தமிழ் | తెలుగు

» ஆன்மீக கட்டுரைகள்

திறவோர் காட்சியில்…

பழம்பெரும் நூல்கள் எல்லாம் பகுத்தறிவு தூண்டியே! அவை நமக்கு சொல்லாத அறிவுரை இல்லை. கேளும் செவிக்கே அது சேரும். கற்பினும் தெரியாதது பட்டதும் புரியும் அரும்பழம் நூல்கள் எல்லாம் உரைத்தது நன்றே அன்றி வேறில்லை. உணர்ந்ததால் ஏதும் கேடில்லை. புறபொருள் விளக்கும் நானூற்றில் திறவோர் காட்சியில் கண்டதாக: நீர்வழிப்படும் புணைபோ லாருயிர் முறைவழிப்ப படூஉ மென்பது….. என பூங்குன்றனார் மொழிந்தார். மானிடர்களின் அக உள்ளம்தனை ஆராய்ந்து பார்த்தோனைப்போல தெளிவாக்கி உள்ளார் புலவர். இவ்வரி சொல்லும் மெய்மை கற்றோர் அறிவர். ஆற்று பெருவெள்ளம் வீறு கொண்டு பாய்ந்து வருகையில், அவ்வெள்ள நீர் போகிற திசையிலேயே அந்நீரில் மிதக்கும் தெப்பம் பயணிக்கும். இங்கு ஆற்று பெருவெள்ளமாக ஊழ்வினையையும், தெப்பத்திற்கு உலக மக்களையும் ஒப்புமை காட்டியுள்ளார். அந்த ஊழ்வினையின் வழியில்தான் உலக மக்கள் பயணிப்பார் என்பதை உறுதியிட்டிருக்கிறார். இந்த உலக மக்கள் உலகம் ஓடுகிற பாதையிலேயே தன்னையும் அமைத்துக் கொள்வானேயொழிய, அதன் நன்மை தீமையை ஆராய்ந்து செயல்படுவாரில்லை என்ற உண்மை இதில் மையமாக்கப்பட்டது. இங்கு திரைப்பட பாடல் வரி ஒன்று நினைவில் எழுகிறது… “ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே! ஆனால்  ஆண்டவன் எண்ணம்போல் இந்த பூமி அமையலையே!” உலகத்தையும், மக்களையும் கடவுள் படைத்தாரேயன்றி அது இப்போது கடவுள் என்ற எல்லையை தாண்டி செல்ல முயல்கிறது. வெற்றி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கீதாஞ்சலி – 9

ஓ தோழனே! நீ ஒருவன்தான் என்னுடைய ஒரே நண்பன். என் உயிரினும் இனியவனே! கனவைப்போல் என்னைப் பாராமுகமாக கடந்து சென்று விடாதே! அவர் வந்து என் அருகில் உட்கார்ந்தார், நான் எழுந்திருக்கவில்லை. நான் மோசம் போனேன்! என்ன பாழும் தூக்கம்! ஐயோ! என் இரவுகள் எல்லாம் ஏன் வீணாயின? ஆ! அவர் வருகையை என் தூக்கத்தில் உணர்ந்தபோதிலும் நான் ஏன் அவரைப் பார்க்க முடியாமல் போகிறது? இறைவனிடம் கனவைப்போல் என்னைப் பார்த்த பின்னரும் கடந்து சென்று விடாதேயும் என்று கேட்ட கவிஞரிடம் இறைவன் அருகில் சென்று உட்கார்ந்தபோது கவிஞரால் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. ஆகையால் பாழாய்ப்போன தூக்கத்தினால் என்னால் அவரை பார்க்க முடியாமல் போனதே என்கிறார். இறைவன் அநேக சமயங்களில் நம் அருகே வந்து உட்காருகிறார். ஆனால் நாம் தூங்குகின்றோம். நாம் ஏன் அவ்வாறு தூங்குகிறோம்? தூக்கத்தை உதறி விட்டு நாம் எழுந்திருக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு செய்கிறதில்லை. அன்பில் பற்றாக்குறை உள்ளது. அதினால் நாம் அவ்வாறு தூங்குகிறோம். எழும்பி அவரை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்குகிறதில்லை என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கம் கூறுகிறார். என்னுடைய இரவுகள் எல்லாம் அவரை காணாமல் வீணாகிவிட்டன என்று கவிஞர் அங்கலாய்க்கிறார். அவர் வருகையை என் தூக்கத்தில் … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சாந்தியளிக்கும் ஆன்மீகம்

