தமிழ் | తెలుగు

» ஆன்மீக கதைகள்

படகோட்டி

ஸ்ரீ ராமனை உலகமே அறியும் எனும்படி அவன் மகிமை, பெருமை எங்கும் பரவியிருந்தது.  ராமன் காட்டிற்கு செல்லும்போது சீதை, லக்ஷ்மணனும் செல்கிறார்கள். கங்கை நதியைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் முதன்முதலாக குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன்னே மரவுரி தரித்து நிற்கும் ராமனை காணமுடியாமல் அவன்  கண்களில் கண்ணீர் வருகிறது. என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா? என பக்தியோடு கேட்கிறான். கங்கையை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும் என்று ராமர் கூறுகிறார். அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்பட தயாராகிறது. ஓடக்காரனான கேவத் என்பவனை அணுகி, உன் படகை இங்கே கொண்டு வா என்று கூறினான். படகு மெதுவாக அவர்களை நெருங்கி வருகிறது. ஓடக்காரனிடம் இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜாவான ராமர், அவர் மனைவி சீதாதேவி ராணி, அவருடைய சகோதரன் லக்ஷ்மணன். இவர்களை அக்கரைக்கு கொண்டு சேர் என குகன் வேண்டுகிறான். கேவத் என்பவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும், இரவில் உறங்குவதற்கு முன்பும் ராம நாமம் சொல்பவன். ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரைக்கு கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

புத்திசாலித்தனம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்! பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள். எல்லா பொருளிலும் ஓர் எல்லையில்லா வெளி வானிலே நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன் சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாப் பெருஞ்சோதி யான வல்ல பேரிறைவன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கருணையால் இந்த உலகை படைத்து நம்மை வாழ வைக்கிறார். உலகைக் காத்தருளும் பேரருள் எல்லா நாடுகளிலும் தான் தோன்றி (ஸ்வயம்) வழிநடத்துகிறது. அப்படி ஜிம்பாப்வே நாட்டில் லோங்கோ எனும் பெயரில் மறை நாயகன் தோன்றினார். அந்த நாட்டின் காட்டின் நடுவே ஒரு சிறு கிராமம். காட்டிலிருந்து வந்த கொடூரமான சிங்கங்கள் பலரைக் கொன்று விட கிராமத்து மக்கள் பயந்து ஊரை விட்டே ஓடி விட்டனர். ஒருநாள் காலை ஊரை விட்டு ஓடும் அவசரத்தில் திமிதி என்ற பார்வையற்ற கிழவனும் பண்டா என்ற சோம்பேறி இளைஞனும் தனியே விடப்பட்டனர். திமிதி வெளிப்பார்வையற்றவனாயினும் உள்ளொளியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா (லோங்கோ)வை ஆராதித்து வருபவன். உமது சித்தப்படி நடக்கும் என்று எப்போதும் இறை நாமத்தை எண்ணி வாழ்பவன். காலையில் எழுந்து ஊர் காலியானதைத் தெரிந்துகொண்ட திமிதி மெதுவாக நடந்து செல்கையில் தூங்கியெழுந்து வந்த பண்டா, பெரியவரே என்ன நடந்தது எல்லோரும் எங்கு போய் விட்டார்கள் என்று தவிப்புடன் கேட்டான். நானும் தனியாக … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

