தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள்

தாய்க்குப் பின் மனைவி இந்திய நாடோடி கொங்கணிக் கதை

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! இறையே அபயம்!                              யாவும் இறையின் உபயம்! ஒரு கிராமத்தில் மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். இவள் உழைத்துப் பாடுபட்டு மகனை நன்றாக வளர்த்து வந்தாள். கவலை தெரியாமல் வளர்ந்து வாலிப வயதை அவன் அடைந்தான். கிழவி ஒருநாள் தன் மகனைப் பார்த்தாள். மகனே இனிமேல் எனக்குத் தள்ளாத காலந்தான். வீட்டுப் பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்து விட்டு நான் நிம்மதியாக சாமிப் பெயரைச் சொல்லிக் கொண்டு, என் வாழ் நாளை நல்லபடியாகக் கழிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். நீ சீக்கிரம் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து கொண்டு வா என்றாள். பையனும் சம்மதித்தான். அம்மா இனிமேல் நீ வீட்டிலேயே இரு. நான் போய் உழைத்துப் பொருள் கொண்டு வருகிறேன். மருமகள் வந்ததும் இந்த அடுப்படி வேலை கூட உனக்கு இருக்காது என்று தாய்க்கு ஆறுதல் கூறினான். பையனுக்கும் திருமணம் ஆயிற்று. புதுமண வாழ்க்கையில் அவன் தனி ஆனந்தம் பெற்றான். வந்த புதிதில் சாதுவாகத் தோன்றிய மருமகள் போகப்போக தன் உண்மை சொரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கினாள். கிழவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மருமகள் பார்த்து சாப்பாடு போட்டால்தான் உண்டு. மகன் தன் தாயை கவனிப்பதே இல்லை. காலையில் வேலைக்குப் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

சந்நியாசியின் கமண்டலம்

காட்டில் சந்நியாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நாட்டு அரசரை ஒருநாள் அந்த சந்நியாசி அரண்மனையில் சந்தித்தார். அந்த அரசனும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவனாக விளங்கினான். இதை அறிந்துகொண்ட சந்நியாசி, மன்னரின் ராஜபோகத்திற்கு ஆன்மீகத் தேடல் ஒத்துவராது என்று அலட்சியமாகப் பேசினார். சுகபோகங்களைத் துறந்து காட்டுக்குத் தன்னுடன் வருமாறு சவாலும் விட்டார். அரசனும் சம்மதித்து அரண்மனையைத் துறந்து சந்நியாசியின் பின் வந்தார். காட்டில் சிறிது தூரம் சென்றதும் தன் கமண்டலத்தை அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது. “அடடா, என் கமண்டலத்தை அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். வாருங்கள், அரண்மனைக்குப் போகலாம்” என்று அரசனை அழைத்தார் சந்நியாசி. அதற்கு அரசன் மிக்க பணிவோடு, “நான் அரசையே துறந்து உங்கள் பின்னால் வந்துவிட்டேன். நீங்களோ, ஒரு கமண்டலத்துக்காக அரண்மனைக்குப் போகலாம் என்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டீர்கள் என்று சொல்வதை நான் எப்படி நம்ப முடியும்?” என்றார் அரசன். சந்நியாசி தலைகுனிந்தார். ******* … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

நீதி நடு நிலைமை

 “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்  காவலன் காவான் எனின்”. ஒருநாட்டின் மன்னன் குடிமக்களின் நலன் கருதாமல் தனது சுயநலத்தாலும்,தீய செயல்களாலும் நாட்டை ஆட்சி செலுத்தினால் அந்த நாட்டின் பருவமழையும் பொய்த்துப்போகும், பசுக்கள் தரும் பாலின் அளவும் குறைந்து போகும், அந்தணர்கள் கற்ற கல்வி, நூல்களையும் மறந்துபோய் விடுவார் என்கிறார் வள்ளுவர். ஆம்! நாட்டை ஆளும் மன்னன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி மறந்து ஒருமுறை மன்னன் பத்திரகிரியார் நகர் வலம் வருவதற்காக தனது பரிவாரங்களோடு வெளியே புறப்படுகிறார். தெருவில் பல்லக்கில் அமர்த்தி அமைச்சர்களோடு அவரை தூக்கிவர, முன்னால் சிப்பாய் ஒருவன்: வேகமாக தெருவில் உள்ளவரையெல்லாம் துரத்தி அடித்து, ஒளிந்து கொள்ளுமாறு கூறுகிறான். அப்போது தெருக்கோடியில் மிகவும் அழுக்கடைந்த ஆடைகளோடு பரதேசி (பரமனை + நேசி) கோலத்தில் பட்டினத்தார் வந்து கொண்டு இருந்தார். அவரைப் பார்த்த அந்த சிப்பாய்: “ஏய்! மனிதா ஒதுங்கிப்போ எங்கள் மன்னன் வருகிறார்” என்றான். பட்டினத்தாரோ “ஐயா சிப்பாய்! எங்கோ ஒரு மூலையில் ஒரு தூசிதான் என் கண்ணில் தெரிகிறது. உங்கள் மன்னன் தூசி போன்றவரா?” எனக் கேட்டார். உடனே சிப்பாய்க்கு கோபம் வந்து, அவரை மன்னனிடம் தூக்கி சென்று, “மன்னா! இவன் தங்களை தூசி என்று கூறுகிறான்” என்றார். உடனே மன்னருக்கு கோபம் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