மத சம்பந்தமான புஸ்தகத்திற்கு மாறாக, ஒருவர் தனது கருத்தை கூறினால் அது ஒரு மதமல்ல. பகவத்கீதையை எடுத்துக்கொள்வோம். நீங்கள் பகவத்கீதையை படித்தீர்கள் என்றால் அதில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதை அதிகாரம் 7:3-ல் “ஆயிரம் பேர் யோகா செய்கிறார்கள், அதில் மிகவும் அபூர்வமாக ஒருவனே சாந்தி அடைகிறான்”என்று கூறுகிறார். இன்றைக்கு, எல்லோரும் யோகாவைப் பற்றி பேசுகிறார்கள். நான்கூட 6 வருடங்களாக ஒரு யோகியாக இருந்தேன். ஆனால் சாந்தியை ஒருபோதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அநேகர் யோகா பயிற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆயிரம் பேரில் ஒருவனே சாந்தியைப் பெற்றுக்கொள்கிறான் என்பது சரிதான். மீதமுள்ள 999 பேர்களின் விதி என்ன? நீங்கள் மத சம்பந்தமான நூல்களைப் படித்து அந்த நூல்கள் கூறியபடி நடக்க வேண்டும். இறைவன் ஒவ்வொரு மத சம்பந்தமான புஸ்தகங்கள் மூலமாக கிரியை செய்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இறைவன் அவர்களுடைய புஸ்தகங்கள் மூலமாக கிரியை நடப்பிக்கிறார். ஒருவன் விவிலியம் கூறியபடி செய்யவில்லையென்றால், அவனிடம் பரிசுத்த ஆவி இல்லை. விவிலியம் கூறியபடி பிரசங்கிப்பவனே ஒரு கிறிஸ்தவனாவான். உலகம் உங்களை புகழ்ந்தால், நீங்கள் ஒரு பிசாசாவீர்கள். பல்கலைக்கழகங்களை நீங்கள் கட்டலாம், பெரிய பெரிய கோபுரங்களை நீங்கள் கட்டலாம், ஆனால் இவையெல்லாம் மக்களை வஞ்சிப்பதற்காகவே செய்யப்படுகிறது. ஆகவே பிரார்த்தனையானது இருதயத்திலிருந்தே … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

தக்ஷிணாமூர்த்தி

தெற்கு நோக்கி ஆலமரத்தின்கீழ் வீற்றிருக்கிறார் தக்ஷிணாமூர்த்தி. வாஸ்து சாஸ்திரத்தின்படி அத்திசை மரணத்தின் திசையாகும். ஆம், அது எதினுடைய மரணமாகும்? ‘நான்’என்ற அகங்காரம் மரணித்தால்தான், புது பிறவியை ஒருவன் அடைய முடியும் என்பதை காண்பிப்பதாக உள்ளது. தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் சிவன் மரணத்தையும், காலத்தையும் வென்றவராவார். சர்ப்பங்களை தம்முடைய கழுத்தில் மாலையாகவும், தம் கரத்திலும் சிவன் அணிந்திருக்கிறார். சர்ப்பம் என்பது ஞானம் மற்றும் நித்தியத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. அவர் முடிவில்லாதவர் மற்றும் ஞானத்தின் மூலமானவர் என்பதைக் குறிக்கிறது. சிவபெருமானை லிங்க வடிவத்திலும் வழிபடுகிறார்கள். அவர் ஏன் லிங்க வடிவத்தில் பூஜிக்கப்படுகிறார்? சிவன் என்றால் ஜீவன் அல்லது உயிர் என்று பொருளாகும். உயிரை அல்லது ஜீவனை எவ்வாறு விளக்கி கூற முடியும்? சிறு பிள்ளைகளுக்கு சூரியன் எப்படியிருக்கும் என்பதை விளக்கி கூற, ஒரு வட்டத்தை வரைந்து சிறு கோடுகளை வரைவோம். அது சூரியனா? இல்லை. அதைப்போலவே சிவபெருமான் எல்லா ஜீவராசிகளுக்கும் ஜீவனாக, உயிராக திகழ்கிறார் என்பதை காண்பிக்க மிக சிறந்த உதாரணம் லிங்கமாகும். சிவபெருமான்தான் இந்திய கர்நாடக இசையில் இரகசிய ராகங்களை மஹரிஷி நாரதருக்கு வெளிப்படுத்தி கூறினார். சிவபெருமான்தான் யோகாவின் கர்த்தாவாக விளங்குகிறார். அது சரீரம் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த உதவி செய்கின்றது. அவர் அணிந்திருக்கும் வஸ்திரம் இயற்கையானது. அவருக்கு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன? – 7

