தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து

தெலுங்கு என பெயர் வர காரணம் என்ன?

முன்னொரு காலத்தில் தமிழ் கலாச்சாரமானது உலகெங்கும் பரவியிருந்தது. நம்முடைய இந்தியாவானது ஜாவா, டெஹ்ரான், போர்டியோ, சுமத்திரா அங்கிருந்து இந்தியா வரை ஒரே தேசமாக இருந்தது. அது அகண்ட பாரதம் என்று அழைக்கப்பட்டது. இந்திய சரித்திரத்தை ஆங்கிலேயர்கள் மறைத்து விட்டனர். இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை  ஒரே நிலப்பரப்பாக இருந்தது. உங்களால் இதை நம்ப முடிகிறதா? எகிப்து, பாபிலோன் போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் என்று தெரியுமா? பல நூறு வருடங்களுக்கு முன்னர் தமிழ் கலாச்சாரம்தான் எகிப்து தேசத்திற்கு சென்றது. எகிப்திய ஜனங்கள் அதை ரோம் தேசத்திற்கு எடுத்து சென்றார்கள். அதன்பிறகு கிரேக்க மக்கள் எடுத்துக்கொண்டு சென்றார்கள். பிறகு வடக்கு வழியாக திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள். பின்னர் தமிழ் கலாச்சாரம் ஜப்பானுக்கு சென்றது. பின்னர் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் தமிழ் மொழியானது வேறு எந்த மொழியுடனும் ஒத்துப்போவதில்லை. ஆங்கிலேயர்கள் இந்த பெயர்களையெல்லாம் மாற்றி விட்டனர். அதனால்தான் நாம் யார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. தெலுங்கு என்ற பெயர் தங்களுக்கு எப்படி வந்தது என்று தெலுங்கு மக்களுக்குகூட தெரியாது. தெலுங்கு என்ற மொழி தென்னிந்தியாவில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானத்தில் பேசப்படும் மொழியாகும். உலகில் அதிக அளவில் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

பற்று

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” என்று வள்ளுவர் கூறியதின் பொருளாவது ஆசை அல்லது பற்றை விடுவதற்கு எல்லா பொருள்களுக்கும் மூலகாரணராகிய ஆசை அல்லது பற்று அற்ற பரம்பொருளின் அழகிய பாதங்களை இறுகப் பிடித்துக்கொள் என்பதாகும். இறைவன் ஆசை அற்றவன் என்று ஒப்புக்கொள்ளலாம். பற்று இல்லாதவன் என்றால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏன்? அவன் பற்றியிருப்பதினால்தானே வளியில் பூமி சுழன்று கொண்டிருக்கிறது, நட்சத்திரங்கள் தொங்கி கொண்டிருக்கின்றன, சூரியன் தொங்கி கொண்டிருக்கிறது. அத்துடன் அண்டசராசரத்திலுள்ள சகலமும் இறைவன் பற்றி பிடித்துக்கொண்டிருப்பதினால்தானே அவை தத்தம் இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் இந்த பற்றை புவிஈர்ப்பு சக்தி என்றார்கள். மெய்ஞானம் இதனை இறைவனின் கட்டுப்பாடு என்கிறது. அவ்வளவுதான்!!! திருக்குர்-ஆனும் இக்கருத்தை கூறுகிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்-ஆன் 13:2). நீங்கள் பார்க்கக்கூடிய தூணின்றி வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளை போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

