒரு தம்ளரில் ஒரு கைப்பிடி உப்பை போட்டு கலக்கினார். அதை அந்த மனிதரிடம் கொடுத்து குடிக்க கூறினார். அதை குடிக்க முடியாமல் அவர் திணறினார். உப்பு கரிக்கின்றது என்று ஞானியிடம் கூறினார். இப்பொழுது ஒரு ஜாடி தண்ணீரில் ஒரு கைப்பிடி உப்பை போட்டு கலந்தார். அதை அந்த மனிதனிடம் கொடுத்து குடிக்க கூறினார். அவர் அதை குடித்துவிட்டு இதை குடிக்க முடிகிறது. உப்பு லேசாகத்தான் தெரிகிறது என்றார். ஞானி அந்த மனிதனை அருகேயுள்ள ஏரிக்கு அழைத்துச்சென்று அதில் ஒரு ஒரு கைப்பிடி உப்பை போட்டார். பின்னர் அந்த ஏரியின் தண்ணீரை குடிக்கும்படி கூறினார். இந்த தண்ணீர் நன்றாக உள்ளது. உப்பின் சுவை சிறிதளவுகூட தெரியவில்லை என்று அந்த மனிதர் கூறினார். நான் எல்லா தண்ணீரிலுமே ஒரே அளவு உப்பைத்தான் போட்டேன். அதின் தாக்கம் சிறிதளவு தண்ணீரில் அதிகமாகவும், அதிகமான தண்ணீரில் சிறிதாகவும் தெரிந்தது. வாழ்க்கையிலும் நமது வலிகளும், பிரச்சினைகளும் உப்பைப் போன்றது. மனதை விசாலமாக்கி, பரந்த மனப்பான்மை ஏற்படும்போது வலியின் தாக்கம் குறைந்துகொண்டே வரும். ஏரி போன்று மனம் விசாலமானபின் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பல்சுவை

தற்காலிக நாகரீகமானது மனிதனின் அன்றாட தேவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பறவைகளும், விலங்குகளும் விடியற்காலையில் எழுகின்றன. பிறகு தன்னுடைய அன்றாட உணவைத் தேடுவதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகின்றன. இரவு வந்தவுடன் மீண்டும் தனது இருப்பிடம் தேடி செல்கின்றன. இதைப்போன்றே நகரத்திலுள்ள மக்கள், தங்களது உணவிற்காக, பெருங்கூட்டமாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பணிபுரியச் செல்கிறார்கள். உண்மையான நாகரிகமானது மனிதனின் அடிப்படை தேவைகளுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது மனிதனுக்கும், இறைவனாகிய அந்த மிகவும் உயர்ந்த தந்தைக்குமிடையே உள்ள உறவை அறிந்துகொள்வதற்கானது. அந்த உறவினை ஒருவன் எந்த முறையில் வேண்டுமானாலும் அறியலாம். கிறிஸ்துவம், வேத இலக்கியங்கள் அல்லது குர்-ஆன் என ஏதேனும் ஒரு முறையிலிருந்து அது கற்கப்பட வேண்டும். மனித இனத்தின் கடமை இறைவனுடனான உறவை புரிந்துகொள்வதற்கானது என்பதை தெரிவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இறைவனுடனான உறவை அறிந்துகொள்ளுதல் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். இல்லையெனில், ஒருவன் மிருகத்தனமான குணங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்து விடுகிறான். நாம் அனைவரும் இறைவன்மீது அன்பு செலுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கு நாம் வேதங்களை படிக்க வேண்டும். சரியான விஷயத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று சாணக்கிய பண்டிதர் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கோப்பையில் நஞ்சும் அமுதமும் சேர்ந்திருந்தால், நஞ்சை விட்டுவிட்டு அமுதை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அவர் கூறுகிறார். … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

தர்மத்தின் நோக்கம்

மனிதப்பிறவி எடுத்து மனித உரு தாங்கி, நடமாடிக்கொண்டிருக்கிறவர்கள் எல்லாரும் மனிதர்கள் அல்ல. இதனை விளக்க ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. திருவொற்றியூரில் வசித்த யோகி ஒருவர் ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்தவாறே தெருவில் நடந்துபோகிற மனிதர்களை இதோ ஒரு பாம்பு செல்கிறது, இதோ ஒரு தேள் போகிறது, இதோ ஒரு நரி செல்கிறது என்று வர்ணித்துக்கொண்டே இருந்தார். இதை தினந்தோறும் கவனித்துக்கொண்டே இருந்த ஒருவன் இவருக்கென்ன மூளை கோளாறோ என்று எண்ணினான். ஒருநாள் அந்த தெருவிலே வள்ளல் பெருமான் நடந்து சென்றார். அப்போது இதோ ஒரு மனிதர் செல்கிறார் என்று அந்த யோகி கூறினார். எப்போதும் யார் சென்றாலும் ஏதேனும் விலங்கு அல்லது ஊர்வனவற்றின் பெயர்களை சொல்லி வர்ணிக்கும் அவர் அன்றைக்கு ஒரு மனிதர் செல்கிறார் என்று கூறியது, அந்த மனிதனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. உடனே அவன் அந்த யோகியிடம் சென்று அவருடைய செய்கைக்கான காரணத்தை அறிய ஆர்வமாக அவரிடம் கேட்டான். அதற்கு அவர்: “நான் மனிதர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களை எடைபோடுவதில்லை. எனது ஞான கண் கொண்டு அவரவர் மனதினை அறிந்து, அவர் எந்த தன்மை கொண்டவராக இருக்கிறாரோ அதை வைத்துதான் வர்ணித்தேன். இன்றுதான் மனிதத்தன்மை கொண்ட மனிதர் ஒருவர் நடந்து செல்வதைக் கண்டேன். அதனால்தான் ஒரு … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