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் – திருவருட்பா 6-ம் திருமுறை பாடல் எண் 1064: ……உமது பேராசைப் பேய் பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும் பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ நாராசம் செவிபுகுந்தால் என்ன நலிகின்றாள் விளக்க உரை: “உமது பேராசைப் பேய் பிடித்தாள்” கோபிகையின் தோழி, இறைவனிடம் கோபிகை அளவுமிகுந்த ஆசை வைத்துள்ளதைக் கண்டு இறைவனிடம் இந்த விதமாக கூறுகின்றாள். “இறைவனை கிரஹித்து உணர்ந்த பக்தர்கள், இறைவன் மீதுதான் தங்களின் ஆசையை வைக்க வேண்டும். உலகத்தின்மீதுள்ள ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை இங்கு வள்ளலார் வலியுறுத்துகிறார். அந்தவிதமாக இறைவனிடம் பிரேமை பக்தியின் உச்சநிலை அடைந்தவர்களைப் பார்த்து, இந்த உலகத்தவர்கள் பேய் பிடித்தவன், பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள். அதை இறைவனை கிரஹித்து உணர்ந்த ஒரு பக்தன் பொருட்படுத்துவதில்லை. ‘உலகர்க்கு உய்வகை கூறல்’என்ற தலைப்பின்கீழ் உள்ள பத்து பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதி வரியிலும், “எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே”என்று வள்ளலார் உலகத்தவரை சாடுவதை நாம் காணலாம். ஆகவே உலக ஆசைகளின் பின்னால் தீவிரமாக சென்று கொண்டிருப்பவர்களும், இறைவன்மீது தீவிரமான பக்தி கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் இணைந்து செல்ல முடியாது என்பது தெளிவான உண்மையாகும். “கள்ளுண்டு பிதற்றும்….. பிச்சி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

கீதாஞ்சலி-8

            அவன் கைகளில் கடைசியாக அர்ப்பணிப்பதற்கு,             அவன் அருளுக்காகக் காத்திருக்கிறேன்             அவர்கள் சட்டத்தின் துணைகொண்டு வருகிறார்கள்.             ஒழுங்கு முறைகளைக்கொண்டு விரைவில்             என்னை கட்ட வருகிறார்கள். ஆனால் எப்பொழுதும்             நான் நழுவி விடுகிறேன். ஏனெனில்             உன்னிடம் என்னை அர்ப்பணிப்பதற்காக             உன் அன்பிற்கு நான் காத்திருக்கிறேன்”. எல்லா மத சம்பந்தமான ஸ்தாபனங்களும், சங்கங்களும் தங்களுடைய மதத்தில் சேரும்படி கேட்டு கவிஞரிடம் வருகிறார்கள். அதைத்தான் அவர் “ஒழுங்கு முறைகளைக் கொண்டு விரைவில் என்னை கட்ட வருகிறார்கள்” என்று கூறுகிறார். ஸ்தாபனங்களிலும், சங்கங்களிலும் சேரும்போது அவர்களுக்கென்று தனி சட்டங்கள், ஒழுங்குமுறைகள் இருக்கின்றது. அவற்றால் தன்னை வரைமுறைப்படுத்த விரும்புகிறார்கள் என்று கவிஞர் கூறுகிறார். இப்படிப்பட்ட சட்டங்களினாலும்,  ஒழுங்கு முறைகளினாலும் அவர் கட்டப்படவில்லை. நம் நாட்டின் தேசிய தந்தை மகாத்மா காந்தியடிகள் அவரை அரசியலில் சேரும்படி அழைத்தபோது மறுத்து விட்டார். எவ்விதமான கட்டுகளினாலும் கட்டப்பட அவர் விரும்பவில்லை. இப்பொழுது வீதிக்கு ஒரு கட்சி என்ற அவல நிலை தோன்றியிருக்கிறது. ஆனால் தேசத் தந்தை அழைத்தபோதும்  நோபல் பரிசு பெற்ற கவிஞர் மறுத்திருக்கிறாரென்றால் அது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.  அவர் ஏன் யாராலும் கட்டப்பட விரும்பவில்லை? ஏனெனில் அவர் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்க காத்துக் கொண்டிருந்தார். “ஏனெனில் என்னை அர்ப்பணிப்பதற்காக உன் அன்பிற்கு … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