மது மயக்கம் – மதி மயக்கும்

சர்வநாச சக்தியாக விளங்கும் சாத்தான் ஒரு உத்தமமான முனிவருடன் விளையாட விரும்பினான். முனிவர் மிகவும் நல்லவர். முனிவர் முன்பு, ஒரு அழகான பெண், ஒரு சிறு குழந்தை, ஒரு மதுப்புட்டி இந்த மூன்றையும் வைத்து சாத்தான் முனிவரிடம் சொன்னான். “நான் சொல்லும் மூன்று பாவச்செயல்களில் ஏதாவது ஒன்றைச் செய்தால் மட்டுமே நீ என்னிடமிருந்து தப்ப முடியும். இல்லையேல் உனது தலை உன் உடம்பில் இருக்காது” என்று முனிவரை மிரட்டினான். என்ன செய்யச் சொல்கிறாய்? என்று முனிவர் கேட்டார். அதற்கு சாத்தான் உனக்கு முன்பாக இருக்கும் குழந்தையைக் கொல்ல வேண்டும், அல்லது பக்கத்தில் இருக்கும் பருவ மங்கையை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும், அல்லது அருகில் இருக்கும் மதுப்புட்டியிலுள்ள மதுவைக் குடித்து காலி செய்ய வேண்டும். மூன்றில் ஏதாவது ஒரு பாவச் செயலைச் செய்தால்தான் உன்னை உயிரோடு விடுவேன் என்றான். முனிவருக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை, பச்சிளங் குழந்தையைக் கொல்வது பெரும்பாவம், அது கருணையற்ற செயல் என்று அவன் உள் மனம் அதற்கு உடன்படவில்லை. அதுபோல அப்பாவிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய மனம் மறுத்துவிட்டது. மதுப்புட்டியைக் காலி செய்வதால் நாம் மட்டும்தான் முழுவதுமாக பாதிக்கப்படுவோம். மற்றவர்களுக்கு பாதிப்பில்லை எனக் கருதிய முனிவர் மதுப்புட்டியில் உள்ள மதுவைக் குடித்தார். மதுபோதை தலைக்கேறியது. … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

கீதாஞ்சலி

“என் பாடலில் எதுகை மோனைகளை தள்ளி வைத்து விட்டேன். அதற்கு ஆடை அலங்காரங்களின் பெருமை இல்லை; நம் ஐக்கியத்தை ஆபரணங்கள் பாழாக்கிவிடும்; உனக்கும், எனக்கும் இடையே அவை குறுக்கிடும். அவைகளின் ஓசையில், நம் இரகசியங்கள் மூழ்கி மறைந்துவிடும். உன் பார்வையில், நான் ஒரு கவிஞன் என்ற பெருமை மறைந்து, கூனிகுறுகி நிற்கின்றேன். ஓ! மகாகவியே, உன் காலடியில் நான் உட்கார்ந்து விட்டேன்; ஒரு புல்லாங்குழலைப் போல், நேராகவும், எளிதாகவும், என் வாழ்க்கையை சீராக்கி வைத்துக் கொள்கிறேன். அதை உன் இசை அமுதத்தால் நிரப்பு”. ரவீந்திரநாத் தாகூர் ஒரு மாபெரும் தீர்க்கதரிசி, அவர் ஒரு கவிஞரும் கூட. அவர் அநேக கவிதைகளை எழுதியுள்ளார். அவருடைய படைப்புகளை உலகத்திலுள்ள எல்லோரும் படித்திருக்கிறார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால் அவர் யாரைக் குறித்துப் பாடுகிறார் என்பதை எல்லாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மறைமுகமாக தன்னுடைய பாடல்களில் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயுள்ள அன்பைப் பற்றிக் கூறுகிறார். அநேக காரியங்கள் நம்மை இறைவனின் அன்பிலிருந்து பிரித்துப் போட முடியும். பணத்தின் மேலுள்ள ஆசை, ஒரு பெண்ணின் மேலுள்ள காதல், ஆஸ்திகளின் மேலுள்ள ஆசை, தன் மாநிலத்தின் மேலுள்ள அன்பு, தன் மாவட்டத்தின் மேலுள்ள அன்பு, உலகத்தின் மேலுள்ள அன்பு போன்றவை நமக்கும், இறைவனுக்குமிடையே உள்ள அன்பிற்கு குறுக்கே வந்து விடலாம். உங்கள் பெற்றோர் மேலுள்ள அன்பு, … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