புத்தாடை அணிவதின் தத்துவம்

மனிதன்தான் புத்தாடை அணிவதற்காக பணம் கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் மரமானது, தன்னுடைய பழைய இலைகளை உதிர்க்கிறது, மிருகங்களும், பறவைகளும் தாங்களே தங்கள் இறகுகளையும், முடிகளையும் உதிர்க்கிறது. அதற்கு பதிலாக புதியது உருவாகிறது. மக்கள் பொதுவாக எல்லா பண்டிகைகளுக்கும் புத்தாடை அணிந்து கோவில், மசூதி மற்றும் ஆலயம் சென்று வழிபடுவார்கள். புத்தாடை அணிவதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. ஸ்ரீமத் பகவத்கீதை 2:22: “மனிதன் எவ்வாறு நைந்துபோன துணிகளை எறிந்துவிட்டு வேறு புதியவற்றை எடுத்துக்கொள்ளுகிறானோ அவ்வாறே உடலில் உறைபவன் நைந்துபோன உடலங்களை விட்டுவிட்டு வேறு புதியவற்றை அடைகிறான்”. இறைவன் நமக்கு ஜீவன் முக்தியை அருளும்போது நமக்கு ஒரு புதிய தேகத்தை அல்லது புதிய உடலை கொடுக்கிறார். இப்பொழுது நாம் தேகத்தை ‘மெய்’ என்று அழைக்கிறோம். ஆனால் இந்த ‘மெய்’ பொய்யானது, அழியக்கூடியது. இக்கலியுகத்தின் முடிவில் இறைவன் நமக்கு நவானிதேஹியை அல்லது மரணமில்லாத வேறொரு புதிய சரீரத்தை அருளுகிறார் என்ற தத்துவத்தை உணர்த்தவே நாம் பண்டிகையின்போது புத்தாடையை அணிகிறோம். இந்த நவானிதேஹி அல்லது புதிய சரீரம் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து ‘வரம்’ என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

அன்னம்

“தானத்தில் சிறந்தது அன்னதானம்” என்ற கூற்றை அனைவரும் அறிந்திருக்கிறோம். உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். நாம் பிறருக்கு வழங்கும் உணவு அவரின் வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் சக்தியை அவருக்கு வழங்குகிறது. நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புதச் செயல் அன்னதானமாகும். ஆனால் அன்னம் என்பதின் உண்மையான பொருள் என்ன என்ற கேள்விக்கு விடையைக் காண தைத்ரிய உபநிஷத்திலிருந்து மேற்கோள் காண்பித்து விளக்கம் கூறியுள்ளார் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா. தைத்ரிய உபநிஷத் 2-ம் அத்தியாயம் அனுவிக்கா – I: “ஸா வா ஈஷா புருஷா அன்னாரசா மயஹா”. அன்னம் என்பதின் சாராம்சத்தை உடையவர்தான் இந்த புருஷர். அப்படியென்றால் ‘அன்னம்’ என்பதின் உண்மையான பொருள் என்ன? நாம் சாதாரணமாக உண்ணும் சாதம் அல்ல. அன்னம் என்பது ஆத்யாத்தே+அத்தி என்பதின் சேர்க்கையாகும். ஆத்யாத்தே என்றால்: உண்ணப்படுவது, அத்தி என்றால் எது உண்ணுகிறதோ் சாதாரண அரிசி சாதத்தை நாம் உண்ணுகிறோம், ஆனால் அது நம்மை உண்ண முடியாது. ஆக “அன்னம்” என்பதின் உண்மையான பொருள் மறைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பகவத்கீதை 3:14-ல் உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லா சிருஷ்டியும் அன்னத்தினால் உண்டானது, அதினால்தான் மழையும் பொழிகிறது. அப்படியென்றால் ‘அன்னம்’ என்பதின் அர்த்தம் ஆதி வேள்வியாகும். ஆதி வேள்வியை … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