புத்தர் காப்பாற்றிய அன்னப்பறவை

புத்தர் என்று அழைக்கப்பட்ட சித்தார்த்தனின் அத்தை மகன் தேவதத்தன் அவரது வயதை ஒத்தவன். அரண்மனை தோட்டத்தில் இருவரும் இணைந்து விளையாடுவார்கள். ஒருநாள் சித்தார்த்தன் அரண்மனை தோட்டத்தில் இருந்தபோது, அவரது மடியில் ஒரு அன்னப்பறவை வந்து விழுந்தது. அதன்மீது அம்பு தைத்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. இளகிய மனம் கொண்ட சித்தார்த்தனின் மனம் துடித்தது. அதின் உடலிலிருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்து, தனது உடலின்மேல் போர்த்தியிருந்த பட்டுத்துணியை எடுத்து அதில் அன்னத்தை பொதிந்தான். பின் காயத்திற்கு மருந்து தடவி அரண்மனைக்கு அதை எடுத்துச்சென்றான். அப்போது அத்தை மகன் தேவதத்தன் ஓடி வந்தான். அவன் சித்தார்த்தனிடம்: “இது நான் வேட்டையாடிய பறவை, அதை என்னிடம் கொடு” என்று கேட்டான். சித்தார்த்தனுக்கு கோபம் வந்தது. பறவை வலியால் துடிக்கிறது என்று கூறிவிட்டு நடந்தான். தேவதத்தனோ அதை தன்னிடம் தருமாறு அடம்பிடித்தான். ஆனால் சித்தார்த்தனோ அதை தான் குணமாக்கப்போவதாக கூறினான். இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் அவன் தேவதத்தனிடம்: உயிர்களை காயப்படுத்துவது நியாயமல்ல, ஒன்று செய்வோம். இந்த பறவையை நான் கீழே விடுகிறேன். இருவருமே இந்த பறவையை அழைப்போம். அது யாரிடம் செல்லுகிறதோ அவருக்கு பறவை சொந்தம் என்று கூறினான். தேவதத்தனும் அதற்கு ஒப்புக்கொண்டான். சித்தார்த்தன் அன்னப்பறவையை கீழே விட்டான். பிறகு தேவதத்தன் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

காலதாமதம் எனும் மெதுவாக செயல்படும் விஷம்!

ஒருமுறை இப்படி நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சாத்தான் காத்திருந்தும் நரகத்திற்கு ஒருவர்கூட வரவில்லை. அவர் நரகத்திற்கு வருபவர்களை வரவேற்க காத்துக்கொண்டிருந்தபோதிலும், உலகம் நல்லபடியாக இயங்கிக்கொண்டிருந்ததாலும், மக்கள் நல்லவர்களாக வாழ்ந்து வந்ததாலும் யாருமே நரகத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை. சாத்தானிற்கு இது மிகவும் கவலையளித்தது. இப்படியே நிலைமை நீடித்தால் நரகத்தை இழுத்து மூடிவிட்டு போய்விட வேண்டியதுதான். எத்தனை நாட்கள்தான் ஒருவருமே இல்லாமல் நரகம் வெறிச்சோடி கிடப்பது? சாத்தானிற்கு இது மிகவும் ‘நரக வேதனையாக’ இருந்தது. வேறு வழியில்லாமல் ‘நரக சபையின்’ அவசரகால கூட்டத்தை உடனே கூட்டினான். கூடியிருந்தவர்களிடம் நிலைமையை சமாளிக்க ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டான். ஒவ்வொருவரும் பல கருத்துக்களை கூறினார்கள். எதுவும் சாத்தானை கவரவில்லை. அப்போது ஒருவன் “சாத்தான் மகா பிரபு! நாம் பூவுலகத்திற்கு சென்று மனிதனிடம் கடவுள் இல்லை என்றும், மதங்கள் எல்லாம் பொய்யானவை என்றும் அவனுக்கு புரியும்படி எடுத்துக்கூறினால் அவன் அதை நம்பி தவறுகள் செய்வான். பிறகு நரகம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிடும்”என்றான். இதைக்கேட்ட சாத்தான் இது சாத்தியப்படாது என்று நிராகரித்துவிட்டான். இன்னொருவன் எழுந்து சாத்தானை வணங்கிவிட்டு, “அரசே! பூலோகத்திற்கு சென்று மனிதனிடம் வேதங்கள் எல்லாம் உண்மையையே கூறுகின்றன. கடவுள் இருக்கிறார், சொர்க்கமும் இருக்கிறது. ஆனால் சாத்தான் இல்லை, நரகம் என்பதும் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து