சாந்தியளிக்கும் ஆன்மீகம்

இன்றைக்கு அநேக மக்கள் இறைவனை உடையவர்களாக இல்லை. அநேக மக்கள் இறைவனைப் பற்றிய குழப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும் தற்காலத்தில் எங்கும் வன்முறை காணப்படுகிறது. வன்முறையினால் எல்லாவற்றையும் அடைந்துகொள்ளலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த உலகத்தில் நீதி இல்லை. எங்கும் பிரிவினைகள் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். உலக அழிவினை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இந்த உலக மக்களை அழிப்பதற்கு எதுவும் நடைபெறலாம் என அனைவரும் அச்சம் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இன்று அதற்கு தீர்வுதான் என்ன? இந்தியாவில் நம்மைப் பிரிக்கக்கூடிய பிளவுகளை நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் சுயநலம் கொண்டவர்களாக இருந்துகொண்டு, தங்களுடைய சொந்த மதத்தைப் பற்றித்தான் நினைக்கிறார்கள். தேசம் முழுவதைப் பற்றியும் நினைப்பது கிடையாது. கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ மதத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரோமாபுரி முதலிய நாடுகளுக்குச் செல்வது பற்றி பேசுகிறார்கள். முஸ்லீம்கள் மெக்காவுக்கு செல்வது பற்றி பேசுகிறார்கள். இந்துக்கள் எங்கே செல்வார்கள்? ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே மிகச் சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் ‘ஒரே இறைவன்தான் உண்டு’ என்று சொல்லக்கூடிய சில மக்கள் இருக்கிறார்கள். காரியம் அப்படி இருக்குமாயின், நம்மில் அநேக மக்கள் வித்தியாசமான பெயர்களில் இறைவனை வழிபடுகிறோம். இறைவனுடைய குணாதிசயம் என்ன? அவர் நம்மிடம் பணம் கேட்கிறாரா? … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்

தக்ஷிணாமூர்த்தி

சத்தியம், சிவம், சுந்தரம் என்று அழைக்கப்படுபவன் சிவன். அவர் கங்கையை தலையில் வைத்திருப்பதால் கங்காதரன் என்றும், நடனத்திற்கு ஆண்டவராக இருப்பதால் நடராஜர் என்றும், தெற்கு முகமாக நோக்கி புலித்தோல் மேல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதால் தக்ஷிணாமூர்த்தி என்றும், ஆண் பாதி பெண் பாதியாக தோன்றுவதால், அர்த்தநாரீஸ்வரர் என்றும், மூன்றாவது கண்ணை உடையவராக இருப்பதினால் திரிநேத்ரா, திரிநயனா, திரிஅக்ஷரா என்றும், அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை கற்றுக்கொடுக்கும் முதல் ஆசானாக விளங்குவதால், ஆதிநாத் என்றும், பிறையை தன் தலையில் அணிந்திருப்பதால் பிறைசூடன், சந்திரசூடன் அல்லது சந்திரசேகரா என்றும், உயிரை அல்லது ஜீவனை குறிப்பதால் சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனின் உடலில் சாம்பல் பூசப்பட்டிருக்கும். சாம்பல் பூசுவதின் அர்த்தமாவது சிவன் ‘நான்’ என்ற அகங்காரத்தை மாயை அழிப்பவர். அவருடைய நெற்றியிலுள்ள மூன்று கோடுகள் மூன்று உலகத்தைக் குறிக்கும். புலித்தோல் அணிபவர் என்றால் இச்சை, காமம் போன்றவற்றை அடக்கியாள்பவன். மாயையான உலகத்துடன் அவர் பற்றில்லாதவர் ஆவார். சிவன் கையிலிருக்கும் திரிசூலமானது சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று குணங்களைக் குறிக்கிறது. அவர் இடது கையில் இருக்கும் உடுக்கை ‘ஓம்’ என்ற புனித ஒலியின் அடையாளமாக உள்ளது. அவரின் நெற்றிக் கண்ணினால் எல்லாவற்றையும் அழிக்கிறார். அவர் எதை அழிக்கிறார்? ஒரு யுகத்தின் முடிவில் வானத்தையும், … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்