இறை நாம மகிமை

சிங்காரப்பட்டி அழகான ஊர், அந்த ஊரின் மையப்பகுதியில் அழகான ஓர் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பெரியவர் சற்சங்கம் நிகழ்த்தி வருவது வழக்கம். ஒரு நாள் “இறை” நாமத்தின் மகிமையைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். இறைவனின் நாமத்தைச் சொன்னால் (இந்த உலகத்திலும் மேலுலகத்திலும்) இகத்திலும் பரத்திலும் எல்லா நலன்களும் பெற்று வாழ முடியும் என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞன் அப்பெரியவரை பார்த்து கிண்டலாக இறைவனின் நாமத்தைச் சொன்னால் எல்லாம் கிடைக்கும் என்று கூறுகிறீர்களே, சோறுகிடைக்குமா? என்றான். உடனே அப்பெரியவர் தம்பி, இறைவனின் நாமத்தை சொன்னால் சோறும் கிடைக்கும், தேவைப்பட்டால் இறைவனே வந்து உனக்கு சோறு ஊட்டியும் விடுவார் என்றார். அந்த இளைஞனுக்கு வைராக்கியம் ஏற்பட்டது. எப்படியாவது இறைவனின் நாமத்தைச் சொன்னால் சோறு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டான். வீட்டிலே சென்று இறைவா, இறைவா என்று கூறிக்கொண்டிருந்தால் இறைவன் வராமல் மயக்கம் ஏற்பட்டால் என்னை மருத்துவரிடம் அழைத்து செல்வார்கள். எனவே காட்டிற்கு செல்வோம் என்று காட்டிற்கு புறப்பட்டான். ஒரு மரத்தடியில் அமர்ந்தான். காட்டிலுள்ள மிருகங்கள் ஒருவேளை என்னை தாக்கக்கூடும். அந்நிலை ஏற்பட்டால் அப்பெரியவர் கூறியது உண்மையா பொய்யா என்று தெரியாமல் போய்விடும் என்று நினைத்து மரத்தில் ஏறி, … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

நடிகர் ரஜினிகாந்த் சொன்ன ஆன்மீக கதை

சினிமா நடிகர் ரஜினிகாந்த் ஒரு திரைப்பட வெற்றி விழாவில் கலந்துகொண்டு ஒரு ஆன்மீக தத்துவம் கொண்ட குட்டிக் கதை ஒன்று கூறினார். அதில் அவர் சொன்ன கதை:- ஒரு இடத்தில் மூன்று தவளைகள் நண்பர்களாக வசித்து வந்தன. ஒருநாள் மூன்றும் ஒன்று கூடி, ஒரு மலைக்குமேல் இருந்த ஒரு கோவிலுக்கு செல்ல முடிவு செய்தன. அந்த மலையில் பயங்கர விஷத்தன்மை கொண்ட பாம்புகளும், கொடிய வனவிலங்குகளும் இருப்பது அவைகளுக்கு தெரிய வந்தது. மூன்று தவளைகளில் ஒரு தவளைக்கு உள்ளுக்குள் பயமிருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் விறுவிறுவென மலையை நோக்கி தாவி, தாவி ஏறிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு குரல் அந்த தவளையை மிரட்டுவதுபோல “போகாதே, பின்னால் பாம்பு படமெடுத்து நிற்கிறது பார்” என்றது. உடனே தவளைக்கு கை, கால்கள் உதற ஆரம்பித்தது. அது போன வேகத்திலேயே கீழே இறங்கி விட்டது. அதன்பின்பு, இரண்டாவது தவளை, அந்த முதல் தவளையைப் பார்த்து “நீ சரியான பயந்தாங்கொள்ளி. நான் மலையேறி வெற்றியுடன் திரும்புகிறேன் பார்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று மலை ஏறியது. மீண்டும் அதே குரல் “பாம்பு படமெடுக்கிறது பார் என்று பயமுறுத்தியது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாது அந்த தவளை வேகமாக முன்னேறியது. ஒரு இடத்தில் வந்து சேர்ந்ததும், அந்த இடத்தில் கொடிய விலங்குகளின் குரல் கேட்கவும் அதுவும் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

நக்கலால் வந்த சிக்கல்

ஒரு சீடன் தன் குருவிடம் இவ்வாறு கேட்டான். குருவே நல்லதைப் படைத்த இறைவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான். அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன? என்று கேட்டான். அந்த கேள்விக்குப் பதிலளிக்காமல் அங்கிருந்து குரு அகன்றார். நாம் கேட்ட கேள்விக்கு குருவாலேயே பதில் அளிக்க முடியவில்லை என்று நினைத்துக்கொண்டான் சீடன். பகல் உணவு வேளை வந்தது. அப்போது தனக்கு அளிக்கப்பட்ட உணவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் சீடன். அவனது உணவுப் பாத்திரத்தில் பசுமாட்டுச் சாணம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. சீடன் திருதிருவென்று முழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார். “பால், சாணம் இரண்டுமே பசுமாட்டிடம் இருந்துதானே கிடைக்கிறது. பாலை ஏற்றுக்கொள்ளும்போது பசுவின் சாணத்தை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? என்றார். சீடனின் முகமோ இஞ்சி தின்ற குரங்கின் முகம்போல சுருங்கிப்போனது. ****** … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்