வரம்

வரம் பெறுவதற்காக இறைவனை வேண்டி, கடுந்தவம் புரிந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதிகாசங்களை வாசித்து அறிந்திருக்கிறோம். கிரேக்க புராணத்தில் உள்ள தகவல் இதுவாகும். டிராய் நாட்டின் இளவரசர் டிதூனுஸ். இவன் ஆயுளை அதிகரிக்கும் இறைவனான அரோராவை வணங்கி தனக்கு சாகாவரம் வேண்டும் என கேட்டான். இறைவனும் அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். இந்த வரத்தை கேட்கும்போது டிதூனுஸ் ஒரு விஷயத்தை மறந்து விட்டான். என்றும் இளமையுடன் சாகா வரம் வேண்டும் என்று கேட்டிருந்தால் அவன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் சாகா வரம் மாத்திரம் கேட்டதால் அவன் வயதான பிறகும் மரணம் வராமல் வேதனைப்பட்டான். உடல் தளர்ந்து உள்ளம் உடைந்து வேதனை அடைந்த அவன் மீண்டும் இறைவனிடம் வேண்டினான். அவனது நிலைக்கு இறைவன் மனம் இரங்கி  அவனை ஒரு வெட்டுக்கிளியாக படைத்தாராம். ஜீவன் முக்தி, மரணமில்லா பெருவாழ்வு வேண்டுமென்று அநேகர் முயற்சி செய்தார்கள். இந்த கலியுகத்தில் அது இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாதாமே கல்கி மகா அவதாரமாக வந்து அதை அருளுகிறார். அவர் அருளும் சாகா வரம் எப்படிப்பட்டது? ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவை சரணடைந்தவர்களுக்கு கிட்டும் ஜீவன் முக்தியில் அவன் என்றும் இளமையாக இருப்பான். அத்துடன் அந்த தேகத்தில் பசி எடுக்காது, தாகம் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கூர்மம்

உலகை காக்கவும், பக்தர்களை இரட்சிக்கவும் ஸ்ரீமந் நாராயணர் தசாவதாரம் எடுத்தார். அதில் ஒன்றுதான் கூர்ம அவதாரமாகும். கூர்மம் என்றால் “ஆமை” என பொருளாகும். ஸ்ரீமந் நாராயணர் இந்த வடிவத்தை தன் அவதாரத்திற்காக தேர்ந்தெடுத்தது ஏன்? ஆபத்து வரும்போது ஆமையானது, தன் உறுப்புகளை ஓட்டிற்குள் அடக்கி, பாதுகாத்துக்கொள்ளும் தன்மையுடையதாகும். அதேபோல மனிதனும் தீய சிந்தனைகள் எனும் அலைகளால் தாக்கப்படும்போது, தன் மனதைக் கட்டுப்படுத்தி, நன்மை பெற வேண்டுமென்பதே கூர்ம அவதாரம் உணர்த்தும் கருத்தாகும். கீதையை உரைக்கஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தபோதுகூட கர்மயோகியாக இருப்பவன் ஆமையைப்போல உலகப் பொருட்களிலிருந்தும் தன்னுடைய ஐம்புலன்களை இழுத்துக்கொள்கிறான் என்று கூறினார். ஸ்ரீமத் பகவத் கீதை 2: 58: “மேலும், எப்போது இந்த யோகி ஆமையானது தன் அங்கங்களை செய்வது போலப் புலன்களை இந்திரிய விஷயங்களினின்று எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக்கொள்ளுகின்றானோ அவனுடைய ஞானம் உறுதியாக நிலைபெற்றதாகும்”. இவ்வாறு நற்கருத்துக்களை உணர்த்தும் ஆமையைப்பற்றி பழமொழி ஒன்று உள்ளது. ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பார்கள். அப்படியானால் இறைவன் ஆமை வடிவம் எடுத்தது சரிதானா என்ற கேள்வி எழும்புகிறது. இங்கு ஆமை என்று கருதப்படுவது பொறாமை, இல்லாமை, கல்லாமையாகும். பொறாமை புகுந்த மனம் உருப்படாது என்பதே இந்த பழமொழியின் உண்மைப் பொருளாகும். ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க(ல்) ஆற்றின் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