சாலையில் கிடைத்த ஞானம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய! இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்! ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ஜீவனுள்ளும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சுடர் நான்! பிரம்ம தேசத்தின் மாமன்னர் தன் பரிவாரங்களுடன் நைமிசாரணத்திற்கு வந்து சேர்ந்தார். நைமிசாரண்யத்து ரிஷிகள் மகிழ்ச்சியோடு பேரரசனை வரவேற்று உபசரித்தார்கள். பிரம்ம தேசம் ஆர்யவர்த்தத்தின் பெரும் பகுதியை தன்னகத்தே கொண்ட நாடு. மிகவும் வளமான தேசமாகும். நைமிசாரண்யம் தவ ரிஷிகளும், ஞானிகளும் நிறைந்த வனப்பு மிக்க வனப்பிரதேசமாகும். ஆசிரமங்கள் அநேகம் அங்கேயிருந்தன. மாமன்னர் மகரிஷிகளின் சபையைக் கூட்டினார். அவருக்கு வெகுநாட்களாகவே ஓர் ஆசை இருந்தது. ஆத்ம அறிவு பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அவர் எத்தனையோ நூல்கள் படித்தார். பல பண்டிதர்களிடம் பயின்றார். அப்படியும் அறிவு தெளிவு ஏற்படவில்லை. சபை கூடியதும் மகரிஷிகளே, ஆத்மா என்பது என்ன? அதின் தத்துவம் என்ன? எனக்கு அறிவூட்ட வேண்டுகிறேன் என்று பேரரசர் வேண்டிக்கொண்டார். மகரிஷிகள் தாங்கள் கற்றதையும், ஆராய்ந்ததையும் வைத்துக்கொண்டு பலபடியாக விளக்கிக் கூறினார்கள். ஆனாலும் விளக்கம் தான் ஏற்படவில்லை. அவர்களுக்கே தம் திறமை குறைவைப்பற்றி நாணம் ஏற்பட்டது. மன்னர் நிராசையுடன் திரும்பினார். நடுவழியில் இருபாதைகள் பிரியும் இடத்தில் மன்னருடைய மணிரதம் சற்று நின்றது. சாரதி அரசரிடம் ஏதோ மெதுவாக கூறினான். அரசர் எட்டி … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

பட்டத்து குதிரையும், பாட்டாளி கழுதையும்!

ஒரு மன்னனின் அரண்மனையில் சகல வசதிகளுடன் ஒரு பஞ்ச கல்யாணி குதிரை இருந்தது. அரசன் பட்டத்து குதிரையின்மீது அமர்ந்து நகர்வலம் வருகின்றபோது, நகர மக்கள் யாவரும் இருபுறமும் நின்று மன்னனை வணங்குவர். எத்தனை ஆயிரக்கணக்கான மனிதர்கள் என்னை வணங்குகிறார்கள் என்று குதிரையானது தனக்குள் எண்ணிக்கொண்டு, கர்வப்பட்டது. குதிரையை தினமும் மாலை வேளையில் அழைத்துச் சென்று, நீரில் நீந்த விட்டும், ஆற்று மணலில் புரளவிட்டும் நடை பயில விடுவர். காலையில் துணிப்பொதிகளை சுமந்து வந்த கழுதையை அதன் முதலாளி ஆற்றங்கரையில் மேய விட்டிருப்பான். பட்டத்துக் குதிரைக்கு நடக்கும் உபசாரங்களை கழுதை அதிசயமாகப் பார்க்கும். கழுதையை ஏளனமாக பார்த்து குதிரை இவ்வாறு சொல்லும்: “இது என்ன அதிசயம்! தினமும் என்னை எத்தனை ஆயிரக்கணக்கான பேர்கள் வணங்குகிறார்கள் தெரியுமா? வீதியில் என்மீது மன்னன் அமர்ந்து வரும்போது என்னை வந்து பார். உன்னுடைய பிழைப்பு அழுக்கு மூட்டையை சுமந்து வருவதும், வெளுத்த பின் வீடு செல்வதும், கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருப்பதுதான் உன் வாழ்வு. என்னைப் பார் அரச வாழ்க்கை வாழ்கிறேன்” என்று பெருமையாக குதிரை கூறியது. அதற்கு கழுதை இவ்வாறு கூறியது: “நான் உண்மையாக உழைக்கிறேன். என் எஜமானன் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறார். தன் ஆசை மகளை எனக்கு கட்டித் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