கீதாஞ்சலி

(2014-ம் ஆண்டு மே – ஜூலை இதழில் துவங்கப்பட்ட இக்கட்டுரை இந்த இதழில் நிறைவடைகிறது). இந்திய கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதை தொகுப்பு கீதாஞ்சலியாகும். இதை அவர் வங்காள மொழியில் எழுதினார். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கீதாஞ்சலி என்ற படைப்பில் 103 கவிதைகள் உள்ளது. ஒரு பன்முக தன்மை வாய்ந்த ஆளுமை, தாகூருக்கு இயற்கையாகவே அமைந்தது. 1913-ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். அவரது அசைக்க முடியாத பக்தி கீதாஞ்சலியின் உரை நடை வசனங்களில் கைப்பற்றபட்டுள்ளன. கீதாஞ்சலி நான்கு அடிப்படை தலைப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. 1) கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்புகள். 2) கடவுளுக்கும், இயற்கைக்கும் உள்ள தொடர்புகள். 3) இயற்கைக்கும், மனிதனுக்குமுள்ள தொடர்புகள். 4) ஆத்மாவிற்கும், மனித சமுதாயத்திற்குமுள்ள தொடர்புகள். ‘கீதாஞ்சலி’ எனும் தொடரை நிறைவு செய்யும் வேளையில் மீதமுள்ள சிறந்த பாடல்களை காண்போம். “நீ என்னை முடிவில்லாதவனாக படைத்திருக்கிறாய்”. இறைவன் ஒருவருக்கே முதலுமில்லை, முடிவும் இல்லை. ஆனால் நீ என்னை முடிவில்லாதவனாக படைத்திருக்கிறாய் என்று கவிஞர் கூறுகையில் அவருக்கும், இறைவனுக்கும் எவ்வளவு நெருக்கமான தொடர்பு இருந்தது, அதினால் அவர் இறைவனில் பாகமாகி இந்த வரிகளை எழுதியுள்ளார். “அழிவில்லா உன் கரங்கள் தொடும் பொழுது என் இனிய இருதயம், எல்லையிலா இன்பத்தில் மூழ்குகிறது; பேசமுடியாத பேச்சுக்கள் பிறக்கின்றன”. இறைவன் ஒரு மனித … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து

இறைநீதி

ஒரு முதியவர் அல்லது பெரியவர், ஒரு இளைஞனின் வீட்டிற்கு வந்தால், அவன் அவருக்கு உரிய மரியாதையை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனது உயிர் சக்தியில் சிறிது வெளியேறிவிடும். பெரியவர் ஒருவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குபவனுக்கு உயிர் சக்தி கிடைக்குமாம். ஒரு நல்லவர் நம் வீட்டிற்கு வந்தால், அவரை வரவேற்று உட்காரும்படி கூற வேண்டும். பின்னர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அவர் நலன் விசாரித்த பின்பு அவர் வந்துள்ள சமயத்திற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்று விதுர நீதி கூறுகிறது. பெற்றோருக்கு மரியாதை அளிப்பதைப் பற்றி ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’ என்று ஒளைவை மூதாட்டி கூறியுள்ளார். விவிலியத்தில் பெற்றோருக்கு மரியாதை அளித்தால்தான் பிள்ளைகள் நீடூழி வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் முதியோருக்கு மரியாதை அளிப்பதைப்பற்றி ஸ்ரீமந் நாராயணர் பல கருத்துக்களை கூறியுள்ளார். பெற்றோரை மதியாதவனை தற்கொலை செய்யும்படி தூண்டச்செய்யும் எண்ணம் அவனுடைய மனதிற்குள் புகுந்துவிடும். அதினால் அவர்கள் சீக்கிரத்தில் அதாவது அற்பாயுசில் இறப்பார்கள். சீக்கிரமாக இறப்பதற்கு பெற்றோரை மதிக்காமல் இருப்பதுதான் மருந்தாகும். ஒரு குழந்தை மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்வதைப்போலதான் நாமும் வளர வேண்டும். உடனடியாக நாம் வளர்ந்து பெரியவர்களாக முடியாது. நாம் வாழ்க்கையில் மேடு பள்ளங்களைக் கடந்து வர வேண்டும். அதினால்தான் நாம் … Read entire article »

Filed under: ஆன்மீக கருத்து