அது ஒரு மழைக்காலமாக இருந்தது. ஒரு அடர்ந்த காட்டில் தவளைகள் ஒரு கூட்டமாக பிரயாணம் செய்து கொண்டிருந்தன. அப்பொழுது திடீரென்று இரண்டு தவளைகள் மாத்திரம் ஒரு ஆழமான குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகள் குழி ஆழமாக இருப்பதைக் கண்டு, நீங்கள் இருவரும் அங்கேயே கிடந்து சாக வேண்டியதுதான் என்று கூறியது. இரண்டு தவளைகளும் அவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தாமல், குழியில் இருந்து வெளியே வர தங்களுடைய முழு பெலத்தையும் உபயோகித்து குதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. வெளியே இருந்த மற்ற தவளைகள் முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறிக்கொண்டே இருந்தன. இறுதியில் ஒரு தவளை மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு முயற்சியை கைவிட்டது. அது கீழே விழுந்து இறந்துபோனது. இன்னொரு தவளையோ எவ்வளவு தூரம் குதிக்க முடியுமோ அவ்வளவு தூரம் குதிக்க முயற்சி செய்து கொண்டேயிருந்தது. கடைசியில் வெளியே குதித்தது. அது வெளியே வந்தவுடன் மற்ற தவளைகள் எல்லாம், நாங்கள் கூறியது உன் காதில் விழவில்லையா? என்று கேட்டன. அதற்கு அந்த தவளை எனக்கு காது கேட்காது, நான் செவிடு என்று கூறி மற்றவர்கள், என்னை வெளியே வரும்படி உற்சாகப்படுத்துவதாக நினைத்துக்கொண்டேன் என்று கூறியது. இந்தக் கதையிலிருந்து நாம் என்ன அறிய வருகிறோம் என்றால், ஜீவனை கொடுக்கும் வல்லமை நாவுக்கு … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

நான்கு திறமைகள்

ஒரு நாட்டில் நல்ல உள்ளம் படைத்த நால்வர் நண்பர்களாக இருந்தனர். நான்கு பேரும் நான்கு விதமான திறமைகளோடு திகழ்ந்தவர்கள். முதலாமவன் ஆசாரி. இரண்டாமவன் நெசவாளி. மூன்றாமவன் பொற்கொல்லன். நான்காமவன் மந்திரவாதி ஆவர். இவர்கள் நால்வரும் மக்களுக்காக உழைத்தது போதும், நம்முடைய பிறவிப் பயனை அடைய வேண்டுமானால் இறைவனைத் தேடி செல்ல வேண்டும் என முடிவு செய்து பயணித்தனர். அவர்கள் தங்களுடைய திறமையின்மேல் பற்று கொண்டமையால் தாம் பயன்படுத்தும் கருவிகளையும் தங்களோடு எடுத்துச் சென்றனர். நெடு நேர பிரயாணத்தில் களைப்புற்றவர்களாக ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். நால்வரும் உறங்கி விட்டால் நம்முடைய உடைமைகளை யார் பாதுகாப்பது என்று நினைத்து, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட மணி நேரம் விழித்திருப்போம், பிறகு மற்றவனை எழுப்பி விட்டு ஒருவர் மாற்றி ஒருவர் தூங்க வேண்டும் என முடிவு செய்தனர். முதலாவதாக ஆசாரியானவன் வெறுமனே உட்கார்ந்தால் தூங்கி விடுவோமே! என்ன செய்வது என சிந்தித்து, தான் எடுத்து வந்த கருவியைக் கொண்டு ஏதாவது செய்யலாம் என்று நினைத்து, ஒரு கட்டையில் அழகான பெண்ணின் உருவத்தை செதுக்கினான். அவனுடைய நேரம் முடியும் தருவாயில் அந்த பெண்ணின் உருவம் முழுமை பெற்றது. அவன் இரண்டாமவனை எழுப்பி விட்டு தூங்கினான். நெசவாளியான இவன் அதைப் பார்த்தவுடனே இந்த பொம்மை நிர்வாணமாக … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

தெய்வத்தின் துணை வேண்டும்

நாம் நம் திறமையால், அறிவால் வாழ்க்கையில் வெற்றி அடைந்ததாக நினைக்கிறோம். ஆனால் இந்த எண்ணம் தவறு. தெய்வம் துணை நின்றால்தான் நம் முயற்சிகளுக்கு முழு பலனும் கிடைக்கும். இதை உணர்த்த ஒரு கதை. பாரதப்போர் நடந்து கொண்டிருந்தது. அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் தேரோட்டியாக செயல்பட்டார். ஒரு நாள் யுத்தம் முடிந்து பாசறைக்கு திரும்பினான் அர்ஜுனன். அவனுக்கு தன் வில் வித்தையால்தான் வெற்றி அடைகிறோம் என்ற கர்வம் உண்டாயிற்று. அதனால், வழக்கமாக முதலில் தேரிலிருந்து இறங்கும் அவன், அன்று கிருஷ்ணரை முதலில் இறங்கும்படி கூறினான். அர்ஜுனனின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட பகவான், அவனது அகந்தையை நீக்க முடிவு செய்தார். “வழக்கமாக நீதானே முதலில் இறங்குவாய்? இன்று மட்டும் ஏன் என்னை முதலில் இறங்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார். இதற்கு அர்ஜுனன், “இன்று வழக்கத்தை மாற்றலாமே!” என எகத்தாளமாக பதிலளித்தான். அதற்கு கிருஷ்ணர் “இல்லை! நீதான் முதலில் இறங்க வேண்டும். நான் இறங்கினால் உனக்குத்தான் ஆபத்து” என்றார். “எனக்கு ஆபத்தா? என்ன ஆபத்து? என் கையில்தான் வில் இருக்கிறதே!” என்றான் அர்ஜுனன் கர்வத்துடன். “அதெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் நீ கீழே இறங்கு!” என பகவான் கட்டளையிடும் தொனியில் கூறினார். அதற்கு மேல் மறுப்பு தெரிவிக்க பயந்தவனாக அர்ஜுனன் கீழே இறங்கினான். பகவான் … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்

வைகுண்டம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஊரில் ஒரு குரு வசித்து வந்தார். அவர் அங்குள்ள மக்களுக்கு ஆன்மீக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். தன்னுடைய சீடர்களிடம் ஒற்றுமையைப் போதித்து வந்தார். சீடர்கள் எல்லோரும், ஒருவர் மற்றவரை விட அனைத்தும் கற்றவர்கள் என தலைக்கனம் நிறைந்தவர்களாக இருந்தனர். குரு இவர்களின் தலைக்கனத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினார். ஒரு நாள் அவர்களிடம்: உங்களில் யார் வைகுண்டம் செல்வார்கள்? என கேள்வி கேட்டார். உடனே அனைவரும் ஒவ்வொருவரும் தான் அந்த தவறை செய்திருக்கிறேனே இந்த தவறை செய்திருக்கிறேனே, என நினைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் இருந்தார்கள். அதற்கு அவர் உங்களில் ஒருவர்கூட வைகுண்டத்திற்கு செல்லப்போவதில்லையா? என கேட்டார். அனைவரும் மவுனமாக இருந்தனர். உடனே சீடர்களில் ஒருவன் குருவிடம்: “நான் போனால் போகலாம்” என பதிலளித்தான். மற்றவர்கள் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர். அதன்பின்னர் அவனாலும் வைகுண்டம் செல்வேன் என்று உறுதியாக கூற முடியவில்லையே என மற்றவர்கள் அவனைக் கேலி செய்தனர். அதற்கு அந்த சீடன் கூறிய பதிலைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். அவன் சொன்னது என்னவென்றால் நான் என்கிற அகந்தை போனால்தான் நாம் வைகுண்டம் செல்ல முடியும் என மிக தீர்க்கமாக பதிலளித்தான். குரு சீடர்களிடம்: “நான் என்பதை நீங்கள் மறக்கும்போதுதான் மனித பிறவியின் வெற்றி கிடைக்கும். … Read entire article »

Filed under: ஆன்மீக கதைகள்